முடிவல்ல ஆரம்பம்.
நண்பர்களே,
யாத்திரை தொடர்கிறது..ஆரம்பத்தை பார்க்க பாத யாத்திரை .....
விசாரித்ததில் வரிசையில் இருப்பவர் இரண்டாவது முறையாக வருவதாகவும் இதற்கு முன்னால் சாப்பிட்ட அடையாளம் அவர் கையில் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும்
மீண்டும் அவருக்கு தர மறுத்து அந்த வாக்கு வாதம் நடக்க, உஷாரான நாங்கள் மூவரும் கைகளை மீண்டும் ஒருமுறை நன்றாக துடைத்துக்கொண்டு, தலை குனிந்தவாறே உதறும் கைகளை நீட்டி அங்கிருந்த மண்டப வாசலில் அமர்ந்து அந்த இரண்டாவது சுற்று பொங்கலை வாங்கி ஆற அமர ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் எங்கள் அருகில் சோகமுடன் வந்தமர்ந்தவர் சற்று நேரத்திற்கு முன் கையும் மெய்யுமாக பிடிபட்ட அந்த பரிதாபத்திற்குரிய மனிதர். முகத்தை வேறுபக்கமாக திருப்பி சாப்பிட்டு விட்டு, லட்டு வாங்க போனோம்.
அங்கே ஒருவருக்கு அதிகபட்சம் 3 லட்டுக்கு மேல் தருவதில்லை என கூற, அங்கேயும் எங்களின் கைவரிசை காட்டி ஆளாளுக்கு 10 லட்டுகள் வீதம் முப்பது லட்டுக்கள் வாங்கி பைகளில் திணித்துக்கொண்டு (இந்த லட்டுக்கள் எல்லாமே எங்களுக்கல்ல, திருப்பதி செல்வதை அறிந்த எங்கள் அண்டை அயலாகத்தார்களின் காசுடன் கூடிய கட்டாய நேயர் விருப்பம்) அங்கேயே இருந்து மத்திய சாப்பாட்டையும் ஒரு கை பார்த்துவிட்டு அறைக்கு திரும்பினோம்.
கொஞ்சம் ஓய்விற்கு பிறகு மீண்டும் மலையை ஒரு சுற்று சுற்றி விட்டு இரவு உணவிற்கு சென்ற இடத்தில் எங்களுக்கு அறை எடுக்க உதவிய அந்த முதியவர் குடும்பத்தை பார்த்து நலம் விசாரித்துவிட்டு எங்கள் கர்மத்தில் கண்ணாயினோம்.
இப்படி நாள்தோறும் லட்ச்சக்கணக்கில் யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எல்லா வேளைகளும் வயிறார நல்ல தரமான சுகாதாரமான உணவும் , தங்கும் வசதிகளையும் , ஏழு மலைகளின் பாதைகள் எங்கும் களைப்புற்று இருக்கும் வேளைகளில் பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறி விட்டு செல்லும் வகையில் ஆங்காங்கே மண்டபங்களும் தண்ணீர் வசதியும் இலவசமாக செய்து கொடுக்கும் தேவஸ்த்தான நிர்வாகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.
இப்படி நாள்தோறும் லட்ச்சக்கணக்கில் யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எல்லா வேளைகளும் வயிறார நல்ல தரமான சுகாதாரமான உணவும் , தங்கும் வசதிகளையும் , ஏழு மலைகளின் பாதைகள் எங்கும் களைப்புற்று இருக்கும் வேளைகளில் பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறி விட்டு செல்லும் வகையில் ஆங்காங்கே மண்டபங்களும் தண்ணீர் வசதியும் இலவசமாக செய்து கொடுக்கும் தேவஸ்த்தான நிர்வாகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.
இரவு பதினோரு மணி வரை அடுத்த நாளுக்கான ஆயத்தங்களை செய்துவிட்டு உறங்கிபோனோம்.
காலையில் எழுந்து பேருந்து மூலம் பரீட்சை மையம் வந்தடைந்தோம்.
பரீட்ச்சை மையத்தில் தேர்வெழுத கூடியிருந்தவர்களுள் முக்கால் வாசிபேர் தமிழில் உரையாடிகொண்டிருந்தனர், பரவாயில்லையே ஆந்திர மக்கள் கூட தமிழ்ப் பேசுகின்றனரே என வியந்தோம்.
நாம் தான் புத்திசாலிகள் என்று நினைத்திருக்க அங்கே இருந்தவர்கள் அனைவரும் தமிழ் நாட்டிலிருந்து இங்கு தேர்வெழுத வந்தவர்கள் என்பது அதிர்ச்சியை அளித்தது.
தேர்வெழுதிவிட்டு லட்டு மூட்டைகளோடு வீடு திரும்பினோம்.
என்னங்க ?....
பரீட்ச்சை ரிசல்ட் என்ன ஆச்சுன்னு கேட்கின்றீர்களா?
ஏற்கனவே நான் சொன்னதை மீண்டும் நினைவு படுத்தி பாருங்கள்.
(பரீட்ச்சைக்காக வேண்டிகொண்டோம், அப்போதே அதற்கான பலனும் தேர்வின் முடிவுகளும் அங்கேயே எங்கள் முன் தரிசனமானதை நாங்கள் அப்போது உணரவில்லை)
பரீட்ச்சை முடிவுகள் வெளி வந்து பல வருடங்கள் ஆனபோதிலும் எங்கள் பரீட்ச்சை ரிசல்ட்டை திருப்பதி செல்பவர்கள் அந்த மலையில் இப்போதும் கூட கண்டிப்பாக பார்க்கலாம்.
எங்கே என்று கேட்பவர்களுக்கு இன்னும் ஒரு கூடுதல் குறிப்பு:
அச்சுதன்,அனந்தன்,பாலாஜி,ஜலபதி,தாமோதரன்,ஏழுமலையான் ,கோவிந்தா,கேசவன்,முகுந்தன்,நாராயணன்,பத்ம நாபன்,சேஷாத்திரி,சீனிவாசன்,வெங்கடேசன் என்று பல நாமங்கள் சூட்டப்பட்டு, கண் மூடிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அந்த ஏழுமலையானுடைய திருத்தலத்தில் உலவும் யானைகளின் முகங்களை பாருங்கள் அவற்றிலும் தெரியும் எங்களின் பரீட்ச்சை முடிவுகள்.
பின் குறிப்பு: அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து நாங்கள் மூவரும் அதே திருப்தியில் வேறொரு மையத்தில் எழுதிய ஆயுள் காப்பீட்டு கழக தேர்வில் வெற்றிபெற்று அதே சமயத்தில் வெளி நாட்டு மோகத்தால் அந்த வேலையில் சேராமல் இப்போது உலகின் மூன்று கண்டங்களில் ஆளுக்கொரு மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் எங்கள் மூவருக்கும் அன்று நடந்த அந்த நிகழ்ச்சிகள் எந்தன் மூளையின் ஒரு மூலையில் இன்னும் திருப்பதி பொங்கலின் முந்திரியாய் இனிமையுடன் இணைந்திருக்கின்றது.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
சார்,
பதிலளிநீக்குநேற்று அவசரமாக வெலியே
சென்றுக்கொண்டிருந்ததால், பதிவை வாசித்ததும்
பின்னொட்டம் இட முடியாம போச்சு:-)
இப்போது இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டேன்.
தங்களின் திருப்பதி அனுபவம்
திருப்பதி லட்டு போல்
வாசிக்கும்போது
தித்திக்கிறது:-)
மகேஷ்,
நீக்குஉங்க ஊரில் வந்து எங்கள் கை வரிசையை காட்டி விட்டோம்.
ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
கோ
சும்மா பளிச்சென்று தெரிகிறது...! ஹா... ஹா...
பதிலளிநீக்குதனப்பல்,
நீக்குவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.
கோ
கோ வுக்கு வணக்கம்,
பதிலளிநீக்குஓஓ திருப்பதியில் 10 லட்டு வாங்கியது யார் என்று தேடிக்கொண்டு இருந்தார்கள், நீங்கள் தானா,,,,,,,,,
மாட்டீனிர்கள்,
கோவிந்தா தான்,,,,,,,,,,,,
பகிர்வு அருமை,
வாழ்த்துக்கள். நன்றி.
பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
நீக்குபத்து லட்டு வாங்கியதில் உங்களுக்கு இரண்டு கொடுத்தனுப்பினேனே மறந்துட்டீங்களா?
நான் மாட்டினால் நீங்களும்தான் மாட்டுவீர்கள். உங்களுக்கும் கோவிந்தா "கோ"...விந்தா தான்
கோ
அட கண்ணா லட்டு தின்ன ஆசையா இருந்தாலும்...நண்பர் கோ......அதுக்காக இப்படி பரீச்சைல கோவிந்த நாம சங்கீர்த்தனம் "கோ"விந்தா "கோ"விந்தாவா .....
பதிலளிநீக்குவிட்டா சிவக்குமார் பாணில (வர் பல பூ பெயர்களை அப்படியே பார்க்காமல் வேகமாகச் சொல்லுவார்) ஆயிரம் நாமத்தையும் சொல்லிடுவீங்க போல....ஸாரி "நாமம்" இல்ல பெயர்கள்....
மிகவும் ரசித்தோம் பதிவை....உங்கள் நாமத்தை அல்ல....இங்கு நாமம் என்பது பெயரல்ல்....நாமமே
வருகைக்கு மிக்க நன்றி,
பதிலளிநீக்குநாமம் எங்களுக்கல்ல அது அந்த வங்கிக்குத்தான், என்போன்றோரை வேலையில் சேர்த்துக்கொள்ள அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை, மேலும் அந்த "வேலை"யில் நான் சேர்ந்திருந்தால் இந்த "வேளை" உங்களுக்கு பதில் எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்குமா?
எனவே நாமம் எனக்கல்ல அவர்களுக்குத்தான்.
எங்களுக்குத்தான் மீசையில் மண் ஒட்டாதே.
கோ