பின்பற்றுபவர்கள்

சனி, 7 நவம்பர், 2015

வரலாறு ப(டி)டைத்தவர்!

 சிங்கத்தின் கால்கள்....

நண்பர்களே,

வலைபதிவுலகத்தில் தடம் பதித்த நாள் முதலாய், ஒரு சிறப்பு மனிதரை குறித்து ஒரு பதிவு எழுதவேண்டும் அதன்மூலம், அவரது, தன்னம்பிக்கை, விடா முயற்சி, தனித்தன்மைகளை குறித்து வலை உலக நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்துகொண்டிருந்தேன்.

அதற்கான நேரமும் காலமும் இப்போதுதான் கனிந்து வந்ததென நினைக்கின்றேன், அதனால் இதோ அவரை குறித்த எனது நினைவு சாரல்கள்:

சிறு வயதில் ஒரே ஊரில் அடுத்தடுத்த வீதிகளில் அமைந்திருந்தன எங்கள் இருவரின் வீடுகளும்.  அவரது, உறவினர்களின் பிள்ளைகளும் நானும் ஒரே ஆரம்ப பள்ளிமுதல் உயர்நிலை பள்ளி வரை ஒன்றாக படித்த நேரங்களில் இந்த பதிவின் நாயகன் அவர்களை பல முறை பார்த்திருக்கின்றேன், ஆனால் பரஸ்பரம் பேசி பழகியது கிடையாது.

ஏனென்றால் மிக மிக குறைந்த தருணங்களிலேயே அவரை வெளியில் பார்க்க முடியும், எனினும் அவரின் பெயர்  அவரின் தன்மைகளை அறிந்திருந்தேன்.

காலங்கள் செல்ல செல்ல அவரும் பள்ளிப்படிப்பை முடித்து பட்டம் பயில நான் பயின்ற கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கும் எனக்குமான நட்பு துளிர்விட்டதோடு இலைகளும் விட்டு நட்பு கிளையில் இறுக பற்றிக்கொண்டது.

எங்களது இருவரின் நட்பிற்கும் பாலம் அமைத்து கொடுத்தவர்,என்னுடைய முந்தைய பதிவாகிய "என்ன அவசரம்" என்ற பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த நண்பர்தான்.

நட்புபாலம் போடப்பட்டு அதன் ஈரம் காய்வதற்குள்ளாகவே எங்கள் இருவரின் இதய பாலங்கள் பாட ஆரம்பித்தன இனிய பூ பாளங்கள்.

தினமும் பேசுவோம், அருமையான  தெளிவும் தொலை நோக்கு சிந்தனையும் கொண்டவர், பல நேரங்களில் நாங்கள் மூவரும் ஒன்றாக கல்லூரியின் அருகிலிருக்கும் கடைகளுக்கு செல்வது  வழக்கம்.

அருமையாக பாடகூடியவர், இசைஞானம் மிக்கவர், அவரை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லோரிடத்திலும் அன்பும் நட்பும் பாராட்டும் மிகச்சிறந்த நண்பரவர்.

பட்டபடிப்பை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்ற அவரின் பால் பல பெண்களின் கவனம் கண்டிப்பாக திரும்பி இருக்கும் எனினும் அவரின் பார்வை எவர்மீதும் திரும்ப வில்லை.

மீண்டும் அதே கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க ஆரம்பித்தார், (எம் ஏ வரலாறு) அப்போதும் எங்கள் நட்பு பழைய படியே தொடர்ந்தது,.

இப்போது எங்களின் நட்பு பாலம் அமைத்து கொடுத்த நண்பர் முதுகலை தொடராததால் கல்லூரிக்கு வர முடியவில்லையே தவிர வெளி இடங்களில் எங்களது சந்திப்பு தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.

எனது படிப்பு ஓராண்டுக்கு முன்னரே முடிந்துவிட்டது, நண்பரின் படிப்பு இன்னுமோராண்டு இருந்தபோதும் அவ்வப்போது நாங்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து பேசிக்கொள்வோம்.

இதனிடையில் இவரது, அன்பு ,அறிவு, பண்பு, குண நலன்கள்,பக்குவம் போன்றவற்றால் கவரப்பட்டு அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரோடு முதுகலை பயின்ற மாணவி ஒருவர் கூற நண்பனின் பெற்றோரின் பரீசலனைக்கு பின்னர் அதே மாணவியை திருமணமும் செய்துகொண்டார்.

பட்ட மேற்படிப்பிற்கு பிறகு ஆசிரியர் பயிற்சி பட்ட மேற்படிப்பும்  அதை தொடர்ந்து தத்துவ துறையில் முதுகலை படிப்பும் பயின்று, இன்று ஒரு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின்  தலைமை ஆசிரியராக சிறப்புடன் பணி ஆற்றி கொண்டிருக்கும் அவரை நேரில் பார்த்து குறைந்த பட்சம் 25 ஆண்டுகளாவது ஆகி இருக்கும் எனினும் இன்னமும் என் குரலை கேட்டாலே , நான் யார் என்று சொல்லுமளவிற்கு, அபார ஞாபக திறன் கொண்டவர்.

ஊரில் இருந்த நேரத்தில் பல மாத , வருட இடைவெளிகளுக்கு பின்னர் சந்திக்க நேர்ந்த போதெல்லாம், என் முகம் பார்க்காமலேயே என் குரலை வைத்து என்னை பெயர் சொல்லி அழைத்தவர் என்பது என்னை சார்ந்த அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை.

எனது படிப்பு முடிந்து பல காலங்கள் இந்தியாவில் சில  நிறுவனங்களில் பணிபுரிந்து பின்னர், சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கிகொண்டிருந்த  தொலைக்காட்சி தொடர்பான நிறுவனத்தில் பணி ஆற்றி கொண்டிருந்த  சமயம், வேலூரில் நடத்தப்பட்ட ஒரு  டீலர் மீட்டிங்கிற்காக சென்றிருந்தேன்.

அங்கே ஒரு டீலர் ஷோ ரூமில் வாடிக்கையாளர்களுள் ஒருவராக அமர்ந்திருந்த இந்த நண்பரை பல ஆண்டுகள் கழித்து பார்த்ததும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் கரைபுரள, "ஹலோ " என்று ஒரே ஒருமுறைதான் பெயர் சொல்லி என் பேச்சை தொடர்வதற்குள், சற்றும் தாமதிக்காமல், கொஞ்சம்கூட யோசிக்காமல் உடனடியாக என் பெயரை சரியாக சொல்லி , எப்படி இருக்கின்றாய், எங்கே இருக்கின்றாய், எப்போது வந்தாய்..... போன்ற கேள்விகளை கேட்டு என்னை இன்ப கடலில் மூழ்கடித்து திக்கு முக்காட வைத்த அந்த ஒரு நிகழ்வே அவரது அபார ஞாபக திறமைக்கு  ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

இத்தனைக்கும் நான் அங்கு வர இருப்பதோ, அல்லது அவர் அங்கே இருப்பார் என்பதோ நாங்கள் இருவருமே அறியாதிருந்தோம்.

கல்லூரி நாட்களில் அவர் அடிக்கடி முனு  முனுக்கும்  திரைப்பட பாடல்,

"தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் 
தரத்தினில் குறைவதுண்டோ - உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் 
அன்பு குறைவதுண்டோ...
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
 சீற்றம் குறைவதுண்டோ...  
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே 
மாற்றம் காண்பதுண்டோ. ?"

ஒவ்வொரு முறை இவர் இந்த பாடலை முனு முனுக்கும் போதெல்லாம் அதை கேட்க்கும் என் உள்ளம் உதிர்க்காமல் இருந்ததில்லை கண்ணீரை.

இப்போதும் அந்த பாடலை கேட்க்க நேரும்போதெல்லாம் எனக்கு இந்த நண்பரின் ஞாபகம்தான் வரும்.

சரி இதில்லென்ன உள்ளம் உருகும் அம்சம் என்று நினைப்பவர்களுக்கு:  ஆம் நண்பர்களே இந்த பாடலுக்கும் என் நண்பருக்கும் ஒரு நேரடி தொடர்பு இருக்கின்றது.

அவர் யார் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், இந்த பாடலின் அவரது தொடர்பையும் தெரிந்துகொள்வீர்கள்.

யார் அவர்?

அவர் பெயர்:


 




இந்த அருமையான என் நண்பரை குறித்து ஓர் இனிய நினைவு சாரல் பல ஆண்டுகள் கழித்து என் இதயத்தில் வீச செய்த என் அன்பிற்கினிய நண்பர்கள் - இ(அ)ரட்டை பதிவர் திரு துளசிதரன் மற்றும் திருமதி கீதா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.(வையத்துள் வாழ்வாங்கு வாழும் அம்மையார் - 2)

நண்பர் இரவிக்கு, நலம் விசாரித்தும், என் வாழ்த்துக்களுடனும், நட்புடனும்  இந்த  பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


22 கருத்துகள்:

  1. நண்பர் கோ...உங்களது இந்தப் பதிவை வாசித்து வரும் போதே கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது அது ரவி அவர்களாகத்தான் இருக்குமோ என்று. க்ளூ....என் குரலைக் கண்டுபிடித்துவிடுவார் என்று சொல்லியது. பின்னர் வேலூர்...பின்னர் வாடிக்கையாளர்களில் ஒருவர் என்று சொல்லிப் பின்னர் தங்கத்திலே ஒரு குறை...என்றதும் உறுதியாகிவிட்டது...திருமிகு ரவியேதான் என்று...பின்னர் அவரது படம்...

    அவரை நேரில் சந்தித்த போது கூட நான் விசுவைப் பற்றிச் சொன்னேன். ஆனால் உங்களைச் சொல்லி இருக்க வேண்டும் வூரிஸ் கல்லூரி....சே நான் சொல்லாமல் விட்டுவிட்டேன். நாளை அவருடன் பேசுவேன். அப்போது கண்டிபாக உங்களைப் பற்றிக் குறிப்பிடுவேன். உங்கள் பதிவு பற்றியும் சொல்லுவேன். அருமையான மனிதர் !!! அவர் வாசித்த கீபோர்ட் பாடல்களை ரெக்கார்ட் செய்துள்ளேன். அனுப்பலாம் என்றால் அனுப்புகின்றேன் தங்களுக்கு.

    உலகம் மிகவும் சிறிதோ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் சிறியதுதான் உங்கள் உபகாரத்தைவிட .

      கோ

      நீக்கு
  2. அன்பிற்கினிய நண்பர்களே,

    உங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்கின்றேன், நண்பர் இரவியை பார்க்கும்போது எங்களின் பொது நண்பர் அமரர் மதிவாணனை குறித்தும் நான் என் நினைவஞ்சலியை பதிவாக்கியத்தை குறித்தும் சொல்லுங்கள்.

    அவரது இசை பதிவுகளையும் அனுப்பி வையுங்கள் செவி மடுக்க ஆவாலாய் காத்திருக்கின்றேன்.

    மீண்டும் உங்களுக்கு என் பணிவான நன்றியும் வாழ்த்துக்களும்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹஹ் இ(அ)ரட்டை ரசித்தோம் நண்பரே! எங்களையும் இங்குச் சுட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே!.

    இசைப்பதிவுகள் அனுப்புகின்றோம்..

    மிக்க நன்றி மீண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே

      மிக்க நன்றி, அடைமொழி பட்டப்பெயர் சரிதானே.

      நட்புடன்

      கோ


      நீக்கு
  4. கீதா மேடம் வேலூரில் இருந்து சென்னை திரும்பியதும் ரவி சாரைப் பற்றி
    சொன்னாங்க.
    இப்போ இந்தப் பதிவில்...
    அவர் உங்க நண்பர்ஆ ஆச்சர்யமாக இருக்கு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      இந்த பதிவில் நான் முதல் சில வரிகளில் குறிப்பிட்டிருந்ததன் பின்னணியில் இருப்பவர் நீங்கள்தான் என்றால் அது உங்களுக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கும்.

      ஆரம்ப நாட்களில் நீங்கள் எனக்கு அளித்திருந்த பின்னூட்டங்களில் , நீங்கள் படித்துகொண்டிருப்பதாக அவ்வப்போது நீங்கள் சொல்லிய தருணங்களில் இவரை பற்றி உங்களுக்கு எழுதவேண்டும் என்ற சிந்தை சற்று காலதாமதமானதால், இப்போது, அதுவும் மேடம் கீதா அவர்களின் பதிவின் தூண்டுதலால்.

      வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      கோ

      நீக்கு
  5. அருமையான பகிர்வு அய்யா!
    தொடரட்டும் நட்பின் இணக்கம்.
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி செந்தில் குமார்

      நட்புடன்

      கோ

      நீக்கு
  6. யாருடைய வலைத்தளத்திற்கும் சென்று கருத்திட எப்போது ஐயா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபால்,

      எப்படி இருக்கின்றீர்கள்.
      தங்களின் வருகை கண்டு பல யுகங்கள் ஆகிவிட்டன,
      கூடுகை கொண்டாட்டம் - பதிவு பார்த்தீர்களா?
      மீண்டும் உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி.
      எப்படியும் மற்றவர் வலைத்தளங்கள் எல்லாவற்றிற்கும் சென்று கருத்திடுவதில் உங்களுக்கு போட்டியாக நான் மட்டுமல்ல எவரும் அந்த எண்ணத்தில்கூட தங்களை நெருங்க முடியாது என்பது நமது பதிவுலகம் மட்டுமல்ல ஏழு உலகமும் அறிந்த உண்மை.

      நான் ஏதோ எப்போதோ எங்கேயோ ஒன்றிரண்டு..... நம்மால் முடிந்தது..
      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  7. துளசி- கீதா எழுதிய பதிவில் இவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள்! உங்கள் பதிவை வாசிக்கையிலேயே அவராக இருக்குமோ? என்றபடியே வாசித்து வந்தேன்! அவரேதான் என்றபோது மகிழ்ச்சி! நல்ல நண்பர்களை கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளிர் சுரேஷ்,

      உங்கள் அனுமானம் பொய்க்கவில்லை.

      வருகைக்கும் உங்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  8. தங்களின் நட்பு மென்மேலும் தொடர வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா,

      வருகைக்கு ம் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  9. நட்புதான் எத்தனை ஆழமான உணர்வுகளைக் கிளப்பி விடுகிறது! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கு மிக்க நன்றி செந்தில் குமார்

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் அரசே,
    மனம் நிறை வாழ்த்துக்கள், தங்கள் நட்பிற்கு, சில காரணங்களால் உடன் பதில் அளிக்க இயலவில்லை, நன்றி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் அவர்களுக்கு,

      தேங்க்ஸ் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா.

      தீபாவளி வாழ்த்துக்கள்.

      நன்றி

      கோ

      நீக்கு