பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2015

"வாலைப்பல தோலு வலுக்கி விலுந்த ஆலு"

பெண்ணே உன் மேல் பிழை (இல்லை) 

நண்பர்களே,

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் (நம்மில்) பலரும்  தமிழ் எழுத்துக்களை அவற்றிற்குறிய ஓசையுடன் உச்சரிக்காமல் தமிழை அதன் சுவையை நச்சரிக்கும் வண்ணம் உச்சரிக்கும்போது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான்  இருக்கின்றது.

குறிப்பாக, லகர ளகர ழகர ரகர றகர வித்தியாசங்களை   உணராமல் பேசும்போது அங்கே தமிழ் மொழி யின் இதயம் ஈட்டியால் குத்தபடுகிறது.

தமிழை தாய் மொழியாக கொள்ளாமல், வீட்டில் உள்ள  எவருக்கும் தமிழ் தெரியாமல், தமது பள்ளி கல்லூரி காலங்களில் தமிழ் நாட்டில் தங்கி இருந்த நாட்களில்  தமிழின் அறிமுகம் கிட்டியதை கெட்டியாக பற்றிகொண்டு, தமது மதி நுட்பத்தின் காரணமாக தமிழில்  சரளமாக பேசவும், படிக்கவும் சாதாரண மக்கள்போல் சாதாரண மாக எழுத மட்டுமல்லாமல், கதை , கவிதை, கட்டுரைகள் எழுதும் ஒரு பிரபல எழுத்தாளராக திகழும் நம் அன்பிற்குறிய தம்பி திருப்பதி மகேஷை இந்த நேரத்தில் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் எனும் என் கருத்தில், இதை வாசிக்கும் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது என்பதை திடமாக நான் நம்புகின்றேன்.

பல நேரங்களில் தட்டெழுத்து செய்யும்போது நம்மில் பலருக்கும் சில எழுத்து பிழைகள் வரக்கூடும் , ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல,அவற்றையும் கூடுமானவரை தவிற்க முயற்சிக்கலாம். 

ஆனால் அடிப்படை எழுத்துக்கள் நெடில் குறில் வல்லின மெல்லின, இடையின  வேறுபாடுகளை நிச்சயமாக அவற்றிற்கு உரிய ஓசை நயத்துடன் உச்சரிப்பது மொழியின் பால் நாம் கொண்டுள்ள மரியாதையையும் பெருமையையும் பலபடுத்துவதாக அமையும்.

தமிழை ஒரு பாடமாக  பள்ளிகூடம் வரை மட்டுமே பயின்ற என்னுடைய எழுத்துகளில் ஆங்காங்கே சில எழுத்துபிழைகள் தலை தூக்கும் சில வேளைகளில் முனைவர்.மகேஸ்வரிபாலச்சந்தர் அவர்கள் திருத்தம் சொன்னதில் இருந்து எப்போது "ற்" என்ற எழுத்து வந்தாலும் அதன் பக்கத்தில் வேறொரு ஒற்று எழுத்து வராமல் கவனமாக இருக்கின்றேன். உதாரணத்திற்கு: (வரவேற்க்கிறோம்= வரவேற்கிறோம்.)

இதுபோல் எழுத்து பிழைகள் நேரும்போது அவற்றை, தெரிந்தவர்கள், நட்பு ரீதியாக சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய ஆலோசனை சொல்வது பிழைகள் இனி வராமல் இருக்க வகை செய்யும்.

இப்படி தமிழர்களாகிய நமக்கே பல வேளைகளில் தமிழ் எழுத்துக்களும் , அவற்றின் உச்சரிப்புகளும் முறையாக பாகம் படாமல் இருக்கும்போது, தமிழுக்கும்  தங்களுக்கும் எந்த ஒரு தொட்டகுறையோ விட்ட குறையோ இல்லாத பல வெளி நாட்டவர் தமிழை அழகாக இலக்கண சுத்தமாக பேசும்போதும் படிக்கும்போதும் உண்மையிலேயே நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் சில சமயங்களில் வியப்பாகவும் கூட தோன்றுகின்றது.

வெளி நாட்டில் உள்ள சில தமிழ் குடும்பங்களை சார்ந்த சிறுவர்கள் தமிழ் கலை விழாக்களின்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நாடக அல்லது பேசவேண்டிய  பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில்   எழுதி வைத்து வாசிப்பது என்பதும் தவிற்க முடியாததாகத்தான் இருக்கின்றது.

இத்தனைக்கும் வீட்டில் அப்பா அம்மா, அவர்களிடத்தில் தமிழிலேயே பேசிகொண்டிருந்தாலும் மேடை பேச்சு  என்று வந்து விட்டால் அல்லது திரை இசை பாடல் என்று வந்து விட்டாலும் , ஒரு சில வரிகளைகூட நினைவில் நிறுத்தி மனப்பாடமாக சொல்ல சிரமப்படுகிறார்கள் நம் வீட்டு குழந்தைகள்.

அப்படியே நம் வீட்டு குழந்தைகள் சினிமா பாடல்களை பாடினாலும் உச்சரிப்புகள் சரியாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே? பெரியவர்களே சிரமப்படும்போது சிறுவர்கள் என்ன செய்வார்கள்?

இன்னும் சொல்லபோனால் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் எத்தனைபேர் வாழை பழம் என்பதை சரியாக உச்சரிக்கின்றனர்?

ஆனால் சமீபத்தில் ஒரு காணொளியில் வட ஐரோப்பிய நாடான லித்துவேனியாவை சார்ந்த இரண்டு இளம் பெண்கள் நம் தமிழ் திரை பாடலை அச்சரம் பிறழாமல் வல்லின மெல்லின இடையின எழுத்துக்களின் வித்தியாசம் விளங்கும்படி பாடிய அந்த காணொளியை பார்த்தபோது மெய் சிலிர்த்துத்தான் போனது. 

நீங்களும் தான் கேட்டு பாருங்களேன்.


தமிழை தமிழாய் பாடிய இந்த இரண்டு பெண்களுக்கும் நம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 தமிழுக்கே உரித்தான சிறப்பு "ழ"கரத்தையும் வல்லின மெல்லின இடையின எழுத்துகளையும் சரியாக உச்சரிக்க பழகுவதும் நம் குழந்தைகளுக்கு பழக்கி விடுவது நம்  கடமையாகும்.

அப்படி செய்வது நம் தமிழை  "வாலை பல தோலில் காலை வைத்து வலுக்கி விலாமல் " காப்பாற்ற முடியும்.

சரி, பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள், அப்படியே  ஒரு "வாயப்பயம்" இருந்தா சாப்பிட்டுக்கொண்டே பாருங்க.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் "அட" என்று எதை சொல்கின்றீர்கள் என தெளிவு படுத்தாமலே விட்டுவிட்டதினால்,கொஞ்சம் குழப்பம்.

      எனினும் எதையோ(!!)நீங்கள் ரொம்ப ரொம்ப நன்றாக ரசித்தீர்கள் எம்பது மட்டும் புரிகிறது.

      நன்றி.

      கோ

      நீக்கு
  2. திருப்பதி மகேஷை மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கிறேன். திருப்பதியில் அவருக்கு உதவவும் எப்படி ஆள்பலம் கிடைக்கிறது என்றும் ஆச்சரியம்.

    அவர் உழைப்பிற்கு முன் நாம் சாதாரணம். அவரும், அவர் தமிழ்ப்பற்றும், எழுத்தும் வளர்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, வணக்கம்.

      கல்வியாளரும் எழுத்துலக பிதாமகனுமான உங்களின் பாராட்டுக்கள் தம்பி மகேஷுக்கு ஒரு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் என்று நிச்சயம் நம்புகின்றேன்.

      நீண்ட இடை வெளிக்குப்பின் மீண்டும் உங்களின் வருகை என் இதயதோட்டத்தில் பன்னீர் தெளித்து பரவசம் அளிக்கின்றது.

      நலமுடன் இருப்பீர்கள் எனவும் நம்புகின்றேன்.

      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு
    2. அவ்வளவு இடைவெளி இருந்துச்சா ...? தீர்த்து விடுவோம் கணக்கை!

      காணொளி - vIdeo என்பது தெரிந்து தானே அப்படி சித்தரிடம் சொன்னீர்கள்??

      நீக்கு
    3. ஐயாவிற்கு வணக்கங்கள்.

      முதல் வரியின் முதல்பகுதி கொஞ்சம் கரிசனையுடன் கேட்பதுபோல் இருக்கின்றது, ஆனால் இரண்டாம் பகுதி, முதுகில் மறைத்து வைத்திருக்கும் அரிவாளில் ஒரு கையை வைத்துக்கொண்டு " தீர்த்து விடுவோம் கணக்கை" என்று சொல்லும் கணக்காய் தொனிக்கின்றது. ஏதோ சின்னபுள்ள கொஞ்சம் பார்த்து தயவு காட்டுங்கள்.

      அடுத்து சித்தர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது உங்களை போல் சி(பு)த்தர்களுக்குத்தானே தெரியும் என்னைபோன்ற சாமானியருக்கு எப்படி புரியும்?

      அதுவும் நம்ம திண்டுக்கல் சித்தர் அதிகம் பேசமாட்டார், எனவேதான் "அட"என்பதோடு நிறுத்திக்கொண்டார் ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்குமே?

      நம்ம வலை சித்தர் மனசில என்ன நினைத்தார் என்பதை நீங்களாவது கொஞ்சம் விளக்குங்களேன்.

      வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      கோ

      நீக்கு
    4. அட...எவ்வளவு நல்ல காணொளி என்றார்.

      நீக்கு
    5. ஐயா வணக்கம்,

      சித்தரின் பரிபாஷையின் அர்த்தம் புரிந்தது, மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரசே,
    முதலில் என் நன்றிகள் பல, நான் சும்மா தான் சொன்னேன், தங்கள் எழுத்துக்களைத் திருத்தும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை, ஆனாலும் தாங்கள் எடுத்துக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,,,

    எழுத்து நடை, சொல்லும் விதம் அனைத்தும் தமிழ் படித்தவர்கள் தாங்கள் என்றே நினைத்தேன். நல்ல நடை.

    தங்கள் மனம் பெரிதுதான் அரசே,
    நன்றி நன்றி,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் அம்மா அவர்களுக்கு,

      எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
      செய்ந்நன்றி கொன்ற மகற்கு."

      "காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
      ஞாலத்தின் மானப்பெரிது."

      உங்களின் தொடர் உதவி / திருத்தம் என் போன்றோருக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
      உங்கள் தமிழ் புலமையும் எழுத்தாற்றலும் அளப்பரியது.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
    2. வணக்கம் அரசே,
      இரண்டாவது குறள் சீர் பிரித்தது ????????
      சும்மா சொன்னேன்.
      நன்றி அரசே.

      நீக்கு
    3. பேராசிரியர் அவர்களுக்கு,

      "சீற்"படுத்தத்தான் நீங்கள் இருக்கின்றீர்களே.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. கோ.பி,

    வால்த்துக்கள். தொடர்ந்து எலுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரிகன்,

      வருகைக்கும் தங்கள் வால்த்துக்கும் மிக்க நன்றி.

      தொடர்ந்து எலுத முயற்சிக்கிறேன்.

      கோ

      நீக்கு
  5. ஆங்கில மோகம் நம்மை தாய்மொழியின் பால் ஈர்க்காமல் விட்டுவிட்டது! குழந்தைகளுக்கு தமிழ் பழக்குவோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. தளிர்,

    உங்களின் கருத்து முற்றிலும் சரியே.

