பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஒட்டும் உறவும்.!!

கொரோனா பழம்!!
நண்பர்களே,


உறவாக இருந்து வாழ்ந்துவரும்   இருவருக்கிடையில் சண்டையோ மன கசப்போ ஏற்பட்டால் அவர்கள் சொல்லிக்கொள்வது இனி நமக்குள் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதே.



ஆனால்  ஒட்டும் உறவும் எத்தனை நன்மை தருகின்றது என்பதை வேளாண்மை உலகம் நமக்கு உணர்த்துகின்றது.


தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியை விவசாயத்திலும் புகுத்தி பல ஒட்டு ரக பயிர்களையும் காய்கறி, பழங்களையும், பூக்களையும்  இந்த உலகம் நாளுக்கொன்றாக அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது.


இவை பெரும்பாலும் ஒரே இனத்திற்குள்ளுள்ள வேறு வகைகளை இணைத்து உருவாக்கப்படும் ஒட்டுரகங்களே.


அதாவது, மாம்பழம்  என்றால் ஒரு இனத்து  மாங்காய் செடியுடன் மற்ற  இனத்து  மாங்காய் செடியை இணைத்தும் , ஒரு இனத்து  நெல்லுடன் மற்றொரு இனத்து   நெல்லை இணைத்து உருவாக்குவதும், அதே போல  மற்ற பயிர்கள் காய்கறிகளையும் பழங்களையும் ஒட்டு போட்டு  வளர்த்து பயிராக்குவது வழக்கம்.


ஆனால் சமீபத்தில் இங்குள்ள ஒரு பல்பொருள் விற்பனை நிறுவனம் தங்கள் பண்ணையில் உருவாக்கி முதன் முதலாக விற்பனைக்கு கொண்டுவந்திருக்கும் ஒரு பழம் இருவேறு இனங்களை சார்ந்த இருவேறு தன்மைகளை கொண்ட பழங்களின் ஒட்டுவகை.


அதுவும் இந்த பழம் ஒரு லிமிடெட் எடிஷன் என்று விளம்பரம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு  வாங்கி சென்றனர்.
சரி இத்தனை விளம்பரம் செய்யப்பட்ட பழம் எப்படித்தான் இருக்கும்? வாங்கித்தான் பார்ப்போமே.


அந்த பழம், எலுமிச்சை செடியையும் முலாம் பழ செடியையும் இணைத்து ஒட்டு சேர்த்து வளர்க்கபட்ட பழம்.


அதன் வெளிப்புற  தோல் ஏறக்குறைய எலுமிச்சை பழ தோல்போல மஞ்சள் நிறத்திலும் அதே வழவழப்பாகவும் , உள்ளே முலாம் பழம்போன்றும் அதே சமயத்தில் கொஞ்சம் வெளிறிய  மஞ்சள் நிறத்திலும் அதன்  விதைகள் முலாம் பழ விதைகள் போலவும் இருந்தது.


சாப்பிட கொஞ்சம் இளம் புளிப்பும் அமிலத்தன்மை கலந்ததும் முலாம் பழத்தின் சுவையையும் சேர்ந்தாற்போல இருந்தது.  சாப்பிட நன்றாகத்தான் இருந்தது.


நிலவும் கோடை காலத்தில் நம்மஊரில் சொல்வதுபோல் எலுமிச்சை சாறு உடலுக்கு நல்லது அதே சமயத்தில் முலாம் பழம் தர்பூசணி போன்றவையும் உடல் சூட்டை தணிக்க வல்லது என்பதையும் நினைவில் கொண்டு ஒரே பழத்தில்  எலுமிச்சை மற்றும் முலாம் பழ கூறுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த  பழத்தின் பெயர் என்ன?


ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்து பேசுவதை விளையாட்டாக சொல்லும்போது தங்லீஷ் என்று சொல்வதுபோல் ,கழுதையும் புலியும் சேர்ந்தாற்போல் காட்சி அளிக்கும் மிருகத்தை கழுதைப்புலி என்று சொல்வதுபோல, வான் முகிலை கண்டு நர்த்தன நடனமாடும் மயிலும் காலையில்  விடியுமுன் கூவும் கோழியும் இணைந்ததுபோல்   காட்சி அளிக்கும்  பறவையை வான்கோழி என்றும்  அழைப்பதுபோல் எலுமிச்சையையும் முலாம் பழத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த பழத்தின் பெயர்: Lime + Melon = Limelon. அளவு என்னவோ முலாம் பழ அளவைவிட கொஞ்சம் பெரியதாக இருந்தது.


Image result for LimelonImage result for Limelon








இதுபோன்று அடுத்த கோடை காலத்தில் , என்னென்ன ஒட்டுக்கள் வந்து ஒட்டுமொத்த மக்களையும் ஈர்க்கபோகுமோ  தெரியவில்லை.


ஒருவேளை தர்பூசணியையும் முலாம் பழத்தையும் ஒட்டு சேர்த்தால் எப்படி இருக்கும்?


அதேபோல  பாகற்காயையும் கோவைக்காயையும் இணைத்தால் எப்படி இருக்கும்?


பொறுத்திருந்து பாப்போம் எதுவும் சாத்தியமே.


அதற்குமுன் கொரோனாவிற்கு இந்த ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து ஒரு மாற்று மருந்தை பழ ரூபத்தில் எந்த பழங்களோடேனும் ஒட்டுபோட்டு  தயாரித்து   மனித குலத்தை காப்பாற்ற  வேண்டும் என்ற எமது ஆசையையும்  இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தி  பதிவை நிறைவு செய்கிறேன்.


நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ

14 கருத்துகள்:

  1. கொரோனா பழம் என்றதும் என்னவாக இருக்கும் என்று பார்த்தால் புதுவகை பழம் எனத் தெரிங்கு கொள்ள முடிகிறது. புதிய பெயரில் பழம்.

    தகவலுக்கு மிக்க நன்றி கோயில்பிள்ளை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய தகவல் அறிந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே..

      நீக்கு
  2. தலைப்பைப் பார்த்ததும் ட்ராகன் பழத்தைத்தான் சொல்லப் போறீங்கன்னு நினைத்தேன் கோ. பார்த்தால் புதுசா இருக்கு.

    ஹனிட்யூ என்று ஒரு பழம் தர்பூஸ் போன்றே ஆனால் சன் செட் கலரில் உள்ளே அத்தனை விதைகள் இல்லாமல்இருந்தாலும் தர்பூஸ் பழத்தின் விதையைப் போன்று இருந்தது. நல்ல இனிப்பாகவும் இருந்தது. நீங்கள் போட்டிருக்கும் நிறம் வகையிலும் ஹனிட்யூ உண்டு அதைப் பற்றித்தான் சொல்கின்றீர்கள் என்று நினைத்தால் பெயர் வேறு.

    நான் சொல்லியிருப்பதும் மெலன் வகைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய தகவல் அறிந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி. ஹனிட்யூ பழம் குறித்த தங்கள் தகவல் எனக்கும் புதிதுதான்.வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய கீதா மேடம்...

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் எந்தன் ஆசை நிறைவேற வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

      நீக்கு
  4. ஒட்டு! இப்படியெல்லாம் செயற்கையாக உருவாக்குவது உகந்ததில்லை என்று தோன்றுகிறது! Limelon! என்ன ஒரு பெயர்!

    தீதுண்மிக்கு மருந்து - விரைவில் கண்டுபிடித்தால் நல்லதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவில் ஒட்டு இருப்பது நல்லதுதான் ஆனால் நீங்கள் சொல்வதுபோல் இயற்கையோடு போடப்படும் ஒட்டு நல்லதல்லதான். மருந்து வராமலா போகும்? பெரியம்மை , தொழு நோய் போன்றவற்றுக்கு மருந்து கண்டுபிடித்த மனிதகுலம் இதற்கும் ஒன்றை விரைவில் கண்டெடுக்க இறைவனின் உதவியை நாடுவோம். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அதுதான் இன்றைய ஒட்டுமொத்த உலகின் இன்றியமையாத எதிர்பார்ப்பு.

      வருகைக்கு மிக்க நன்றிகல் தனப்பால்.

      நீக்கு
  6. இந்த ஒட்டுச் செடிகள் பற்றி எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய செய்தி அறிந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா.

      நீக்கு
  7. இந்தப் பழத்தில் மேலோங்கி இருபிப்பது லெமனின் ருசியா?  முலாம்பழத்தின் ருசியா?!!

    பதிலளிநீக்கு
  8. இந்த பழத்தில் மேலோங்கி நிற்கும் சுவை, துல்லியமாக பகுத்தறிந்தால், மெலானின் சுவை என்றே கூறலாம். கூடுதல் தகவல்: இதன் விலை ஒன்று இந்திய மதிப்பில் 300.00 ரூபாய். வருகைக்கு மிக்க நன்றிகள் திரு. ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு