நெருப்பே!!
மெழுகோடு உனக்கு அப்படியென்ன ஜென்ம பகை.
கூடவே இருந்து குழி பறித்து அதை
உருத்தெரியாமல் சிதைத்து விட்டு
காற்றோடு மறைந்து போகின்றாயே.
பார்க்க வசீகரமாக இருக்கும் உன் உள் மனதின்
உஷ்ணம் யாருக்கும் தெரியாமல் போவதால்
உன்னை நம்பி நட்பு பாராட்டும் மெழுகின்
வெள்ளை உள்ளம் உருகுவதை பார்த்தும்
உனக்கு இரக்கம் பிறக்க வில்லையா?
நட்பு நாடி கரம் பிடித்த பின்
நீ "தீ"யவன் என்று தெரிந்தும்
உன்னை கைவிடாமல் "பற்றி"க்கொள்ளும்
இளகிய மனம் கொண்ட மெழுகோடு
இணையாமல் தனித்திருந்தால்
மெழுகு தன் பிறவிப்பயனை
அடையாமலே போய்விடுமோ?
தலை நிமிர்ந்து நிற்கும் மெழுகை
தரை மட்டம் ஆக்கிக்கொண்டே
நீ மட்டும் மேல் நோக்கி
அசைந்தாடி மகிழ்கின்றாய்
அடுத்தவர் தலையில் அமர்ந்துகொண்டு
அவர்களையே தின்று தீர்க்கிறாய்
ஆணவம் அதிகம்தான் உனக்கு.
சுட்டெரிப்பதால் விளையும்
தீ காயங்களின் வலியைவிட - சீக்கிரம்
நீ விட்டு பிரியபோகின்றாய்
என்பதை நினைத்துதான்
கண்ணீர் விட்டு அழுகின்றது
அந்த களங்கமில்லா மெழுகு உள்ளம்.
நடப்பை நேசிக்கும் என்னைபோல.
நன்றி !
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
பசுத்தோல் போர்த்தாத அரசனுக்கு வணக்கம்,
பதிலளிநீக்குஆணவம் அதிகம்தான் உனக்கு.
ஆனால் மெழுகு
அதன் ஓளி கண்டு மகிழ்ந்து
தன் நிலை மறந்து,
நட்பு பாராட்டி மறைகிறது இரண்டும்,
பார்க்க வசீகரமாக இருக்கும் உன் உள் மனதின்
உஷ்ணம் யாருக்கும் தெரியாமல் போவதால்
தங்கள் ஆக்கம் அருமை,
ஆனாலும் ,
அருமையான பா வரிகள்
வாழ்த்துக்கள், நன்றி.
அத்தனை துரிதமாக அனுப்பப்பட்ட உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ."ஆணவம் அதிகம்தான் உனக்கு" ...அப்படியா?
பதிலளிநீக்குகோ
அனைத்திற்கும் மேலானது ஒன்று உள்ளது...!
பதிலளிநீக்குநீர் போல் நட்பு இருந்தால்...
வருகைக்கு நன்றி தனப்பால்.
பதிலளிநீக்குநீர் சொல்லும் நீர்போன்ற நட்பு சிறக்க வாழ்த்துக்கள்.
கோ
சுட்டெரிப்பதால் விளையும்
பதிலளிநீக்குதீ காயங்களின் வலியைவிட - சீக்கிரம்
நீ விட்டு பிரியபோகின்றாய்
என்பதை நினைத்துதான்
கண்ணீர் விட்டு அழுகின்றது
அந்த களங்கமில்லா மெழுகு உள்ளம்.
நடப்பை நேசிக்கும் என்னைபோல.//
தத்துவம் அருமை நண்பரே! கவிதை வரிகளை ரசித்தோம்..
வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குபதிவு பிடித்திருந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி.
கோ