பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 ஜூலை, 2017

அலசி ஆராய்ந்த ஒளிவு!.--2

ஆராய்ந்து அலசிய தெளிவு !!

நண்பர்களே,

முதலில் இருந்து  அலசி ஆராய ....அலசி ஆராய்ந்த ஒளிவு!..

அடுத்தநாள் வாரத்தின் முதல் நாள் -  திங்கட்கிழமை.

வழக்கமான பரபரப்பான எழுகை, குளியல், காலை உணவு, மத்திய உணவுக்கான கட்டு சோறு, ஆயத்தம், உடை மாற்றம் , கைபேசி, வீட்டு சாவி, அடையாள அட்டை, மணிபர்ஸ் , கை   கடிகாரம்  போன்றவற்றை எடுத்துக்கொண்டு , வீட்டை பூட்டிவிட்டு வாசலில் நடக்க ஆரம்பித்தேன் பேருந்து நிறுத்தம் நோக்கி.

சில பல அடிகள்   தூரம் சென்றபோதுதான், காலை பரபரப்பில் , பயண சீட்டை எடுக்க மறந்துப்போனது நினைவிற்கு வந்தது.

பேருந்து வருவதற்கு இன்னும் பத்து  நிமிடங்கள்தான் உள்ளன, ஓட்டமும் நடையுமாக மீண்டும் வீட்டிற்குவந்து அவசரத்தில் சாவிகளை மாற்றி மாற்றி போட்டு ஒரு வழியாக கதவை திறந்துகொண்டு பயணசீட்டை எடுக்க நேற்று போட்டுக்கொண்டிருந்த அந்த பர்முடாசை   குளியல்  அறை கதவின் பின் புறமிருக்கும் கொக்கியில் தேடினேன். 

அங்கே  அந்த ப்ரேமுடாசை  காணவில்லை, அழுக்கு துணிகளை போடும் கூடையில் பார்த்தேன் அங்கும் இல்லை.

எங்கே போனது அந்த பர்முடாஸ்?

நேற்று பயண சீட்டை வாங்க போகும்போது நல்ல சீதோஷணமும் வழக்கத்திற்கு மாறான வெய்யிலும் இருந்ததால் அரை கால் சட்டையான பெர்முடாஸையும் பாக்கட் இல்லாத டி ஷர்ட்டும்   தானே அணிந்திருந்தேன் , பயண சீட்டை  அந்த பெர்முடாஸ்  பாக்கட்டில் தானே வைத்தேன் , எங்கே போனது அந்த பெர்முடாஸ்.

இன்னும் ஆறு  நிமிடங்களே உள்ளன பேருந்து வருவதற்கு, அதற்குள் கண்டெடுக்க வேண்டுமே.

ஒருவேளை தோட்டத்தில் வேலை செய்யும் போது கைக்கடிகாரம், மணி பர்ஸை  ஷெட்டில் வைத்தேனே அதனுடன் பேருந்து பயண சீட்டையும் வைத்துவிட்டு எடுக்க மறந்துபோனேனா?

 அல்லது  கடையில், பயண சீட்டிற்கான கட்டணம் செலுத்திவிட்டு பயண சீட்டை வாங்காமலேயே வந்துவிட்டேனா, அல்லது நியூஸ் ஏஜென்ட் கடையில் இருந்து நேராக வீட்டிற்கு வராமல் கடை கடையாக போய் இருந்தேனே அப்போது எங்கேயேனும் தொலைத்து விட்டேனா, அல்லது பூச்செடிகளை நட குழிகள் பறித்தேனே,  அந்த குழிகளில் ஒன்றில் தவறுதலாக விழுந்திருக்குமோ ?

அடுத்து என்ன நடந்தது,  பயண சீட்டை கண்டு பிடித்தேனா?பேருந்தை பிடித்தேனா... அலுவலகம் நேரத்தோடு சென்றேனா? கொஞ்சம் பொறுத்திருங்கள்  நாளை சொல்கிறேன், வழக்கம்போல ஆஜராகிவிடுங்கள். 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

 1. ஹஹ்ஹஹ பெர்முடாஸுக்குள் மாட்டிக் கொண்ட பயணச் சீட்டு நன்றாக அலசப்பட்டுக் காய்ந்து கொண்டிருக்கிறது!!!ட்ரையைல் இருக்கிறதா இல்லை கொடியில் இருக்கிறதா கோ!! சீட்டு காகிதப்பஞ்சாகியிருக்கா இல்லை அப்படியே சுருங்கி பாக்கெட்டில் காய்ந்துகொண்டிருக்கிறதா பாருங்கள்...அப்படியே எழுத்துகள் அழியாமல் இருந்தால் இஸ்திரி போடுங்கள்!!!.ஹஹஹ்

  நல்ல அலசி ஆராய்ந்து.....!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   பெர்முடாஸில்தான் இருக்கின்றதா அல்லது வேறு எங்கேனும் இருக்கின்றதா என்பதை இனி தான் பார்க்கவேண்டும் உங்களுக்கு எப்பவுமே முந்திரிக்கொட்டை முன் சிந்தனைதான்- 007??

   கோ

   நீக்கு
  2. ட்ரையரில் என்று வந்திருக்க வேண்டும் ட்ரையல் என்று வந்துவிட்டது அர்த்தமே மாறிவிடுமே..அப்புறம் இதுக்கு வேறு கோ அலச வேண்டுமே? இதற்கு அர்த்தம் என்ன என்று...ஹஹஹஹ்

   கீதா

   நீக்கு
  3. உங்களுக்கு எப்பவுமே முந்திரிக்கொட்டை முன் சிந்தனைதான்- 007??// ஹஹஹ்ஹ சரி சரி நீங்களே அலசி ஆராய்ஞ்சு அது எங்கருந்துச்சுனு சொல்லிடுங்க

   நீக்கு
  4. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டேன் உங்கள் பின்னூட்டத்தை அலசி ஆராயாமலே.

   இன்று உங்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் அந்த பயணசீட்டு போய் வந்த பயணம் குறித்து.

   கோ

   நீக்கு