திகைப்பு.
நண்பர்களே,
கடந்த சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரத்திற்கு சென்று வந்ததை குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். அது இது எது? படித்துபாருங்கள்.
அந்த நகரின் சிறப்புகள் சிலவற்றை சொன்ன நான் அதன் மற்றுமொரு சிறப்பை சொல்லாமல் விட்ட குறையை இப்போது சொல்லலாம் என்று நினைத்து பதிவெழுத தொடங்கினேன்.
அப்படி சொல்ல நினைத்த சிறப்புகளுள் ஒன்றுதான் ரோமாபுரி தீபற்றி எரியும்போது கவலை இன்றி , ஆனந்தத்தில் பிடில் வாசித்து மகிழ்ந்ததாக வரலாறு கூறும் பேரரசன் - "கோ"மான் நீரோ மன்னன் தான் வாழ்ந்து சுகிக்க கட்டிய "தங்க மளிகை"

வரலாற்றுப் பக்கங்களில் வானளாவிய புகழுடன் நிரம்பி திளைக்கும் பண்டைய ரோமானிய பேரரசர்களுள் மிகவும் புகழ்பெற்ற பேரரசர் நீரோ வாழ்ந்து வந்த வாசஸ்தலம், கி பி.64 ஆம் ஆண்டு ரோமாபுரியில் நிகழ்ந்த பெரிய தீ விபத்தில் கருகி சாம்பலான பிறகு, நான்கே ஆண்டுகளில் கட்டி முடிக்க பட்ட சுமார் 300 ஏக்கர் நில பரப்பில், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஏரிகளும் ,திராட்சை, மாதுளை, ஆரஞ்சு தோட்டங்களும்,பொன் கூரைகள் வேயப்பட்டு அதில் பதிக்க பட்ட விலை உயர்ந்த ரத்தினங்களும் அரண்மனை எங்கிலும் யானை தந்தங்கள் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களால் அலங்கரிக்கபட்டு, ஆண்டின் எந்த பருவகாலமும் அரண்மனை முழுவதும் ஒரே சீரான தட்ப வெட்ப நிலை நிலவும் படியாக அந்த அரண்மனையின் கீழ் தளத்திற்கும் கீழே நீரோடை தவழ்ந்து செல்லும் வகையிலும், எந்த ஒரு நவீன பொறியியல் கருவிகளும் , மின்சாரமும் இல்லாத அந்த காலத்திலேயே 'சுழலும்' விருந்தினர் மண்டப மேல்கூரையும் அதிலிருந்து வாசனை திரவியங்களும் ரோஜா இதழ்களும் விருந்தினர் மேல் தூவும் விதமாகவும் கட்டப்பட்டதாக அறிந்தோம்.
அதே சமயத்தில் ஒட்டுமொத்த ரோமாபுரியும் தீபற்றி எரியும் போது அதில் பாதிக்கப்பட்ட மக்களின் மேல் இரக்கமோ, மன உருக்கமோ அடையாமல் தான் மட்டும் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு இசை கருவி வாசித்து இன்புற்று இருந்ததால்தானோ என்னவோ அவன் ஆசையசைபட்டு கட்டிமுடித்த அந்த அழகிய உல்லாசபுரி அரண்மனையில் நீண்ட காலம் வாழ முடியாமல் தமது 31 வது வயதில் இந்த பரிதாப நிலையோ என எண்ணவும் தோன்றியது.
அவரே ரோமாபுரியை தீக்கிரையாக்கினார் என்றும் ஒரு செய்தி வரலாற்று பக்கங்களில் உலா வரத்தான் செய்கின்றது, 'நெருப்பில்லாமல் புகையுமா'?
அவனது மரணத்திற்கு பிறகு, பின்னாளில் வந்த மன்னர்கள், அந்த தங்க அரண்மனை, அதிலிருந்த விலை மதிப்பு மிக்க தங்கம், வெள்ளி நவரத்தினங்கள், யானை தந்தங்கள், பளிங்கு பாறைகளுக்காக அடுத்த பத்து ஆண்டுகளிலேயே சூறையாடப்பட்டது என்றும் அறிந்து கொஞ்சம் வேதனைப்பட்டோம்.
இப்படியே அந்த அரண்மனைகளின் சிறப்புகளை சொல்லிவிட்டு, இந்த ரோமபுரி நகரத்தை இரண்டாக பிரிக்கும் டைபர் நதியின் அழகையும் அதன் சிறப்பையும் விளக்கிவிட்டு, சற்று தூரத்தில் இருந்த சில மலை தொகுப்புகளை காண்பித்து, அங்கே மொத்தம் ஏழு மலைகள் இருக்கின்றன, மேலும் ரோமாபுரியை 'மலைகளின் பட்டணம்' என்றும் கூறுவதற்கு காரணம் அந்த ஏழு மலைகள் தான் என்று கூறி அந்த ஏழு மலைகளின் பெயர்களையும் சொல்லி முடித்து , இது போன்று ஏழு மலைகளும் ஒரே இடத்தில் இருக்கும் சிறப்பு உலகில் வேறு எங்கேயும் இல்லை என அவர் கூற,
அங்கிருந்த அத்தனை சுற்றுலா பயணிகளும் வாய் பிளந்து ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டு இருக்க நான் சொன்னேன், இதுபோன்று ஏழு மலைகளும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் ஒரு பட்டணம் எங்கள் ஊரிலும் உண்டு.
மேலும் உங்கள் ஊரில் உள்ள புனித 'பீட்டர் பேராலயம்' எப்படி எண்ணிக்கையில் பகத்தர்களின் வருகையிலும் காணிக்கை வசூலிலும் உலகத்திலேயே முதலிடம் வகிக்கின்றதோ அதே போல எங்கள் ஊரில் உள்ள ஏழு மலைகள் சூழ்ந்து அமைய பெற்றிருக்கும் திருக்கோவில் உங்கள் பேராலயத்திற்கு அடுத்த நிலையில்-உலகத்திலேயே இரண்டாவதாக உள்ளது, இன்னும் சில காலங்களில் முதலிடத்தை எட்டி பிடித்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை என்ற செய்தி கேட்டு, அனைவரும் ஆச்சரியத்துடன் என்னை பார்த்து கேட்ட கேள்வி, அந்த ஊர் பெயர் என்ன அது எங்கே இருக்கின்றது என வினவ, நான் சொன்னேன், அது இந்தியாவில் இருக்கும் 'திருப்பதி ஏழுமலையான் கோவில்' என்று.
நண்பர்களே, இப்படி திருப்பதி மலையின் பெயரை மட்டும் அவரிடம் சொன்ன நான் அப்போது என் நினைவலைகளில் தோன்றிய, திருப்பதி மலையோடும் என்னோடும் தொடர்புடைய விஷயங்களை சொல்ல முடியால் போனது; அதில் ஒரு விஷயத்தை உங்களுக்காக பிரத்தியேகமாக பிறகு சொல்கிறேன்.
அதுவரையில் ....
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
கிரேக்க நாட்டில் தயாரிக்கப்பட்ட,35.5 மீட்டர் உயரமான மன்னனின் முழு உருவ வெண்கல சிலையை குறித்தும் இன்னுமெத்தனை எத்தனயோ சிறப்பு அம்சங்களை குறித்தும் அங்கிருந்த அந்த மன்னனின் அரண்மனை மிச்சங்களையும் எச்சங்களையும் உடனிருந்த சுற்றுலா வழிகாட்டி, எங்களுக்கு சொல்ல சொல்ல இத்தனை சிறப்பு மிக்க ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மாபெரும் மன்னன் வாழ்ந்து தர்பார் செலுத்திய அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அவன் சுவாசித்த காற்றின் துகள்களை நாங்களும் சுவாசிக்க வாய்ப்பு கிட்டியதை நினைத்தும் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நின்ற நாங்கள் அதே மன்னன் கி பி 68 ல் தற்கொலை புரிந்து இறந்து விட்ட செய்திகேட்டு அதிர்ச்சிக்குள்ளாணோம்.
