நிழலின் அருமை!!
நண்பர்களே,
இன்றைய தலைப்பின் முதல் பதத்தை வாசிக்கும்போதே நம் நினைவில் மட்டுமல்லாது நமது ஒவ்வொருவரின் உயிரிலும் உணர்விலும்
பளீரென வெளிச்சம் வீசி பாச மழை பொழிய செய்வது நம் ஒவ்வொருவரையும் பெற்று எடுத்து தாலாட்டி சீராட்டி தமது ரத்தத்தை அமுத உணவென்னும் பாலூட்டி, பேணி காத்து வளர்த்த நமது அன்னையரின் முகமன்றோ?
ஞானம், கல்வி, அழகு, செல்வம், வயது போன்ற எந்த அளவுகோல் தகுதியையும் நிர்ணயித்து அதனடிப்படையில் அன்பையும் மரியாதையையையும் தீர்மானிக்க வேண்டியவர்களல்ல இவர்கள் என்பது நாகரீக உலகறிந்த மனித மாண்பு.
வறுமையோ செல்வ செழிப்போ எந்த சூழ் நிலையிலும் பிள்ளைகளை பேணி காப்பதில் அனைத்து அன்னையர்களும் அவரவர்கள் வசதி வாய்ப்புகளுக்கேற்ப ஒரே மாதிரியான அன்பையும் கரிசனையையும் பாதுகாப்பையும் அரவணைப்பையும் , தன்னலமற்ற தமது வாழ்வையும் பங்கிட்டு அளிக்கின்றனர் என்பதில் யாருக்கும் எந்தவித மாறுபாடான கருத்தும் இருக்க முடியாது.
வசதி படைத்த மேல்மட்டத்தில் வாழும் குடும்ப தாய்மார்களுக்கு பணிவிடைசெய்ய பலர் இருக்கும் சூழ் நிலையில் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாக செய்யும் ஓரிரு விஷயங்களில் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம், அதே சமயத்தில் யார்மூலம் பணிவிடைகள் செய்யப்பட்டாலும் அவை முறையாக , பாதுகாப்பாக செய்யப்படுகின்றனவா என தீவிரமாக கண்காணிக்க அவர்கள் தவறுவதில்லை.
அப்படி நேரடியாக தமக்கு செய்யவில்லையே என பிள்ளைகள் நினைத்து அன்னையரை பாகுபடுத்தி பார்ப்பது பிள்ளைகளின் அறிவீனத்தையும் பக்குவமடையா மன நிலையையும் பிரதி பலிக்கும்.
சில நேரங்களில், தமது அன்னை தம்மை சிறுவயதில் சரிவர பராமரிக்கவில்லை என்று நினைக்கும் பிள்ளைகள், அப்போது தமது அன்னையரின் நிலைமையை, இயலாமையை, சூழ்நிலையையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
மாறாக சந்தர்ப்ப சூழ்நிலையால் அன்று ஏற்பட்ட சில குறைபாடுகளை மனதில் கொண்டு காலத்திற்கும் தம் அன்னையரை பழிப்பதும், வெறுப்பதும், ஒதுக்குவதும் ஏற்புடையதல்ல. இப்படியும் சில பிள்ளைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கின்றனர் இறுக்கமான மன நிலையுடன்.
இப்படி எந்த சூழ் நிலையும் ஏற்படாது , வறுமையிலும் செம்மையாக , அக்கம் பக்கத்தார், உறவுகள், சொந்தங்கள், பங்காளிகள் மத்தியில் தம் பிள்ளைகளை கவுரவத்துடனும் கண்ணியத்துடனும், நற்பண்புகளை போதித்து வளர்த்து ஆளாக்கினார் ஒரு அன்னை.
அவர் இன்று வயது முதிர்ந்த நிலையில் படுக்கையை விட்டு எழுந்து தமது சுய தேவைகளை பூர்த்தி செய்யக்கூட துணைவேண்டும் நிலையில் இருக்கும் ,தமது பிள்ளைகளை அவையத்துள் முந்தி இருக்க செய்த, அந்த அன்னையரின் அருந்தவ புதல்வரை சில மாதங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்தது.
சுகம் விசாரித்துவிட்டு , பல செய்தி பரிமாற்றங்களுக்கிடையில் , நான் பிறந்த நாள் முதல் இன்றுவரை அறிந்திருக்கும் அவரது அன்னையரின் நலனை விசாரித்த எனக்கு அந்த மகன் சொன்ன பதில் பேரதிர்ச்சியாக இருந்தது.
அப்படி அதிர்ச்சி தரும் வகையில் அவர் சொன்ன பதில் என்ன ?
நாளை கேட்போம்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
அதிர்ச்சியைக் கேட்கக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குவருகைக்கும் காத்திருப்பிற்கும் மிக்க நன்றிகள் ஐயா.
நீக்குகோ
தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு(என்னை) தொடர்வதற்காய் நன்றிகள் வெங்கட்.
நீக்குகோ
அதிர்ச்சிப் பதில் கேட்க தொடர்கிறோம்
பதிலளிநீக்குபதில் கேட்க காத்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே.
நீக்குகோ
கோ! இது எந்த அன்னையைப் பற்றி?!!! என்னென்னவோ ஊகங்கள் தோன்றுகிறதே....ஆனால் நீங்கள் பிறந்தது முதல் அறிந்திருக்கும் என்று சொல்லியிருப்பதால் இது நாங்கள் யூகிக்கும் அன்னையல்ல அவர் நலமுடன் இருக்கிறார் என்று மனது சமாதானமடைந்து தொடர்கிறோம் நீங்கள் சொல்லும் அதிர்ச்சியை அறிய...
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.
நீக்குஅவர் அல்ல இவர்.
தொடருங்கள்..
கோ