பின்பற்றுபவர்கள்

வியாழன், 21 ஜூலை, 2016

கவுண்டமணி - வைரமுத்து

"அப்போ செந்தில்....? "
நண்பர்களே,

பல வருடங்களாக நம் தமிழ் மண்ணில் பல விதமான வழக்கு சொற்கள் புதிதாக உலாவந்துகொண்டிருக்கின்றன.

அவற்றுள் பெரும்பான்மையான சொற்கள் எல்லா பிராந்தியங்களில் பயன்படுத்தும் சொற்களாக இருப்பதில்லை.

குறிப்பாக  இந்த பதிவில் சொல்லப்போகும்  சொற்றோடர் நான் வளர்ந்த பிராந்தியத்திற்கு முற்றிலும்  அந்நியமானது.

முதலில் கேட்ட இந்த வார்த்தைகள் எனக்கு  கெட்ட வார்த்தைகளோ என்ற அச்சத்தை கொடுத்தது.

நாளடைவில்  திரை படங்களிலும் , தொலைக்காட்ச்சி நாடகங்களிலும், மேடை நிகழ்ச்சிகளிலும், மேடை பேச்சுகளிலும் இந்த சொற்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் இது கெட்ட வார்த்தை இல்லை என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்தேன்.

பெரும்பாலான கவுண்ட மணி படங்களில் நீங்களும் இந்த வார்த்தைகளை  கேட்க நேர்ந்திருக்கும்.

எனினும் இதன் அர்த்தம் தெரியாமல்தான் கொஞ்சம் காலம்  வரை இருந்தேன்.

ஆனால்  சமீபத்தில்தான், ஒருவேளை, இதன் அர்த்தம் இதுதானோ என ஓரளவிற்கு புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

ஊரில் நண்பரோடு  காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவர் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பாடலை நானும் கேட்டுக்கொண்டே பயணித்தேன்.

அந்த பாடலின் ராகமும் , அதன் பின்னணி இசையும்  என்னை ஏகமாய் ரசிக்க வைத்தது.

அப்படி ரசிக்க வைத்த இசையினூடாய் ஒலிக்கும்  வரிகள் என்னவாயிருக்கும் என கொஞ்சம் பாடல் வரிகளில் கவனம் செலுத்தியவண்ணம் பயணத்தை தொடர்ந்தேன்

பாதி பாடல் ஒலிக்கும்போதே அதை கொஞ்சம் ரீ வைண்டு செய்ய சொன்னேன், நண்பரும் ஏனென்று கேட்க்காமல்  ரீ வைண்டு செய்தார், மீண்டும் அந்த குறிப்பிட்ட வரிகள் ஒலித்த இடம் வந்தவுடன் மீண்டும்  ரீ வைண்டு செய்ய சொன்னேன், அவரும் இப்படியே பல முறை சலிக்காமல் செய்துகொண்டிருந்தார்.

இப்படி மீண்டும் மீண்டும் கேட்ட அந்த பாடல் வரிகள்தான் இத்தனை நாட்களாக அர்த்தம் தெரியாமல் கேட்டு கொண்டிருந்த அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிய வைத்தது.

அவை  என்ன வார்த்தைகள்?  அது என்ன பாடல்?

நீங்களும் கேட்டுப்பாருங்களேன்  புரியும்.




இப்போ புரிந்து  இருக்குமே?.

ஏறக்குறைய 5.00 நிமிடங்கள் ஒலிக்கும் இந்த பாடலில் 3:43 நிமிடத்தில் இருந்து 3:51 ஆம் நிமிடம்வரை ஒலிக்கும் அந்த வரிகள்தான் எனக்கு அந்த வார்த்தைகளின்  முழுமையான அர்த்தத்தை புரியவைத்தது.

அதாவது மீனுக்கு ஏங்கும்  கொக்கு அதை சரியா கொத்தனும் அப்படி சரியாக கொத்த தெரியவில்லை என்றால் அது கொக்கு அல்ல மக்கு.

எனவே ஒருவன் திறமையானவனா இல்லையா என்பதை கேட்பதாக சொல்லப்படுவதாகத்தான் இந்த சொற்கள் எனக்கு புரிந்தது.

அதாவது நீ,  ஓட(ஓடை)மீன் ஓட உரு மீன் வரும்போது  சரியாக கொத்த தெரிந்த கொக்கா? அல்லது வாய்ப்புகள் வலிய வந்து வசமாக வாய்த்தபோதும்  சரியாககொத்த தெரியாது மீனை ஓட விட்ட மக்கா?

  "கொக்கா மக்கா?"

நடிகர்  கவுண்ட மணி சொல்லி வந்த அந்த வார்த்தைகளுக்கு பல வருடங்கள் கழித்து கவிஞர் வைரமுத்துவிடம் இருந்து  விளக்கம் கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

சரியாகத்தானே கொத்தி இருக்கின்றேன் அர்த்தத்தை?

இப்போ சொல்லுங்க நான் கொக்கா இல்ல........

(பின் குறிப்பு :கவிஞர்  வைரமுத்துவிற்கே கூட  இந்த விளக்கம் கொஞ்சம் புதிதாகத்தான் இருக்குமோ?)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


12 கருத்துகள்:

  1. நீங்க சரியானகொக்குத்தான் மக்கா))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா, ரொம்ப நாளா இந்தப்பக்கமே காணலே? வருகைக்கும் தங்கள் சான்றிதழுக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. ஆஹா இதுல இவ்வளவு விஷயம் இருக்கா. விளக்கம் சூப்பர். நீங்க மக்கு இல்ல கொக்குதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூங்கில் காற்றின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. அது அக்காவின் மக்களை (மகனை) குறித்து என்று நினைத்திருந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      இன்றுமுதல் உங்கள் நினைப்பை மாற்றிகொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. நல்ல ஆராய்ச்சிதான் போங்க!

    மக்கா நீங்க கொக்கு மக்கா...கொக்கு....நல்ல காலம் கோக்கு மாக்கா யோசிக்காமல் ஆராயாமல் "கோ"வாக யோசித்திருக்கீங்க நீங்க!!ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      நான் கொக்குதான் என்பதை உலக மக்களுக்கு எடுத்தியம்பிய உங்கள் சேவை பாராட்டிற்குரியது.

      "கோக்கு" - COKE பற்றி இன்னும் ஆராய்ச்சி துவங்கவில்லை.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  5. வணக்கம் அரசே,

    இந்த வரிகளுக்கு நானும் இப்படி தான் பொருள் கொண்டேன். தாங்கள் நல்ல ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.நல்ல விளக்கம் தான்.
    பின்குறிப்பு ,, உண்மை தான்,, அவருக்கு நிச்சயம் இதன் பொருள் ,,,,,
    இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம்.

    நலம் தானே அரசே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வருகைக்கு மிக்க நன்றி.

      அதெப்படி நீங்களும் இவ்வாறே பொருள்கொண்டது.

      ஓ..... நீங்களும் கொக்குதானோ?

      கோ

      நீக்கு
  6. //பெரும்பான்மையான சொற்கள் எல்லா ''பிராந்தி''யங்களில் பயன்படுத்தும் சொற்களாக இருப்பதில்லை//

    நண்பரே இந்த வரிகளை படிக்கும் போது என்னையறியாமல் ''போதை'' ஏறி விட்டது.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே,

    "போதை"யுடன் வருகை தந்த உங்கள் "பேதை" உள்ளத்திற்கு என் நன்றியும் வணக்கங்களும்.

    கோ

    பதிலளிநீக்கு