கேட்கிறதா?
நண்பர்களே,
நாம் யாரிடமாவது ஏதாவது அல்லது முக்கியமானதாக நாம் கருதும் ஒரு செய்தியை சொல்லும்போது அதை அவர்கள் உன்னிப்பாக கேட்கவேண்டும் என்று நினைப்போம்.
கேட்பது மட்டுமின்றி அதற்கேற்ப மறுமொழியை, வாய் மொழியாகவோ, உடல் மொழியாகவோ அங்கீகரிக்க வேண்டும் என்றும் நினைப்போம்.
சில வேளைகளில் கடிதங்கள், ஈமெயில் , வாட்ஸ் அப் எஸ் எம் எஸ் மூலமாகக்கூட நாம் சிலரோடு தொடர்புகொள்வோம் அப்போதும் அந்த தகவல் சென்றடைந்ததற்கு ஒரு பதிலையோ அல்லது ஒரு சமிக்ஞயையோ எதிர்பார்ப்போம்.
இதுபோன்று நாம் செய்யும் தகவல் தொடர்பு செயல்களை சம்பந்தப்பட்டவர், கேட்டும் கேட்காததுபோல் இருந்தாலோ, அல்லது பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாலோ அதற்கு அடிப்படியில் பல அர்த்தங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு பேச்சை நிறுத்துவது நல்லது.
அதாவது நாம் பேசும் பேச்சு அல்லது நமது கருத்து, அல்லது நமது எண்ணம் கேட்பவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை, ஒத்துக்கொள்ளும்படி இல்லை,அல்லது சொல்லபடும் செய்தியில் விருப்பம் இல்லை, உடன்பாடு இல்லை எனவேதான் அவர்கள் மறுமொழி சொல்லாமல் இருக்கின்றனர் என்ற அடிப்படையான உண்மையை புரிந்து நாம் நம் வாய் மூடிக்கொள்வதே அறிவுடைமை ஆகும்.
சரி நாம் சொல்லும் விஷயங்கள் செய்திகளில் கேட்பவருக்கு விருப்பம் இல்லை என்றாலோ, உடன்பாடு இல்லை என்றாலோ அதை வாய் திறந்தோ அல்லது வேறு விதங்களிலோ சொல்லலாமே என்று நினைப்போம், ஆனால் அப்படி அவர்கள் மறுமொழி கூற நேர்ந்தால் அது ஒரு பெரிய வாக்குவாதத்திற்கு வித்திடுமோ என்ற அச்சமும்கூட அப்படி பதில் சொல்லாமல் போவதற்கு காரணமாக இருக்கும்.
ஒருவேளை, இதை பற்றி ஏற்கனவே பலமுறை விவாதித்து சலிப்பு ஏற்பட்ட ஒரு செய்தியை மீண்டும் சொல்வதால்கூட அல்லது இதை பற்றி இனி ஒருபோதும் என்னிடம் சொல்லாதே என்று ஏற்கனவே பல முறைசொல்லப்பட்ட விஷயமாக இருக்கும் பட்சத்திலும் பதில் கூறாமல் அதற்கு செவி சாய்க்க விருப்பம் இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் கண்டிப்பாக இந்த மௌனத்தை சம்பந்தம் என்று அர்த்தப்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் அன்று.
நண்பர்களாகவோ, உறவினராகவோ இருப்பவர்கள் அடுத்தவரின் குணங்களை புரிந்துகொண்டு அவர்களின் ஞாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேவையற்ற வார்த்தைகளையும் வேண்டாம் என்று நிராகரிக்கப்பட்ட விஷயங்களையோ மீண்டும் மீண்டும் சொல்வதாலோ செய்வதாலோ வீணான மன வருத்தத்திற்கு ஆளாக்கக்கூடும்.
அதாவது நான் சொல்ல சொல்ல நீங்கள் அமைதியாக இருக்கின்றீர்களே என்று சொல்பவரும் நான் வேண்டாம் என்று சொன்னதை நீதான் தேவை இல்லாமல் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கின்றாய் என்று கேட்பவரும் நினைத்தால் நட்பும் உறவும் விரிசலடைவதோடு பிளவும் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.
சிலர் இதற்கென்றே ரூம் போட்டோ அல்லது விடுப்பு போட்டோ கூட யோசிப்பார்களோ - எப்படி அடுத்தவரை எரிச்சலடைய வைப்பது என்று.
நண்பர்களாக இருந்தாலும் குடும்ப உறவினர்களாக இருந்தாலும் தேவையானவற்றை மட்டும் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத்தரும் பொதுவான வேறு விஷயங்களை பற்றி மட்டும் பேசுவதும் சம்பாஷிப்பதும் நட்பிலும் உறவிலும் ஒரு ஆரோக்கிய வளர்ச்சியையும் வலுவையும் ஏற்படுத்தும் .
சில நேரங்களில் என்னிடம் இதுபோன்று எனக்கு பிடிக்காத விஷயங்களை யாரேனும் பேசினாலோ அல்லது எழுதினாலோ நான் பதிலளிப்பதில்லை மாறாக அந்த இடம் விட்டு வெளியேறிவிடுவது எனது பாலிசி.(நல்ல பாலிசிதானே?)
சரி இதற்கும் தலைப்பிற்கு என்ன முடிச்சி?
அதாங்க, தேவை இல்லாத விஷயங்களை தேவை இல்லாமல் தேவையற்றவர்களிடம் பேசுவது என்பதும் இதுபோன்ற சில நல்ல(??!!) அறிவுரைகள் கூட சில நேரங்களில் இப்படி போவதுண்டு - செவிடர் காதில் ஊதிய சங்கு போலவும் பொக்கை வாயருக்கு கொடுத்த நுங்குபோலவும் என்பதை சொல்லத்தான் இந்த தலைப்பு.
இனியேனும் அடுத்தவரின் முகமும் அகமும் கோணாத செய்திகளால்- அளவான பேச்சுகளாலும் உறவை பலப்படுத்துவோம்; கும்பிடற சாமிதான் நமக்கு நல்ல புத்திய கொடுக்கணும்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்கு,,,,,,,,,,,,,,,
சிலர் இதற்கென்றே ரூம் போட்டோ அல்லது விடுப்பு போட்டோ கூட யோசிப்பார்களோ - எப்படி அடுத்தவரை எரிச்சலடைய வைப்பது என்று.,,,,,,,,,,,,,,,
அவர்கள் சொல்லும் போதே வேண்டாம் என்று நாம் முடித்துக்கொள்வது நல்லது தானே. அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு, அவர்களை நாம் குறைசொல்விதில் ஞாயம் இல்லையே. அப்படி உள்ளவர்களிடம் என்ன உறவு நமக்கு. அரசே தங்கள் கருத்தோடு என்னால் உடன்படடுடியவில்லை...
நன்றி.
பய்னுள்ளச் செய்தியைச் சொல்லிப் போகும்
பதிலளிநீக்குபதிவு மனம் கவர்ந்தது
ஒருவர் பொறுமை
இருவர் நட்பு எனச் சொல்வது கூட
இந்தக் கருத்தை ஒட்டியதுதானே
ஐயா அவ்ரகளுக்கு வணக்கம்.,
நீக்குதங்களின் மனம் கவரும் விதத்தில் எமது பதிவு அமைந்ததாக தாங்கள் சொல்வதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஒருவர் பொறுமை இருவர் நட்பு , நல்ல சொற்றோடர்.
நன்றி.
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குநல்ல பாலிதான். இதில் எங்க கும்பிடற சாமி வந்தது??
அளவான பேச்சு, ரொம்ப நல்ல விடயம். பகிர்வுக்கு நன்றி.
பேராசிரியருக்கு,
நீக்குவருகைக்கு மிக்க நன்றிகள்.
மனுஷ பயல்கள் சொல்றது கேட்கவில்லையென்றால் அவர்களுக்கு கடவுள்தான் நல்ல புத்திய கொடுக்கணும் என்கின்ற அடிப்படியில் இறை பக்தி இருந்து தினமும் இல்லையென்றாலும் வாரம் ஒருமுறை சாமிகும்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு அவர்கள் வணங்கும் சாமிதான் நல்ல புத்தி கொடுக்கணும் என் சொல்ல நினைத்து எழுதியது.
உங்களுக்கு இறை நம்பிக்கையும் (பய) பக்தியம் உண்டா?
கோ
மன்னிக்க பாலிசி என்று வாசிக்கவும்
நீக்குஎனக்கு மேல் உள்ள சக்தி தான் இறை,,,
நல்ல பதிவு. கோ
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றிகள்.
நீக்குகோ