பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2015

கிறிஸ்மஸ் ஜம்ப்பர்.

ஜம்ப்(பு) லிங்கம்

நண்பர்களே,

மேலை நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல வினோத செயல்களும் பழக்க வழக்கங்களும் புழக்கத்தில் இருப்பதை நாம் அறிவோம்.


அவற்றுள் இந்த விழா காலங்களில் பெருவாரியாக கடைபிடிக்கும் ஒரு பழக்கம்,"கிறிஸ்மஸ் ஜம்ப்பர்" அணிவது.

அதாவது, கிறிஸ்மஸ் சம்பந்தமான படங்கள் அச்சடிக்கபட்டும் நூர்க்கப்பட்டும் பல  வித நிறங்களில் தயாரிக்கப்படும், நம்ம ஊரில் குளிர் காலத்தில்; சட்டைக்கு மேலே அணிந்துகொள்வோமே "ஸ்வட்டர்" போன்றதைத்தான் இங்கே "ஜம்ப்பர்" என்று சொல்கின்றனர்.

டிசம்பர் மாதம் தொடங்கிய முதல் நாள் துவங்கி டெசம்பர் 31 ஆம் தேதிவரையில்,  இன்னும் சிலர் அதையும் கடந்து பல நாட்களுக்கு இதுபோன்று மேலாடையை அணிவது அவர்களின் விழா கால மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் எனும் அடிப்படியிலும் இவற்றை உடுத்துவது வழக்கம். 

அதே சமயத்தில், அலுவலக ஊழியர்கள் வேலையில் இருக்கும்போது இதுபோன்ற ஜம்ப்பர்களை அணிவது "உடை கோட்பாட்டிற்குள்(DRESS CODE)" இல்லை என்பதாலும் அதே சமயத்தில் கிறிஸ்மசுக்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட பிரத்தியேக நாளில் ஊழியர்கள் இதுபோன்று கிறிஸ்மஸ் ஜம்ப்பர்களை அணிந்துகொண்டு அலுவலகம் வரலாம் என்ற ஒரு விதி தளர்வும் கொடுக்கபடுகின்றது.

அவ்வாறு அன்று யாரெல்லாம் வழக்கமான அலுவல் உடையின்றி இதுபோன்ற ஜம்ப்பர்களை அணிந்து வருகின்றனரோ அவர்கள் ஒவ்வொருவரும் தலா ஒன்று அல்லது இரண்டு பவுண்டுகளை அலுவலகத்தில் வைக்கபட்டிருக்கும் உண்டியலில்போடவேண்டும்.

அந்த பணம் பிறகு குறிப்பிட்ட ஒரு தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக இந்த குளிர்காலத்தில், வீடு இல்லாதவர்களுக்கும் உணவு, போர்வை இல்லாதவர்களுக்கும் உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதன் தாற்பரியம் என்ன வென்றால், நம்மிடம் இருக்கும் ஆடம்பரமான இந்த ஜம்பர்களை அணிந்து அழகு காட்ட நினைக்கும் நாம், போர்த்திகொள்ள சாதாரண போர்வைகூட இல்லாத மனிதர்களை நினைத்து பார்த்து நம்மால் கூடுமான வரை அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே.  

அன்று மட்டும் அலுவலகம் முழுதும் எங்கு பார்த்தாலும் ஜம்ப்லிங்கங்களாக ஊழியர்கள் காணப்படுவார்கள்.

அதற்குபிறகு அடுத்த வருடம் டிசம்பர் மாதம்தான் இந்த ஜம்ப்பர்களை பார்க்கமுடியும்.

Image result for christmas jumpers

இதுபோன்று வருடத்தில் பலமுறை "DRESS DOWN DAY" என குறிப்பிட்டு அன்று மட்டும் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் அலுவலகம் வர அனுமதிப்பார்கள் ,வருபவர்களும் மற்றவர்களும் கொடுக்கு அன்பளிப்பு பணத்தையும் பொருட்களையும் தொண்டு நிறுவனங்கள் மூலம் அளித்து உதவுவார்கள்.

இந்தமுறை எங்கள் அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து காசுகளும் அருகிலுள்ள ஒரு புற்றுநோய் மறு வாழ்வு  மையத்தில் உள்ள நோயாளிகளின் நலனுக்காகவும் வீடில்லாதோருக்காக சேவை செய்யும்தொண்டு நிறுவனத்திற்கும், மேலும் சில அத்தியாவசிய பொருட்களுடன் கொண்டு சேர்க்கபட்டது.

இதுபோன்று நம்ம ஊரில் பழக்கம் இருக்கின்றதா என எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

12 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே

    நல்ல பகிர்வு

    நல்ல மனம். சேவை மனப்பான்மை. எனக்கு தெரியவில்லை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

      நாமே நேரில் சென்று உதவ முடியாவிட்டாலும் உதவும் நிறுவனங்களின் மூலம் உதவுவது சிறந்தது. சிறு துளி பெருவெள்ளம்,

      கோ

      நீக்கு
  2. பயனுள்ள பழக்கம்!இங்கு அவ்வாறு எதுவும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயா அவர்களுக்கு,

      உங்களின் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. இந்தமுறை எங்கள் அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து காசுகளும் அருகிலுள்ள ஒரு புற்றுநோய் மறு வாழ்வு மையத்தில் உள்ள நோயாளிகளின் நலனுக்காகவும் வீடில்லாதோருக்காக சேவை செய்யும்தொண்டு நிறுவனத்திற்கும், மேலும் சில அத்தியாவசிய பொருட்களுடன் கொண்டு சேர்க்கபட்டது.

    போற்றுதலுக்கு உரிய பணி
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு சேவைதான் பாராட்டுதலுக்குறியதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. கரந்தையாருக்கு,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  6. Over here, we are not ready to man up to dress down. We just lead a run of the mill existence. It has taken a calamity for us to wake up. Hope and pray for the momentum to be maintained.

    பதிலளிநீக்கு
  7. Prabhu,

    Thanks for your visit to my blog and comments.

    I wish you all the best and to keep going on your ventures for the benefits of mankind.

    ko

    பதிலளிநீக்கு
  8. அருமையான பணி! பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இங்கா? இங்கு அப்படியெல்லாம் எதுவுமே கிடையாதே...இங்கு மேலைநாட்டவரிடமிருந்துக் கற்கும் பழக்கங்களே வேறு!!!! நல்ல காரியங்களைக் கற்றால் இந்தியா ஏன் இப்படி இருக்கப் போகின்றது. நம் இளைஞர்களும் மேலைநாட்டவரிடமிருந்து கற்பது வேண்டாதைத்தான். அங்கு வரும் போது கற்றாலும் இங்கு வந்தவுடன் மாறிவிடுகின்றார்கள்..என்ன சொல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் உங்கள் ஆதங்க பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு