தவப்புதல்வனுக்கு தலை வணக்கம்
தொடர்கிறது....
முதலில் இருந்து வாசிக்க முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு சொடுக்குங்கள்.
மேடையில் கற்றறிந்த பெரியயவர்களுக்கு நடுவில் பிரதான இருக்கையில் அமர்ந்தபடி அரங்கில் கூடி இருந்த அறிவார்ந்த பெரியோர்களையும் நாளைய சமுதாயத்தின் சிற்பிகளாகிய இன்றைய மாணவ மாணவியரை பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.
அதிலும் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் என்னுடைய குடும்பத்தாரை பார்ப்பது எப்படி இருந்திருக்கும் எனும் யூகத்தை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.
மேடையில் இருந்த அனைவருக்கும் தனித்தனியாக கைகுலுக்கி வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.
மேடையில் கற்றறிந்த பெரியயவர்களுக்கு நடுவில் பிரதான இருக்கையில் அமர்ந்தபடி அரங்கில் கூடி இருந்த அறிவார்ந்த பெரியோர்களையும் நாளைய சமுதாயத்தின் சிற்பிகளாகிய இன்றைய மாணவ மாணவியரை பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.
அதிலும் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் என்னுடைய குடும்பத்தாரை பார்ப்பது எப்படி இருந்திருக்கும் எனும் யூகத்தை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.
மேடையில் இருந்த அனைவருக்கும் தனித்தனியாக கைகுலுக்கி வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.
அதை தொடர்ந்து, வரவேற்புரை , கல்லூரி முதல்வர் , பேராசிரியர்கள், கல்லூரியின் பழைய மாணவர் பேரவையின் நிர்வாகிகள் என அத்துனை பேர்களும் ஒவ்வொருவராக என்னை வாழ்த்தியும் , என் கல்லூரி நாட்களின் மறக்கமுடியாதா சில சம்பவங்களையும் கூறியும் பாராட்டி அமர்ந்தனர்.
ஒவ்வொருவர் பேசும்போதும் என்னை குறித்த அவர்களின் ஞாபக பதிவேட்டில் பதிந்திருந்த பல படிவங்களை எடுத்துரைக்கும்போது உள்ளபடியே ஆனந்தமாகவும் கொஞ்சம் வெட்கமாகவும்கூட இருந்தது.
அதில் ஒருவர், என்னை சிறந்த பேச்சாளர் (?) கவிஞர்(??) என்றுகூட சொல்லிவிட்டார்.
நான் படிக்கின்ற காலங்களில் இருந்து பணி புரிந்துகொண்டிருக்கும் பல பேராசிரியர்கள் என்னை நினைவில் வைத்து, அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை இப்போதும் மேடையில் பேசியது எனக்கு ஆனந்த கண்ணீரையும் வரவழைத்து.
அவர்களுள் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, கணணித்துறை, பாதுகாப்புத்துறை, மேலாண்மைத்துறை, கணிதத்துறை, வணிகவியல்துறை பேராசிரியர்களும் என்னைப்பற்றி பேசியது கூடி இருந்த மக்களுக்கு என் கல்லூரி நாட்களில் அனைத்து துறையிலும் எனக்கிருந்த ஈடுபாட்டை சொல்வதுபோல் அமைந்தது. அது உண்மையும் கூட.
இப்படியாக மேடையில் இருந்த ஆறு பேர்களில் ஐந்து பேர்கள் பேசி முடித்தபின்னர், மீண்டும் கல்லூரி முதல்வர் மைக்கைபிடித்து இப்போது நம்மிடையே வந்திருக்கும் நம் கல்லூரியின் பழைய மாணவரும் , என்னுடைய துறையில் என்னிடம் படித்த மாணவரும்,சிறந்த மாணவருக்கான விருது பெற்றவரும், நம் கல்லூரிக்கு வெளி நாட்டிலும் பெருமை(!!) தேடிதந்துகொண்டிருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு "கோ"யில் பிள்ளை அவர்களை நம்மோடு சிறிது நேரம் உரை நிகழ்த்தும்படி உங்கள் சார்பாக அழைக்கிறேன். என சொல்லி மஞ்சளும் சிகப்பு நிறங்களால் ஆன சரிகைகள் வேயப்பட்ட ஒரு பொன்னாடையை போர்த்தி நினைவு பரிசும் கொடுத்து அழைத்து அமர்ந்தார்.
என்ன பேசுவது என்று நான் யோசிப்பதை குறிப்பறிந்த என் அருகில் அமர்ந்திருந்த பேராசிரியர் ஜோன்ஸ் அவர்கள் என் காதில் , மாணவர்களுக்கு உங்களது அனுபவங்களையும் சில அறிவுரைகளை சொல்லுங்கண்ணே.... சொல்லுங்க.... எனும் பாணியில் கிசுகிசுத்தார்.
"எவ்வளவு நேரம் பேசணும்? "
"அரை மணி நேரம்.. ..... உங்களுக்கு ".
"அரை மணி நேரமா ?" என அரை மனதுடன்......
மகிழ்ச்சியும், பூரிப்பும், ஆனந்தமும் இழையோடி ஆக்கரமித்திருந்த என் இதயத்தில் , மேற்சொன்ன அறிவிப்பு , ஒரு அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
எனினும் அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளாமல், மைக்கையை நோக்கி நடந்து சென்றேன்.
அரங்கம் நிறைந்த கூட்டம்.
அதில் இந்நாள் மாணவ மாணவியர், பேராசிரியர்கள்,எனக்கு முன்னும் எனக்கு பின்னும் அந்த கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள், பேரவையின் நிர்வாகிகள் , புகைப்பட கலைஞர்கள் ,கல்லூரி ஊழியர்கள் என திரண்டிருந்த கூட்டத்தை பார்த்ததும், "பில்டிங் ஸ்ட்ராங்கு.... பேஸ்மெண்டு........ என்றொரு அசரீரி குரல் எனக்கு மட்டும் கேட்க்க... முன் வரிசையில் அமர்ந்திருந்த என் வீட்டாரை பார்த்து ஒரு அசடு வழிந்த புன்னகையை வீசி விட்டு பேச ஆரம்பித்தேன்.
(அப்படி என்ன பேசினேன்...... கொஞ்சம் இருங்க ... இப்பவே கண்ண கட்டுது... கொஞ்சம் சோடா குடித்துவிட்டு சொல்கிறேன்.)
மைக் இருந்த இடத்திற்கு சென்று, அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் சொல்லிவிட்டு,
கல்லூரிக்கும் எனக்குமான பழைய பந்தத்தையும் பேராசிரியர்களுடனான எனது உறவு, மரியாதையையும், கல்லூரிமுதல்வர் மற்றும் ஓரிரு பேராசிரியர்களின் அர்த்தமுள்ள அணுகுமுறையையும் அவர்கள் எங்களிடம் காட்டிய அன்பையும் அக்கறையையும் நன்றியோடு நினைவு கூர்ந்து அவற்றை சபையாரின் முன் பகிர்ந்துகொண்டேன்.
அதை தொடர்ந்து, மாணவ தம்பி தங்கைகளிடம், ( நான் படித்த காலங்களில் முதுகலை வகுப்புகளில் மட்டும்தான் ஓரிரு பெண்கள்) மூன்று விஷயங்களை குறித்து பேசினேன்.
பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுறிய கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மேடையில் அமர்ந்திருக்கும் பேராசியர் பெருந்தகைகளே,அரங்கம் நிறைந்த ஆன்றோர்களேஅன்பிற்கினிய தம்பி தங்கைகளே, என்னை அறிமுகபடுத்திய பேராசிரியர் இன்ப எழிலன் , என்னை ஒரு சிறந்த பேச்சாளர் என்று தமது அன்பின் நிமித்தம் சொல்லி இருந்தார்.
நான் சிறந்த பேச்சாளன் என்பதெல்லாம், "பேச்சிலராக"(Bachelor) இருந்தபோது வேண்டுமென்றால் இருந்திருக்கலாம், இப்போது நான் "பேச்சிலர்" இல்லை என்பதால் "பேச்சு இலராகவும்" மாறி விட்டேன், அதை நான் பேசி முடிக்கு முன்னரே நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
இந்திய மாணவர்கள் அத்தனைபேருக்கும் ஒரு விடி வெள்ளியாக, கலங்கரை விளக்காக, வழி காட்டியாக,ஒரு தந்தையாக, தாயாக, ஆசானாக, மூத்த சகோதரனாக இருந்து சமீபத்தில் நம்மை எல்லாம் மீளா துயரத்தில் ஆழ்த்தி இறைவனின் இன்னடியில் இளைப்பாற சென்றிருக்கும், நம் அனைவரின் நட்புக்கும், பாசத்திற்கும்,மரியாதைக்கும் உரிய , நம் முன்னாள் குடியரசு தலைவரும் , இந்திய தாயின் இணை இல்லா தவப்புதல்வனும் சர்வதேச அரங்கில் விண்வெளி ஆய்வு மற்றும் விண்கல , ஏவுகணை தொழில் நுட்பத்தில் நம் இந்தியாவை தலை நிமிர வைத்தவரும் ,இந்தியா வல்லரசாகும் என்ற வலுவான நம்பிக்கை தீபத்தின் திடமான ஒளிதிரியை பற்ற வைத்தவருமான அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு, உங்களின் முன்னிலையில், என் அஞ்சலியை முதற்கண் தெரிவித்துவிட்டு என்னுரையை துவங்குகின்றேன்.
நினைவில் நிறுத்தி இருந்த அந்த கவிதாஞ்சலியை சொல்லி
முடிக்கும்வரை அரங்கத்தில் நிகழ்ந்த அந்த நிசப்த்த நிமிடங்கள், மறைந்த பெருந்தகைக்கு ஒரு மாபெரும் அஞ்சலியாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
தொடரும்..... வரை காத்திருங்கள்.
நன்றி மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
இதே அரங்கத்தில் தாம் பாடிய ... "பாரதி இன்று இருந்தால்" தான் நினைவிற்கு வருகின்றது. தொடருங்கள்.
பதிலளிநீக்குநண்பரே,
நீக்குவருகைக்கு மிக்க நன்றிகளும் , வளமான உங்கள் நினைவாற்றலுக்கும் பாராட்டுக்களும்.
கோ
'அதில் ஒருவர், என்னை சிறந்த பேச்சாளர் (?) '
பதிலளிநீக்குசரியாகத்தான் சொல்லியுள்ளார்கள்
தங்கள் பதி(வி)லிலும் சரியாகவே
'பேச்சாளன் என்பதெல்லாம், "பேச்சிலராக"(Bachelor) இருந்தபோது வேண்டுமென்றால் இருந்திருக்கலாம், இப்போது நான் "பேச்சிலர்" இல்லை என்பதால் "பேச்சு இலராகவும்" மாறி விட்டேன்,''
என்று சரியாகவே சொல்லியுள்ளீர்கள்..
இதன்மூலம் தாங்கள் வெறும் பேச்சாளர் மட்டுமல்ல... பேச்சிலரும் அல்ல.. (யப்பா.. மூச்சு முட்டுதே..) செயலர்.. அதாவது செயல்வீரர்.. அல்லது கர்மவீரர்.. என்ற பட்டத்திற்க்கு பொருத்த''மான'' முன்னாள் மாணவர் என்பதை தெரிந்து கொண்டோம்.. அதனால்தான் நம் ஊரில் மழை கொட்டோகொட்டென கொட்டி பல வருடங்களுக்கு பிறகு பாலாற்றில் இருகரையை தொட்டு வெள்ளம் பாய்கிறது. அதைக்காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது...
அன்பே சிவம்,
நீக்குதங்களின் வருகைக்கும் தாங்கள் சூட்டும் கௌரவ பட்டங்களுக்கும் மிக்க நன்றிகள்.
மழை பொழிவதும் ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் பாய்வதற்கும் காரணம் , உங்களை போன்று " நல்லார் ஒருவர் உள்ளதால்" என்று நினைப்பது மட்டுமின்றி உறுதியாக நம்புகின்றேன். நீங்க "ரொம்ப நல்லவர்" என்று மூச்சு முட்டுமளவிற்கு எனக்கு வாரி வழங்கிய பட்டங்களில் இருந்தே புலப்படுகின்றது.
நன்றி
கோ
சிறந்த பேச்சாளர் என்று அவர்களுக்கு தெரியும்... சிறந்த எழுத்தாளர் என்பது எங்களுக்கு தான் தெரியும்...
பதிலளிநீக்குதனப்பால்,
நீக்குசித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பார்கள், அதுபோல் வலை சித்தராகிய உங்கள் வஞ்சகமில்லா பாராட்டுகளுக்கும் தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி.
நீங்க சொல்வது சரிதானா?
நன்றி.
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குநலமா?
பேச்சிலர்,,,,,,, பேச்சி இலர்,,,,,,,,
ரசித்தோம்.
சோடா குடித்துவிட்டு,, பேச ஆரம்பியுங்கள்,,,
என்னது அரைமணி நேரமா? நான் 5 நிமிடம் பேசினால் போதும் மைக்க பிடிங்கிவிடுவார்கள்,,,
அருமை அருமை,,,
வாழ்த்துக்கள்,, தொடருங்கள், நன்றி.
பேராசிரியர் அம்மா அவர்களுக்கு,
நீக்குஉங்கள் பேச்சுக்கும் என் பேச்சுக்கும் உள்ள வித்தியாசங்கள் சொட்டு மருந்திற்கும் சோடா குடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்று நினைக்கின்றேன்.
