பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 ஜூலை, 2017

அலசி ஆராய்ந்த ஒளிவு!.-3

ஆராய்ந்து அலசிய தெளிவு !!

நண்பர்களே,

முன் பதிவை   அலசி ஆராய ...அலசி ஆராய்ந்த ஒளிவு!.--2

மிகுந்த பரபரப்புடன் வீட்டிற்குள்ளிருந்து  தோட்டம் செல்லும் கதவை திறக்கும் போதுதான் கவனித்தேன்.......

அந்த பெர்முடாஸ் வாஷிங் மெஷினில் இருப்பதை.

இரவெல்லாம் சுற்றி சுற்றி ஓய்ந்து போயிருந்த வாஷிங்  மெஷினிலிருந்து அடித்து துவைத்து  அலசப்பட்டிருந்த அந்த பெர்முடாசை எடுத்து பாக்கெட்டில் கைவிட்டு ஆராய்ந்து பார்த்தேன்.

கையில் ஏதோ  தட்டுப்பட அதை  அப்படியே எடுக்க முயற்சித்தேன். முயற்சி ஓரளவிற்கு பயனளித்தாலும் முழுமையான பயன் கிடைக்கவில்லை.

கையில் தட்டு பட்டது மெல்லிய பிளாஸ்டிக் ஷீட்டால் லேமினேட் செய்யப்பட்டிருந்த அந்த வாராந்திர பயண சீட்டுதான்.

என்னதான் பிளாஸ்டிக் ஷீட்டால் லேமினேட் செய்யப்பட்டிருந்தாலும் வாஷிங்  மெஷினின் தீவிர  சுழற்சியாலும் வெந்நீரின் தாக்கத்தாலும் பயண சீட்டு உருவிழந்துபோய் இருந்தது.

எழுத்துக்களும் எண்களும் வெளுத்துப்போய் இருந்தன.

கடிகாரம் சொல்லியது எனது பேருந்து கிளம்பி போய்விட்டதை.

இப்போது என்ன செய்யமுடியும் அடுத்த அரை மணி நேரத்தில்வரும் பேருந்தில் போனால்தான் அலுவலகத்திற்கு நேரத்தோடு போக முடியும் , பயண சீட்டை பேருந்திலேயே வாங்கிக்கொள்ளவேண்டியதுதான், பேருந்தில் வாங்கினால் கூடுதல் விலை, இருந்தாலும் அவசரத்திற்கு வாங்கித்தான் ஆகவேண்டும்.

மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி கொஞ்சம் வேக குறைவுடனும் மிகுந்த மன வேதனையுடனும் நடந்து செல்லும்போதுதான் ஞான ஒளிவில் ஒரு தெளிவு  பிறந்தது:

பல விஷயங்களை அலசி ஆராய்வதுபோல் சில விஷயங்களை   "ஆராய்ந்து பின் அலசுவது" அறிவுடைமை என்றும், அலசி ஆராய்வதற்கும் ஆராய்ந்து அலசுவதற்கும் நிறைய வேறுபாடுகளும் நன்மைகளும் உள்ளன  என்பதை புரிந்து இனியேனும் செயல்படவேண்டும் என்றும்.

அதாவது.......

எப்போதும் துணிகளை துவைக்க ஊற வைக்கும்போதும் அல்லது நேரடியாக வாஷிங் மெஷினில் போடுவதற்கு முன்னும் சட்டை பேண்ட்டுகளின் பாக்கெட்டுகளில் ஏதேனும் இருக்கின்றதா  என "ஆராய்ந்து" பார்த்து விட்டு பின்னர் "அலச" போடுவது  சிறந்தது எனும் பாடம் இந்த நிகழ்ச்சின்மூலம் நினைவு படுத்தப்பட்டேன்.

இதற்கு முன்புவரை அலசி ஆராய்ந்தவர்கள் இனிமேல் ஆராய்ந்து அலசுவார்கள் என நம்புகிறேன்.

நண்பர்களே, நீங்களும்  இந்த பதிவின் கருத்தினை கொஞ்சம் ஆராய்ந்து அலசி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

பின் குறிப்பு:  ஆண் வாசகர்களே,  உங்களது துணிகளை துவைக்க அழுக்கு கூடையில் போடுவதற்கு முன்னமே உங்களது பாக்கட்டுகளை ஆராய்ந்து , முடிந்தால் மறு சீராய்விற்கு  உட்படுத்திவிட்டு போடுங்கள் ... சிறு துரும்பும் பல் குத்த  உதவும் என்பதுபோல சிறு "அரும்பும்" த(து)ப்புதுலக்க உதவும் "அவர்களுக்கு".

புரிஞ்சா  சரி..

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வேற ஏதாவது எதிர்பார்த்தீர்களா தனப்பால்?

   வருகைக்கும் தொடர் ஆஜருக்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 2. ஹஹஹ்ஹ இது பலருக்கும் நிகழும் ஒன்று. சரி சரி இனி கவனமாக இருங்கள் கோ!!

  கீதா: ஹை சரியாத்தானே சொல்லிருக்கோம்.....!!! எல்லாம் சொந்த அனுபவம் தான்! வீட்டில் சில சமயங்களில் சலவை நோட்டுதான்!!! ஹிஹிஹிஹி!!

  இனி ஆராய்ந்து அலசுவோம்!! உங்கள் வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தோம்!! அதில் நீங்கள் விற்பன்னர் என்பதையும் அறிவோம்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கும் மிக்க நன்றிகள்.

   நீங்கள் எதைத்தான் சரி இல்லாமல் சொல்லி இருக்கின்றீர்கள் இதுவரை?

   வார்த்தை விளையாட்டை ரசித்ததாக சொல்லும் உங்கள் விற்பன்னர் விளையாட்டு (??) கொஞ்சம் ஓவர்தான்.

   கோ

   நீக்கு