பின்பற்றுபவர்கள்

புதன், 18 நவம்பர், 2015

"பல்லு - சொல்லு - cellலு"

ரொம்ப இளிக்காதீங்க !!

நண்பர்களே,

நம்மில் பலரும் சின்ன வயதில் நம்முடைய உடன் பிறப்புகளுடன், சண்டை போட்டிருப்போம். அந்த சண்டை வாய் சண்டையாகவோ அல்லது கை கலப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.

ஆனால் அதுபோன்ற சண்டைகள் கைகலப்புகள் எல்லாம் அடுத்த நிமிடமோ அல்லது அடுத்த நாளோ, அல்லது அடுத்த ஓரிரு நாட்களிலோ மறந்து போய்  இருக்கும்.

ஒரு சிலர், கொஞ்சம் பெரியவர்களான போது போட்ட சண்டைகளை சில மாதங்களுக்கு கூட மனதில் வைத்து கொண்டிருந்திருக்கலாம்.

ஒரே வீட்டில் குடும்பமாக வாழும்  உடன் பிறப்புகளோடு போட்ட சண்டையை பெரும்பாலோர்  அவற்றை அதி விரைவில் மறந்து சகஜ நிலைமைக்கு திரும்பி விடுவர், வீட்டில் உள்ள பெரியவர்கள்கூட அவற்றை பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள்.

இது போன்று சின்ன வயதில் ஏற்பட்ட சண்டைகளாலோ  அல்லது குரும்புத்தனங்களாலோ அடுத்தவருக்கு சிறு காயமோ, பெரிய காயமோ அல்லது உடல் உறுப்புகள் சேதாரமோ கூட ஏற்பட்டிருந்தாலும் காலப்போக்கில் அவை உடலளவில் வடுவாக காட்சி அளித்தாலும் உள்ளத்தால்  என்றோ மறைந்துபோய் இருக்கும்.

இப்படித்தான் இங்கே ஒரு  அண்ணனுக்கும் தங்கைக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை மாதத்தில் வீட்டில் தாங்கள்  எந்த பாடல்களை பாடுவது என்பதில் ஆரம்பித்த வாய் சண்டை கொஞ்சம் முற்றி கை கலப்பாக மாறியது.

கோபமுற்ற அண்ணன் தங்கையின்  முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

வாயில் ரத்தம் கொட்ட வலியால் துடித்த மகளை அருகிலுள்ள மருத்துவரிடம் அழைத்து சென்ற தாய், மகளிடம், அண்ணன் அடித்துவிட்டதாக சொல்லாமல், கீழே விழுத்துவிட்டாய் என சொல்ல சொல்லி இருக்கின்றார். மகனிடத்திலும் அப்படியே சொல்லும்படி சொல்லி இருக்கின்றார். 

அந்த பெண்ணும் அப்படியே அம்மா சொன்னபடியே மருத்துவரிடம் சொல்லி இருக்கின்றார்.

பரிசோதித்த மருத்துவர், தாயிடம் சொன்னாராம், மகளின் முன் வரிசையில் இரண்டு பற்கள் உடைந்து இருக்கின்றன, இனி இந்த வயதில் அங்கு புதிய பற்கள் முளைப்பது சாத்தியம் அல்ல ஏனவே செயற்கை பற்கள்தான் பொருத்தவேண்டும் என சொல்லிவிட்டார்.

இளம் பெண் தன்னுடைய அழகான முன் பற்களுள் முக்கியமான இரண்டு பற்களை இழந்த வேதனையோடு செயற்கை பற்கள் பொருத்திக்கொள்ள சம்மதித்திருக்கிறார்.

இப்படி பொருத்தப்பட்ட புதிய பற்களுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக தனது வாழ்க்கையை நடத்திகொண்டிருந்த அந்த பெண்ணிடம் , சம்பந்தமே இல்லாத வேறு ஒரு வழக்கு   தொடர்பாக காவலர்கள் விசாரணை செய்யும்போது , தமது முன் பற்கள் ஏன் செயற்கையாக உள்ளன எனும் உண்மையை காவலர்களிடம் சொல்ல வேண்டி வந்திருகின்றது.

உடனே காவலர்கள் அந்த பெண்ணின் அண்ணனிடம் விசாரித்ததில் அந்த அண்ணனும் தமது சகோதரியை தாம் அடித்ததினால் அவளின் முன் பற்கள் இரண்டு உடைந்து விட்டது என்றும் அதற்காக தாம் வருந்துவதாகவும் சொல்லி தமது குற்றத்தை ஒப்புகொண்டிருகின்றார்.

குற்றத்தை தாம் ஒப்புகொண்டதையே வாக்குமூலமாக பெற்றுக்கொண்ட காவல் துறை அந்த அண்ணன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளி இருக்கின்றனர்.

தன் அண்ணன் சிறை தண்டனை பெற்றதை குறித்து அந்த அன்பு தங்கை சொலும்போது, "ஒவ்வொரு நாளும் நான் இந்த செயற்கை பற்கள் பொருத்தப்பட்ட அந்த பிளேட்டை என் வாயில் பொருத்தும்போதெல்லாம், அன்று நடந்த அந்த நிகழ்ச்சிதான் என் மனதில் தோன்றம்".

"ஒவ்வொரு நாளும் அந்த செயற்கை பற்களை பொருத்தும்போதெல்லாம் வாயில் ஏற்படும் வலியைவிட என் மனதில் உண்டாகும் வலி மிக கொடுமையானது."

 ஆம், ஒரு 17 வயது இளம் பெண் தனது முன்  இரு பற்களை இழந்து , எத்தனை வேதனை அடைந்திருப்பார்.  அதுவும் சமூகத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையுடனும், மற்றவர்களைப்போல் , சிரித்து மகிழ்ந்து வாழும் வாழ்க்கையை தொலைத்தவளாய் , தமது சக வயதுள்ள தோழியர், கல்லூரி மாணவ மாணவியரின் பரிகாசங்களுக்கும் கேலி கிண்டல்களுக்கும் ஆளாகி, கூனி குறுகித்தானே வாழ்ந்திருப்பாள் .

நண்பர்களே,  அந்த பெண்ணுக்கும் அவரின் அண்ணனுக்கும் ஏற்பட்ட சண்டையில் அந்த பெண்ணின் பற்கள் உடைந்து செயற்கை பற்கள் பொருத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து அந்த அண்ணனுக்கு சமீபத்தில் தான் இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல்லுபோனால் சொல்லு போகும் என்று சொல்லுவார்கள் ஆனால் இப்போது பல்லு போனது தங்கைக்கு செல்லு(க்கு) போனது அண்ணன்.

இப்போது அந்த பெண்ணுக்கு வயது 57 , அண்ணனுக்கு 61.

இரண்டு நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் லீட்ஸ் மாகாணத்திலுள்ள ஒரு வழக்கு மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்பளிக்கப்பட்ட காலம் கடந்த எதிபாராத வழக்கு இது.

சிலரின் ஒரு கண  நேர  கோபம், எப்படி மற்றவரின் வாழ்நாள் முழுதும் ஒரு நிரந்தர சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாக அமைகின்றது.

கோபம் மனிதனுக்கு வருவது சகஜம்தான் (நானும் மனிதன்தான்!!) எனினும் முடிந்த அளவிற்கு கட்டுபடுத்த முயற்சி செய்வதால் பல நிரந்தர இழப்புகளில் இருந்து நம்மையும் மற்றவர்களையும் காக்க முடியும்.

சின்ன வயதில் யாரையாவது அடித்து துன்புறுத்தி இருந்தால் இப்பவே போய் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடுங்க இல்லானா ஒரு 40 அல்லது 50 வருஷம் கழித்து  ...........(நான் நாளைக்கே  என் சகோதரிக்கு போன் போட்டு பேசி சமாதானம் படுத்தி நடந்ததெல்லாம்(??) மறக்க சொல்லனும் - ஒன்ஸ் அப்பான் எ டைம் ....நானும் In-house ரவுடிதான்..)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ20 கருத்துகள்:

 1. "பல்லு - சொல்லு - cellலு" - "சரியான லொல்லு"

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தனப்பால்,

   கொஞ்சம் பொடி வைத்து சொல்வதாக தெரிகிறதே.
   வருகைக்கும் மிக்க நன்றி .