உங்களின் 5 நிமிட பேச்சு ஒரே ஒரு சொட்டாக இருந்தாலும் வாழ் நாளெல்லாம் நோய் எதிர்ப்பை உண்டாக்கும் "சொட்டு மருந்து" போன்று , "ஊனம் போக்கும் ஞான பேச்சாக" இருக்கும் என்று நினைக்கின்றேன். நமதெல்லாம் அரை நேரமானாலும், வீரியம் குறைந்தால் வெறும் தண்ணீராகும் "சோடா" போன்றதுதான். அதற்காகத்தான் அடிக்கடி சோடா குடிக்கவேண்டி இருக்கோ என்னமோ?
நலமுடன் இருக்கின்றீர்கள் என நம்புகின்றேன்.
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
அரசே மன்னிக்கனும்,
நீக்குநான் ஏதேனும் தவறாக,,,
நான் என்றும் ,,,,,, தங்கள் உயரம் அறியாமல் ஏதோ சின்ன பெண் அறியாமல் செய்த பிழைப் பொறுக்க,
நன்றி.
வணக்கம் அரசே,
நீக்குநான் ஏற்றிய தீபங்கள் காணவும்,
கருத்திடவும் அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி.
பேராசிரியரே,
நீக்குஎன்ன. பெரிய பெரிய வார்த்தை எல்லாம்....
நீங்கள் என்ன பிழை இழைத்தீர்கள்.
உங்கள் பின்னூட்டம் அனைத்தும் இயல்பாகத்தானே இருக்கின்றன?
நீங்களே சின்ன பெண் அன்றால் நான் குழந்தையன்றோ?
கோ
அட! இப்பதான் சரி மெதுவாக எழுதுங்கள் நாங்களும் வாசிக்க நிறைய தளங்கள் இருக்கு இடையில் வராததால் என்று கருத்திட்டுவிட்டுப் பார்த்தால் உங்கள் அடுத்த பதிவு..ஹஹ்
பதிலளிநீக்குஅருமையான நினைவலைகள் இல்லையா நண்பரே!..
கீதா: ம்ம் பரவாயில்லை நீங்கள் மேடையில் ஏறி...அழகிய தமிழில் உரையாற்றியும் இருப்பீர்கள்.! நான் மேடையில் ஏறியிருக்கவே மாட்டேன்...பில்டிங்க் ஸ்ட்ராங்க், பேஸ்மென்ட் வீக் என்று சொல்லி...ஹஹஹ் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தங்களை நினைவில் இருத்தி அழைத்து..அருமை நண்பரே.
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.
ஆம், அது ஒரு அருமையான நினைவலை நெஞ்சில் மிதந்து வந்து நெகிழ வைத்த தருணம்தான்.
அறிமுகமும், முதல்வர் மற்றும் ஏனைய பேராசிரியர்களின் பேச்சுக்களும் ஆங்கிலத்தில் இருந்ததால், நானும் அவ்வாறே ஆங்கிலத்தில்தான் உரையை துவங்கி பேச ஆரம்பித்து பின்னர், (தமிழ்த்துறை) பேராசிரியரின் செல்லமான - வெல்லமான வேண்டுகோள் , நினைவில் நிழலாட , தமிழில், உள்ளக்களிப்போடு பேச ஆரம்பித்தேன்.
உங்களின் ஒரு பதிவே 1000 மேடை மேடை பேச்சுகளுக்கான அறிவுரையும் செய்திகளையும் தாங்கி உலவும் தென்றலன்றோ?
கீதா மேடம், உங்களுக்கும் பேஸ்மென்ட் வீக்கா?.... அப்படி ஒன்றும் தோன்றவில்லையே...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
கோ
அதை தொடர்ந்து, மாணவ தம்பி தங்கைகளிடம், ( நான் படித்த காலங்களில் முதுகலை வகுப்புகளில் மட்டும்தான் ஓரிரு பெண்கள்)///
பதிலளிநீக்குஏன் சார் ஒரே ஃபீலிங்கா சார்?:))
பேச்சிலர்/Bachelor
அஹஹஹ அருமை.
தொடருங்கள் சார்.
மகேஷ்,
நீக்குஇப்பவும் அந்த ஃபீலிங் இருக்கத்தான் செய்கிறது.
வருகைக்கு மிக்க நன்றி.
தில்லையகத்தாரின் பின்னூட்டம் - வாலை பல தோலு... பதிவில் பாருங்கள்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