பின்பற்றுபவர்கள்

சனி, 15 ஜூலை, 2017

பாவாடை தாவணியில்.....

கண் கொள்ளா காட்சி!!

நண்பர்களே,

தலைப்பில் உள்ள ஆடையான  பாவாடையும் தாவணியும் நமது பண்டைய தமிழர்களின் அடையாள ஆடைகள்.

பருவ பெண்கள் இந்த ஆடைகளை அணிந்துகொள்வதிலுள்ள அழகும் பாதுகாப்பும், வசதியும் வசீகரமும், தட்பவெப்ப  சீதோஷண , சவால்களை சந்திப்பதும் சரும , மற்றும் உடற் நலனை பேணும் வசதியும்    வேறு எந்த ஆடைக்கும் இருக்குமா?

அதே சமயத்தில்  இந்த கலியுகத்து மின் வேக வாழ்வியல் சுழற்சியின் அடிப்படையிலும் , நடந்தேறிக்கொண்டிருக்கும் பாலியல் வக்கிரத்தின்- உக்கிரத்தின் பார்வைகளின் அடிப்படையிலும் பலரும் பல விதமான நவீன ஆடைகளின் நளினத்தையும் வசதியையும் ஒப்பிட்டு பாவாடை தாவணியின் சிறப்பை குறை கூறுவர்.

இந்த பாவாடை தவணிகள் அணிந்த பெண்களை நம் இந்தியாவில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும்கூட காண்பது அரிதாகி விட்டது.

பாவாடைகளில் எத்தனை விதம்?

இப்போது குட்டை பாவாடை, அதி குட்டை பாவாடைகள் என வகை வகையாக இருப்பதுபோல ரவிக்கை என்பனவும் பல விதங்களில் வந்து விட்டன.

அதாவது இந்த ஆடைகளை எதற்கு அணிகிறோம் என்ற அடிப்படையான நோக்கமே சின்னா பின்னமாக சிதறி தெறிக்கும் அளவிற்கு நாகரீக பரிமாணம் எனும் போர்வையில் , ஆடைகள்  நிர்வாண படுத்தப்படுகின்றன.

நம் நாட்டு பெண்கள் பெரும்பாலும் மறந்துபோன இந்த பாவாடை தாவணியை வெளி நாட்டினரும் போற்றி கௌரவிக்கின்றனர்.

நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் விரும்பிஅணியும் நம் நாட்டு கலாச்சார ஆடைகளில் இந்த பாவாடை தாவணி பெரும் பங்கு வகிக்கின்றன. 

ஆடைகள் அணிவதில், வெளி நாட்டினர் அணியும் ஆடைகள் பெரும்பாலும் அவரவர் நாட்டில் நிலவும் தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்றார் போல  அமையும்.  

பள்ளி சீருடைகள் துவங்கி, அலுவலக ஆடை விதிகள் வரை இப்படித்தான் இருக்கும்.

நம்ம ஊரில் நாற்பத்தைந்து டிகிரி வெய்யில் அடித்தாலும் கோட்டு சூட்டு டை, பூட்டு ,போட்டுகொண்டிருப்பவர்களை பார்க்க முடிகிறது.

சமீபத்தில், கடந்த நாற்பது ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடுமையான வெய்யில் அடித்ததன் விளைவாக பெரும்பான்மையான அலுவலகங்களும் பள்ளிகளும் தங்களது உடை கொள்கையினை தளர்த்திக்கொண்டு , சீதோஷணத்திற்கேற்ப உடை அணிந்துகொள்ள அனுமதித்திருந்தனர்.

குறிப்பாக பள்ளி பிள்ளைகளின் வழக்கமான சீருடைகளான முழு நீள கால் சட்டை, அரை கை வைத்த சட்டை, முழு நீள கை   வைத்த ஜம்ப்பர்,பள்ளியின் அடையாள சின்னம் பதிக்கப்பட்ட டை , பள்ளியின் எம்பளம் பொறிக்கப்பட்ட பிளேசர் மற்றும் காலணியாக ஷூக்கள்  அணியவேண்டும் எனும் கட்டுப்பாட்டை தளர்த்தி, ஜம்ப்பர், கோட்டு டை போன்றவற்றை அணிய வேண்டாம் என அறிவித்திருந்தது.

பெரும்பான்மையான பள்ளி கூடத்து மாணவர்கள் இந்த சலுகையினை   பயன் படுத்தி சற்று   காற்றோட்டமான, இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்து பள்ளிக்கு சென்றனர்.

அதே சமயத்தில் ஒரு சில பள்ளிகள் விதிகளை கொஞ்சமும் தளர்த்தாமல் வழக்கமான சீருடைகளையே அணிந்துவர அறிவுறுத்தி இருந்தனர்.

