பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 ஜூன், 2020

தம்பிக்கு!! - 2

 என்ன ஆனது.? 
தொடர்கிறது.
முதல் பாகம் வாசிக்க  தம்பிக்கு.


தூய்மையான (நாகரீக) உடை, cufflink இணைத்த முழு கை  சட்டை , முழுநீள கால்சசட்டை , tuck செய்யப்பட்டு இடைகச்சை(belt)  கட்டிக்கொண்டு,பாலிஷ் செய்யப்பட்ட shoes அணிந்துகொண்டு, cooling  glasses  அணிந்து, நன்கு துடைத்து பளபளக்கும்  தன்னுடைய Hero Honda வில் ஒரு ஹீரோ போல வருவார். தினமுமிந்த தோற்றப்பொலிவில் துளியும் குறைந்திருக்காது.


வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது அவர் எப்படி என்பதை நேரில் அறிந்திருக்க எனக்கு வாய்ப்பில்லை.


ஆனால் வகுப்பிற்கு வெளியே, துறை  ஓய்வறையில், கல்லூரி வளாகத்தில், கல்லூரி விழாக்களில், கல்லூரி பொது  மேடைகளில், நண்பர்களோடு, சக ஆசிரியர்களோடு , மாணவர்களோடு, அவரது மனைவி பிள்ளைகளோடு அவர் உரையாடியது அத்தனையுமே, இலக்கண பிழையில்லா,தகுந்த வார்த்தைகள், தகுந்த phrases கொண்ட "நுனி நாக்கு" ஆங்கிலமே.


ஆங்கில பேராசிரியர்கள் கூட அத்தனை துல்லியமான ஆங்கிலத்தில் பாடம் நடத்தினார்களா? அல்லது மாணவர்களிடத்தில் ஆங்கிலத்திலேயே உரையாடினார்களா, அல்லது சக ஆசிரியர்களிடத்தில் ஆங்கிலத்தில் உரையாடி இருப்பார்களா என தெரியவில்லை.


அதே சமயத்தில் இவர் தமிழுக்கு எதிரானவரல்ல. தமிழாசிரியர் என்றால் தமிழில்தான் பேசவேண்டுமா?


ஆங்கிலம்  தெரியாத எவரிடத்தும் அவர் தமிழ் தவிர ஆங்கிலத்தில் பேச மாட்டார்.


அவரது சிந்தனை செயல் சொல் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.


இந்த பதிவின் முன் பகுதியில் சொன்னதுபோல் , அந்த கவியரங்கில்தான் நாங்கள்  இருவரும் அறிமுகமாகிக்கொண்டோம்.அன்றிலிருந்து அந்த வளாகத்தில் நான்  படித்த ஐந்து ஆண்டுகள் மட்டுமின்றி கல்லூரி  விட்டு வெளியில் வந்தபோதும் தொடர்ந்தது.


கல்லூரி நாட்களின் ஒரு வசந்த நாளில் அவரது வீட்டிற்கு என்னை வரும்படி அழைத்தார். அவர் கல்லூரி விடுதிகள் ஒன்றின் காப்பாளராகவும்(வார்டன்) இருந்ததினால், விடுதி வளாகத்திலேயே அவரது வீடும் அமைந்திருந்தது.


மகிழ்ச்சியுடன் சென்றேன், அன்போடு வரவேற்று அமர சொல்லிவிட்டு அவரது மருத்துவ மனைவிக்கு(doctor Wife ) என்னை அறிமுகம்  செய்து வைத்தார் , ஓ... அவர்தானா நீங்கள் , உங்களை பற்றி சொல்லி யிருக்கின்றார், என சொல்லிவிட்டு தேநீர் மற்றும் காரவ வகைகளை கொண்டுவந்து வைத்துவிட்டு என்னை பற்றியும்  நான் படித்த பள்ளிக்கூடம், என் பெற்றோர்  குடும்பம் பற்றியெல்லாம்  பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது ஆசிரியர் உள்ளே சென்று உடை மாற்றிக்கொண்டு வந்தார். சாப்பிடுங்க என்றார் ஆங்கிலத்தில்.


பிறகு அவர் சொன்னார் அவரை பற்றியும் அவரது குடும்பத்தாரை பற்றியும், மிக மிக அழகிய தமிழில் , கவியரங்கத்திற்கு பிறகு அன்றுதான் கேட்டேன் அவர் அழகு தமிழில் உரையாடியதை.


அப்போதுதான் நான் கேட்டேன் ஒரு தமிழாசிரியராக இருந்துகொண்டு  ஏன் எல்லோரிடமும் ஆங்கிலத்தில் பேசுகின்றீகள் என்று.


அவர் சொன்ன பதில் , தமிழ் குடும்பம்தான் ஆனால்  பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திர மாநிலம் , கல்லூரி இளங்கலை வரை ஆங்கில வழி. முதுகலை முதல் phd வரை  தமிழ் மொழியை பாடமாக கொண்டு படித்தேன்.


பணி யின் நிமித்தம் தமிழ்நாடு வந்த எனக்கு இங்கே பலரும் ஆங்கிலம் கலந்தே தமிழில் உரையாடுகின்றனர். முழுக்க முழுக்க தமிழில் பேசும் ஆட்களை பார்க்க முடியவில்லை. என்னை பொறுத்தவரை இது தமிழுக்கு செய்யும் பெரும் அவமரியாதையாகவே கருதினேன்.


அரை குறையாக ஒரு மொழியை பேசுவதையும் அதில் பிற மொழி கலந்து பேசுவதையும் நான் விரும்பவில்லை, அதே சமயத்தில் தூய தமிழில் பேசினாலும் இங்கே பெரும்பாலும் நகைக்கிறவர்களாகவே இருக்கின்றனர். அதே சமயத்தில் நாம் யாரிடம் ஆங்கிலத்தில் பேசுகின்றோமோ அவர்கள் தங்களை குறித்து மேன்மையாகவும் நினைத்துக்கொள்கின்றனர்.


எனவே பிற மொழி கலவாமல் ஆங்கிலத்திலேயே, வகுப்பறை தவிர ஏனைய இடங்களில் பேச முடிவு  செய்தேன் என்றார்.


ஞாயமான முடிவுதானோ?


பல விஷயங்கள் குறித்து பேசினார், அதில் பிரதானமாக படிப்பையும் எதிர்காலத்தியும் குறித்து.


அவர் சொல்வது மிக மிக நுட்பமான விவரங்களாக எனக்கு தோன்றியது.


பின்னர் அவர் சொன்னார், இன்றைய இளைஞர்களின் நலன் கருதி ஒரு புத்தகம் எழுதவேண்டும் தமிழில் என நினைக்கின்றேன்.


நல்லது சீக்கிரம் செய்யுங்கள்.


ஆனால் அதன் ஆசிரியர்  ஒருவரல்ல இருவர்.


யார் அந்த வேறொருவர், எந்த பேராசிரியர்?


பேராசிரியர் அல்ல… நீங்கள்தான்.


என்ன சொல்கின்றீர்கள்.


ஆமாம் நாம் இருவரும் சேர்ந்துதான் எழுதப்போகிறோம்.


அதாவது நீங்கள் என் தம்பி, நான் உங்கள் அண்ணன் .


நீங்கள் வீட்டை விட்டு தூரத்து நகரத்திலுள்ள விடுதியில் தங்கி படிக்கின்றீர்கள். உங்களுக்கு நான் வாரம் ஒருமுறை கடிதம் எழுதும்போது அதில் அப்போதைய இளைஞர்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகள் குறித்து எழுதுவேன் , அதை படித்துவிட்டு, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் உங்கள் கருத்து என்ன என்பதை  பதிலாக எனக்கு எழுதுவீர்கள் அதை தொடர்ந்து அந்த பிரச்சனைக்கு எந்தெந்த விதங்களில் தீர்வுகள் காண முடியும் என எழுதி முடிப்போம்.


அதே போல அடுத்த வாரத்தில் வேறொரு கடிதம் வேறொரு சமூக நிகழ்வு வேறொரு பதில்  .. இப்படியாக அமையும் அந்த புத்தகம்.


இருவரும்  ஒரே இடத்தில் அமர்ந்து விவாதித்து எழுதலாம் என்ன சொல்கின்றீர்கள்  என கேட்டார்.


வியப்பாக இருந்தது என்னுடைய கருத்தும் புத்தகமாக வெளிவரப்போகிறதா?
ஆமாம், வாரத்திற்கு ஒரு சில மணிநேரம் மட்டுமே ஒதுக்கினால் போதும், படிப்பு பாதிக்காதவகையில் என்றர்.
 சரி புத்திகத்தின் தலைப்பு என்ன?
"தம்பிக்கு"


அடுத்த இரண்டு வாரங்கள் கல்லூரிக்கு விடுமுறை எனவே தாம் தமது சொந்த ஊருக்கு  செல்வதாகவும் திரும்பியவுடன் மீண்டும் அமர்ந்து பேசி தீர்க்கமான முடிவு எடுக்கலாம் என கூறினார்.


அன்றைய  சந்திப்பு அத்துடன் முடிந்தது.

மீண்டும் விடுமுறை கழிந்து வந்த பிறகு என்ன நடந்தது, நாளை சொல்கிறேன், இல்லையேல் பதிவு நீண்டுகொண்டே போகும்.

அதுவரை

 நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.

12 கருத்துகள்:

  1. அடுத்து என்ன? தெரிந்து கொள்ள, காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      வருகைக்கும் காத்திருப்பிற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. ஆஹா

    நீங்க கல்லூரி படிக்கும் போதே புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்ததை வாசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிரது.

    ஆமாம் அடுத்து என்ன ஆச்சு?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மகேஷ் சிறப்பான வாய்ப்பு கைநழுவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலும் மகிழ்சியும் அப்போது நிறைய இருந்தது. அடுத்தது என்ன , பொறுத்திருந்து பாருங்கள்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. அவருக்கு நம் மொழியின் மீதான ஆர்வம் கண்டு வியந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நஸ்காரங்கள்,

      ஆமாம் என்னதான் அவர் ஆங்கிலத்தில் பேசிவந்தாலும் அவரின் தமிழ் மொழிப்பற்று அளப்பரியது.

      வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  4. பதிவு சுவாரசியமாக செல்கிறது ஐய்யா. அப்ப தம்பிக்கு என்ற ஒறு புத்தகம் வெளி வந்திருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த்.

      தம்பிக்கு என்ற புத்தகம் வெளி வந்ததா என தம்பி அரவிந்துக்கு விரைவில் சொல்கிறேன்.

      வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. ஆஹா நல்ல விஷயம் பேராசிரியருடன் சேர்ந்து எழுதுவது என்பது. அப்புறம் என்னா ஆச்சு என்பதை அறிய தொடர்கிறோம்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      இதுபோன்ற பாக்கியம் வாய்த்தவர்கள் நிறையபேர் இருக்க மாட்டார்கள், தொடர்ந்து என்ன நடந்தது என்பதை விரைவில் சொல்லுகிறேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  6. நல்லதொரு மாறுபட்ட சிந்தனை இதை செயலாக்கினீர்களா... என்பதை அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே,

    மாறுபட்ட சிந்தனையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி,திட்டம் செயலாக்கப்பட்டதா , பொறுத்திருந்து பாருங்கள் சாரி வாசியுங்கள்.

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு