பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 12 ஜூன், 2015

"நோகாது"


கடுக்கண்

நண்பர்களே,

நம்ம ஊரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் உறவுகளின் உரிமையாகவும் கொண்டாடப்படும் பல பாரம்பரியமான நிகழ்வுகளுள் ஒன்றுதான்
நமது  குடும்பங்களில்  சொந்த பந்தங்களை , உறவுகளை, நண்பர்களை, சுற்றத்தாரை அழைத்து  வெகு விமர்சையாக, பிறந்த குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மாதங்கள் கழித்து தாய் மாமன் மடியிலே உட்கார வைத்து  மொட்டை அடித்து  காது குத்தி , கடா வெட்டி, குலதெய்வ கோவில்களில்  பொங்கலிட்டு , அந்த விழாவினை ஒரு திரு விழாபோல கொண்டாடி மகிழ்வது இன்று நேற்றல்ல தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் ஒரு உன்னத சடங்குடன் கூடிய சம்பிரதாயம்.

இது போன்ற தருணங்களில்தான், உறவுகளின் முக்கியத்துவம், குறிப்பாக தாய்மாமன் என்ற ரத்த சொந்தத்தின் அடர்த்தி முழுமையாக அங்கிகரிக்கபடுவதும் அதனை ஒரு கௌரவமாக  போற்ற படுவதும் வழக்கம்.

இப்படி அந்த நாளில் அந்த சின்ன குழந்தைக்கு காது குத்தபடுவதை குழந்தைக்கு செய்யும் அன்பின் வெளிப்பாடாக ,ஒரு சீர் , அல்லது, ஒரு அங்கீகாரமாக ,சிறப்பு செய்வதுபோல கருதி அந்த நிகழ்ச்சியினை நடத்துவது மிக மிக அவசியமும் இன்றியமையாததாகவும் நம் இந்திய குடும்பங்கள் நடத்திக்கொண்டு இருக்கின்றன.

இவற்றை போன்ற எந்த சடங்காக இருந்தாலும் அவற்றுள் மறைந்திருக்கும் மருத்துவ விஞ்ஞான நன்மைகளை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டாமல், இவற்றை ஒரு சம்பிரதாயம், சடங்கு, வேள்வி, பொருத்தனை,போன்ற போர்வையில் நம் முன்னோர்கள் நமக்கு செய்து காட்டியும் அறிவுறுத்தியும் வந்திருக்கின்றனர்.

இந்த காதுகுத்தும் நேரத்தில், குத்தப்படும் காதுகளுக்கு சொந்தகாரர்களான குழந்தைகளுக்கு ஒரு சிறு வலியும், வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான், எனினும் அவர்களின் பிற்கால நன்மையை கருதி அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே இந்த காது குத்து நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.

Image result for IMAGES OF CHILDREN EARPIERCING IN INDIA

இவற்றில் குழந்தைகளை சித்திரவதை படுத்துகின்றோம், அவர்களை வேதனை படுத்துகின்றோம், அவர்களுக்கு உடல் சம்பந்தமான வன் கொடுமை இழைக்கின்றோம் என்றெல்லாம் யாரும் கருதமாட்டோம்.

ஆனால் சமீபத்தில், இங்கிலாந்தில், இதுபோன்று குழந்தைகளுக்கு காது குத்துவதை , குழந்தைகளுக்கெதிரான வன் கொடுமை என்ற பார்வையில், சுமார் 33,000 பேர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய புகார்மனு ஒன்றை இங்கிலாந்து பொது மருத்துவ கழகத்தின் ஒரு பிரிவான குழந்தை நல மருத்துவ குழாமுக்கு அனுப்பப்பட இருக்கின்றதாம்.

பெரும்பாலானவர்கள் சொல்லும் குற்ற சாட்டு, இந்த காது குத்தலினால், குழந்தைகளுக்கு ஒரு நன்மையையும் கிடையாது, வெறுமனே, பெற்றோர்களின் மன திருப்த்திக்காகவும் அவர்களின் அலங்கார ஆசைகளுக்காகவுமே இப்படி குழந்தைகளுக்கு அநீதியும் உபாதையும் ஏற்படுத்தபடுகின்றன என.

அதுவும் குழந்தைகளை உடல் ரீதியாக காயபடுத்துவதும் துன்புறுத்துவதும் சட்டப்படி குற்றம் என்றிருக்கையில் , ஒரு உலோக கம்பியை அவர்களின் காது மடல்களில் குத்தி  அவற்றை உள்ளே நுழைப்பது நிச்சயமாக ஒரு வன் செயல் தானே  குழந்தைகளுக்கெதிரான உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் இந்த செயல் முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும் என்று அந்த விண்ணப்பதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேவையானால், அந்த குழந்தைகள் பெரியவர்களான பிறகு, அவர்களுக்கு தேவைபட்டால், சுயமாக முடிவெடுத்து செய்து கொள்ளட்டும் என்றும் அவர்கள் சொல்லி இருக்கின்றனர்,

அப்படி பார்த்தால், பாரம்பரியமாக பல ஆண் குழந்தைகளுக்கு செய்யப்படும் மற்ற சம்பிரதாயங்களையும் இவர்கள் நாளடைவில் தடை பண்ண போர்க்கொடி உயர்த்தினாலும் ஆச்சரியபடுவதற்க்கில்லை.

குழந்தைகளுக்கு என்னென்ன   எந்த வயதில் எப்படி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும்.

பிள்ளைகள் பெரியவர்களான பிறகு அவர்களே சுயமாக சிந்தித்து செய்துகொள்ளட்டும் என்று விடவேண்டுமானால், அவர்களுக்கு பெயர்களைக்கூட குழந்தையிலேயே பெற்றோர்கள் ஏன் சூட்டவேண்டும் , குழந்தையிலேயே, பள்ளியில் ஏன் சேர்க்க வேண்டும், குழந்தையிலேயே, கசப்பு மருந்துகளை ஏன் கொடுக்கவேண்டும்? என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

என் அருமை, இந்திய தமிழக பெற்றோர்களே, புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொள்வதைபோன்று, வெளி நாட்டினரை பார்த்து உணவு,நடை, உடை, பாவனைகளையும், கலாச்சாரத்தின் பெரும்பகுதிகளை மாற்றிக்கொண்டிருக்கும் நாம் இதுபோன்ற சில நமது பண்பாட்டு சம்பிரதாய செயல்களையும் மாற்றிக்கொள்ள விழைவோமானால், நமது அடையாளங்களை வெளி நாட்டினருக்கு அடமானம் வைப்பதோடு அவற்றை விரைவில் முழுமையாக இழக்கவும் நேர்ந்துவிடும்.

எனவே, இந்த காதுகுத்தும் விஷயத்தில்   எந்த வெளி நாட்டு  போதனைகளும் நமக்கு காது குத்தாமல் பார்த்துக்கொள்வோம் நமது பாரம்பரியத்தை வழிவழியாய் கடைபிடிப்போம்.

உங்களுக்கு எவர்க்கேனும் தாய் மாமன் பற்றாக்குறை இருந்தால் கலங்காதீர்கள் சொல்லி அனுப்புங்கள் வந்து சேர்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

7 கருத்துகள்:

  1. கடுக்கன் வருங்கால் நகுக ... என்ன கோ ? எங்கள்ளுக்கே காத்து குத்துவீர்கள் போல இருக்கே...
    ஜோக்ஸ் அபார்ட்.. இது உணமையாவா ? காத்து குத்துவது பிள்ளைகளை கொடுமை படுத்துவது என்பது கொஞ்சம் டூ மச் !

    பதிலளிநீக்கு
  2. கடுக்கன் வருங்கால் நகுக ... என்ன கோ ? எங்கள்ளுக்கே காத்து குத்துவீர்கள் போல இருக்கே...
    ஜோக்ஸ் அபார்ட்.. இது உணமையாவா ? காத்து குத்துவது பிள்ளைகளை கொடுமை படுத்துவது என்பது கொஞ்சம் டூ மச் !

    பதிலளிநீக்கு
  3. // தாய் மாமன் பற்றாக்குறை இருந்தால்..... வந்து சேர்கிறேன்... // இந்த மனது யாருக்கு வரும்...? எந்த பாரம்பரியத்தை விடவும் இதுவல்லவோ சிறப்பு...

    பதிலளிநீக்கு
  4. இங்கு போல் அங்கும் காது குத்தும் சம்பிரதாயம் இருப்பது புதிய-தகவல் சார்.

    பதிலளிநீக்கு
  5. திராவிடப் பண்பாடான காதுக் குத்தலை தடை செய்யுமாறு இங்கிலாந்தில் சிலரால் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகின்றது. காது குத்துவது என்பது ஒரு நம்பிக்கை, பண்பாட்டு பழக்க வழக்கம். இதை ஏன் தடை செய்கின்றார்கள் எனத் தெரியவில்லை. மற்ற மதங்களில் உள்ளது போல சுன்னத் செய்வது, தலைப்பாகை அணிவிப்பது போன்று கூட காது குத்தல் மூடத்தனமானதோ, சிறுவர் வன்கொடுமை மிக்கதோ கிடையாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும். திராவிட பண்பாட்டு பழக்க வழக்கங்களில் ஒன்றான மொட்டையடித்தல், காது குத்தல் போன்றவைகளை அயலகத் தமிழர்கள் விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்களது தனிப்பட்ட அடையாளங்கள், பண்பாட்டு நம்பிக்கைகளையே இழக்கின்றனர் என்பதே தெரிகின்றது. ஏற்கனவே இந்தியாவில் திராவிடப் பண்பாட்டு பழக்க வழக்கங்களான கிடாவெட்டுதல், மஞ்சுவிரட்டுதல் போன்றவைகளை வட இந்திய ஏகாதிப்பத்திய அரசின் ஆதரவோடு தமிழகத்தில் தடை செய்திருக்கின்றனர். இன்று தாயகத்திலும் அயலகத்திலும் தமிழர்கள் தமிழ் பெயரிடுவதையே அவமானமாக நினைத்து வடமொழி பெயர்களை இட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழர்களின் ஒவ்வொரு பண்பாட்டு அடையாளங்களாக உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் அழிக்கப்பட்டுக் கொண்டே போனால் நமது தனித்துவ வாழ்வியல் பழக்க வழக்கங்கள் முற்றாக சிதைந்து விடும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  6. நம் பண்பாட்டை வலியுறுத்தும் தங்கள் எழுத்து மனதிற்கு மகிழ்ச்சி, எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கு?, நமது அடையாளங்களை வெளி நாட்டினருக்கு அடமானம் வைப்பதோடு அவற்றை விரைவில் முழுமையாக இழக்கவும் நேர்ந்துவிடும்.
    உண்மையான வார்த்தைகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா அருமையான பதிவு. தாய்மாமன் நீங்களும் நண்பர் விசுவும் இருக்க இங்கிருப்போருக்கு என்ன பயம்!!! சொல்லி அனுப்புகின்றோம்...வந்து விடுங்கள். நண்பர் விசு அவர்களின் பதிவு நினைவுக்கு வருகின்றது...தண்டபாணியின் வழி பந்தல் போடும் நிகழ்வை அறிய...தாய் மாமன் நானிருக்க நான் இல்லாமல் எப்படி பந்தல் போடுவ என்று நாட்டாமை பேசிய பதிவு....ரசித்த பதிவு...

    சரி இந்தப் பண்பாடு ஒரு புறமிருக்க....இதில் வரும் சில பிரச்சனைகளையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். காது குத்துவதைப் பற்றி அல்ல.....அதில் வைக்கப்படும் சீர்.....இந்த சீர் வைப்பதில்தான் பிரச்சனை எழுகிறது. அங்கு வசதியானோருக்குக் கவலை இல்லை. ஆனால் வசதியற்றோரால் சீர் செனத்தி செய்ய முடியாமல் நம்மூர் சாதாரண மக்கள் பந்தலில் தங்களை யாரும் குற்றம் சொல்லக் கூடாது என்று, அளவுக்கு மீறி கடன் வாங்கி கடனில் தத்தளிக்கும் நிலையும் ஏற்படுகின்றது. மட்டுமல்ல அப்படிச் செய்யும் சீர் பற்றியும் உறவினர்கள் "இவ்வளவுதான் செய்தானா? செய்தாளா? எவ்வளவு செய்தார்கல் என்று கணக்கு பார்ப்பதும் குற்றம் சொல்லுவதும் நடக்கின்றது. பங்காளிச் சண்டை ஒரு புறம். மட்டுமல்ல இதற்கு கடன் வாங்கிச் செலவு செய்பவர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தயாராகும் போது பணம் செலவழிப்பதில், அந்தக் குழந்தைக்கு வேண்டிய புத்தகங்கள் வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும், செலவழிக்கத் தயங்குவதும் அதனால் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதும் நடக்கத்தான் செய்கின்றது. இதனை நாங்கள் இங்கு பெரும்பான்மையாக வீட்டில் வேலை செய்யும் பெண்களின் குடும்பங்களிலும், சாதாரணமான குடும்பங்களிலும் பார்க்கத்தான் செய்கின்றோம். பண்பாடு கலாச்சாரம் முக்கியம்தான். ஆனால் அதை விட முக்கியம் கல்விக் கண் திறப்பது! என்பது எங்கள் தாழ்மையான கருத்து நண்பரே!

    பதிலளிநீக்கு