பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ஆஹா..ஆகஸ்டு 14!

"வாழ்த்துவோம்."

நண்பர்களே,

ஆகஸ்டு மாதம் , நமது தேசிய அளவில், மகிழ்ச்சிக்குரிய ஒரு மாதம் என்றால் அது மிகை அல்ல.

என்னதான் நம் நாட்டில் சொல்லொண்ணா துயரங்களும் ,வேதனைகள் , வறுமை , தில்லு  முல்லுகள்  நிறைந்திருந்தாலும்,  நம்மை மகிழ் நிறை மாதமாக கருத வைக்கும் மாதம் இந்த ஆகஸ்டு மாதம்.

அதற்கு காரணம் நாம் அடைந்த சுதந்தரம் எனும் உரிமை திருநாள் ஊடுருவி இருப்பது இந்த ஆகஸ்டு மாதத்தில்தான்.

என்னதான் இல்லை என்றாலும், நமது நாடு, நமது மண், நமது பண்பாடு, நமது உணவு, நமது கலாச்சாரம் நமது மதம், நமது மொழி என்று சுதந்தரமாக செயல்பட வைக்கும் இந்த உரிமை திருநாள் நமக்கு கிடைக்க பெற்ற மாதம் இந்த ஆகஸ்டு மாதம்.

நமது மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கு இந்த ஆகஸ்டு மாதம் காரணமாக இருந்தாலும்  மேலும் ஒரு கூடுதல் காரணம் இந்த ஆகஸ்டு மாதத்தை மகிழ் நிறை மாதமாக மாற்றும் என்ற நேர்மறை எண்ணங்களை நமது மனதில் விதைத்து செல்லும் மற்றுமொரு காரணமும் உண்டு.

ஆகஸ்டு 15 சுதந்தர திருநாள் என்பதை அறிவோம், ஆனால் ஆகஸ்டு 14 என்ன தினம்?   யாருக்கேனும் தெரியுமா?

பலருக்கு பரவலாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

நீங்கள் வேறு ஏதேனும்நினைப்பதற்குமுன் நானே சொல்லிவிடுகிறேன்.

இன்று பதிவர் லட்சுமி பசுபதி அவர்கள் http://pasug.blogspot.co.uk/2016/08/blog-post_6.html எழுதி இருந்த ஒரு பதிவை படிக்க நேர்ந்தபோது , என் உள்ளமெல்லாம் மகிழ்ந்தது.

அதாவது, பல வருடங்களுக்கு முன் தன் அறிய கண்டுபிடிப்பை வெளியரங்கமாய் பெரிய அளவில் பிரபலப்படுத்தி அதற்கான அங்கீகாரம் பெறுவதற்குப்பதில் பலவிதமான கேலி, சிரிப்பு பரிகாசங்களுக்கு- அவமானங்களுக்கு ஆளான நமது மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அவர்களை குறித்த ஒரு பதிவுதான் அது.

வருகின்ற ஆகஸ்டு 14 ஆம்   தேதி அன்று தமது அறிய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலை பத்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் வீதம் சாமானிய மக்களுக்கு கிடைக்கும்பொருட்டு தமது உற்பத்தியை தொடங்கப்போவதாக அவர் செய்துள்ள அறிவிப்பே எனது மகிழ்ச்சிக்கு காரணம்.

அவருக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகம் கொண்டாடப்போகும் மூலிகை ராமர் பிள்ளைக்கு உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கோயில் பிள்ளையின் வாழ்த்துக்கள்.

எனக்கு தெரிந்து இந்த ஆகஸ்டு 15 அன்று சுதந்திர திருநாளும் எனது சகோதரியின் பிறந்தநாளும் என்று இத்தனை காலமாக இருந்த எனக்கு, இனி இந்த ஆகஸ்டு 14 ஆம் தேதியும் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாளாக அமையும் என்று நம்புகின்றேன்.

இனி ஆகஸ்டு 15 ஐ மறந்தாலும் 14 ஐ மறக்கமுடியாத நாளாக மாற்றப்போகும் இந்த மூலிகை பெட்ரோலின் வருகை, பொருளாதார முன்னேற்றமட்டுமின்றி, இயற்கை மற்றும்   சுற்றுப்புற  மாசு கட்டுப்பாட்டிலும் நமக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்..  

அதேபோல உங்களுக்கு இந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி மேற்சொன்ன விஷயம் தவிர தனிப்பட்ட விதத்தில் வேறு ஏதேனும் சிறப்பு நிகழ்வுகள் குறித்த மகிழ்ச்சி உண்டென்றால் அதையும் சேர்த்து கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் ஆகஸ்டு 14 மற்றும் 15 ஆம் நாட்களுக்கான  நல்  வாழ்த்துக்கள்.

"இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்கவில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே எவருக்கும் திருப்பி கொடுக்க."


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கரந்தையாருக்கு, நன்றியும் வணக்கங்களும்.

      வாழ்த்துவோம் இணைந்து.

      கோ

      நீக்கு
  2. வணக்கம்,

    ராமர்பிள்ளையின் ஆராய்ச்சிக்கு கோயில்பிள்ளையின் வாழ்த்துக்கள்,,, நாங்களும்,,

    15 ஆம் நாள் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சுகாதாரம்,, மாசுகட்டுப்பாடு என 14 ஆம் நாள் திகழும் எனில் அந்நாளும் நாம் கொண்டாட வேண்டிய நாளே,,
    கவிதை வரிகள் அருமை,, தங்கள் பதிவில் படித்த நினைவு,,

    நன்றி நன்றி அரசே,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வணக்கம், வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. வணக்கம் நண்பரே திரு. ராமர்பிள்ளைக்கு என்றோ அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டியது காலதாமதம்.
    நான் ஏற்கனவே இவரைக்குறித்து பதிவு எழுதி இருந்தேன்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      அவரது கண்டுபிடிப்பு பயனளிக்கட்டும்.

      நன்றியும் வணக்கங்களும்.

      கோ

      நீக்கு
  4. அட! ராமர்பிள்ளையைப் பற்றிய பதிவு. நாங்கள் கூட சில நாட்களுக்கு முன்னர் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். என்னாயிற்று என்று...மீண்டும் மூலிகைப் பெட்ரோலைக் கொண்டு வரப் போகிறாரா...பாராட்டி வாழ்த்துவோம் அவரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி ஒரே மாதிரியான சிந்தனை ?

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. திரு ராமர் பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே

      வருகைக்கு மிக்க நன்றிகள் ..ஆம் வாழ்த்துவோம் சேர்ந்தே.

      கோ

      நீக்கு
  6. என்ன திடீரென்று...
    முன்பு சோதனையில் அது போலி என
    நிரூபிக்கப்பட்டதாக் எல்லாம் வந்த ஞாபகம்
    எது சரி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா,

      எனக்கும் அப்படிதான் நினைவு ஆனால் இப்போது இப்படி ஒரு செய்தி வந்ததால் மகிழ்சியே.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு