ஆமா நீங்க நலமா?
நண்பர்களே,
சமீபத்தில் ஊரில் தங்கி இருந்த நாட்களில் மிக முக்கியமான வேலைகள் இருந்தபோது மட்டுமே வெளியில் சென்று வந்தேன் மற்றபடி வீட்டிலேயே குடும்பத்தினருடன் தங்கி இருந்தேன்.
ஒருநாள் , மத்திய தபால் நிலையத்தில் ஒரு சேமிப்பு கணக்கை முடிக்கும் வேலையாக நான் நேரில் செல்லவேண்டி இருந்தது.
அப்படி போய் வேலைகளை முடித்துக்கொண்டு என்னுடைய உறவினரின் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, முன்னால் நின்றுகொண்டிருந்த பேருந்து நகர்ந்து வழிவிடுவதற்காக காத்திருந்த சமயத்தில் எங்கள் காருக்கு பின்னால் வந்த ஒரு ஆட்டோ எங்கள் காரில் மோதியது.
இத்தனைக்கும் எங்கள் கார் நின்று ஏறக்குறைய 2 அல்லது 3 நிமிடங்கள் கழித்து அந்த ஆட்டோ எங்கள் காரை மோதியது.
உடனே கோபத்துடனும் அதே சமயத்தில் வண்டிக்கு என்ன ஆனது என்பதை பார்க்கும்பொருட்டும் காரை விட்டு வேகமாக இறங்க முற்பட்ட என்னை பார்த்து அந்த ஆட்டோ ஓட்டுநர், எங்கள் காருக்கு சேதாரம் ஏதும் இல்லை என்பதை செய்கை மூலம் தெரிவித்துக்கொண்டு , சாரி சொல்லும் விதமாக கையை உயர்த்தியும் காண்பித்தார்.
அதற்கிடையில் காரில் இருந்து இறங்க இருந்த என்னிடம் என் உறவினர், "வேண்டாம் விட்டுடுங்கள்", என்றார்.
இருந்தாலும் நான் இறங்கி சென்று பழுதடையாத காரின் பின் புறத்தை பார்த்து கோபம் தணிந்தவனாக , அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் சொன்னேன், "வேண்டாம் விட்டுடுங்க" என்று.
நான் ஏன் அவரிடம் அப்படி சொல்ல வேண்டும்?
ஏனென்றால், அவர் வாகனத்தை ஓட்டும்போது தனது கழுத்திற்கு தலைக்கும் இடையில் ஒரு மொபைல் போனை லாவகமாக தன் தலையை ஒருபுறமாக சாய்த்து கீழே விழாதபடி பிடித்துக்கொண்டே ஆட்டோவை ஓடிவந்து எங்கள் காரின் மீது மோதி இருந்தார்.
எனவே தான் அவரிடம் சென்று, வாகனத்தை ஓட்டும்போது இதுபோன்று மொபைல் போனில் பேசாதீர்கள் இந்த விபரீதமான செயலை இனியும் செய்யாதீர்கள், "வேண்டாம் விட்டுடுங்க" என கூறியதும் அந்த ஓட்டுநர், பவ்யமாக என் சொல்லை கேட்டுக்கொண்டே, தன் தவறுக்காக பல முறை சாரி சொன்னார்.
இப்படி பெரிய ஆபத்தோ சேதாரமோ ஆகாமல் போனதுபோல் எல்லா நேரங்களிலும் அமையுமா?
தேவையில்லாத, முக்கியமில்லாத தொலைபேசி உரையாடல்களான, ஹலோ ஹலோ சுகமா,,, ஆமா நீங்க நலமா... என்ன சாப்பிட்டீங்க... என்னது மீன் குழம்பா... அப்புறம்... என்ன சட்டை போட்டிருக்கீங்க... என்னது சட்டை போடலையா... சரியா கேட்கல... , என்ன கலர் சேலை(ரொம்ப முக்கியம்)........போன்ற உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்
சாலை விதிகள், சமிக்ஞயை கவனித்து வாகனத்தின்மீதும் சாலைகள் மீதும், சாலை ஓரத்து மக்கள்மீதும் சக வாகன ஓட்டுனர்களின் வாகன வேகம், வளைவு, நெருக்கம் , தொலைவுகளில் கவனம் செலுத்தி பயணிப்பது மிக மிக முக்கியம்.
வாகனத்தை ஓட்டும் போது முக்கியமாக பேச வேண்டி இருந்தால் பாதுகாப்பான இடத்தில் வண்டியை நிறுத்தி பேசிவிட்டு பின்னர் தொடருங்கள் உங்கள் பயணங்களை.
இல்லையேல், உங்களின் இந்த செயல்கள், உங்களுக்கு மட்டுமல்லாது ஏனைய சாலை உபயோகிப்பாளர்களுக்கும் பெருத்த ஆபத்தாக அமையும் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.
எனவே, வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசும் பழக்கம் "வேண்டாம் விட்டுடுங்க".
(இப்போ ஆளை விடுங்க, நான் உங்ககிட்ட இந்த தகவலை போன்ல சொல்லிக்கொண்டே காரை ஓட்டுவதை யாராச்சும் பார்க்கப்போறாங்க..)
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
நல்ல அறிவுரை.
பதிலளிநீக்குமுனைவர் அய்யாவின் வருகைக்கு மிக்க நன்றி .
பதிலளிநீக்குகோ
கார இடிச்சதால எதுவும் ஆகல. இதே ஒரு பைக்கை இடிச்சிருந்தால்?
பதிலளிநீக்குசாரி சொன்ன்அ ஆட்டோ ஓட்டுநர் ஓட நடவடிக்கைய பார்த்தா நல்லவரைப் போல் தெரியுது.
எதோ அவசரத்தில்..
பாவம் அவருக்கு என்ன அவசரமோ?
அறிவுரை-பதிவு-அருமை.
மகேஷ்,
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி. ஆமாம், அதே இரு சக்கர வாகனமாயிருந்திருந்தால்.....
எல்லோரும் நல்லவர்கள்தான் , சில நேரங்களில் இப்படி ஆவதுண்டு.
கோ
ஆட்டோக்காரரின் நடத்தை நிறைவை தந்தது. ஆனாலும் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் அப்படியில்லை என்பதுதான் நிஜம்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் செந்தில் குமார்.
நீக்குகோ
ஆட்டோக்காரரின் நடத்தை நிறைவை தந்தது. ஆனாலும் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் அப்படியில்லை என்பதுதான் நிஜம்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் செந்தில் குமார்.
நீக்குகோ
பயனுள்ள பகிர்வு நண்பரே இதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்
பதிலளிநீக்குநண்பா,
நீக்குசெயல் படுவார்களா?.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்
கோ
பரவாயில்லையே ஆட்டோக்காரர் தன் தவறை உணர்ந்தாரே! பெரிய விஷயம். இங்கு பெரும்பான்மையோர் மொபைல் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதைப் பார்க்க முடியும். அதுவும் தாறுமாறாக ஓட்டுவதையும் காண முடியும்...நல்ல பகிர்வு
பதிலளிநீக்குஅன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி. ஆட்டோ வருதுபாருங்க கொஞ்சம் ஒதுங்கி போங்க.
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குஹலோ சுகமா? சாப்பிட்டீர்களா? என்ன சட்டை இவையெல்லாம் அன்பின் விசாரிப்புகள்.
ஆனால் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் தவறுதான்,, அதிலும் அடுத்தவர் வாகத்தில் மோதுவது குற்றம் தான்.
பயனுள்ள பகிர்வு,,
நன்றி அரசே.
பேராசிரியருக்கு,
நீக்கு"அன்பின்" விசாரிப்புகள் செய்யும்போது "முன்பின்" ஓடும் வாகனங்களின் மீதும் கவனம் தேவை அன்றோ?
இல்லையேல் அன்பின் விசாரிப்பு துக்க விசாரிப்பாயிடுமே.
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