தங்லீஷ்
நண்பர்களே,
இந்தியாவில் இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தருணங்களில்,
அவர்களது, இணைப்பு கிடைக்காமல் போகும் சந்தர்பங்கள் நேரும்போது, ஒரு பதிவு செய்யப்பட்ட குரல், "நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்றார், தயவு செய்து பின்னர் தொடர்பு கொள்ளவும்" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சில சமயங்களில் ஹிந்தியிலும் சொல்வதை கேட்டிருக்கின்றேன்.
அவ்வாறு தொடர்புகொள்ளும் நபர் அதே சமயத்தில் வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்தால், அதே பதிவு செய்யப்பட்ட குரல், ஆங்கிலத்தில், "தி நம்பர் யு ஆர் ட்ரையிங் டு கால் இஸ் பிசி, ப்ளீஸ் கால் லேட்டர்" என்றும் தொடர்ந்து, தமிழில், "நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக உள்ளதால் சிறிது நேரம் கழித்து கால் செய்யவும்" என்று ஒலிக்கின்றது.
இதில் ஆங்கிலத்திலும் "பிசி" , "கால்" என்றும் தமிழ் மொழி மாற்று அறிவிப்பிலும் "பிசி" , "கால்" என்று சொல்வதை கேட்க்கும் போது, பல வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக எழுதிய படைப்பில் குறிப்பிட்டிருந்த சில தங்லீஷ் பெயர் சொற்கள் நினைவிற்கு வந்தன.
அவற்றுள் சில இதோ உங்களுக்காக இங்கே.
கார் மேகம் வானில் சூழ்ந்திருந்தால் ஒருவேளை மழை வரக்கூடும் என்று கணித்து அதற்க்கு மழைமேகம் என்று சொல்வதை இந்த நாள் வரை தமிழில்தான் அப்படி சொல்கின்றனர் என்று நினைத்திருந்தேன், பின்னர்தான் தெரிந்தது நம் முன்னோர்கள் தமிழோடு ஆங்கிலம் கலந்து இன்றைக்கு எப்படி நம்மில் பலர் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகின்றோமோ அதுபோல அன்றைக்கும் அவர்கள் பேசி இருப்பது.
எப்படி என்று எனக்கு நானே கேட்டு ஒரு முடிவுக்கு வந்தேன்:
மழை +மேகம் = மழைமேகம் = மழை MAY COME. (வராமலும் போகலாம்)
அதேபோல் வானவில்லுக்கும் நம்மவர்கள்தான் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெயர் சூட்டி இருப்பார்களோ என்ற சந்தேகமும் வருகின்றது,
எப்படி எனில், வானவில் வந்தவுடன் மழை போய் விடுவதால் அதற்கு அவர்கள் ரெயின்+ போ = "Rainபோ" என பெயர் சூட்டினரோ?
வாழைப்பழம் விலை மிக மிக குறைவு, அதாவது ஆங்கிலத்தில் CHEAP என்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவே இந்த பழங்களின் தொகுப்பை நம் முன்னோர்கள் வாழைபழ சீப்பு என்று பெயர் சூட்டினரோ?
வாழைப்பழம் விலை மிக மிக குறைவு, அதாவது ஆங்கிலத்தில் CHEAP என்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவே இந்த பழங்களின் தொகுப்பை நம் முன்னோர்கள் வாழைபழ சீப்பு என்று பெயர் சூட்டினரோ?
இதுபோன்று வேறு ஏதேனும் பெயர் சொற்கள் தமிழும் ஆங்கிலமும் கலந்தும் பொருள் தரும் வகையில் இருந்தால் உடனடியாக Mail மூலம்தெரிவிக்கவும்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
வாழ்க தமிழ்.
வாழ்க தமிழ்.
கோ
அடடா...! இப்படி யோசிக்க தோணாமல் போச்சே... ஹா... ஹா....
பதிலளிநீக்குஇன்னும் நேரம்/ காலம் இருக்கு தனப்பால்.
பதிலளிநீக்குகோ
வணக்கம் அரசன் அவர்களே,
பதிலளிநீக்குநீங்கள் இப்பத்தான் இப்படியா?
இல்லை எப்பவும் இப்படியா?
அருமை, வாழ்த்துக்கள். மெயில் தெரியாதே, எனவே இங்கே எழுதுகிறேன்.
நான் எப்படி என்பதை சொல்லாமலே இப்படியா என்றால் எப்படி?
நீக்குவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
பதிவை ரசித்தீர்கள் போல் தெரிகிறது.
கோ
மழை மேகமும், ரெயின் போவும் படித்து சட்டென சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குநல்ல யோசனை. இதை மறக்கவே முடியாது.
God Bless YOU
பதிவு உங்களை மகிழ்வித்ததை குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான்.
நீக்குவருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்கக நன்றி.
கடந்த சில தினங்களுக்கு முன் தங்களின் ஒயிஜா போர்ட் அனுபவம்…படித்த்தேன் ஆனால் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை - என்ன காரணம்?, கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது செய்தி.
கோ
வணக்கம்
பதிலளிநீக்குசிந்தனை மிக்க வரிகள் நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்,
நீக்குநீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் உங்களை இங்கே பார்க்க மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
கோ
அருமையான ஆய்வு! கலக்கல்
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி , தங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கின்றது.
பதிலளிநீக்குகோ
மழை மே கம் நாங்கள் சிறிய வயதில் பேசிக்கொண்டது. ரெயின் போ புதிது. அருமை. இதே போல உள்ளே பதினோரு சுளைகள் இருப்பதால்தான் (ஆறு +அஞ்சு= பதினோரு) ஆரஞ்சு என்று அழைப்பதாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் பதினோரு சுளைகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு.காரிகன்.
பதிலளிநீக்குஆரஞ்சி(6+5) இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லை.
தகவலுக்கு நன்றி.
கோ.
கோ "கோதா"ம்பா...அருமையான கலக்கல் பதிவு.....நல்ல ஆராய்ச்சி.....கார் மேகம் கார் மே கம்..... ஹை இது முழுவதும் ஆங்கிலம் தமிழில்...ஆனா அர்த்தம் வேறாகிறது....(உங்கள பாத்து காப்பி....???!!!!) கோ (என்பதிலிருந்துதான் கௌ (பசு) வந்திருக்குமோ....(நண்பர் கோ நல்ல காலம் கௌ ஆகல...(cool).!!!!!)
பதிலளிநீக்குகுயில்-கோயல்.....(அட! இதிலும் "கோ") சரி சரி இங்கே நிறுத்திக் கொள்கின்றோம்....
மிகவும் ரசித்தோம் இந்தப் பதிவை...
வருகைக்கு மிக்க நன்றி ;கார் மே கம். கோ (என்பதிலிருந்துதான் கௌ (பசு) வந்திருக்குமோ....(நண்பர் கோ நல்ல காலம் கௌ ஆகல.நல்ல இருக்கே.
பதிலளிநீக்குகோ