கடுமையான வெய்யிலின் தாக்கத்தால் நாட்டில் பெரும்பான்மையினர் சொல்லொண்ணா வெட்க்கைக்கு ஆளாகி இருந்த இந்த சூழ் நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் கடுமையான வெய்யிலின் தாக்கத்தால் மிகவும் சிரம பட்டனர்.

பொறுத்து பொறுத்து பார்த்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சென்று சீருடை விதிகளை கொஞ்சம் தளர்த்தும்படி வேண்டுகோள் வைத்தனர்.

பள்ளியோ, சீருடை கொள்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என கண்டிப்பாக சொல்லி விட்டனர்.

இதில் பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் பரவாயில்லை ஏனென்றால் அவர்கள் கால்  முட்டிவரையிலான பாவாடைகளை அணிந்து கொள்ளலாம்.

Image result for STUDENTS WORE SKIRTS TO SCHOOL

பாவம் ஆண் பிள்ளைகள், முட்டிவரை அணிந்துகொள்ளும் அரை கால்சட்டையாவது அணித்துக்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டு , இறுக்கமான முழு கால் சட்டையும் இதர வகையறாக்களும் அணிய கட்டாயப்படுத்தியது அவர்களை விரக்கத்தியின் விளிம்பிற்கு வேகமாக முட்டி தள்ளியது.

மாலை பள்ளி முடிந்து சோர்வுடனும் களைப்புடனும் மாணவர்கள் வீடு திரும்பினார். 

அடுத்த நாள் வழக்கம்போல் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதுஆனால் ஒன்று மட்டும் வழக்கத்திற்கு  மாறாக காட்சி  அளித்தது. 

அது என்ன காட்சி.... அது உண்மையிலேயே ஒரு கண் கொள்ளா காட்சி...

ஆம் பாதிக்கப்பட்ட அனைத்து  மாணவர்களும் மேலாடையாக அரைக்கை சட்டைகளையும் கீழாடையாக(!!) பெண்கள் அணியும் பாவாடையையும் அணிந்து   தங்கள் புத்தக பைகளுடன் பள்ளிக்கு வந்து தங்களது  எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கோபத்தின் உச்சிக்கு(!!) சென்ற பள்ளி நிர்வாகம் அந்த அத்தனை மாணவர்களுக்கும் கடினமிகுந்த தண்டனைகள் ஏதும் கொடுக்காமல் தங்கள் தவற்றையும் மாணவர்களின் உணர்வையும் மன வேதனையையும் வெட்பத்தின்  உக்கிரத்தையும் உணர்ந்து மாணவர்களுக்கு சீருடை தளர்வை ஏற்படுத்திகொடுத்ததில், தாவணி இல்லாத பாவாடை அணிந்த மாணவர்களோடு சேர்ந்து அவர்களது பெற்றோரும் மகிழ்ந்தனர்.

Boys at Isca academy wearing skirts

இங்கிலாந்தில் டெவன் மாகாணத்தில் பயிலும் இந்த மாணவர்கள் முப்பது டிகிரி வெயில்  கொளுத்திய அந்த நாளில்   தங்கள் மாணவியர் நண்பர்களிடத்திலிருந்தும் தங்கள் சகோதரிகளிடத்திலிருந்தும் கடன் வாங்கி அணிந்து சென்றனர் என்பதும், இதற்கு தங்களின் பெற்றோரின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருந்ததும் கூடுதல் தகவல்கள்.

எனக்கும் சின்ன வயதில் என்  சகோதரிகளின் ஆடையை அணிவித்து அழகுக்கு(????!!!!) அழகு பார்த்ததாக என் அம்மா சொன்னது இப்போது ஞாபகம் வருகிறது.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முதன்முதலில் பதிவின் பக்கம் வந்து குட்டையான பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே.

      கோ

      நீக்கு
  2. எதிர்ப்பு தெரிவிக்க இப்படியும் ஒரு வழி....

    உடை என்பது அங்கே நிலவும் தட்பவெப்பத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வேறு ஒருவரைப் பார்த்து நமது சூழலுக்குப் பொருத்தமில்லாத உடையை அணிந்து கொள்வது சரியல்ல.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் வெங்கட்.

      தலை நகரில் தங்களை சந்தித்ததாக பதிவர் ஒருவர்(??) இட்ட பதிவினூடாய் தங்களின் மேன்மையை மேலும் புரிந்துகொள்ளவும் தங்கள் மீதுள்ள நேர்மறை அபிமானத்தை மேலும் உயர்த்திக்கொள்ளவும் முடிகிறது.

      கோ

      நீக்கு
  3. நல்ல போராட்டம்....அமைதி யாகப் போராடி வெற்றியும் பெற்றனரே... இங்கு இப்பபை எல்லாம் நடக்குமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அது ஒரு நல்ல போராட்டம்தான் அமைதியான வழியில்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. பதில்கள்
    1. தனப்பால், இந்த ஓஹோ .. விற்கு என்ன அர்த்தம்? அழகுக்கு அழகு.... பொறுக்க முடியலையா?

      கோ

      நீக்கு