பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.



என்னவென்று நானுரைப்பேன்?

நண்பர்களே,

எமது முந்தைய பதிவான ஒரு கல்லில் மூன்று மாங்கனிகளில் இறுதியில், என்னுடைய கல்லூரி பழைய மாணவர் பேரவையில் இருந்து அழைப்பு வந்ததா என்பதை பிறகு சொல்கிறேன் என்று முடித்திருந்தேன்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

"வாலைப்பல தோலு வலுக்கி விலுந்த ஆலு"

பெண்ணே உன் மேல் பிழை (இல்லை) 

நண்பர்களே,

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் (நம்மில்) பலரும்  தமிழ் எழுத்துக்களை அவற்றிற்குறிய ஓசையுடன் உச்சரிக்காமல் தமிழை அதன் சுவையை நச்சரிக்கும் வண்ணம் உச்சரிக்கும்போது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான்  இருக்கின்றது.

வியாழன், 19 நவம்பர், 2015

"நூறாண்டுகாலம் வாழ்க"

டும் ...டும் ...டும் 

நண்பர்களே,

எல்லா திருமண விழாக்களில் வாழ்த்தி பேசும் பெரியவர்கள், மணமக்கள், பதினாறும் பெற்று நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம்.  அதுதான் மரபு ரீதியான திருமண வாழ்த்தும்கூட.

புதன், 18 நவம்பர், 2015

"பல்லு - சொல்லு - cellலு"

ரொம்ப இளிக்காதீங்க !!

நண்பர்களே,

நம்மில் பலரும் சின்ன வயதில் நம்முடைய உடன் பிறப்புகளுடன், சண்டை போட்டிருப்போம். அந்த சண்டை வாய் சண்டையாகவோ அல்லது கை கலப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

பொன்மாலையில் வண்ண பூ மாலை.

தேன் சிந்துதே....


நண்பர்களே,

குழலினிது  யாழினிது  என்பர் ;தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்.

எனும் குறளின் இனிமையும் உண்மையும் உலகில் வாழும் ஆண் பெண், திருமணமானவர், ஆகாதவர், குழந்தைகள் இருப்பவர் இல்லாதவர், துறவி, கொடுங்கோலன், தீவிரவாதி இப்படி எல்லோரும் எதோ ஒரு சூழலிலாகிலும், வாழ்வில் ஒரு முறையேனும் உளமார உணர்ந்திருப்பார்.

புதன், 11 நவம்பர், 2015

நண்பன் கட்டிய மஞ்சள் கயிறு!!

ஆயிரம்  காலத்து.............


நண்பர்கள்,

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் , பலவித சூழ்நிலைகள் நெருக்கடிகள் காரணமாக ,கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே "மஞ்சள் கயிறுடன்" ஒப்பந்தம் - ஒரு பந்தம்   செய்து வைக்கப்படும் மாணவர் மாணவியரை நாம் பார்த்திருப்போம், அவர்களுடன் சேர்ந்தும் படித்திருப்போம்.

செவ்வாய், 10 நவம்பர், 2015

"அப்பாவின் காலணிகள்".

இன்னும் வரவில்லை!!

நண்பர்களே,

காலையில் எழுந்து குளித்து முடித்து , காலை உணவு முடித்துவிட்டு, ஒன்றாம் வகுப்பு பள்ளிக்கூட பையை எடுத்துகொண்டு , அப்பாவிற்கும் அம்மாவிற்கும் டாட்டா சொல்லிவிட்டு வாசல் இறங்கி நடக்கும் போதும்  பலமுறை திரும்பி திரும்பி அப்பாவையும் அம்மாவையும் பார்த்து,