    ஆங்கிலம் தேவைதான் ஆனால் அதன் பசிக்கு தமிழை பலியாக்குவது என்பது ஏற்க முடியாதுதான்.

    வருகைக்கு மிக்க நன்றி .

    கோ

    பதிலளிநீக்கு
  7. சார்,
    நன்றி.
    தமிழால் நாம் இங்கே இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!
    அழகான ஒரு பாடலை இங்கு கொடுத்தமைக்கு நன்றி. அந்த பெண்கலின் உச்சரிப்பு அருமை. ரசித்தேன்.
    அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மகேஷ், உன்னுடைய அறிமுகமும் நட்பும் மகிழ்ச்சிக்குறியது.

      நான் அப்படியே நம்பிட்டேன், நீ அந்த பெண்களின் உச்சரிப்பை மட்டும்தான் ரசித்தாய் என்று.

      பேராசிரியர் தருமியின் பின்னூட்டம் பார்த்தீர்களா?

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  8. உங்கள் கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை மகேஷ் பற்றிய கருத்திற்கு. அருமையாக எழுதுகின்றார்.

    உண்மைதான் நம் தாய்மொழியான தமிழைப் பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்தான். அடுத்த தலைமுறையினர் பெரும்பாலும் பிறந்து வாழ்வது வெளிதேசத்தில் எனும் போது சில நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது. வெளி தேசத்தில் வாழ்ந்தாலும், நீங்கள், விசு, ஆல்ஃபி, மதுரைத் தமிழன், சகோதரி துளசி கோபால், கீதாமதிவாணன் அவர்கள், காயத்ரிதேவி, நிஷா, க்ரேஸ், இனியா, அம்பாளடியாள் இப்படிப் பலரும் இன்னும் நம் பல சகோதரிகள் சகோதரர்கள் தமிழில் எங்கள் எல்லோரையும் விட, மிக அருமையாக,எழுதுவதைப் பார்க்கும் போது மனது மகிழ்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      மகேஷின் ஆர்வமும் தமிழ் ஆளுமையும் பிரமிப்பிற்குறியதுதான். உங்கள் பின்னூட்டம் அவருக்கு இன்னும் ஒரு ஊக்க சக்தியாகும் என்பதில் ஐயமில்லை.

      வெளி நாட்டில் வாழும் எங்களைபோன்றோரின் எழுத்துகளை பாராட்டும் உங்களை போன்றோர்களால் நாங்கள் உற்சாகமும் ஊக்கமும் படுத்தபடுகிறோம்.

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அன்பர்களின் அறிமுகத்திற்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  9. நம்ம ஊர் பின்னணிப் பாடக இளைய சமுதாயமே தமிழைக் கொலை செய்துக் கடித்துத் துப்பிப் பாடும் சமயத்தில் மேலை நாட்டு இளைஞிகள் இத்தனை அருமையாக ழ உச்சரிப்புடன் பாடியிருப்பது பாராட்டிற்குரியது....அருமை..பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. அன்பிற்கினிய நண்பர்களே,

    தமிழ் பாடகர்கள், தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழ் பேச்சாளர்கள் கூட "ழ" வில் வழுக்கித்தான் போகிறார்கள்.

    பதிவையும் , அம்மணிகளின் " மணியான" உச்சரிப்பை யும் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் அவர்கள் சார்பாகவும்.

    கோ

    பதிலளிநீக்கு
  11. தமிழை தமிழர் அல்லாதவரும் தமிழ் நாட்டில் இல்லாதவரும் போற்றி பே(சு )ணும் காலம் இது!
    அருமையான முயற்சி, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் அவர்களுக்கு.

    பின் குறிப்பு: இந்த பாட்டில் கோ விற்கு மிகவும் பிடித்த வரி என்ன என்று எனக்கு தெரியும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி .
      அப்படி நீங்களாகவே நினைத்துகொண்டால், நான் என்ன சொல்ல முடியும்.

      அதிலும் "மிகவும்" என்றுவேறு...

      கோ

      நீக்கு