ஆயிரம் காலத்து.............
நண்பர்கள்,
ஆங்காங்கே ஒரு சில இடங்களில் , பலவித சூழ்நிலைகள் நெருக்கடிகள் காரணமாக ,கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே "மஞ்சள் கயிறுடன்" ஒப்பந்தம் - ஒரு பந்தம் செய்து வைக்கப்படும் மாணவர் மாணவியரை நாம் பார்த்திருப்போம், அவர்களுடன் சேர்ந்தும் படித்திருப்போம்.
அதுபோன்று மஞ்சள் கயிற்றின் பந்தத்தில் இணைந்த பல மாணவ மாணவியரை என் கல்லூரி நாட்களில் நான் பார்த்திருக்கின்றேன்.
ஒரு சமயம், அக்டோபர் மாதம், ஒரு வார விடுமுறை கழித்து எனது வகுப்பில் பயின்ற ஒரு மாணவனும் இதுபோல் ஒரு பந்தத்தில் இணைக்கப்பட்டு வகுப்புக்கு வந்திருந்தான்.
எப்போதும் நவ நாகரீகமாக , சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டு, நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் , கையில் , கழுத்தில் தாயத்து போன்ற எந்த அடையாளத்தையும் தவிர்த்தும் , பெருவாரியான சமயங்களில் சடங்கு சம்பிரதாயம், சொந்தத்தில் திருமணம், கால்கட்டு, கைகட்டு (??) போன்ற வற்றை சாடியும் ,திருமணத்தின்போது பெண்ணுக்கு ஏன் மஞ்சள் கயிறு கட்டி மெட்டி போட்டு அவள் திருமணம் ஆனவள் என்று உலகோருக்கு காட்டவேண்டும்.
ஆண் திருமணவானவன் என்று காட்டபடுவதற்கான எந்த அடையாள சின்னமும் அவனிடம் காணபடுவதில்லையே அப்படி இருக்க பெண்ணுக்கு கட்டப்படும் தாலி வெறும் ஒரு மஞ்சள் கயிறு மட்டுமே அதை ஏன் இந்த சமூகம் இத்தனை புனிதமாக கருதவேண்டும் , அது தேவையில்லாத ஒரு சடங்கு என்றெல்லாம் பாரதியார் நூற்றாண்டு விழா பேச்சுபோட்டியில் பேசினவன் அவன்.
ஆண் திருமணவானவன் என்று காட்டபடுவதற்கான எந்த அடையாள சின்னமும் அவனிடம் காணபடுவதில்லையே அப்படி இருக்க பெண்ணுக்கு கட்டப்படும் தாலி வெறும் ஒரு மஞ்சள் கயிறு மட்டுமே அதை ஏன் இந்த சமூகம் இத்தனை புனிதமாக கருதவேண்டும் , அது தேவையில்லாத ஒரு சடங்கு என்றெல்லாம் பாரதியார் நூற்றாண்டு விழா பேச்சுபோட்டியில் பேசினவன் அவன்.
வகுப்பறையில் நானும் அவனும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருப்போம்.
அன்று அவனது நடைமுறையில், தோற்றத்தில் ஒரு மாற்றம் காணப்பட்டது.
அவனிடம் விசாரிக்கையில் , வீட்டிலே வற்புறுத்தியதாகவும் தமக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்றும், வருகிற தீபாவளிக்கு முன் செய்யவேண்டும் எனவும் , கூட்டுக்குடும்பமாக தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என இருக்கும் அவனுக்கு எல்லோரும் சேர்ந்து ஏகமனதாக சொந்தங்கள் முன்னிலையிலேயே , "கட்ட வைத்து விட்டார்கள்" என கொஞ்சம் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான்.
அருகில் அமர்ந்திருந்த நானோ,, இதிலென்ன வருத்தபடுவதற்கு இருக்கின்றது? ஒட்டுமொத்த குடும்பமும் சொல்லும்போது அதிலும் பெரியவர்கள் ஆசைப்படும்போது அதை நிறைவேற்றி வைப்பதுதானே நம் கடமை.
அதிலும் இது ஆயிரம் காலத்து..............
நீ ஒன்றும் பால்ய பருவத்து பையன் இல்லையே, வேண்டாம் என்று சொல்லி தவிர்பதற்கு, நீயும் வளர்ந்த பருவமடைந்த பையன் தானே , உனக்கும் நல்லது கெட்டது, குடும்ப சம்பிரதாயங்கள் , பழக்க வழக்கங்கள் எல்லாம் தெரிந்து இருக்குமே.
அப்படி அல்ல, இங்கே மற்ற மாணவர்களோடு பேசும்போதும் பழகும்போதும் என்னை கொஞ்சம் வித்தியாசமாக பார்கின்றார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது அதனால்தான்.
சரி எப்போது நடந்தது, ஏன் யாருக்கும் சொல்லவில்லையா?
கடந்த வாரம் நாங்கள் எல்லோரும்.....
எல்லோரும்னா?
ஆம் .. என் அத்தையின் மகளும்தான்.
கிராமத்தில் உள்ள தாத்தாவின் பூர்வீக வீடிற்கு சென்று இருந்தோம் மூன்றாவது நாள் எல்லோரும் குல தெய்வ கோவிலுக்கு சென்றோம்.
தாத்தாவும் பாட்டியும் ஆசிர்வாதம் செய்து தட்டில் வைக்கபட்டிருந்த மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து கட்டசொன்னார்.
இதில் எனக்கு விருப்பம் - உடன்பாடு உண்டா இல்லையா என்று கூட கேட்க்காமல், என் அப்பாவும் அம்மவும்கூட நல்ல நேரம் முடியறதுக்குள்ள கட்டு என சொல்ல அருகிலிருந்த அத்தையும் தலை அசைத்து அங்கீகரிக்க நானும் அதன்படி செய்துவிட்டேன்.
அங்கேதான் எனக்கும் என் அத்தை மகளுக்கும்..... .பெரிய வாக்குவாதமும் வாய் சண்டையும்..... (சரி அதை விலாவரியாக பிறகு சொல்கிறேன்).
பெரியவர்கள் சமாதனம் செய்ய தற்காலிகமாக வாக்குவாதம் நின்றது அப்போது.
இதில் எனக்கு விருப்பம் - உடன்பாடு உண்டா இல்லையா என்று கூட கேட்க்காமல், என் அப்பாவும் அம்மவும்கூட நல்ல நேரம் முடியறதுக்குள்ள கட்டு என சொல்ல அருகிலிருந்த அத்தையும் தலை அசைத்து அங்கீகரிக்க நானும் அதன்படி செய்துவிட்டேன்.
அங்கேதான் எனக்கும் என் அத்தை மகளுக்கும்..... .பெரிய வாக்குவாதமும் வாய் சண்டையும்..... (சரி அதை விலாவரியாக பிறகு சொல்கிறேன்).
பெரியவர்கள் சமாதனம் செய்ய தற்காலிகமாக வாக்குவாதம் நின்றது அப்போது.
பிறகு விருந்து முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்துவிட்டோம்.
அருகருகே அமர்ந்து பயணித்தாலும் வழி நெடுகிலும் நான் என் அத்தை மகளோடு பேசாமல் தான் வந்தேன்.
என்னடா, இதுக்குபோய் இப்படி அலுத்துகிற, நானா இருந்தா ரொம்ப சந்தோஷமா , ஜாலியா இருப்பேன் என சொல்ல , அப்படியா கொஞ்சம் நேரம் நீயும்தான் கட்டிப்பார் எப்படி இருக்குதுன்னு என சொல்லி அவன் கையிலிருந்த அந்த மஞ்சள் நோன்பு கயிற்றை கழற்றி என் கையில் கட்டிவிட்டான்.
அன்று மாலை கல்லூரி முடிந்து மணி அடிக்கும்வரை அந்த மஞ்சள் கயிறு என் வலது மணிக்கட்டில் ஒரு அணிகலனாய் அழகாக திகழ்ந்தது.
தீபாவளி நோன்பு முடியும் வரை அது மீண்டும் அவன் மணிக்கட்டில் சுற்றிக்கொண்டிருந்தது.
அனைவருக்கும் தீபாவளி மற்றும் நோன்பு நல் வாழ்த்துக்கள்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
இது என்ன புது கட்டாகா இருக்கு..
பதிலளிநீக்குநண்பா,
நீக்குஇது புது கட்டு அல்ல, கட்டுக்கட்டான நமது இந்திய கலாச்சார வழிமுறைகளில் ஒரு பழைய சின்ன கட்டுத்தான் இது.
இது நண்பன் ரமேஷுக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு "அதிரச" நிகழ்வு.
ரமேஷ் நினைவிருக்கின்றதா?
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குநண்பரே,
நீக்குஉங்களுக்கும் என் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
அருமை
பதிலளிநீக்குநண்பரே,
நீக்குஉங்களுக்கும் என் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
வாக்குவாதம் பயங்கரமா இருக்கும் போலிருக்கே...
பதிலளிநீக்குதனப்பால்,
நீக்குஅப்படித்தான் நானும் எதிர்பார்த்தேன், ஆனால் என் நண்பன் பிறகு சொல்வதாக சொல்லிவிட்டான். அதற்கு பிறகு அவனை சந்திக்கவேயில்லை, இப்போ மனைவி, குடும்பம் குழந்தைகள் என தீபாவளியை கொண்டாடிகொண்டிருப்பாரோ என்னமோ நோன்பு கயிறுடன்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
தாலிதான் கட்டச்சொன்னாங்களோன்னு நான் நினைத்தேன். ஹா...ஹா... நோன்புக்கயிறா?.....
பதிலளிநீக்குவேலூர் கவிப்பிரியனே,
நீக்குஅப்படியே, கல்யாண சாப்பாடும் போடுவாங்கன்னு நினைத்தீர்கள் போலும்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
என்னது அது நோன்பு கயிரா.... ஐய்யோஓஓஓஓஓ.
பதிலளிநீக்குசே. உங்க பதிவை வாசிக்கும்போது மட்டும் உஷாரா இருக்க முயற்சித்தாலும் முடியலியே:))) அவ்வ்.
பதிவு சூப்பர் சார்.
மகேஷ்,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
இந்த முறையுமா.... உனக்கு இதே வேலையபோச்சு......கொஞ்சமாவது உஷாரா இருக்கணும்....
கோ
கடைசி ட்விஸ்ட் கலக்கல்!
பதிலளிநீக்குதளிர் சுரேஷ்,
நீக்குபதிவினை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள், இது ஒரு உண்மை சம்பவ வாணலியில் "கோ" பிராண்ட் அசல் நெய்யில் சுட்டெடுத்த தீபாவளி வெல்ல அதிரசம்.
உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
கயிறு நல்லா இ''று''க்குது.....
பதிலளிநீக்குநண்பா, கயிறு ரொம்ப இ"று"க்கிடுச்சோ?
நீக்குபார்த்து, அதிரசம் சாப்பிட முடியாமல் போய்விடபோகிறது.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குமகேஸ்வரி மகேஸ்வரன் இடபாகத்தில் இயைந்த கதை,,,,,,
தங்கள் நினைவலைகள் பகிர்ந்தது அருமை,
அய்யய்யோ, நீங்கள் மகேஸ்வரனுடன் இயைந்த கதை எல்லாம் எனக்கு தெரியாதுங்க, இது எனக்கும் என் நண்பனுக்கும் இடையில் நிகழ்ந்த நினைவின் பதிப்புதான்.
பதிலளிநீக்குஅது என்ன நீங்களும் மகேஸ்வரனும் இயைந்த கதை?
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
மகேஸ்வரி என்றால் நான் மட்டும் தானா?
நீக்குஅது வேறு ஒரு அம்மா,,
அந்தம்மா கணவரின் உடலோடு ஒட்டியவர்,,,,,
நான் அவ்வாறு அல்லவே அரசே,
பேராசிரியரே,
நீக்குவேறு அம்மாவா? உங்களுக்கு என்ன?
கோ
உங்கள் புத்தக வெளியீடு எப்போது?
பதிலளிநீக்கு(அந்த அளவிற்கு “சரக்கு: இருக்கு!)
ஐயாவிற்கு அனேக வணக்கங்கள்,
நீக்குபுத்தகம் வெளி இடும் அளவிற்கு "சரக்கு"(??!!) இருப்பதாக நீங்கள் சொல்வதை ஒரு உயர்வு நவிற்சியாகவே எடுத்துகொள்கிறேன். உங்களைபோன்ற ஜாம்பவான்கள் வாயால் பாராட்டப்படும் அளவிற்கு என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடித்திருப்பதில் உள்ளம் மகிழ்கின்றது; புத்தக வெளியீட்டை இன்றே நான் கண்டதுபோன்றதொரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும் பட்ச்சத்தில் ஐயாவின் அறிவுரைகளும் ஆலோசனைகளும் கண்டிப்பாக நாடப்படும்.
உற்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டம் என் மனதிற்கு கொண்டாட்டம்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
வணக்கம் அரசே,
நீக்குஎனக்கும் அக் கேள்வியுண்டு.
எப்போ?
பேராசிரியரே,
நீக்குநீங்களுமா?
கோ