பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 ஜூன், 2015

"ஒட்டு மீசை"

பெண் (சு)தந்திரம் 


நண்பர்களே,

சமீபத்தில் ஒரு சக பதிவாளரின் பதிவினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, அந்த பதிவின் கருத்துக்கள் என்னை கொஞ்சம் பாதிக்கவும் செய்தது, அந்த பாதிப்பின் விளைவாக விளைந்ததுதான் இந்த பதிவு.


அந்த பதிவு பெண் சுதந்தரத்தை மைய பொருளாக வைத்து எழுதப்பட்ட பதிவு.

பதிவாளருக்கு  எழுத நினைத்து எழுதிய பின்னூட்டம் பின்னர் ஒரு பதிவாகவே உருமாறி போனதால் இதை உங்களின் பார்வைக்கும் வைக்கின்றேன்.

பெண்களுக்கு எதிரானவன் அல்ல நான் என்பதை முதலில் இங்கே பிரத்தியேகமாக பிரகடனபடுத்த விரும்பிகின்றேன். 

பெண் சுதந்திரம் என்பதற்கு என்ன வரையறை. அதை யார் வரையறுத்திருப்பது?

இந்த பெண் சுதந்திரம், ஊருக்கு ஊரு ,நாட்டுக்கு நாடு வித்தியாசமான வகையில் அர்த்தபடுத்தப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

என் பாட்டியும் என் அம்மாவும் என் தமக்கைகளும் எந்த ஒரு விதத்திலேயும் அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த சார்ந்திருக்கின்ற குடும்பங்களோடும், துணை சேர்ந்த கணவர்களோடும் எந்த ஒரு அடிமை மனப்பான்மையும் அற்றவர்களாக இணைந்துதான் வாழ்துவந்திருக்கின்றனர். 

மனதளவில் தாம் மற்றவர்களுக்கு அடிமை பட்டு இருப்பதாக அவர்கள் உணர்ந்திருந்தால்,அவர்கள் தாங்கள் படித்த கல்வியின் பயனாக எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல், வீட்டு வேலைகளை மட்டுமே பார்த்துகொண்டிருந்திருப்பார்கள், ஆனால் அப்படி இல்லாமல், அவரவர் தங்கள் கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகளுக்கு சென்றுகொண்டுதானே இருந்திருக்கின்றனர்., அதுவும் அவர்கள் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் வேலைக்கு செல்லாமல், குடும்ப நலனுக்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் மட்டுமின்றி, தங்களின் சுதந்தரத்தின் வெளிப்பாடாகவும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

Image result for pictures of women's freedom

இது ஏதொ சில குடும்பத்து பெண்களுக்கு மட்டும் நிகழும் ஒன்றல்ல, உலகம் முழுவதும் படித்த மட்டும் படிக்காத மக்கள் மத்தியிலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை"  என்பதனால், புகையும், குடியும், பப்பும் ,கேளிக்கையும், சூதாட்டமும், மரபு மீறி, ஆண்களுடன் இடைவெளி குறைத்து பழகுவதும்,ஆடை அலங்காரம் என்ற பெயரில், "என்னைப்பார் என் அழகைப்பார்" என்ற ரீதியில் நவ நாகரீகம் என்ற போர்வையில், போர்த்தவேண்டியவற்றை போர்த்தாமல் போற்றவேண்டிய கலாச்சார பண்பாடுகளை போற்றாமல் நடந்துகொள்வதுதான் சுதந்தரமா?

சிலர் சொல்லும்   எல்லா இலக்கியங்களும் பெண்ணை உயர்த்தியும் போற்றியும் தானே  பாடி உள்ளன?, பெண் தன்னலம் இலாத தாயுள்ளம் கொண்டவள் என்று சொல்லுவதில் அத்தனை சிறப்பும் அடங்கித்தானே உள்ளது.

இறைவனின் படைப்பில் குறை ஒன்றும் இல்லை என்றுதான் நான் நம்புகின்றேன்.

ஆணை உடல் ரீதியாக வலிமை உள்ளவனாக படைத்த இறைவன், பெண்ணை மன ரீதியாக வலிமையுள்ளவளாகத்தானே படைத்திருக்கின்றான்.

ஒரு நாற்பது கிலோ எடையுள்ள அரிசி மூட்டையை ஒரு ஆண் எளிதாக தூக்கி சுமக்கும் உடல் வலிமை அவன் பெற்றிருப்பது போல், கற்பம் சுமந்து பிரசவம் என்னும் வாழ்வா சாவா என்னும் நிலைமைக்கு சென்று ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் மன வலிமையை பெண் பெற்று இருக்கின்றாள், இத்தனை வேதனையும், வலியும், விபரீதமும் இந்த குழந்தை பேற்றில் உண்டு என்று அறிந்திருந்தும், அந்த மரண விளிம்பின் - நுனிவரை சென்று திரும்பிய அனுபவம் நிறைந்திருந்தும் அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த மனோதிடமும் , வலிமையையும் ஒரு பெண்ணுக்கு அன்றி ஆணுக்கு சாத்தியமல், எனவே படைப்பிலும் பெண்கள் அடிமைகளாகவோ, மதிப்பு அற்றவர்களாகவோ மனபலம் இல்லாதவர்களாகவோ படைக்கப்படவில்லை.

பெண், மயில் போன்றவள், குயில் போன்று குரலுடையவள், செவ்வாய் இதழுடையவள்,கொடி போல் இடை உடையவள், வில் போன்ற புருவம் உடையவள், தேன் போன்ற இனிமையான சொல்லுடையவள், அன்னம் போல் நடை உடையவள்,அன்பானவள், தியாக மனம் படைத்தவள், இரக்க குணம் மிகுந்தவள், கணவன் மீதும் பிள்ளைகள் மீதும் மாறா அன்புள்ளவள், அச்சம் , நாணம், மடம், சாந்தம் போன்ற பெரும் குணங்களுக்கு சொந்தமானவள், என்றெல்லாம் பெண்களை உயர்வாக போற்றி தானே இந்த உலகம் பாடுகின்றது.

இதை ஏமாற்றுவேலை என்பதுபோல் சிலர் சொல்லுவது  ஆணின் கலங்கமற்ற வெள்ளை மனதின் - உள்ள நிறைவை கொச்சை படுத்துவதாக எனக்கு தோன்றுகின்றது.

வள்ளுவனை தெய்வப்புலவன் என்றும் ஐயன் என்றும் போற்றி துதிக்கும் நாம் ,கிணற்றில் தண்ணீர் இறைத்துகொண்டிருந்த தன் மனைவி வாசுகி கூப்பிட்டகுரலுக்கு தான் செய்து கொண்டிருந்த  வேலையை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி வந்து கணவனுக்கான சேவை புரிந்ததை , வள்ளுவன் ,வாசுகியை அடிமைபடுத்தி வைத்திருந்தான் என்று சொல்லுவோமா?

பாட்டுக்கொரு புலவன் பாரதி பட்டினியால் இருக்கும் மனைவி பிள்ளைகளுக்கு உணவு வழங்காமல் இருந்த தானியங்களை பறவைகளுக்கு கொடுத்து மகிழ்ந்ததை எவரேனும் பாரதி தன் மனைவியை பட்டினிபோட்டு கொடுமை படுத்தி  அடிமை படுத்தி வைத்திருந்தான் என சொல்ல முடியுமா? 

கற்புக்கரசி கண்ணகி கோவலனுக்கு அடிமைபட்டு வாழ்ந்தாள் என்று சொல்ல முடியுமா, தன் கணவனின் வரம்பு மீறிய வாழ்க்கை முறைமையினை, பொறுத்து கொண்டு சகித்து கொண்டிருந்தாளே அன்றி கோவலனின் கற்பு குறித்து மௌனமாயிருந்தாள் - அடிமையாக வாழ்ந்தாள் என்றா சொல்லுவது.

மூச்சுக்கு முப்பத்தெட்டு தடவை பாட்டி என்று அன்பொழுக போற்றப்படும் அவ்வைக்கில்லாத சுதந்தரமா, அந்த காலத்திலேயே அதியமான் எனும் ஆணுடன்  கலங்கமற்ற நட்பு பாராட்டியவளன்றோ?, சுதந்திரம் இல்லாமலா?

சுதந்திரம் இல்லாமலா பல பெண் பதிவாளர்கள் தங்கள் எண்ணங்களை எழுத்தாக்கி வெளி இடுகின்றனர்?

வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வதும், குடும்ப பாரங்களை இணைந்து சுமப்பதும், ஆணுக்கு வசப்படாத, சில வேலைகளை பெண் செய்வதும்,பெண்ணுக்கு சாத்தியபடாத வேலைகளை ஆண் செய்வதும் சுதந்தர கேடு என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.  இங்கே எந்த பெண்ணும் அடிமை சிறையில் அடைக்கபட்டிருப்பதாக நான் அறிந்த வகையிலே எவரும் இல்லை.

ஆண்களிடம் கேட்டுபாருங்கள், திருமணத்திற்குபின் தன் வாழ்க்கை முறைமைகளை மட்டுமின்றி தன் வாழ்க்கையையே தன் மனைவிக்கு ஏற்றாற்போல் வளைத்து கொடுத்து வளைந்து போன விவரம் தெரியவரும்.

Image result for pictures of men and women equality

விதி விலக்குகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கத்தான் செய்யும் அவைகளை பொதுவான விதிகள் என்று அர்த்தப்படுத்திகொள்ளகூடாது.

தொலை காட்ச்சி தொடர்கள் முடியும் வரை கணவனும் பிள்ளைகளும் பசியோடு காத்திருக்கும் குடும்பங்களையும் எனக்கு தெரியும், கணவனும் பிள்ளைகளும் திருப்த்தியாக சாப்பிட்ட பிறகு எஞ்சி இருப்பதை மனதிருப்த்தியுடன்  உண்டு மகிந்து வாழும் பெண்கள் உள்ள குடும்பங்களையும் , மனைவிக்கு  பிடிக்குமே, என்று தனக்கு கிட்டிய வாய்ப்பையும் மனைவிக்காக  விட்டு கொடுப்பதும், மனைவிக்கு பிடிக்காது என்று தனக்கு பிடித்த விஷயங்களை ஒதுக்கிவிடும் கணவன்கள் நிறைந்த குடும்பங்களையும் தெரியும். 

காலையில் எழுந்து,வாசல் தெளித்து கோலமிட்டு, கணவன் பிள்ளைகளுக்கு காலை உணவு தயாரித்து பரிமாறுவதை அடிமைத்தனம் என்று நினைக்கும் மனைவிகளை முற்போக்கு சிந்தனை வாதிகள் என்றும், தன் மனைவிக்கு  பல வேளைகளில் கூட மாட ஒத்தாசை செய்யும் கணவர்களின் செயல்கள் கௌரவ குறைச்சல் என்று நினைக்கும் கணவர்களின் சிந்தனைகள் முற்போக்கு சிந்தைகள் என்றும் நான் சொல்ல மாட்டேன், அதே சமயத்தில் எதற்க்கெடுத்தாலும் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று புலம்பும் புலம்பலை ஏற்க்கவும் நான் தயாரில்லை.

ஆண்களைப்போல்  சட்டை, ஆண்களைப்போல் சிகை, சில ஆண்களைப்போல் மது, புகை, கேளிக்கை, உல்லாசம் போன்றவற்றில் தாங்களும் ஈடுபடுவதையும், தரம் தாழ்ந்த கலாச்சார உறவுகளை வளர்த்துகொள்வதும் நாகரீகம் என்ற பெயரில் மேலை நாட்டு மோகத்தை , அவர்களது கலாச்சார சீர்கேடான பல விஷயங்களை தடை இன்றி கடைபிடிக்க எந்த தடையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதையே   சுதந்திரம் என்று நினைக்கும் சில விந்தை பெண்கள் கொஞ்சம் ஆற அமர யோசித்து செயல்படுங்கள்.

இல்லை, ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என்று நினைக்கும் பெண்களே, அப்படியே ஆண்களும் தாங்கள் விரும்பும் வண்ணம் செயல் புரிய அவர்களுக்கும் கொஞ்சம் சுதந்திரம் தர முன் வாருங்கள்.

திருமணத்திற்கு பிறகு தமது சுதந்திரம் இழ்ந்துபோனதாக புலம்பும் ஆண்களும் இந்த சமூதாயத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் "ஊமை கண்ட கனவுபோல" - "கை இல் ஊமையன் கண்ணில் காத்த வெண்ணை உணங்கல் போல".

இப்பவும் சொல்கின்றேன் சுதந்தரத்திற்க்கான வரை முறை என்ன வென்று தீர்மானியுங்கள், அவை வரம்பு மீறாமல் இருக்க பார்த்துகொள்ளுங்கள், மணிக்கு 800 மைல் வேகமாக ஓடமுடியும் என்பதனாலேயே ரயில் தன் தடத்தை விட்டு விலகி ஓட  முயற்ச்சிக்க கூடாது, அப்படி விலகினால் தடம் புரளும் அபாயம் ஏற்படும், தண்டவாளங்களில் தகுந்த வேகத்துடன் பயணிப்பதே ஒரு நல்ல ரயிலுக்கு அழகு  , அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு, மகிழ்ச்சி.

Image result for pictures of women with mustache

மோனாலிசா, தன் இதழ் பிரிக்காமல் புன்னகிப்பதால்தான் உலகின் மேன்மையென போற்றபடுகிறாள், மாறிப்போனால்......? ஆசையோடு பார்க்கத்தோன்றும் மோனாலிசாவை  மீசையோடு பார்க்க நன்றாகவா இருக்கின்றது?

பெண்கள் மீது மரியாதையும் அன்பும் கொண்டவன் என்பதும் யாரையும் தனிப்பட்ட விதத்தில் குறை சொல்ல இந்த பதிவு எழுதப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி "குண்டு சட்டில் குதிரை ஓட்டுவதை நிறுத்திவிட்டு, குறைந்தபட்சம் சன்னல் கதவுகளையேனும்  திறந்து கொஞ்சம் வெளியில் எட்டிப்பாருங்கள் உலகின் உண்மை  என்னவென்ற வெளிச்சம் சன்னல் வழியாக உள்ளே வரட்டும் உள்ளம் உணரட்டும்".

பெண்கள் எல்லோரும் சுதந்தரமாகத்தான் இருக்கின்றனர், காட்சி பிழையால் ஒருவேளை வேறுமாதிரியான பிம்பம் தோன்றலாம். 

 நிறைவு செய்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

 1. அறிந்து தெரிந்து புரிந்தவனுக்கு சக்தி... இல்லையெனில் அவன் சகதி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனப்பால்,

   வருகைக்கு மிக்க நன்றி.

   எல்லோரும் சக்தி வேண்டியே வாழ்வில் சுழன்று கொண்டிருக்கின்றோம்.

   கோ

   நீக்கு
 2. வணக்கம்,
  பசுத்தோல் போர்த்தாத அரசனே,
  பாட்டி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்,
  இது என் பதிவிற்கான பதிலாய் இருக்கும் போலும், என்னால் உங்களின் ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல முடியும், பின் இதுவும் ஒரு பதிவாக அமைந்து விடும்,,,,,,,,,,,,,
  பார்ப்போம் பிறிதொரு சமயத்தில் பேசலாம்,
  தங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு மிக்க நன்றி.

  ஒ..... அது நீங்கள் எழுதிய பதிவா...... அடடே முதலிலேயே தெரிந்திருந்தால் இன்னும் கூடுதலாக விளக்கி இருப்பேனே?

  சரி அடுத்தபதிவில் சேர்த்துக்கொள்கிறேன்.

  நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

  உங்கள் எழுத்துக்கள் எப்போதும் போல் மிளிர்கின்றன.

  வாழ்த்துக்களுடன்

  கோ

  பதிலளிநீக்கு
 4. This is an interesting topic for debate. To start with Freedom itself is not fully free in the sense that it is bound to a moral framework. Doing whatever you want, whenever you want, wherever you want, however you want is not freedom, it is anarchy. Of course freedom is invoked in a society, not when you are the lone person in the universe and if you are, you will have no idea of what freedom is in the first place.

  Talking of Women's freedom or Empowerment, there are lots of perversion of the idea and sadly that is what being fed to our generation through the mass media. The original truth of what is intended for women's freedom or empowerment gets lost when each one defines it to their own convenience. Sadly it has already reached to very narrow and personal levels such as 'you don't tell me what to dress, tell him not to rape' and 'my body my mind my choice' to name a few. I think the youths of today think doing whatever, whenever and however they want is freedom. Please be careful what you wish for, youths!

  I'm all for Women's freedom and empowerment to the purest sense of its intentions such as social, economic and political equality in a society and not for one second for its abused version of it. It does not lay in copying the western culture from clothes to night life.

  The irony is that for years the feminists were talking of 'objectification of women in films and media' by men but now women in entertainment industries themselves are willing to objectify in the name of 'fashion' and 'freedom and right to express'. How sad?!

  Sadly Truth is always protected by the bodyguards of Lies. So when you know the truth it shall set you free!

  பதிலளிநீக்கு
 5. Thanks for your comment , which shows an analytical and rational approach.

  Ko.

  பதிலளிநீக்கு