அதே சமயத்தில் ஒட்டுமொத்த ரோமாபுரியும் தீபற்றி எரியும் போது அதில் பாதிக்கப்பட்ட மக்களின் மேல் இரக்கமோ, மன உருக்கமோ அடையாமல் தான் மட்டும் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு இசை கருவி வாசித்து இன்புற்று இருந்ததால்தானோ என்னவோ அவன் ஆசையசைபட்டு கட்டிமுடித்த அந்த அழகிய உல்லாசபுரி அரண்மனையில் நீண்ட காலம் வாழ முடியாமல் தமது 31 வது வயதில் இந்த பரிதாப நிலையோ என எண்ணவும் தோன்றியது.
அவரே ரோமாபுரியை தீக்கிரையாக்கினார் என்றும் ஒரு செய்தி வரலாற்று பக்கங்களில் உலா வரத்தான் செய்கின்றது, 'நெருப்பில்லாமல் புகையுமா'?
அவனது மரணத்திற்கு பிறகு, பின்னாளில் வந்த மன்னர்கள், அந்த தங்க அரண்மனை, அதிலிருந்த விலை மதிப்பு மிக்க தங்கம், வெள்ளி நவரத்தினங்கள், யானை தந்தங்கள், பளிங்கு பாறைகளுக்காக அடுத்த பத்து ஆண்டுகளிலேயே சூறையாடப்பட்டது என்றும் அறிந்து கொஞ்சம் வேதனைப்பட்டோம்.
இப்படியே அந்த அரண்மனைகளின் சிறப்புகளை சொல்லிவிட்டு, இந்த ரோமபுரி நகரத்தை இரண்டாக பிரிக்கும் டைபர் நதியின் அழகையும் அதன் சிறப்பையும் விளக்கிவிட்டு, சற்று தூரத்தில் இருந்த சில மலை தொகுப்புகளை காண்பித்து, அங்கே மொத்தம் ஏழு மலைகள் இருக்கின்றன, மேலும் ரோமாபுரியை 'மலைகளின் பட்டணம்' என்றும் கூறுவதற்கு காரணம் அந்த ஏழு மலைகள் தான் என்று கூறி அந்த ஏழு மலைகளின் பெயர்களையும் சொல்லி முடித்து , இது போன்று ஏழு மலைகளும் ஒரே இடத்தில் இருக்கும் சிறப்பு உலகில் வேறு எங்கேயும் இல்லை என அவர் கூற,
அங்கிருந்த அத்தனை சுற்றுலா பயணிகளும் வாய் பிளந்து ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டு இருக்க நான் சொன்னேன், இதுபோன்று ஏழு மலைகளும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் ஒரு பட்டணம் எங்கள் ஊரிலும் உண்டு.
மேலும் உங்கள் ஊரில் உள்ள புனித 'பீட்டர் பேராலயம்' எப்படி எண்ணிக்கையில் பகத்தர்களின் வருகையிலும் காணிக்கை வசூலிலும் உலகத்திலேயே முதலிடம் வகிக்கின்றதோ அதே போல எங்கள் ஊரில் உள்ள ஏழு மலைகள் சூழ்ந்து அமைய பெற்றிருக்கும் திருக்கோவில் உங்கள் பேராலயத்திற்கு அடுத்த நிலையில்-உலகத்திலேயே இரண்டாவதாக உள்ளது, இன்னும் சில காலங்களில் முதலிடத்தை எட்டி பிடித்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை என்ற செய்தி கேட்டு, அனைவரும் ஆச்சரியத்துடன் என்னை பார்த்து கேட்ட கேள்வி, அந்த ஊர் பெயர் என்ன அது எங்கே இருக்கின்றது என வினவ, நான் சொன்னேன், அது இந்தியாவில் இருக்கும் 'திருப்பதி ஏழுமலையான் கோவில்' என்று.
நண்பர்களே, இப்படி திருப்பதி மலையின் பெயரை மட்டும் அவரிடம் சொன்ன நான் அப்போது என் நினைவலைகளில் தோன்றிய, திருப்பதி மலையோடும் என்னோடும் தொடர்புடைய விஷயங்களை சொல்ல முடியால் போனது; அதில் ஒரு விஷயத்தை உங்களுக்காக பிரத்தியேகமாக பிறகு சொல்கிறேன்.
அதுவரையில் ....
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
நாகரீகத்தின் தொட்டில் என்று கிரேக்கம் வரலாற்றில் சிறப்பிக்கப்படுகிறது. தாங்கள் சொன்ன அனைத்து தகவல்களும் அருமை.
பதிலளிநீக்குகோ மான் நீரோ பற்றிய தகவல்கள் அறிந்தேன்,
நன்றி,,,கோ
வருகைக்கு நன்றி, "கோ"மான் பற்றி அறிந்ததை குறித்து மிக்க மகிழ்ச்சி
நீக்குகோ
இப்படியே அந்த அரண்மனைகளின் சிறப்புகளை சொல்லிவிட்டு, இந்த ரோமபுரி நகரத்தை இரண்டாக பிரிக்கும் டைபர் நதியின் அழகையும் அதன் சிறப்பையும் விளக்கிவிட்டு, சற்று
பதிலளிநீக்குதூரத்தில் இருந்த சில மலை தொகுப்புகளை காண்பித்து, அங்கே மொத்தம் ஏழு மலைகள் இருக்கின்றன, மேலும் ரோமாபுரியை 'மலைகளின் பட்டணம்' என்றும் கூறுவதற்கு காரணம்
அந்த ஏழு மலைகள் தான் என்று கூறி அந்த ஏழு மலைகளின் பெயர்களையும் சொல்லி முடித்து , இது போன்று ஏழு மலைகளும் ஒரே இடத்தில் இருக்கும் சிறப்பு உலகில் வேறு எங்கேயும்
இல்லை என அவர் கூற,///
படிக்கும் நானும் ஒரு நொடி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.
ஆஹா!!!
உடனடியாக நீங்க நறுக்கென சொன்னவிதம் அருமை சார். வாழ்த்துக்கள்.
திருப்பதி மலையோடு
தங்களுக்கு தொடர்புடைய விஷயங்களை
படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்!
மகேஷ்,
நீக்குபதிவை ரசித்ததற்கும் உங்க ஊர்பேர் கடல் தாண்டி கொடிகட்டி பரந்த செய்தியையும் பாராட்டியமைக்கு நன்றி.
விரைவில் அடுத்தபதிவில் உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய முயல்கின்றேன்.
கோ
சொன்னவுடன் அவர்களும் பயணம் மேற்கொண்டார்களா...?
பதிலளிநீக்குஅவர்கள் அதன் பின் பயணம் மேற்கொண்டனரா என்பதை பற்றி மேற்கொண்டு தகவல் கிடைத்தால் கட்டாயம் சொல்கிறேன்.
பதிலளிநீக்குகோ
ரோமாபுரி பற்றி அரிய தகவல்கள் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஅங்கும் நம்மூர் திருப்பதியின் புகழ் பரப்பியதற்கு நன்றி கூறிக் கொள்ளும் அதே நேரத்தில்...திருப்பதி புகழ் லட்டுவின் புகழை அவர்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே...அவர்களிங்கு வந்து அந்த லட்டுவைப் பார்த்து சுவைத்து ஆஹா இது எப்படித் தயாரிக்கப்படுகிரது என்று பார்த்தார்கல் என்றால் அதன் பின் எப்படி அவர்கள் முகம் மாறும் ? விசு வின் பேயறைந்தது போல் என்றா இல்லை இஞ்சி தின்ன குரங்கு போல என்று எழ்தலாமா....
வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி, படபிடிப்பு வேலைகள் முடிந்திருக்கும், எனினும் விட்டுப்போன பதிவுகளை படிக்கவேண்டுமே என்ற படபடப்பு அடங்கவில்லை என்று நினைக்கின்றேன். கோ
பதிலளிநீக்குதிருப்தி மலையை குறித்து சொல்லும்போதே அவரின் முகம் மாறிப்போனது, இன்னும் லட்டு பற்றி சொல்லி இருந்தால் என்னவாயிருக்குமோ?
மீண்டும் பதிவின் பக்கங்களை புரட்டுவதற்கு நன்றி.
நலமுடன் இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
கோ