பின்பற்றுபவர்கள்

புதன், 20 ஜூலை, 2016

இரண்டே இரண்டு கண்ணே கண்ணு.

கண்ணும் கருத்தும்.

நண்பர்களே,

"ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு" என்று பலரும் பலமுறை சொல்லியும் இருப்போம்  சொல்லவும் கேட்டிருப்போம்.
அப்படி என்றால் என்ன?

சிலர் தங்களுக்கிருந்த/இருக்கின்ற ஒரே ஒரு சிறந்த பொருளை, அல்லது மதிப்பு மிக்க ஒன்றை குறித்து சொல்லும் போது எனக்கு இருப்பது இது ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு என்றும் , அன்பான மகனோ அல்லது மகளோ  ஒருவர் மட்டும் இருப்பாரேயானால் அவர்களின் பெற்றோர்கள் தமக்கிருப்பது ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு என்று சொல்வார்கள்.

ஒண்ணே ஒன்னு சரி... ஆனால் கண்ணே கண்ணு என்பது எப்படி சரியாகும் என்று யோசித்து பார்த்தபோது அது சரியாகத்தோன்றுகின்றது .

அதாவது  ஒன்று என்பதை ஒன்றோடுதானே உருவாகப் படுத்த முடியும் . ஒன்று எனும் அந்த மகனையோ,  மகளையோ, பேரனையோ, பேத்தியையோ, மனைவியையோ, கணவனையோ, காதலியையோ , காதலனையோ நண்பனையோ தோழியையோ அல்லது சிறந்ததாக கருதப்படும் பொருளையோ இரண்டு கண்களுக்கு ஒப்புமை படுத்த முடியாதுதான்.

அப்படி செய்தால்  இங்கே ஒருமை பன்மை எனும் இலக்கண பிழை ஏற்படும் என்பது தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் இலக்கணத்தில் பாண்டியாடும் தமிழறிஞர்களுக்கு(??!!) தெரியும்.

ஆனால் இந்த பதிவில் தலைப்பு , "இரண்டே இரண்டு கண்ணே கண்ணு" என்றிப்பது ஏன் -இங்கும் சொற்பிழை , பொருட்பிழை, இலக்கணபிழை உண்டல்லவா?

இந்த இடத்தில் கண்ணு என்பது முகத்தில் இருக்கும் கண்ணை சொல்லவில்லை.  

கண் வைத்து விட்டார்கள் , கண்  பட்டு விட்டது, என்று சொல்லும் வரிசையில் , யாருக்காவது திருஷ்டி சுற்றிப்போடும்போது வரிசையாக வருமே  ... நல்ல கண்ணு, நொள்ளக்கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு...பேய் கண்ணு பிசாசுகன்னு....ஊர் கண்ணு, உறவு கண்ணு...அந்த கண்ணைத்தான் சொல்கிறேன்.

ஏன் என்னாச்சி பதிவு பாதையை புரிந்துகொள்ளமுடியலையே?

அது ஒன்னு மில்லைங்க.

நான் பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து உலகில் உள்ள ஏழு கண்டங்களில் இருந்தும் என் பதிவுகளை கோடிக்கணக்கானவர்கள் (கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா அடஜஸ்ட்  பண்ணிக்கோங்க  - நான் கணக்குல கொஞ்சம் வீக்கு), படித்து ரசித்து(!!) வருவது எனக்கு தெரியும்.

ஆனால் இத்தனை கோடி மக்களுள் அவ்வப்போது ஒரு சிலர் தங்களின் உணர்வுகளை அடக்க முடியாமல் எப்படியும் என்னை பாராட்டியே தீரவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் எனக்கு நிறைய பின்னூட்டங்களும் பாராட்டு கடிதங்களும் அனுப்பவதுண்டு.(ஆனால் நான் ஒரு சிலவற்றை மட்டுமே வெளியிடுவேன் - உண்மைதான் நம்புங்க)

அப்படி பாராட்டை தெரிவிக்கும் ஆண் வாசகர்களின் எண்ணிக்கையை எவ்வளோவோ முயற்சி செய்து ஒரு கட்டுக்குள்  வைத்திருக்கின்ற அதே சமயத்தில் பெண் வாசகர்களின் ஆவலை என்னால் கொஞ்சம் கூட கட்டுப்படுத்தமுடியாமல் திணறிய நேரத்தில் ஒரு யோசனை வந்தது.

அதாவது, உலகில் உள்ள தமிழை எழுத படிக்க தெரிந்த  , இலக்கிய ஆர்வம் கொண்ட - அதிலும் என் பதிவுகளின் மீது தீராத... கா.......வும் ..அபிமானமும்   கொண்ட பெண்களின் சார்பாக இரண்டே இரண்டு பெண்களின் பின்னூட்டம் மட்டுமே வெளி இடுவது என்று முடிவு செய்து அதன்படி செயலாற்றிவந்தேன் .

ஆண் பெண் பேதம் நமக்கு இல்லை என்றாலும் 30 சதவீத  இட ஒதுக்கீடேனும் செய்யனும் இல்லையா

அப்படி இருந்த என் (பொழப்பில்) பதிவில் , யார் கண்ணு பட்டதோ தெரியலீங்க.  
இப்போ அவங்க கூட பின்னூட்டம் அனுப்புவதை நிறுத்திக்கொண்டுவிட்டனர்.

எனக்கு இருந்ததோ  அந்த  ரெண்டே ரெண்டு பேர்தான்  , அவங்களும் இப்போ நிறுத்திவிட்டதால்தான் சொல்றேன், அவர்கள் வராததற்கு காரணம்  யாரோ சிலரோட  கண்ணே கண்ணுதான்.

அப்பவே ரொம்ப பேர் சொன்னாங்க... நீ ரொம்ப நல்லா(??!!) எழுதற... கண்ணுபடப்போகுது கொஞ்சம் கண்ணும் கருத்துமா  இருன்னு. இருந்தாலும் பரவாயில்லை உனக்கு ஏழு கண்டம்(??) இருக்குன்னும் சொன்னாங்க.  

இப்போ சொல்லுங்க தலைப்புல ஏதேனும் இலக்கண பிழை உண்டானு.

பின் குறிப்பு:  இந்த பதிவை பார்த்ததும் ,  நேரமிருந்தால்  வந்து உங்கள் தடம்களை தடங்கலின்றி பதித்து செல்லுங்கள், இல்லை என்றால், உங்கள் இடத்தை,  இந்த உரிமைக்காக ஆவலோடும் இலக்கியவெறியோடும்  காத்துக்கொண்டிருக்கும்  உலகெங்கிலுமுள்ள (ஏழு கண்டங்களில்) கோடானு கோடி  வாசகர்களுள்  யாருக்கேனும் கொடுக்கவேண்டி இருக்கும்.

நன்றி.

மீண்டும் (சி)ந்திப்போம்


கோ

12 கருத்துகள்:

  1. மன உலைச்சலை அழகாக கொட்டி விட்டீர்கள் நண்பரே
    தொடர்ந்து எழுதுங்கள் கண்கள் பெறுகி வரும் நிச்சயம்.

    குறிப்பு - கோடிக்கணக்கான கண்களில் எனது இரண்டு நல்ல கண்ணையும் கணக்கில் வைத்துக்கொள்ளவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா,

      வருகைக்கு மிக்க நன்றி.
      மன உளைச்சல் அல்ல நண்பரே, இது கடை விரிக்கப்பட்டு காத்திருக்கும் நல்ல(!!) பொருளை இலவசமாக பெற்று செல்ல ஒரு அழைப்புதான்.
      எனக்கு தெரியும் அந்த கோடான கோடி நல்ல கண்களுள் உமது இரண்டு கண்களும் உள்ளன என்று.

      கோ

      நீக்கு
    2. https://killergee.blogspot.ae/2016/06/blog-post_5.html

      நண்பரே தாங்களும் இடம் பெற்ற பதிவு 'லண்டனில், மஞ்சப்பைக்காரன்' இணைப்பு மேலே...

      நீக்கு

    3. வாசித்தேன், நண்பரே. பின்னூட்டம் பாருங்கள்.

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. மகேஷ்,

      இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்.

      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரசே,

    அந்த இரண்டு கண்ணுல யாருக்கேனும் கொடுப்பதை எங்களுக்கு கொடுங்களேன்.
    நல்ல பாலிசி,,, 30 சதவீத இடஒதுக்கீடு,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பேராசிரியருக்கு,

    உங்களின் விருப்பத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள். எதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது, அந்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆட்ஷேபனை இல்லை என்றால் இட ஒதுக்கீட்டிற்கு உங்களின் விண்ணப்பத்தை பரீலிக்க முடியுமா என பார்ப்போம் . இருந்தாலும் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். பொறுத்திருங்கள் இப்போதே ஏகப்பட்ட விண்ணப்பங்கள் நான் நீ என்ற போட்டியுடன்.

    போகிற போக்கை பார்த்தால் தகுதி தேர்வும் நுழைவு தேர்வும் வைத்துதான் தேர்ந்தெடுக்கனும்போல தெரிகிறது.

    எனவே தகுதி தேர்வின் முதல் சுற்றுக்கு தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு ஆசையா? பேராசையா என்றேன். தேர்வே இல்லாமல் பாசாகத் தான் எனக்கு பிடிக்கும். சரி நீங்கள் வேண்டுமே,, அதனால் போட்டிக்கு தயார் படுத்திக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. பேராசிரியருக்கே தேர்வெழுத பிடிக்கவில்லை என்றால் மாணாக்கரின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

      சரி உங்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி மேலிடத்தில் சிபாரிசு செய்கிறேன்.

      கோ

      நீக்கு
  5. ஆஹா கோ!!!! மன்னித்து விடுங்கள் கோ!!!! நீங்கள் யாரைச் சொல்லியிருக்கின்றீர்கள் என்று தெரிந்து விட்டது...

    இதோ இந்தப் பதிவைத் திறந்து வைத்து கிட்டத்தட்ட இரு நாட்கள் ஆகின்றது..மன்னித்துவிடுங்கள் மன்னித்துவிடுங்கள்...இனி தொடர் வருகை இருக்கும்...

    புனிதவதியின் சேவையும் கதையும் தமிழில் வர இருக்கிறதல்லவா கோ உங்களுக்குத் தெரியும்தானே....அந்தப் புனிதச்செயலில் இருப்பதால் மிகவும் கவனமாகச் செய்வதில் கொஞ்சம் தாமதமாகிறது கோ நண்பரே. இணையத்திலும் உலா வர வேண்டியுள்ளது. அதுவும் தாமதமாகிறது...

    இன்றுதான் மொழிபெயர்ப்பு கொஞ்சம் முன்னேறி இருக்கிறது.

    இனி தொடர்ந்து வருகின்றோம் கோ....மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம்...உங்கள் அன்பிற்கு நாங்கள் என்ன சொல்ல என்று தெரியவில்லை...யாருடைய கண்ணும்படாது...உறுதி..

    கீதா

    (யாருடைய கண்ணும் படாது என்று சொல்லி விட்டு இந்தப் பின்னூட்டத்தை அனுப்பினால் கூகுள் ப்ளாகர் சதி செய்தது....வெளியிட மறுத்து....பாருங்கள் அதுதான் கண் போட்டிருக்கிறது இதோ மீண்டும் முயற்சி இப்போது போகும் என்று....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      தங்களின் வருகை தாமதமானாலும் பரவாயில்லை, இதற்கெதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம்? இருந்தாலும் கேட்டுவிட்டதால் இல்லை என்று சொல்ல முடியாததால், உங்களுக்கு மன்னிப்பு அளிக்கின்றேன், ஏற்றுக்கொள்ளுங்கள்.

      கோ

      நீக்கு