கோ காது கே காதா?
நண்பர்களே,
நாமோ அல்லது நம்மை சார்ந்தவர்களோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ, உடல் நலம் இல்லாமல் கஷ்டபடுகின்ற நேரத்தில், என்ன பாவம் செய்தோமோ, அல்லது செய்தார்களோ, இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்கின்றதே என்று சொல்லுவதும் சொல்ல கேட்பதும் வழக்கம்தான்.
அதேபோல சுக வீனத்தில் இருந்து சுகம் பெற்றவுடன், நல்லா ஆயிடுச்சி, யார் செய்த புண்ணியமோ என்று சொல்லுவதும் கேட்பதும்கூட வழக்கம்தான்.
அப்படி என்றால் சுகவீனாமாவதும் சுகம் பெறுவதும் அவரவர் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்தே அமைகின்றதோ எனவும் நினைக்க தோன்றுகின்றது.
பாவம் புண்ணியம் என்பவை எல்லாம், மத நம்பிக்கையும், அவரவரின் ஆன்மீக சிந்தனையும் அதன் மீதுள்ள ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையையும் பொறுத்தது.
அதே சமயத்தில் விஞ்ஞான ரீதியில் என்ன சொல்லபடுகின்றது, அதில் ஏதேனும் பதிலோ அல்லது நிவாரணமோ இருக்குமா?
விஞ்ஞானம் என்பது ஆன்மீக சிந்தனைகளுக்கும் நம்பிக்கைக்கும் முற்றிலும் மாறுபட்டது என்பதால் மருத்துவத்தில் - விஞ்ஞானத்தில் கண்டிப்பாக 1+1=2 என்பதுபோல எல்லாவற்றையும் ஆராய்ந்து, தெளிவு படுத்தி, நிரூபிக்கப்பட்டு , பெரும்பான்மையான மக்களால் ஏற்றுகொள்ளபட்ட ஒரு தீர்வையே உண்மை என்று தீர்க்கமான முடிவாக கருதி கடைபிடிப்பதும் நாம் கண்கூடாக பார்க்கும் ஓர் நிதர்சனம்.
அப்படித்தான் நானும் கடந்த திங்கட்கிழமை வரை நினைத்திருந்தேன்,.
ஆனால் மருத்துவ விஞ்ஞானமும்கூட ஒரு மனிதன் சுகவீன மாவதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் அவனோ அல்லது அவனை சார்ந்தவர்களோ செய்த பாவ புண்ணியங்களே காரணம் என்பதை வெளிப்படையாக பறைசாற்றுவதையும் , பெரும்பான்மையான சுகவீனங்களுக்கான அடிப்படி காரணமான தொற்று நுண் கிருமிகளின்(வைரஸ்) ஆளுமையே காரணமாக அமைவதாக மருத்துவ விஞ்ஞானம் நம்புகின்றதையும் அதற்கான தீர்வு மருந்தாக கொடுக்கப்படும் ஒரு வகை ஆன்டி பயோடிக் (anti biotic ) மருந்திற்கு பாவம் சம்பந்தப்பட்ட பெயரையே வைத்து இந்த மருந்து உங்களின் பாவங்களை உங்களிடமிருந்து முற்றிலும் அகற்றி அவற்றை உங்களை விட்டு தூக்கி எறிந்துவிடும் எனும் பொருள்பட பெயர் வைத்து அழைக்கின்றனர் என்பதை கண்டு மிகவும் ஆச்சரியபட்டுபோனேன்.
என்னதான் மருத்துவம் விஞ்ஞானம் அறிவுபூர்வம்,பகுத்தறிவு என்று உலகம் உழன்றாலும், ஆழ்மனதின் அடிப்பகுதியில் உறைந்திருக்கும் பாவபுண்ணிய சிந்தனை எப்படியும் வெளிவந்து தலை நிமிரும் என்பதற்கு அந்த மருந்தின் பெயரே ஒரு அசைக்கமுடியாத சான்றாக அமைகின்றது.
அப்படி என்ன மருந்து அது என்பதை சொல்லுமுன் கடந்த திங்கட்கிழமை என்ன ஆனது என்பதை சொல்லுவது நல்லது என்று நினைக்கின்றேன்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தீராத காது வலியால் துடித்த , நான் மருத்துவரின் உதவியை நாடினேன்.
அவர்களும் என் காதை பரிசோதித்துவிட்டு, Otomize எனும் ஒரு ஸ்ப்ரே கொடுத்து ஒருவாரம் பயன்படுத்த சொல்லி அனுப்பினர்.
ஒருவாரம் பயன்படுத்தியும் சரியாகாதால், மீண்டும் மருத்துவரை அணுக இந்த முறை அவர்கள் Amoxicillin எனும் மருந்தை கொடுத்து ஒருவாரம் எடுக்க சொன்னார்கள், அப்படியும் அடியேனின் காது வலி தீர்ந்தபாடில்லை.
என்ன பாவம் செய்தோம் இந்த காது வலி என்னை இந்த பாடுபடுத்துகிறதே, இதற்கு விமோச்சனமே இல்லையா?
இந்தியாவில் இருந்திருந்தால் எங்கேயாவது குலதெய்வ கோயிலுக்கு போய் வேப்பிலை அடித்து மந்திரிச்சி, திருநீறு அடித்து, கருப்புகயிறு கட்டியோ அல்லது தர்காவிற்குபோய் மந்திரித்துகொண்டோ ஒரு தாயத்து கட்டிகொண்டோ வந்திருக்கலாம், அல்லது மாதா கோவிலுக்கு போய் ஒரு ஜெப மாலை வாங்கி கழுத்துல போட்டிருக்கலாம், அதன் மூலம் நமது பாவங்கள் தொலைந்து இந்த காதுவலி நம்மை விட்டு தூரமாக எறியப்பட்டு போய் இருக்கும் ,
ஆனால் இந்த நாட்டில் வாழும் என்போன்றோருக்கு இங்கே மாதா கோயில்கள் இருந்தாலும் நம்ம ஊரிலுள்ள அணுகுமுறை வேறு என்பதால் அந்த வாய்ப்பு இல்லை, எனவே சுகவீனம் எதற்கும் எல்லாவற்றுக்கும் மருத்துவர்களையே நாடவேண்டியுள்ளது.
எனவே மூன்றாவது முறையாக மீண்டும் மருத்துவரை அணுகி என் கஷ்டத்தை சொல்ல அவர்களும் என்னை தீவிரமாக பரிசோதித்துவிட்டு , இந்த முறை வேறு ஒரு மருந்தை சிபாரிசு செய்து சாப்பிட சொன்னார்கள்.
அந்த மருந்தின் பெயரை கேட்டவுடன் நான் என்ன பாவம் செய்தேனோ என்று நினைத்து கொண்டிருந்ததும் அதற்க்கு ஏற்றார்போல அந்த மருந்து அமைந்திருப்பதையும் எண்ணி பெரிய ஆனந்தமும் அதே சமயத்தில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொண்டேன்.
ஆங்கில மருத்துவ முறைகளிலும் மறைமுகமாக இதுபோன்று ஆன்மீக நம்பிக்கையும் இழையோடி இருப்பதை கண்டு நான் ஆச்சரியப்பட்ட அந்த மருந்தின் பெயர் என்னுடைய இந்த நோயின் அடிப்படை காரணாமான என் பாவத்தை, தூரமாக தூக்கி எறி என்னும் அர்த்தம் கொண்ட " எறி-த்ரோ -மை -சின்" (ERYTHROMYCIN).
சரி அந்த மருந்து என்னுடைய பாவத்தை போக்கியதா? இன்னும் இந்த கோ காது கே காதாகத்தான் இருக்கா?அதை ஏன் கேட்கின்றீர்கள், நல்லா ஆகி இருந்தா இன்றைக்கு வேலைக்கு லீவு போட்டிருப்பேனா? அதை பற்றி இன்னொரு நாள் சொல்லுகிறேன்.
நண்பர்களே,
ஒரு விஷயத்தை சொன்னா ஆராயக்கூடாது,அனுபவிக்கனும், இதுல லாஜிக், ஸ்பெல்லிங் அதெல்லாம் பார்த்தா பாவம் உங்கள சும்மா விடாது.
நீங்க சொல்றதுதான் என் காதுல கேட்கல; நான்சொல்றது உங்கள் காதுகளில் கேட்கின்றதா?
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
(மகேஷு.... என்னப்பா .... ஆனந்த கண்ணீர தொடைத்துகொண்டே அப்படியே வழியுது பாரு... அதையும் கொஞ்சம் தொடச்சிக்கோ)
அருமை
பதிலளிநீக்குபாரதி,
நீக்குவருகைக்கு நன்றிகள்.
கோ
ஆஹா! என்ன வித்தியாசமன சி ந்தனை! ஆனால் நிறைய ஆன்டிபயட்டிக்களின் பெயர் மை-சின் என்றுதானே முடிகின்றன!
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி இமய வரம்பன், உங்கள் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல?
நீக்குகோ
என்ன சொன்னீங்க, இன்னொரு வாட்டி சொல்லுங்க.
பதிலளிநீக்குஐயா,
நீக்குஉங்களுக்கும் என் போலவே பிரச்சனைபோல இருக்கு, காதுவலியில இருக்கின்ற என்னை இன்னொரு வாட்டி சொல்ல சொல்லி வாட்டி வதைக்காதீங்க. போயிட்டு எறி த்ரோ மை சின் வாங்கி வேலைக்கு இரண்டு ஒரு நாளைக்கு நான்கு முறை எடுத்து பாருங்கள் ,டாக்டரின் அனுமதியோடு, அப்பவாவது நான் சொல்றது கேட்குதனு பார்போம்.
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
ஆஹா பதிவின் தலைப்புக்கும்-
பதிலளிநீக்குஎறி-த்ரோ -மை -சின்க்கும்,
பதிவிர்க்கும் இருக்கும் தொடர்பு
அருமை சார். ரசித்தேன்:)
எப்படியோ ஒரு புதிய விஷயம்
தீராத உங்க காது வலியால்
ERYTHROMYCIN பற்றி
தெரிஞ்சுக்க முடிஞ்சது:).
மகேஷ்,
நீக்குபதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி. பதிவின் கடைசியில் உங்களுக்காக பிரத்தியேகமாக அனுப்பிய செய்தியை வாசித்தீர்களா?
கோ
எறி-த்ரோ -மை -சின்" (ERYTHROMYCIN).
பதிலளிநீக்குஹஹஹஹ் நல்ல சொல்லாடல் நண்பரே கோ! உங்களுக்குத்தான் என்ன கற்பனை! அதில் ஒரு பதிவு! ஆஹா சத்தியமாக மிகவும் ரசித்தோம். அருமை. சரி உங்கள் சின் த்ரோ ஆச்சா இல்லையா..அதைச் சொல்லுங்கள்:..தலைப்பும் அருமை...
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இன்னொரு பதிவு எழுதனும்.
உங்கள் கரிசனைக்கும் மிக்க நன்றி.
கோ
ஹாஹாஹா! பொதுவாக இங்கெல்லாம் காதுவலிக்கு எரித்ரோ மைசின் தான் கொடுக்கிறார்கள்!
பதிலளிநீக்குவாங்க தளிர்,
நீக்குஅப்படீனா, அங்கேயும் எல்லோரும் பாவம் செய்தவர்களோ என்னமோ.
வருகைக்கு மிக்க நன்றிகள். நலம் தானே?
கோ
வணக்கம்அரசே,
பதிலளிநீக்குஒரு விஷயத்தை சொன்னா ஆராயக்கூடாது,அனுபவிக்கனும், இதுல லாஜிக், ஸ்பெல்லிங் அதெல்லாம் பார்த்தா பாவம் உங்கள சும்மா விடாது.....
உண்மை தான் ,
தங்கள் காது வலி குணமாக எறி த்ரோ மை சன் உதவட்டும்
நன்றி.
முனைவர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.
நீக்குவருகைக்கும் நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் உங்கள் அன்புள்ளத்திற்கு நன்றிகள்.
கோ
அருமையான சிந்தனை அய்யா!
பதிலளிநீக்குவருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.
நீக்குகோ
எறியறதுன்னு முடிவு பன்னிட்டீங்க..
பதிலளிநீக்குஅதை கொஞ்ச தூரமா, ஓரமா, யாரு மேலையும் படாம எறிஞ்சுடுங்க..
இல்லாட்டி இன்னொரு பாவம் பண்ண! பாக்கியவான் ஆயிடுவீங்க..
அன்பே சிவம்,
பதிலளிநீக்குகொஞ்சம் தூரமா - பாலாற்றங்கரை ஓரமா, இல்லனா கொஞ்சம் உயரமா - சைதாபேட்டை மலை பக்கமா, அல்லது கொஞ்சம் பாதுகாப்பாக - (உங்கள் ஊர்) கோட்டைக்குள் போய் நின்றுகொள்ளுங்கள், அப்புறம் என் மேல பழிய போடாதீங்க, ஏற்கனவே பாவத்தின் பாரம் தாங்க முடியல.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
// அதை பற்றி இன்னொரு நாள் சொல்லுகிறேன்.//
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இந்த ”வியாதி” ரொம்ப முத்திப் போச்சு!!
ஐயாவிற்கு வணக்கங்கள்.
நீக்குகாது வலியால இங்க ஒரு பச்சபுள்ள துடிச்சினு இருக்கும்போது அவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் ,அதற்குமேல சொல்லமுடியாமல் காது வலிக்கான அந்த வியாதி ரொம்ப படுத்தியதால்தான் பாக்கி விஷயத்தை பிறகு சொல்றேன்னு சொல்லி இருந்தேன், மற்றபடி நண்பருக்கு என்ன வியாதி முத்தி போய்விட்டது என்கிற விவரம் எல்லாம் எனக்கு தெரியாதுங்க.
சரி விஷயத்திற்கு வருகிறேன்,அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை பிறகு சொல்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி ஐயா.
கோ