பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகா.!!

மணக்குமா?  இனிக்குமா?

நண்பர்களே,

இது என்ன தலைப்பு?

மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றுதானே கேட்டிருக்கின்றோம்.

சரிதாங்க, நானும் மல்லிகை என்றுதான் சில நாட்கள் வரை கேட்டிருந்தேன்.

ஆனால் சமீபத்தில் ஊருக்கு சென்றபோதுதான் இந்த மல்லிகாவை குறித்து அறிந்து சுவைத்தேன்.

என்ன சுவைத்துகூட விட்டீரா?

ஆமாங்க.

இப்போ நம்ம ஊரில் சரியான மாங்காய் சீசன் என்பது நாம் அறிந்ததே.

 இந்த வருடம் சந்தைக்கு வந்த மாங்காய்களில் ஒருவகை மாங்காய்க்குத்தான் இப்படி பெயர் வைத்துள்ளனர்.  மல்லிகா என்று.

(இது வேற ரகம் - ஒருவேளை கனகவோ?)
.
சுவைமிக்க அந்த மாம்பழம்  நண்பரின் தோட்டத்தில் இருந்து  கொண்டு கொடுக்கப்பட்டது.  

எந்த மானுடனும் இதுவரை கண்டிராத சுவைகொண்ட இந்த மாம்பழத்தின் சுவையினை தேனுடன் தான்  ஒப்பிட வேண்டும் அத்தனை இனிப்பு.

மல்கோவா மாம்பழத்தை விட மூன்று மடங்கு பெரிது.

ஒரு பழத்தை துண்டுதுண்டுகளாக அரிந்தால் குறைந்த பட்சம் பத்துபேர் வரை சுவைக்கலாம் இந்த மல்லிகாவை.

அதன் விதையும்  மிக மிக தட்டையாகவே உள்ளதால் சதை பிடிப்பு  அதிகம்.

ஊரில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்து அரிசி மூட்டையில் வைத்து பழுக்க வைத்து பதம் பார்த்தோம்.  ஆஹா.... என்னே சுவை.

வேண்டுமென்றால் கண்டுபிடித்து சுவைத்துப்பாருங்கள் மல்லிகாவை.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

14 கருத்துகள்:

  1. இந்தப்பதிவை படித்ததும் எனக்கு மல்லிகாவின் நினைவு வந்து விட்டது ஹூம் அது ஒரு கனாக்காலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா,

      வருகைக்கு மிக்க நன்றி, அதே சமயத்தில் உங்களை ஏக்க பெருமூச்சு விட செய்தமைக்கு வருந்துகிறேன்.

      ஹும்.... அதற்கெல்லாம் நமக்கு... சாரி உங்களுக்கு கொடுப்பணை இல்லை போலும், எனவே இப்போதைக்கு மல்லிகா மாங்காயை நினைத்து ஆறுதல் அடையுங்கள்.

      கோ

      நீக்கு
  2. உங்களுடன் சேர்ந்து ருசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா,

      மிக்க நன்றி , தங்களின் வருகைக்கும் , மகிழ்ச்சிக்கும்.

      கோ

      நீக்கு
  3. மாங்காய்க்கு இப்படி ஒரு பெயரா? உத்திரப் பிரதேசத்தில் ஒரு மாங்காய்க்கு தோத்தா பரி எனப் பெயர்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      ஆமாம் நான் கூட முதலில் உங்களைப்போல்தான் வியந்தேன்.

      தோத்தாபரி எப்படி?

      கோ

      நீக்கு

  4. ஊரில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்து அரிசி மூட்டையில் வைத்து பழுக்க வைத்து பதம் பார்த்தோம். ஆஹா.... என்னே சுவை.//// எது... எது...
    மல்லிகா-மாங்கவா:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்

      மல்லிகா மாங்காய்யைத்தான், வேறென்னத்தை அரிசிமூட்டையில் பதுக்கி வைக்க முடியும்?

      ஜொள்ளு வழியுது கொஞ்சம் தொடச்சிக்கப்பா.

      கோ

      நீக்கு
  5. முழு பூசணியை சோற்றிற்குள் மறைப்பது போல் மல்லிகாவை அரிசி மூட்டைக்குள் புதைக்க முடியாதா என்ன? சரிதானே கோ??!!!! அட நாங்க மாங்காயைத்தான் சொன்னோங்க....தப்புத் தப்பா எல்லாம் சொல்ல மாட்டோம்.

    மல்லிகா பெயரே ரொம்ப வியப்புதான்... கடையில் சென்று மல்லிகா ஒரு கிலோ கொடுங்கனு கேக்க முடியாதோ?!!! மல்கோவா ஒரு கிலோ கொடுங்கனு கேட்பது போல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      நீங்க தப்பா சொல்ல மாட்டீங்கனு இந்த உலகத்திற்கே தெரியுமே.
      நீங்க மாங்காயைத்தான் சொன்னீர்கள் என்பதை நம்புகிறேன்.

      கோ

      நீக்கு
  6. மல்லிகா தங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சியே,,,

    மாம்பழம் தான் அரசே,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு, வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு