பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

யாழ் இனிது!

இரவும் பகலும்.
நண்பர்களே,

குழலிசையும் யாழிசையும் இனிதுதான் என்றாலும் தொடர்ந்து கேட்கும்போது சில வேளைகளில் சலிப்பை ஏற்படுத்தக்கூடும்; அளவிற்கு மிஞ்சிய  அமிழ்தம்  போல.

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஊருக்குள்ளே பாலை நிலங்கள்!!

ரத்தக்கண்ணீர்.
நண்பர்களே,
பழந்தமிழக வாழ்வியலில்  நிலங்களின் தன்மைகள், அவற்றின் பயன்பாடுகள் அவற்றின் பூகோள அமைப்புகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு  , குறிஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல்  பாலை என ஐந்து   வகைகளாக பிரித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் நமது பெரியவர்கள்.

வெள்ளி, 31 ஜூலை, 2020

கண்கலங்கிய நெப்போலியன்!!

வரலாற்று உண்மை!!


நண்பர்களே,


எத்தனைதான், மாவீரனாக இருந்தாலும் , மனவலிமை பொருந்திய படைத்தலைவனாககூட  இருந்தாலும், நாட்டின் உயர்ந்த நிலையில் , அதிகார பலம் பொருந்தி இருந்தாலும் , உலகம் போற்றும் ஒப்பற்ற மக்கள்  தலைவனாக  இருந்தாலும், உலக ஞானம்  அனைத்தையும் கற்று தேர்ந்த
ஞானியாக இருந்தாலும்,பாகுபாடற்று அனைத்து மனிதருக்கும், அனைத்து
உயிருக்கும்  , வேதனை, வலி, வருத்தம்,இழப்பு,துக்கம், சந்தோஷம் என தமது  உணர்வுகளின் வெளிப்பாடாக தன்னையும் அறியாமல், கட்டுப்படுத்த முடியாமால்  கண்கள் உகுக்கும்  கண்ணீர் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

வியாழன், 30 ஜூலை, 2020

கூட்டத்திலே கோயில்புறா!!

ரீங்காரம்.
நண்பர்களே,

ஒவ்வொரு புதன் கிழமையும்  நிறுவனத்தின் எங்கள் கிளை அலுவலர்கள் மத்தியில் காலை 11.00 மணிக்கு  ஒரு மீட்டிங்  நடக்கும்  . இதில் முதன்மை தலைமை அலுவலர் முதல் அனைத்து மேலாளர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

செவ்வாய், 28 ஜூலை, 2020

"ஹனியும் சனியும்!!"

டார்லிங்! டார்லிங்!!டார்லிங்!!!
நண்பர்களே,

ஒவ்வொரு ஆண்டு அல்லது ஒவ்வொரு இரண்டாண்டுகள் அல்லது ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கொருமுறை  சில  குறிப்பிட்ட விஷயத்தின் மேம்படுத்தப்பட்ட விவரங்களை(updated version ) கற்று அதன் மீதான நமது அறிவை கட்டாயம் (mandatory)  பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது எமது வேலை நிறுவனத்தின் எழுதப்பட்ட சட்டம்.

வெள்ளி, 24 ஜூலை, 2020

"சரக்கு" Vs. சாக்லட்!!

சந்தோஷம்  - சங்கோஜம்.
நண்பர்களே,


அவசரமான, அசௌகரியமான  சில நாட்களில் வீட்டில் சமைத்து எடுத்த செல்ல முடியாமல் போகும் மத்திய உணவுக்குப்பதிலாக அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று தேவையானதை வாங்கி உண்பது வழக்கம்.


வியாழன், 23 ஜூலை, 2020

எலக்ட்ரிக் ஷாக்!!!

மறைந்திருந்து தாக்கும்  மர்மம்.
நண்பர்களே,

மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்புகளில் அரசு அங்கீகாரம் பெற்ற வல்லுநர்களையே நியமித்து பழுதுகளை சரிசெய்துகொள்ள வேண்டும். நாமாக எதையும் செய்து  விபரீதமானால் …. யாருக்கு நாட்டம்?