பின்பற்றுபவர்கள்

சனி, 9 மே, 2020

வீட்டு வேலை - 3

 மிகை நாடி மிக்கக்கொளல் !! 
நண்பர்களே,


வேலை தொடர்கிறது…


முந்தய பதிவை வாசிக்க  வீட்டுவேலை -2

செயல் அலுவலர் சொன்ன அந்த செய்தி:
இப்போதிருக்கும் சூழ் நிலையில் புதிய கணக்காளர் நியமனம் நடக்க  கொஞ்சம் கால தாமதம் ஆகும் எனவே ……
வணிகவியலில் முதுகலை பயின்ற நீஙகள்தான் இனி அடுத்த சில மாதங்களுக்கு கூடுதலாக அந்த பொறுப்பையும் ஏற்க வேண்டும், தேவை என்றால் , அலுவலக மேலாளரை ஒத்தாசைக்கு வைத்துக்கொள்ளுங்கள் , இதுதான் அந்த செய்தி.

எனக்கும் கணிதத்தோடும் கணக்கியலோடும்  கணக்குப்பண்ண  ஆசைதான், இருந்தாலும் என் பணியை பகிர்ந்துகொள்ள யாருமில்லையே, என நான் சொல்ல நினைத்ததை புரிந்துகொண்டவர், வார விடுமுறை தினங்களில் ஒரு சில மணிநேரம் நீங்கள் வீட்டிலிருந்து இந்த வேலையை செய்யலாமே என்றார்.


நானும் சரி என்று ஒப்புக்கொண்டு பிரதி வெள்ளி கிழமை மாலையில் , விற்பனை பதிவேடு,சரக்கு(??) பதிவேடு, இன்வாய்ஸ் புத்தகம்,ரசீது புத்தகம், கேஷ் புக் , வங்கி பாஸ் புத்தகம், பேரேடு போன்றவற்றோடு அலுவலக வாகனத்தில் கொண்டுவருவதும் , வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் இரவு பகல் பாராமல்  விடப்பட்ட  அத்தனையையும் , நிகழ் கால கணக்கு வழக்குகளையும் பதிவு செய்து அவற்றை பேரேட்டில் பதித்து வந்தேன்.


 இது தவிர மாதம் ஒருமுறை பாலன்ஸ் செய்து  வரவு  செலவு கணக்குகளையும் தயாரித்து, நமக்கு  கொடுக்கக் வேண்டியவர்கள் , நாம் கொடுக்க வேண்டியவர்கள், நிதி நிலை , கை இருப்பு இன்னும் தணிக்கையாளர் கேட்கும்  காலாண்டு ,அரையாண்டு , ஆண்டு இறுதி நிலைகளையும் தயாரித்து கொடுப்பது போன்ற அத்தனையையும் வீட்டிலிருந்தே செய்து  கொண்டிருந்தேன், அதுவும் வார இறுதி விடுமுறை நாட்களில்.


இத்தனைக்கும் அனைத்து புத்தகங்களையும்  இரண்டு நகல்கள் வரும்படி கார்பன்  வைத்து அழுத்தி எழுதவேண்டும்.


மீண்டும் அவற்றை திங்கள்கிழமை அலுவலகம் கொண்டு செல்ல வேண்டும்.

கணிதமோ கணக்கு பதிவியலோ பற்று வரவோ, வங்கி சரிக்கட்டு  பதிவோ அறியாத அலுவலக ஊழியர் - ஓய்வு பெற்ற பட்டாளத்து வீரர்  திரு பர்னபாஸ் அவர்களிடம் சில அடிப்படை வேலைகளை செய்ய சொல்லியும் வெள்ளிக்கிழமை மாலை என்னென்ன புத்தகங்களை எனக்கு எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்ல அவரும் சூழ் நிலையை உணர்ந்து எனக்கு உதவியதை இன்றும் மறக்க முடியாது.


சுமார் ஆறு மாதங்கள் கழித்து புதிய கணக்காளரை  நியமிக்கும் வரை இந்த பணி தொடந்தது , பயின்ற கலையை மறக்காமல் இருக்க வாய்ப்பாக இருந்தது என்பதை  அவசியம் சொல்லித்தான்  ஆகவேண்டும்.
(புதிதாக நியமனம் பெற்றவர் கல்லூரி முதுகலை படிப்பில் எனக்கு ஓராண்டு senior  அவரை என் கட்டுப்பாட்டில் வைத்து வேலை வாங்கியது கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருந்தது என்பது வேறு கதை


இவையெல்லாம் நடந்து  சுமார் -------(கோடிட்ட இடத்தை நிரப்புக!!) ஆண்டுகள் கழிந்து  கடந்து இரண்டு மாதங்களாக அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து செய்யும்போது அந்த பழைய நினைவுகள் அவ்வப்போது என் நினைவில் வந்து நீராடிவிட்டு செல்கின்றன.


எத்தனை மாற்றங்கள், எத்தனை வித்தியாசங்கள், எத்தனை   வசதிகள்.

நோட்டுபுத்தகம், பேனா, பென்சில், ரப்பர் , ஸ்கேல் , கார்பன் பேப்பர்கள் எதுவும் இல்லாமல் , மடி கணினி, அதனுடன் இணைக்கப்பட்ட 24 இன்ச் மானிடர்கள் , இன்டர்நெட், wifi தொடர்புகள்,  சக ஊழியருடனான முகம் பார்த்து பேசும் ஆன்லைன் பரிவர்தனைகள், மின்னணு  முறையில் எத்தனை பெரிய ரிப்போர்ட்டுகளையும் கம்ப்யூட்டரிலேயே சேமித்து வைக்கும் வசதி, தேவைப்படும் படிவங்களை தேவை படுவோர்க்கு மின் அஞ்சல் வழியாக அணுப்பும்/ பெற்றுக்கொள்ளும்  வசதி… மைக்ரோ சாப்ட்   ஆபீஸ் மென்பொருள் , அவுட் லுக்,  SKYPE for business, மைக்ரோ சாப்ட் டீம் வசதி….

 வேலை சோர்வு தெரியாமல் இருக்க பாடல் கேட்டுக்கொண்டோ, காட்சிகளை  பார்த்துக்கொண்டோ , அவ்வப்போது தேநீர் அருந்திக்கொண்டோ, இடையில் எழுந்து சென்று வீட்டு தோட்டத்தில் உலாவி விட்டு வருவதற்கும்   வேலைகளை வீட்டிலிருந்தே பார்த்தபடி அவ்வப்போது வீட்டு வேலைகளையும்(!!) பார்த்து கொள்ளவும் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து இலக்குகளை அடையவும்  வசதியாகத்தான் இருக்கின்றது இந்த ஒர்கிங் from  home.,

இதிலும் சிலர் சொல்வதுபோல் பல அசௌகரியங்கள் இல்லாமல் இல்லை'இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி அடைந்தே கிடப்போம்?
இருந்தாலும் சூழ்நிலைதனை மனதில் கொண்டு  மிகை நாடி மிக்கக் கொள்வோம்.
வீட்டு வேலையில், அதாங்க வீட்டிலிருந்தே வேலையில் (working from  home ) தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு கொஞ்சம்  பணியினூடான களைப்பை நீக்கும் மாறுதலாக அமைந்தால் மகிழ்வேன்.
அதே சமயத்தில் வேலை ஸ்தலத்திற்கு சென்று மட்டுமே தங்கள் கடமையாற்ற வேண்டிய கட்டாயத்தில் , நிர்பந்தத்தில் இருக்கும்  சிறப்பு ஊழியர்கள்   அனைவருக்கும் இந்த பதிவு ஒரு அற்பணமாகவும் அமையும் என நம்புகிறேன்.     

நன்றி,

மீண்டும்  ச(சி )ந்திப்போம். 

கோ. 

4 கருத்துகள்:

  1. வீட்டிலிருந்து வேலை - சில சமயங்களில் சரியானது தான். நேரம் காலம் இல்லாமல், அலுவலக நேரம் என்ற வரையறை இல்லாமல் இரவு நேரங்களிலும் அலுவலக வேலைகளைப் பார்க்க வேண்டியிருப்பது ஒரு சோகம்.

    மூன்று பகுதிகளும் நன்றாகவே கொண்டு சென்றீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. தங்கலது நினைவுகள் அருமை சார்.

    அடுத்து எப்படி நீங்கள்
    வேலூர்இல் இருந்து
    வெளிநாட்டில்
    வேலைக்கு போய்
    கடைசியாக லண்டனில் வந்து சேற்ந்த கதையை எழுதுங்கலேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்



    1. நினைவலைகளை பாராட்டிய மகேஷுக்கு மிக்க நன்றிகள்.

      சொல்கிறேன் ஒரு சுப தினத்தில் என் சுய புராணத்தை (சரிதையை)

      நீக்கு