சீப்பா?
நண்பர்களே,
உலகிலேயே மிக எளிய இனிய பழங்களுள் எனக்கு மிகவும் பிடித்த பழம் ஒன்று உண்டென்றால், அது வாழைப்பழம் தான்.
இந்த பழம் மட்டுமே கையில் படாமல் கத்தியோ, கைவிரல் நகமோ பயன்படுத்த தேவை இன்றி எளிதாக கையாண்டு சுவைத்து மகிழத்தக்க ஒன்று.
இதில் மற்ற பழங்களைபோன்ற விதைகள் கிடையாது, கடினமான ஓடுகள் கிடையாது, தோலை தவிர வேறொன்றும் கழிவுகள் கிடையாது, இவற்றை கழுவ வேண்டியதில்லை,ஒன்றிரண்டு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும் , சுமையும் இல்லாத எளிதில் எங்கும் எடுத்து செல்லக்கூடிய பழங்களில் வாழைக்கு முதலிடமும் முன்னுரிமையும் கொடுக்கபடுகின்றது, ஆலய வழிபாடுகளிலும், எல்லா வித விழா மற்றும் விசேஷங்களில் முக்கிய முதலிடம் வகிப்பதும் இந்த வாழைப்பழங்கள்தான்.
இதில் மற்ற பழங்களைபோன்ற விதைகள் கிடையாது, கடினமான ஓடுகள் கிடையாது, தோலை தவிர வேறொன்றும் கழிவுகள் கிடையாது, இவற்றை கழுவ வேண்டியதில்லை,ஒன்றிரண்டு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும் , சுமையும் இல்லாத எளிதில் எங்கும் எடுத்து செல்லக்கூடிய பழங்களில் வாழைக்கு முதலிடமும் முன்னுரிமையும் கொடுக்கபடுகின்றது, ஆலய வழிபாடுகளிலும், எல்லா வித விழா மற்றும் விசேஷங்களில் முக்கிய முதலிடம் வகிப்பதும் இந்த வாழைப்பழங்கள்தான்.
மனிதர்கள் பெரும்பாலும் தினமும் இல்லை என்றாலும் அடிக்கடி சாப்பிடும் ஒரு பழமும் இந்த வாழைபழம்தான்.
இதன் விலையும் மிக மிக குறைவு என்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவே இந்த பழங்களின் தொகுப்பை வாழை சீப்பு (cheap??)என்றழைக்கின்றோமோ?
இந்த பழத்தின் குணநலன்கள், ஆரோக்கிய, மருத்துவ பயன்பாடுகள் எல்லாம் நாம் அறிந்ததே.
சிறுவர்களாக இருந்த சமயத்தில், சம்பள நாளன்று என் தந்தையார் எங்களுக்காக வாங்கி வரும் இனிப்பு காரம் இவைகளுடன் வாழைப்பழங்களும் கண்டிப்பாக இருக்கும்.
அந்த வாழைபழங்களின் அளவு உண்மையிலேயே மிக பெரியதாக இருக்கும் , என்னால் முழுவதுமாக சாப்பிட்டு முடிக்க முடியாத நிலைமையிலும் பாதி சாப்பிட்டு விட்டு மீதியை பிறகு சாப்பிட பாதுகாத்து வைத்து பின்னர் சாப்பிட்டிருக்கின்றேன்.
கல்லூரி காலங்களில் கன்னியா குமரி மாவட்டத்தில் சில காலம் சுற்றித்திரிந்த சமயத்தில் அந்த மாவட்டத்திலும் கேரள மாநிலத்தின் ஓரிரு இடங்களிலும் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களுள் வித விதமான அளவுகளிலும் மஞ்சள், பச்சை,சாம்பல்,சிகப்பு, கருப்பு போன்ற பல நிறங்களிலும் கடைகளில் தொங்கவிடபட்டிருந்த வாழை பழங்களும்தான்.
அப்படி காட்சி அளித்த வாழைப்பழங்களை ஆவலுடன் வாங்கி ஒவ்வொன்றாக சுவைத்து சாப்பிட்ட நினைவுகளை, இன்று காலை பேருந்து பயணத்தின்போது செய்திதாளில் வாசித்த ஒரு செய்தி வாழை பூ போல மலர செய்தது.
ஒரு வாழைப்பழம் ஒரே ஒரு வாழைப்பழத்தை ஒரு பெண்மணி சாப்பிட்டு இருக்கின்றார், அதற்காக அவருக்கு காவல்துறை , நம்ம ஊர் கணக்குப்படி ரூபாய் 12,000 அபராதம் விதித்திருக்கின்றது என்ற செய்தி வாசித்ததும், என்ன ஒரு வாழைப்பழத்திற்கு இத்தனை விலையா?
எங்க ஊரில் ஒரு வாழைப்பழ மண்டியையே விலைக்கு வாங்கலாமே அதுவும் பல ரகங்கள் கொண்ட வாழை பழங்களை வருடக்கணக்கில் வாங்கி குடும்பமாக சாப்பிடலாமே , அப்படி இருக்க ஒரே ஒரு வாழைப்பழத்திற்கு ஏன் அந்த பெண்மணி பனிரெண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்.
ஆவல் மிகுதியால் என் பார்வை செய்தியின் அடுத்த பத்திக்கு வழுக்கி சென்றது.
.
அந்த பெண் மணி வாழைப்பழம் சாப்பிட்டது குற்றமல்ல அதுவும் சாலையில் சாப்பிட்டதும் குற்றமல்ல தனது காரில் அமர்ந்து சாப்பிட்டதும் குற்றமல்ல பின் ஏன் இந்த அபராதம்?
அந்த பெண்மணி தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது வாழை ப்பழம் சாப்பிட்டார்களாம், அந்த நேரத்தில் அங்கு வந்த போக்கு வரத்து காவலர் பார்க்கும் போது தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தி வாழை பழத்தை சாப்பிட்டார்ககளாம்.
சரி வாழைப்பழத்தைசாப்பிட இரண்டு கைகள் பயன்படுத்தபடுவது சாதாரணம் தானே இதிலென்ன தவறு?
தவறு இரண்டு கைகளையும் பயன்படுத்தி வாழைப்பழம் சாப்பிட்டது இல்லை, அப்படி சாப்பிட்டபோது தான் ஓட்டி வந்த வாகனத்தின் ஸ்டியரிங்கில் ஒருகையும் இல்லாமல் போனதே இந்த அபராதத்திற்கான காரணமாம்.
அதற்கு அந்த பெண்மணி சொல்லும் விளக்கம், "நான் சாலை போக்கு வரத்து நெரிசலில் வாகனம் இயக்கப்படாமல் நின்றிருந்த சமயத்தில்தான் வாழைப்பழத்தை சாப்பிட இரண்டு கைகளையும் பயன்படுத்த நேர்ந்தது வண்டி செலுத்தபடாத நிலையில் , வாகனம் ஒரே இடத்தில் நிலையாக நின்றிருந்த சமயத்தில் என் இரண்டு கைகளையும் பயன்படுத்தி என் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் என்ன தவறு?, எத்தனயோ பேர்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே, என்னென்னவோவெல்லாம் செய்கின்றனர், முக ஒப்பனை செய்கின்றனர், முடி அலங்காரம் செய்கின்றனர்,உதட்டு சாயம் போடுகின்றனர்,கண் மை பூசிக்கொள்கின்றனர், இன்னும் சிலர் தொலை பேசிக்கொண்டோ , மடி கணினி பயன்படுத்திக்கொண்டோ, செல்பி எடுத்துக்கொண்டோ செல்லுகையில் தங்களது இரண்டு கைகளையும் பயன்படுத்துவதெல்லாம் உங்கள் பார்வைக்கு தெரிய வில்லையா?, போயும் போயும் ஒரு "ஒன்னேகால்னா" (ஒன்னேகால்னாஎல்லாம் இங்கே இருக்கா?) வாழைப்பழத்திற்குபோய் இத்தனை பெரிய அபராதம் ரொம்ம்ம்ம்....ப ஓவர். என்று .
ஆனாலும் காவல்துறை இந்த விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்க முன் வரவில்லை.
ஒருவேளை இந்தமாதிரி வேற யாரும் வாகனம் செலுத்தும்போது கவனக்குறைவாக இருக்க கூடாது , ஸ்டியரிங்கில் எப்பவும் ஒரு கையாவது இருக்கவேண்டும் என்கின்ற செய்தியை மற்ற வாகன ஓட்டிகளுக்கும் வாழை பழத்தில் ஊசிபோல சொல்ல நினைக்கின்றனரோ என்னமோ? ஆனால் அபராத தொகையை கேட்க்கும் போது வாழைப்பழத்தில் மயக்க ஊசி ஏற்றுவதாக தோன்றுகின்றது.
அவங்கள யாரு கேட்கிறது?
அவங்க சொல்லலனா என்னங்க பதிவை படிச்சுட்டு நீங்க சொல்லுங்க உங்க கருத்துக்களை நான் கேட்கிறேன்.
அதுக்குள்ளே பதிவை தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு நான் போய் ஒரு வாழைப்பழத்தை சாப்டுட்டு வந்துடறேன் எனக்கும் இரண்டு கைகள் தேவைபடுகின்றதே.
நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
எனக்கு மிகவும் பிடித்தது
பதிலளிநீக்குபச்சை வாழை ப்பழம் சார்.
ரொம்ப ஸ்வீட்டா இருக்கும்:-)
அது போல சட்டங்கள் இங்கும் கடுமையாக வந்தால்
நல்லா இருக்கும் சார்.
சாலை விபத்து கட்டுப்படுத்தலாம்.
மக்கள் மீது அக்கரை கொண்ட அரசு என்பதால்
வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவாக
யாரும் இருக்க கூடாது
என்ன்உம் செய்தி சொல்ல
அபராதம் விதிச்சிருப்பாய்ங்க:-)
மகேஷ், எனக்கு ரஸ்த்தாளி என்ற வகை வாழைப்பழம் பிடிக்கும், கூடவே நேந்திரம் என்று சொல்லப்படும் வாழைப்பழமும் பிடிக்கும், பொதுவாக எல்லா வகை வாழைப்பழங்களும் பிடித்தவைதான்.
நீக்குஉங்களுக்கு இந்த வாழை பற்றிய பதிவும் பிடித்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
கோ
இது ரொம்ப ரொம்ப அநியாயம்...!
பதிலளிநீக்குஅநியாயமாக தோன்றினாலும் அது பலருக்கு ஒரு பாடம்.
நீக்குவருகைக்கு மிக்க நன்றி தனப்பால்.
கோ
இங்க செல் போனனில் பேசிட்டே கார் ஓட்டறாங்களே சார்..
பதிலளிநீக்குபதிவு சுவையாய் இருந்தது.
God Bless YOu
"செல்"போன் பேசிக்கொண்டே காரை ஓட்டி"செல்"பவர்கள் தண்டனைபெற்று கொஞ்சம் நாள் "செல்"லில் இருந்தால்தான் நாம் "சொல்"லுகின்ற அறிவுரை கொஞ்சமாவது ஏறும் அவர்களின் "செல்"களில் என்று நினைக்கின்றேன்.
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
கோ
வாழைப் பழம் பற்றிய பதிவா அல்லது சமூக அக்கறைக்கான பதிவா என்று எண்ணத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குவாழைப் பழம் ஒரு மர்மமானது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விதைகள் இன்றி வளரும் இவை ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளிலும் விளைகின்றன. சரியான அளவில் உடலுக்குத் தேவையான சத்துடன் எவ்வாறு ஒரு பழம் உலகம் முழுவதும் பரவியிருக்க முடியும் என்ற கேள்வி காலம் காலமாக இருக்கிறது. முதல் வாழையை யாரவது நட்டு வைத்தால்தான் சாத்தியம் மற்றபடி காற்றில் போலான்கள் போல இவை பறந்து சென்று பல இடங்களில் பரவி இருக்க வாய்ப்பில்லை. எனவே இண்டெலிஜெண்ட் பிரீடிங் என்ற வகையில் இதை சில "வேற்றுகிரக வாசிகள்" நமது பூமியில் நட்டிருக்கலாம் என்ற கருத்து கூட உண்டு. வாழைப்பழத்தை ஏலியன் ப்ரூட் என்றே சிலர் அழைக்கிறார்கள்.
ராமாயணத்தில் கூட வாழைப்பழம் மேலுலகிலிருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்டதாக ஒரு குறிப்பு வருகிறது.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
பதிலளிநீக்குஇதெல்லாம் என்னங்க நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் தூங்கிட்டே வண்டி ஓட்டுவாரு...
அவரை எனக்கும் தெரியும், அவர் காரில் நானும் பயந்துகொண்டே "பய"ணம் செய்திருக்கின்றேன்.
நீக்குநீங்க நல்லா கண்ண திறந்துகொண்டு ஓட்டுங்கள் .
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
வளைகுடா பகுதியில் வாழ்கையில் .... நோம்பு வேளையில் நண்பர் ஒருவர் (இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தை சேர்ந்தவர்) நோம்பு நாட்கள் என்பதை மறந்து விட்டு பொது இடத்தில வாழைபழம் ஒன்றை விழுங்க,... கைது செய்யப்பட்டு, பின்னர் ஒரு மொட்டையும் அடிக்க பட்டு நோம்பு நாட்கள் முடிந்ததும் வெளியே அனுப்ப பட்டார்...
பதிலளிநீக்குநான் அவன் இல்லை.
என்ன காரிகன்.. வாழைபழம் வேறு கிரகவாசிகள் வைத்ததா...? இனிமேல் சாப்பிடவே பயமா இருக்கும் போல் இருக்கே...உருளை கிழங்கும் அப்படிதான் என்று சொல்லிவிடாதீர்கள்.
பதிலளிநீக்குகாரிகன் சொன்னா கரெக்ட்டாகத்தான் இருக்கும் நம்புங்க நண்பரே. உருளைக்கிழங்கின் வரலாறு வேறு, பயப்படாமல் சாப்பிடுங்கள். இங்கே ரசாயன கலவைகொண்டு உருவான பயிர்களைவிட ஏலியன் லோகத்து உணவுப்பொருள் நம்பகமானதாக இருக்கும் என நம்பி சாப்பிடுங்கள்.
நீக்குகோ
அரசருக்கு வணக்கம்,
பதிலளிநீக்குபூ பூக்கும், காய் காய்க்கும்,கனியாகும், இலைகள் உதிரா மரம் எது?
சரி சரி , பார்ப்பது புரிகிறது,
ஒரு வாழைப்பழம் சாப்பிட முடியாதா?
பயணம் இல்லாமல் ஓரத்தில் நிற்கும் போது இரண்டு கையும் அவரின் சொந்த வேலைக்கு பயன்படுத்தியது தவறா?
பயணம் எனின் சரி, சட்டத்தை கடுமையாக்கவோ,
வாழைப்பழத்தில் ஊசி சூப்பர்,
கதையா?
எனக்கு பழத்தைவிட தோல் பிடிக்கும்,
வாழைப்பழம் சாப்பிட இரண்டு கை வேண்டுமா?
சரி சாப்பிட்டு ஏப்பம் விட்டு, பின் தொடருங்கள், தொடர்கிறோம்.
நன்றி அரசரே,
காரிகனின் தூரிகைகொண்டு வரையப்பட்ட அனைத்து புதிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழைப்பழத்திற்கு இத்தனை சிறப்புகளா? இந்த உங்கள் பின்னூட்டம் பலருக்கும் ஒரு புதிய செய்தியை கூறும் என நம்புகின்றேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
நண்பரே வாழைப்பழத்தைப் பற்றி ஒரு தகவல் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. மோரிஸ் வகை பச்சை வாழைப்பழம். அதே போன்று மஞ்சள் வகையும் உண்டு. நல்ல நீளமாக, குண்டாக செழுமையாக. ஆனால் அந்த வகை பயொடெக் வாழைப்பழமாம்...அந்த வகையை அமெரிக்கா ஆப்பிரிக்க நாடுகளில் கட்டாயப்படுத்தி வளர்த்து வியாபார ரீதியாக பணம் ஈட்ட செய்து அது மற்ற நாடுகளுக்கும் பரவி அந்தப் பழம் பயோ டெக் பழம் அதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் என்று செய்தி வந்தது. அதனால் நாங்கள் இங்கு இந்தியாவில் அந்தப் அழத்தை வாங்குவதில்லை. பச்சைதான் பயோடெக் முறையில் மஞ்சள் பழமாக உருவாக்கப்பட்டுள்ளது...இப்போது சமீபத்தில் மோடி அரசு பயோடெக் விளை பொருட்களை ஆதரிப்பதாகச் செய்தி வரவும் எங்களுக்கும் பகீர் என்று தான் விசு அவர்கள் சொல்வதைப் போல் நாங்கள் பே அறைந்தது போல் ஆனோம்....
பதிலளிநீக்குநீண்ட இடைவெளி விட்டு வாழைப்பழ சீர் வரிசையுடன் வந்திருக்கும் உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கின்றது.
பதிலளிநீக்குஇங்கே எல்லாமே நீங்கள் சொல்லும் பழங்கள் போல் தான் உள்ளன. இனி உஷாராக இருக்கின்றேன்.
மீண்டும் உங்கள் வரவு மகிழ்ச்சி, மறந்துடாதீங்கோ.
கோ