   கோ

   நீக்கு
 3. இதென்ன கொடுமை ,பாதிக்கப் பட்டவரே மனு செய்யாத நிலையில் இப்படி ஒரு தண்டனையா ,இதென்ன சட்டம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி , வணக்கம்.

   அவங்களுக்கும் "டார்கெட்டுனு" ஒன்னு இருக்கும்ல?

   வருகைக்கு மிக்க நன்றி .

   கோ

   நீக்கு
 4. கோபத்தினால் எப்போதும் நன்மை ஏற்பட்டதில்லை என்பதை மீண்டும் நிரூபித்த பதிவு.
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி செந்தில் குமார்.

   த ம 1 - வாழ்த்துக்கள்.


   கோ

   நீக்கு
 5. அஹா எவ்வல்வு அழகாக குழந்தைகலுக்கு கதை சொல்வது போல்

  கோபம் மனிதனுக்கு வருவது சகஜம்தான் (நானும் மனிதன்தான்!!) எனினும் முடிந்த அளவிற்கு கட்டுபடுத்த முயற்சி செய்வதால் பல நிரந்தர இழப்புகளில் இருந்து நம்மையும் மற்றவர்களையும் காக்க முடியும். அழகாக சொல்லியதர்க்கு
  நன்றி சார்!!!  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   பதிவை ரொம்ப ரசித்தீர்கள் போல் தெரிகிறது.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 6. வணக்கம் அரசே,
  மன்னிப்பு கேட்க முனைதல் நல்லதே,
  நல்ல பகிர்வு,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிப்பு??? தமிழில் (சிலருக்கு) பிடிக்காத வார்த்தையாக அல்லவா இருக்கின்றது.

   வருகைக்கு மிக்க நன்றிகள் பேராசிரியரே.

   கோ

   நீக்கு
 7. நமக்கெல்லாம் உள்ளே போகும் பாக்கியம் இருக்காது...ஆனால் ஏகப்பட்ட பேர் போகவாய்ப்பிருக்கிறது.....ஆசிரியர்களும் இதில் வருவார்களா?அவ்வளவு காயம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதன் முறை எம் தளம் வந்ததினால், நீங்கள் ஒன்று மட்டுமல்ல இன்னும் ஒன்றுகூட கூடுதலாக சொல்லலாம் போனசாக.

   ஸ்கூலில் ரொம்ப அனுபவித்ததின் வடு உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 8. காலம் கடந்த நீதி என்றாலும் அந்த பெண்ணுக்கு நேர்ந்த வலி கொடுமையானது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தளீர்,

   நானும் அதே கண்ணோட்டத்தில் தான் இந்த நிகழ்வை அனுகுகிறேன்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 9. அடப் பாவமே! இப்படியுமா?! அண்ணன் தங்கைக்குள் நடந்த ஒரு சாதாரண சம்பவம் இங்கு அப்படித்தானே சிறுவயதில் நடப்பவை எடுத்துக் கொள்ளப்படும்?! நம் உறவுகள் அப்படித்தானே இங்கு வளர்க்கப்படுகின்றது! இச்சம்பவம் ஏனோ ஆச்சரியத்தையும், வேதனையையும் தந்தது. மறப்போம் மன்னிப்போம் என்பதுதானே நமக்கு இங்குச் சொல்லிக் கொடுப்பது. அட்லீஸ்ட் சின்ன விஷயங்களில்....

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
  வாழ்க பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்.

  கோ

  பதிலளிநீக்கு
 11. நம்ம ஊருல வீட்டுக்கு வெளியே அடித்து புரண்டாலும் "இது எங்க குடும்ப பிரச்சினை இதுல தலையிடாதே!" ன்னு சொல்லிட்டா போதும் அம்புட்டு பயலும் ஒதுங்கி போய்டுவாங்க.
  ஏன்னா.... ரோஷகாரங்க!

  ஆனா இங்க வீட்டுக்கு உள்ளேயே சும்மா சத்தம்போட்டாலும் போலீஸ் வந்து காலிங் பெல் அடிக்கும்.
  ஏன்னா..... அவ்ளோ சுமூக அக்கறை!

  PS: Democracy on the path to a police state

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு