பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 ஜூலை, 2017

உன்னை காணாமல்....2

                                                   விழி பிதுங்கி.....

நண்பர்களே,

முதலில்  இருந்து காண  ..... உன்னை காணாமல்....
வங்கியில் இருந்தபோது இருந்ததே, வழி நெடுகிலும் தொட்டுப்பார்த்தபோதும் இருந்ததே, உணவகத்தில் கூட இருந்ததே, அப்படியானால் வழியில்

எங்கேயேனும் ... , யாராவது  பார்த்து எடுத்திருந்தாலும் அதில் எந்த அடையாள குறியும் இல்லையே அது நமதென்று கண்டுபிடிக்க.

யாரிடம் சொல்வது, எங்கே போய் தேடுவது...  பதட்டத்தில் செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நின்றேன்.  கொண்டு வந்த பணமும் ஒரு பெரும்தொகையாயிர்றே.

என்  அலுவலக வாழ் நாளில் எப்போது வங்கிக்கு பணம்  எடுக்க சென்றாலும் எடுத்த கையேடு நேராக அலுவலகம் வரும் வழக்கமும் பழக்கமும் கொண்ட நான் இன்று எப்படி வங்கியில் இருந்து உணவகம் சென்றேன்.

சரி ஒரு கணமும் தாமதிக்கக்கூடாது என்றெண்ணி வந்த வழியே திரும்பி சாலையெங்கும் கண்களை பரவவிட்டு தேடிக்கொண்டே சென்றேன்.

பதற்றத்துடன் திரும்பி போகும்போது காட்சிப்பிழைபோல என் நினைவிற்கு வந்தது:

கடைசியாக நாம் தொட்டு  பார்த்தது அந்த உணவகத்தில்தான். இருக்கையில் அமர்ந்தபோது கொஞ்சம் இடையூறாக கால்சட்டை பையில் துருத்திக்கொண்டிருந்ததை நான்தான் வெளியில் எடுத்து மேசை மீது வைத்தேன், ஆனால்  மீண்டும் எடுத்து பாக்கட்டில் வைத்தேனா என்பது தெளிவாக நினைவில்லை.

எப்படியும் அந்த உணவகத்தில்தான் இருக்கவேண்டும். ஒருவேளை நமக்குப்பின் வேறு யாரேனும் அந்த மேசை - இருக்கையில் அமர்ந்து அது அவர்கள் கண்ணில் பட்டு அதை அவர்கள் எடுத்துக்கொண்டு சென்றிருந்தால்....

மன  போராட்டம் அதிகமானது. 

நாம் யார் பணத்தையும் கொள்ளை அடிக்கவில்லை இந்நாள்வரை  நேர்மையாக உழைத்து சம்பாதித்து வாழ்ந்து வருகிறோம் , நமக்குரியது நமக்கு கிடைக்கும் என்ற ஒரு சிறு நப்பாசை நம்பிக்கையுடன் இப்போது ஐந்தே நிமிடத்தில் உணவகம் வந்துட்டேன்.

வந்த இடத்தில் பெரும் ஏமாற்றம்.  நான் அமர்ந்திருந்த அதே இருக்கையில் இப்போது வேறொருவர் அமர்ந்து உணவினை ரசித்து சுவைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

நான் அவசர அவசரமாக அந்த இடத்திற்கு சென்று அவரிடம் கொஞ்சம் மன்னிப்பு கேட்டுவிட்டு  தேடிப்பார்த்தேன் அங்கே ஒன்றும் கிடைக்கவில்லை.

அப்போது  உள்ளே இருந்து உணவு பரிமாறுபவர் வெளியில் வந்தவர் என்னை பார்த்து , சார் இதோ இங்கே எடுத்து வைத்திருக்கிறேன், நீங்கள் வெளியில் சென்றபோது இதை இங்கேயே விட்டுவிட்டு சென்றதை சற்று முன்தான் பார்த்தேன் , இந்தாருங்கள் என சொல்லி என்னிடம் கொடுக்க என் கண்களில் ஆனந்த கண்ணீரும் , மனதினில் இன்ப வெள்ளமும் ஒருசேர ஓடிப்பாய்ந்தது.

அதை அப்படியே வாங்கி பாக்கட்டில் வைத்துக்கொண்டு  அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு மகிழ்ச்சியோடு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

நம்ம ஊர் கணக்குப்படி சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து இருநூறு பவுண்டுகள் (ஒரு பவுண்டுக்கு இப்போதெல்லாம் 84.00 ரூபாய்தான்) கொண்ட கவரை  என் பாக்கட்டில் வைக்கும்போது அந்த பாக்கட்டில் ஏற்கனவே வைத்திருந்ததை கையிலே எடுத்துக்கொண்டு உணவக மேசையில் வைத்துவிட்டு எடுக்க மறந்துபோன  "காலணா" மதிப்புமிக்க பெப்பர்மிண்ட் டப்பாதான் அது.

Image result for peppermint tin

சரி இதற்குப்போய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்:

என்னங்க இப்படி கேட்டுபுட்டீங்க?

அதாவது பள்ளி விடுமுறை நாட்களான இந்த சமயங்களில் பெற்றோருடன் வரும் குழந்தைகள் யாரேனும் அதை எடுத்து வாயில் போட்டு தொண்டையில் அடைத்து.. மூச்சு முட்டி... விழி பிதுங்கி......சி சி டிவி கேமரா பதிவு , கோர்ட்டு கேசு ... என்று  சங்கடங்கள்  ஏற்பட்டு... தேவை இல்லாத பிரச்சனைகள் உருவாகாமல்  தடுக்கவேண்டும் என்ற சமூக(சுய)நல அக்கறையின் உந்துதலாகக்கூட இருக்கலாமே.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

  1. நினைத்தோம்...கண்டிப்பாக ரூபாய் இல்லை என்பதை...ஏனென்றால் கோ வைப் பற்றி தெரியுமே....இப்படித்தான் பரபரப்பாகச் சொல்லி....கடைசியில்...நாலணா பெறாத ஒன்றை ச் சொல்லி ஏமாற்றுவார்னு..ஹஹஹ....உங்கள் குறும்பு...ரசித்தோம்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

      கோ

      நீக்கு
  3. அன்பிற்கினிய நண்பர்களே,

    வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

    என்னைப்பற்றி எதுவும் தெரியாமலேயே என்னைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் நீங்கள், அதனால்தான் என் பதிவின் ஓட்டமும் போக்கும் உங்களுக்கு முன்னமே தரிசனம் கொடுத்துவிடுகின்றன.

    தொடர் ஊக்கத்திருக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு