பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 9 ஜூன், 2015

"இந்நாள் - பொன்னாள்- PHONEனால்!!!"

 PHONEஆ வருமா?


நண்பர்களே,

இனிய காலை  பொழுது இன்முகத்துடன் விடிந்து என்னை துயில் களைய பணித்தது.

பனித்தூவிய கூரைவீட்டில் படுத்திருந்த எந்தன் கண்ணில் வண்ண கனவுகள் படம்  படமாய் வந்துதித்த பல ,பலா,கற்கண்டு, தேன்   காட்சிகள் வெளியே கடுகளவும் கசிந்திட கூடாதென்று கம்பளியின் கதகதப்பில் முகம் முதல் கால்வரை முழுவதுமாய் போர்த்திக்கொண்டு இரவெல்லாம் என் இதயம் சூழ்ந்து நினைவெல்லாம் நிரம்பியிருந்த மகிழ் வெள்ளம் என் முகமெல்லாம் முகாமிட்டிருந்ததை துயிலரை  கண்ணாடியும் துல்லியமாய் பிரதிபலித்தது.

சோம்பல் முறித்து , சன்னல் திரைசீலை விலக்கி கதிரவன் கற்றைகள் கண்டிடவே கண்களை தேய்த்த  வண்ணம்  ஒரு  கைவிலக்கி பார்க்கையிலே வளர்ந்தும் வளராத பாதி மரம்போன்ற தோட்டத்து ஒற்றை செர்ரி விருட்சத்தில் விருட்டென்று வந்தமர்ந்த அந்த மணி கழுத்து மாடப்புறா ,தன் நுனி மூக்கால் கொத்தி கொத்தி அந்த மர இலையில் ஏதொ செதுக்குவதாய் எனக்கு தெரிந்தது.

ஆனால் செதுக்கிய செய்தி இலை மறை காயாகவே அந்த இலைகள் மறைத்த
காய்கள் நிறைந்த மரத்தில் மணிகழுத்து மாடப்புறா காலை மணி  ஆறுக்கு
அவசர அவசரமாய் செதுக்கும் அந்த செய்தி ஆருக்கு?

அறை விட்டு அகன்று எழுந்து அடி மேல் அடி எடுத்து  வீட்டின் பின்பக்கக்  கதவை திறந்து புறா அமர்ந்திருந்த மரம் நோக்கி மெல்ல நடந்தேன்.

கதவை திறந்த சத்தம் கேட்டு சிறகடித்து பறந்த புறாவை பார்த்தபடி கொஞ்சம் வேகமாக முன்னேறினேன்.

பழுத்திருந்த செர்ரிகளை சேகரித்தபடியே, புறா கொத்தி செதுக்கிய இலையினை உற்று பார்த்தேன்.

அந்த புறா வள்ளுவன் காலத்து புறாவோ என ஒருகணம் திகைத்துபோனேன்.

ஓலை சுவடிகளில் ஆணிகொண்டு எழுதியதுபோல், பச்சை இலையில் தன் அலகுகொண்டு, அழகாக அதில்  எழுதியிருந்தது ஒரு செய்தி.

புறா பாஷை எனக்கு எப்படி தெரியும்?

எனினும் அந்த எழுத்துக்கள் சொன்ன செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அப்படி என்ன செய்தி?

இரவெல்லாம் என் கண்களுக்குள் வண்ண வண்ண காட்சிகளாக மின்னி மின்னி தோன்றிய அத்தனை விஷயங்களின் ரத்தின சுறுக்கம்தான் அந்த செய்தி.

சரி என்ன செய்தி.

வேறென்ன, இந்தியாவில் இன்று காலை ஒரு புத்தக வெளி ஈட்டு விழா நிகழ்ச்சியும் அதில்  பங்குகொள்ளபோகும் நம் சக பதிவாளர்களின் கூடுகையை நினைவு படுத்திய செய்திதான்.

என் நினைவில் இருந்த விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்திய புறாவுக்கு நன்றி சொல்லிவிட்டு வீடு நோக்கி நடப்பது நானாக இருந்தாலும் இங்கு நடப்பது எல்லாம் கனவின் தொடர்ச்சியா என ஒரு கணம் திகைத்துபோனேன்.

திகைப்பு அதிகம் நேரம் நீடிக்கவில்லை, ஏனென்றால் இரவெல்லாம்  மனம் நிறைந்த இனிய கனவுகளின் தொடர்ச்சிதான் அது என்பதை அலராம் எழுப்பிய ஓசை உறுதி படுத்தியது.

எழுந்து குளித்து உடை மாற்றிக்கொண்டு, காலை உணவுகூட அருந்தாமல், செய்த முதல்  வேலை , புத்தக வெளி ஈட்டு விழாவினை ஒழுங்கு செய்து கொண்டிருந்த இந்தியாவில் இருக்கும் என் நண்பரை அழைத்து நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளை குறித்து செய்தி கேட்க்கவும், புத்தக ஆசிரியர் விசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், கூடியிருக்கும் நண்பர்களை பற்றி அவரிடமே விசாரித்து தெரிந்து கொள்ள தொலைபேசியில் தொடர்புகொண்டது தான்.

பதிவுலகில் அடி எடுத்து வைத்து இன்றுவரை,  என் பால்ய நண்பனும் கல்லூரி தோழனுமான விசுவைதவிர வேறு யாரிடமும் மின் அஞ்சல் தவிர வேறு எந்த தொலைதொடர்பு சாதனங்களின் மூலமும் எனக்கு  எந்த தொடர்பும் இல்லாதிருந்ததால், மற்றவர்களிடம் எப்படி பேச்சை துவக்கவும் தொடரவும் முடியும் என்றெண்ணி , நிகழ்ச்சி தயாரிப்பாளரான என் நண்பனிடம் பேச ஆரம்பித்தேன்.

பேசிக்கொண்டிருந்தபோதே, மின்னல் வேகத்தில்  என் தொலைபேசியின் தொடர்பை " ஒரு நிமிடம் இரு உன்னிடம் ஒருவர் பேசவேண்டுமாம்" என சொல்லி முடிக்க, 

அடுத்த முனையில் இருந்து ஒரு கம்பீர - கணீர் குரல் , " வணக்கம் நான் தருமி பேசுகின்றேன்". இன்ப அதிர்ச்சியில் என் நாக்கு என் மேலுதடோடு ஒட்டிகொண்டதால், பேச்சு வரவில்லை, மூச்சி மட்டுமே கொஞ்சம் உச்ச ஸ்தாதியில் ஒலித்ததால், அடுத்த முனையில் இருந்த ஐயா பேராசிரியர் தருமி அவர்கள், "ஹலோ" "ஹலோ" என்பதை கேட்கமுடிந்தது பதில் வணக்கம் சொல்ல சில நாழிகைகள் தேவைப்பட்டது.

அவரோடு பேச இஷ்டப்பட்ட மனதின் கட்டளைக்கு அடிபணிந்து ஒட்டிக்கொண்ட நாக்கை கஷ்ட்டப்பட்டு விடுவித்து, பதில் வணக்கம் கூறி என் அன்பையும் மகிழ்ச்சியையும் அவரோடு பகிர்ந்துகொண்டேன்.

இந்த இனிய இன்ப அதிர்விலிருந்து மீள்வதற்குள், கைதொலைபேசி மற்றொரு பதிவாளரிடம் கை மாறியது, அவர் சொன்னார் அவர் பெயர் அன்பே சிவம் என, அவரை அவரது பதிவுகள் மூலம் அறிந்திருந்த எனக்கு அவரை குரல் வழி கேட்டதில் மனம் மகிழ்ந்தேன்.

கைபேசி இப்போது வேறு ஒருவரிடம் இருப்பதை அதன் வழி வழிந்த வேறு குரலின் வாயிலாக அறிந்தேன்.  அவர்தான் நம்ம திருப்பதி மகேஷ்.

அளப்பறிய அன்பை பொழிந்தார் அகம் மகிழ்ந்தேன்.

பேசிக்கொண்டிருந்தபோது, நான் பேச வேண்டும் நான் பேசவேண்டும் எனும் பின்னணியில் இருந்து பல குரல்கள் கேட்டுகொண்டிருந்ததில் முன்னணியில் வந்து கைபேசியை   கையகபடுத்திய அந்த குரல் உதித்த வணக்கத்தை அடுத்து கேட்ட கேள்வி:

 " என்னை தெரிகிறதா"?  ( தொலைபேசியில் எப்படி தெரியும் என்ற வேதாந்த , சித்தாந்த , வியாக்கியான ஆராய்ச்சிகள் செய்யாமல் அவரது பாசமிகு உணர்ச்சி மேலோங்கியதின் வெளிப்பாடாகவே இந்த வினாவினை கருதவேண்டும்),எனது  அனைத்து பதிவுகளையும்  வெளியிடப்பட்ட அடுத்த ஓரிரு நொடிகளில் படித்து முடித்து பின்னூட்டம் அளிக்கும் பாசமிகு பதிவுலக தோழர், மற்றும் சக பதிவாளர்கள் மிகுந்த அன்போடு சூட்டி மகிழும் "வலைதள சித்தர்" எனும் பட்ட பெயருக்கும், தமது பெயரினை எல்லா பதிவினரும் தத்தமது  இதயத்தின் மிக மிக அருகில் வைத்து அன்பொழுக டி டி , என்று செல்லமாக அழைக்கப்படும் திண்டுக்கல் தனப்பாலன்.,  ஆஹா ... என்னமாய் தமது அன்பை வெளிபடுத்தினார், உள்ளம் உதிர்த்தது ஆனந்த கண்ணீர் அவரது குரல் கேட்டு.

தொலைபேசி இப்போது வேறொருவரின் அரவணைப்பில், யாராக இருக்கும் என யோசிக்கவோ யூகிக்கவோ முடியாததால் கொஞ்சம் பதட்டமும் மிகுந்த எதிர்பார்ப்பும் நிறைந்தவனானேன்.

குரல் ஒலிக்கவும் என் நெஞ்சமெல்லாம் துளசியின் வாசம் முழுமையாய் ஆக்ரமித்தது.

அவர் தான் தில்லையகத்து முல்லை அன்பிற்கினிய திரு. துளசிதரன்.

பக்குவபட்ட படைப்பாளி அவர் என்பது அவரது பதட்டமில்லா அணுகுமுறையும் அவர் கூறிய அன்பின் வாசகங்களும் புலபடுத்தின- கூடவே பேரிதய நெஞ்சோடு அவரது ஆசியையும் - அவாவினையும் வெளிபடுத்தினார்.

அவரை தொடர்ந்து அதே தில்லையகத்தின் இன்னொரு  முள்(ளில்லா) ரோஜா ,புல்லாங்குழல் குரலெடுத்து அன்புடன் நலம் விசாரித்து தமது மகிழ்ச்சியையும் பூரிப்பையும் ரோஜா வாசத்துடன், குறைவில்லா குதூகலத்துடனும் இந்த வாசகனோடு பகிர்ந்து கொண்ட அந்த குரலுக்கு சொந்தமானவர் ,   அன்பிற்கினிய திருமதி. கீதா அவர்கள்.

அவர்களை தொடர்ந்து இப்போது தொலைபேசி இடம் மாறியது.

இடம் மாறிய தொலைபேசியின்தொடர்பில் குரல் மாறியது.  ஆனால் இந்த குரல், எங்கேயோ கேட்ட குரல்.

சுதாரித்து சுவடு தேடும் முன் இனிமையும் இளமையும் இரண்டற இழையோடி என் செவி பாய்ந்த அந்த குரல் , உலகறிந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், பதிவுலக பட்டத்து இளவரசர், பட்டி மன்ற பேச்சாளர் மதிப்பிற்குரிய திரு. முத்து நிலவன் அவர்கள்.

அன்போடு நலம் விசாரித்து, அளவளாவிய அந்த சில நிமிட சம்பாஷனை  என்னை உள்ளபடியே திக்கு முக்காட வைத்தது.

பின்னால் இருந்து குரல் கேட்டது இன்னும் சிலர் என்னோடு பேசுவதற்கு வரிசையில் காத்திருப்பதாக, ஆனால் என் நேரம், என் கைபேசியில் இருந்த பாட்டரி-பவரின் வரிசைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தன.


