பின்பற்றுபவர்கள்

புதன், 24 ஆகஸ்ட், 2016

வழிவாய்க்கால்= வழி+வாய்+கால்

நேரா போய் லெஃப்ட் அப்புறம் ரைட்டு ...

நண்பர்களே,

சில நாட்களாக நான் ஊரில் இல்லாததாலும்  அதே சமயத்தில் ஊரில் இருந்ததாலும் உங்களோடு பதிவினூடாய் பரஸ்பரம் பகிரமுடியாமல் போனது.

அதென்ன ஊரில் இல்லாதது - ஊரில் இருந்தது?

அது ஒன்றுமில்லை, வழக்கமாக நான் வசிக்கும் ஊரில் இருந்துதான் பதிவுகள் எழுதுவது வாடிக்கை, ஆனால் கடந்த சில நாட்களாக வேறு ஒரு ஊருக்கு  சென்றிருந்ததால் நாட்டு நடப்புகளையும் நல்ல பல செய்திகளையும் அறியவோ அல்லது எழுதவோ முடியாமல் போனது.

அப்படி நான் எந்த ஊருக்கு  சென்றேன் அங்கே எந்தெந்த இடங்களுக்கு பயணப்பட்டேன்   என்பவற்றை  சொல்வதற்கு இந்த பதிவை பயன்படுத்திக்கொள்கிறேன்.

பொதுவாக எங்கேயேனும் புதிய இடங்களுக்கு செல்வதாயிருந்தால் முன் கூட்டியே வழி வாய்க்கால் எல்லாம் அறிந்திருந்தால் பயணம் இலகுவாகும்.

அப்படி ஒருவேளை எல்லாமே புதிதாக இருக்குமேயானால், வழி வாய்க்கால் பார்த்து பத்திரமாக போகணும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

ஆனால், நான் போய் தங்கி இருந்த அந்த ஊரில் ஒவ்வொரு முறையும் வழி வாய்க்கால் தெரியாமல் தட்டு தடுமாறி - தடம் மாறி பயணிக்க வேண்டி இருந்தது.

ஏனென்றால் நான் போயிருந்த அந்த ஊரில் வழியெல்லாம் வாய்க்கால்களாகத்தான் இருந்தன.  

வழிகள்  எல்லாம் வாய்க்கால்களாக இருந்தது மட்டுமல்லாமல்   எல்லா வழியும் வாய்க்காலும் ஒரே  மாதிரியாகவும்  இருந்தன.

இப்போ நான் நேராக சென்று மூன்றாவது லெப்ட்ல  திரும்பி  நாலாவது ரைட்ல வளைந்து மீண்டும் ரெண்டாவது லெப்ட்லதிரும்பி நேராக சென்றால் ஒரு ஐந்து நிமிடபயணத்தில் இலக்கை அடையலாம்னு ஒருவர்  சொன்னார்.. 

இப்படி ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்லவேண்டுமாயின் வாய் திறந்து யாரிடமாவது வழி கேட்டுக்கொண்டே கால் நடையாக நடக்கணும் அல்லது வாய்க்கால்(??) வழியாக செல்லணும்.

அப்படி எந்த ஊருக்கு போய் இருந்தீர்கள் என்றுதானே கேட்கின்றீர்கள்?

சொல்லாமல் விடுவேனா?

கொஞ்சம் இருங்கள், ஒருவழியாக சரியான வழியை தேடி கண்டுபிடித்து திரும்பி வந்தபிறகு சொல்கிறேன் அடுத்த பதிவில்.

அதுவரை பொறுமை ப்ளீஸ். 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

4 கருத்துகள்:

  1. வெனீஸ் என்று தெரிந்து விட்டது இதனை முதலிலேயே பார்த்தும் ...பின்னர் எல்லாம் வாசித்துவிட்டு மீண்டும் இங்கு....வெனிஸ் அருமையான ஊர் ம்ம்ம்ம் என்ன நேரில் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்கிறீர்களா.....ஹஹஹஹ் எல்லாம் கனவுப் பிரதேசங்கள்தான்....

    வாய்க்"கால்" சரிதான்...வாய் வழி கேட்டு கால் போகுமே இடத்திற்கு...இது எப்புடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. அதானே, உங்களுக்கு தெரியாமல் போகுமா?

      வருகைக்கு நன்றிகள்.

      கோ

      நீக்கு