ஜனங்களின் ராஜா!
நண்பர்களே,
திடீரென்று நாம் அறிந்த ஒருவர்பற்றி என் மனதில் இனம் கானா ஒரு இன்ப நினைவு அலை இதமாக வீசிச்சென்றதன் விளைவாக விளைந்ததே இந்த பதிவு.
நம்மில் பலருக்கு ஒரு சிலரது முகங்களை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை.
அதிலும் நம் எல்லோருக்கும் தெரிந்த பொதுவான சில பிரபலங்களின் முகங்களை காண விரும்புவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.
அந்த வரிசையில் இன்றளவும் நமது சமகால மனிதர்களாய் அரசியல், கலை , சமூக சேவை போன்ற துறைகளில் பிரபலமடைந்தவர்களை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நாம் மிகுந்த சந்தோஷம் அடைவோம்.
அதே சமயத்தில் அவர்கள் எத்தனைதான் பிரபலங்களாக இருந்தாலும் ஒரு சிலரின் முகங்களைமட்டுமல்ல அவர்களின் நினைவுகள் கூட நமக்கு அருவருப்பை ஏற்படுத்தும் என்பதும் உண்மையே.,
ஆனால் இங்கே நான் குறிப்பிடும் நபர் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு மனிதராக இருப்பார் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை.
இவர் கலை உலகை சார்ந்தவர். பல திரைப்படங்களில் தோன்றி நம்மை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்தவர்.
அவரின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அவரது தோற்றமும், முக பாவனையும் நம்மை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தியவையாகவே அமைந்தன என சொன்னால் அது மிகை அல்ல.
திரை படங்களில் அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள் நகைசுவை மிளிரும் துணை பாத்திரங்களும் சில படங்களில் வில்லன் கதா பாத்திரங்களும் சில படங்களில் குணச்சித்தர பாத்திரங்களும் ஏற்று நடித்திருந்தாலும் நகைசுவை பாத்திரங்களே நம் மனதில் அவரை குறித்து ஒரு அன்பையும் அபிமானத்தையும் உருவாக்கியவை.
இவர், கே. பாலச்சந்தர், வி கே ராமசாமி, ஜெய்ஷங்கர், நாகேஷ் சிவகுமார், கமல், ரஜினி, பாரதிராஜா, மணிவண்ணன்,சத்தியராஜ், மணிரத்தினம், சுரேஷ் கிருஷ்ணா, போன்ற திரையுலக பிரபலங்களோடு இணைந்து திரையுலகிற்கு பலம் சேர்த்தவர்.
அத்தகைய மனிதரை சில காலங்களாக திரையில் மட்டுமல்லாது செய்திகளிலும்கூட காண முடியாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமே.
அவரை மீண்டும் திரையிலோ அல்லது தொலை காட்சி தொடர்களிலோ, நிகழ்ச்சிகளிலோ பார்க்கவேண்டும் என்று என் மனம் பரபரக்கின்றது.
சரி யார் அந்த பிரபலம்?
நேரடியாக சொல்லாமல் அவரது ஒரு சில வசனங்களை சொன்னாலே எல்லோரும் ஏக மனதாக சுட்டிக்காட்டும் கெட்டிக்கார நடிகர் அவர்.
"தங்கச்சிய நாய் கச்சிட்சிப்பா......"
"என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா......"
ஆம் நண்பர்களே, ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் ஜுனியர் கிளார்க்காக சேர்ந்து கலை தாகத்தால் மேடை நாடகம் அதை தொடர்ந்து திரை துறையில் கால் பதித்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து நம்மை மகிழ்வித்த நடிகர் மதிப்பிற்குரிய திரு.ஜனகராஜ் அவர்கள்தான்.
சீனியர் மற்றும் ஜுனியர் திரை இயக்குனர்கள், திரை மறைவில் மறைக்கப்பட்டிருக்கும் அவரை - அவரது திறமையை மீண்டும் திரைக்கு முன்னால் அழைத்துவந்து நமக்கு மகிழ்வளிக்கவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக வேண்டுகிறேன்.
மீண்டும் அவர் திரையில் தோன்றும் நாள் எப்போது என உங்களை போன்று நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
அவர் சுகமுடனும் இருக்க என் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
ஆண்பாவம் படத்தில் அவரது நகைச்சுவை மீண்டும் மீண்டும் ரசித்திருக்கிறேன்.....
பதிலளிநீக்குஏனோ இவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்கிற தகவல் கூட இல்லை! நல்ல கலைஞர்.
நன்றி வெங்கட் தங்களின் வருகைக்கு.
நீக்குகோ
நல்ல நடிகர்! அவருக்கு உடம்முபுக்கு முடியவில்லை என்று எங்கேயோ படித்ததாக நினைவு.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றிகள் பல.
நீக்குகோ
ஆனாலும் பாருங்க கோ.. இவருக்கு நம்மை விட ரொம்ப தைரியம். நாமும் தான் காலை உலக தாகத்தில் இருந்தோம். இருந்தாலும் இந்த கணக்கு பிள்ளை உத்தியோகத்தை விட மனசில்லாமல் தைரியம் இல்லாமல் வாழ்ந்திட்டோம்.
பதிலளிநீக்குஇதனை வருடம் கழித்து இன்றும் நான் யோசிக்கும் ஒரு காரியம்...
நாம் மட்டும் 1987 ல் அந்த குறும்படத்தை எடுத்து இருந்தோமென்றால்...
ம்........
நீக்குI UNDERSTAND THAT JANAGARAJ HAD SETTLED IN ABROAD....
பதிலளிநீக்குThanks for your visit and information.
நீக்குஉங்களுடன் நாங்களும்...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஐயா.
நீக்குகோ
ஜனகராஜின் சிரிப்புக்களை மறக்க முடியுமா? திரையுலகம்தான் அவரை மறந்துவிட்டது!
பதிலளிநீக்குஏனோ தெரியவில்லை.
நீக்குகோ
ஜனகராஜ் அவர்கள் தன் மகனுடன்
பதிலளிநீக்குவெளி நாட்டில் வசிப்பதாகக் கேள்விப்பட்ட
ஞாபகம்
அப்படித்தான் தோன்றுகின்றது பலரது பதில்களில் இருந்து.
நீக்குவருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா.
கோ
ஜனகராஜைப் பற்றி எந்த செய்தியும் பல வருடங்களாக வாசித்த நினைவு இல்லையே..நல்ல கலைஞர்...ஏனோ அவரைப்பற்றித் தகவல்கள் எதுவுமே இல்லை....எங்கிருந்தாலும் வாழ்க!
பதிலளிநீக்குஎங்கிருந்தாலும் வாழ்க அவர்.
நீக்குஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காவது வரவழைத்திருக்கலாம்......
கோ