இப்படி முகம் தெரியாத என் மேல், இத்தனை அன்பும் கரிசனையும் கொண்டு என்னோடு தொலைபேசியின் வாயிலாக தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட, இத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்லுவதற்கு முன் இத்தகு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க காரணமான என் இனிய நண்பர் விசு அவர்களுக்கும் நண்பரும் , கல்லூரி தோழருமான பேராசிரியர் சத்திய பிரசாத் அவர்களுக்கும்  என்னோடு தொலைபேசியினூடாய்  நலம் விசாரித்து இங்கே பெயர் குறிப்பிடாமல் விட்டுப்போன ஏனைய பதிவுலக தோழர்களுக்கும் , தொலைபேசியின் வாயிலாக இந்நாளை பொன்னாளாக மாற்றியமைத்த   உங்கள் அத்தனை பேருக்கும் என் மனம் நிறைந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் இந்த பதிவின் மூலம் சமர்பிக்கின்றேன்.

Image result for pictures of telephone talk


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.




18 கருத்துகள்:

  1. எந்நாளும் பொன்னாளாய் மலரட்டும் நண்பரே
    கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வலைப் பூவில் தங்களுடன் பேசிய தகவலைக் குறிப்பிட்டுள்ளார்
    தொடரட்டும் பொன்னாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

      தாங்களும் அங்கே இருந்திருப்பீர்கள் என நினைத்தேன்.

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. எதிர்பாராத இண்ப அதிர்ச்சி தொலைபேசியில் பேசியது சார்.

    http://tirupatimahesh.blogspot.com/2015/06/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      தங்களிடம் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், நலம் சிறக்க.

      கோ

      நீக்கு
  3. மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் அவை... அங்கிருந்த நண்பர்கள் அனைவருக்குமே சந்தோசப்பட்டனர்... நன்றி... நன்றி...

    சந்திக்கும் நாள் வராமலா போய் விடும்...? விரைவில் சி (ச) ந்திப்போம்...!

    பதிலளிநீக்கு
  4. நண்பர் கோ அவர்களுக்கு,

    தலைப்பைக் கண்டதுமே தெரிந்துவிட்டது இது நம் பொன்னான நாள்...நண்பர் விசுவினாலும், வூரிஸ் கல்லூரி நிர்வாகத்தினராலும் நமக்குக் கிடைத்த பொன்னான நாள். எங்களுக்கும் . உங்கள் இனிமையான, இளமையான குரலில் கொஞ்சும் தமிழைக் கேட்டு மிகவும் மகிழ்வடைந்தோம். நிச்சயமாக உங்களுக்கு வயது ஏறவில்லை. உங்கள் நல்ல மனதின் வெளிச்சம் உங்கள் குரலின் வழி எங்களை அடைந்தது. நண்பர் விசு அவர்களின் மூலம் எங்களுக்கு இனியதொரு நண்பர் கிடைத்துள்ளார் என்றால் மிகையாகாது அவருக்கும் நன்றி. கோ என்பது உங்கள் பெயராக இருக்கலாம்....உண்மையிலேயே எங்கள் மனதிலும் "கோ" தான்.

    உங்களை நேரில் சந்திக்கும் நாளை விரைவில் எதிர்ப்பார்க்கின்றோம். தாங்கள் முன்னர் வெளியிட்ட புத்தக விழாவின் போது நமது அறிமுகம் இல்லாததால் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இப்போது அப்படியில்லையே! எனவே நீங்கள் உங்கள் அழகிய தமிழில், இனிய தமிழில் அந்தத் தாய்க்கு பெருமை சேர்க்கும் படி தங்களது புத்தகம் வெளி வர ஆவலுடன் காத்திருக்கின்றோம் நண்பரே!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      தங்களின் பின்னூட்டம் நெகிழ வைக்கின்றது.

      வாய்புகள் நேரும்போது உங்கள் ஆசியும் நிறைவேறும் என நினைக்கின்றேன், பார்க்கலாம்.
      பதிவில் இருந்த உங்களுக்கான அடை மொழி சரிதானே?

      நட்புடன்

      கோ.

      நீக்கு
    2. காலையிலேயே
      தங்கள் பதிவு கண்டதும் மகிழ்ந்தேன்
      பின்னூட்டமிட்டபோதும் என் செல்ல சோம்பல் கொண்ட கணினியால்
      உடன் தொடர்ந்திட இயலவில்லை.
      நன்றி அடுத்த சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதால் அவசியம் கலந்து கொள்ள முயல்வீர்.

      நீக்கு
    3. அன்பே சிவம்,

      தங்களோடு அளவளாவிய நிமிடங்கள் மகிழ்ச்ச்சிக்குரியவை.

      சந்திப்போம்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  5. தனப்பால்

    தங்களிடம் பேசியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி, நீங்கள் சொல்லுவதுபோல், வாய்ப்புகள் வாய்காமலா போய்விடும்.

    சந்திப்போம்.

    கோ


    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  6. மகிழ்ச்சியான நேரம் அல்வா? அந்த நிமிடங்கள்.வாழ்த்துக்கள் உங்கள் நண்பருக்கும் உங்களுக்கும். அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நலமா?

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே, ஏன் தாங்கள் தங்கள் நண்பர் விழாவில் கலந்துக்கொள்ளவில்லை.நன்றி.

      நீக்கு
    2. நண்பரின் விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை என்று யார் சொன்னது? அன்று மட்டுமல்லாது அதற்க்கு முன்பிருந்தும் அந்த நிகழ்சிதொடர்பான அனைத்து செயல்பாடுகளிலும் உள்ளார்ந்து கலந்துகொண்டுதானே இருந்தேன்.

      நிகழ்ச்சி நாளன்று , விடுமுறை மற்றும் பயண ஏற்பாடுகளில் உடன்பாடு ஏற்படாததால்,"என் உடல் மட்டுமே வெளி நாட்டில் முழு உள்ளமும் விழா மேடை படிக்கட்டில்".

      உங்களின் அன்பான , அதட்டலான மடலுக்கு மிக்க நன்றி.


      கோ

      நீக்கு
    3. அதட்டல் எல்லாம் இல்லையப்பா,,,,,,, நன்றி.

      நீக்கு
  8. உண்மையாகவே அது ஒரு பொன் நாள் தான். நம் அருமை நண்பன் சத்தியின் தலைமையில் அமைந்த இந்த விழா குழு இந்நாளை ஒரு திருமண விழா போல் அல்லவா நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு தாம் திரைக்கு பின் இருந்த அளித்த அணைத்து அறிவுரைகளையும் உதவியையும் ஒரு போதும் மறவேன். தம் தொலை பேசி வந்தவுடன் பதிவுலக நண்பர்கள் சிறு பிள்ளைகள் ஐஸ் வண்டியை பார்த்ததை போல் அல்லவா குதிக்க ஆரம்பித்தனர் . தங்களிடம் அப்படி என்ன ஒரு காந்த சக்தி ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பிற்கு பாத்திரமாகும் பாக்கியத்திற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

      ஐஸ் (வண்டி) எல்லாம் கொஞ்சம் அதிகம் தான் என நினைக்கின்றேன் உண்மையிலேயே, சக பதிவர்களின் அன்பில் நனைந்து ஐஸ்போல உள்ளம் உருகியவன் நான் தான்.

      மனம் திறந்து மகிழ்வை பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

      தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  9. உண்மையாகவே அது ஒரு பொன் நாள் தான். நம் அருமை நண்பன் சத்தியின் தலைமையில் அமைந்த இந்த விழா குழு இந்நாளை ஒரு திருமண விழா போல் அல்லவா நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு தாம் திரைக்கு பின் இருந்த அளித்த அணைத்து அறிவுரைகளையும் உதவியையும் ஒரு போதும் மறவேன். தம் தொலை பேசி வந்தவுடன் பதிவுலக நண்பர்கள் சிறு பிள்ளைகள் ஐஸ் வண்டியை பார்த்ததை போல் அல்லவா குதிக்க ஆரம்பித்தனர் . தங்களிடம் அப்படி என்ன ஒரு காந்த சக்தி ...?

    பதிலளிநீக்கு