பின்பற்றுபவர்கள்

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வாகை சூடும் உன் வாசல் தேடும்....

உணர்வின் மொழி!.

நண்பர்களே,

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நான் எழுதி இருந்த எனது அனுபவ பதிவான, முதல்வர் முன்னிலையில்  கோவின் மேடைபேச்சு எனும் தொடரின் நான்காம் பாகம் படித்தவர்களில் ஒருசிலர் அனுப்பிய பின்னூட்டம் உணர்வுபூர்வமாக , மொழி பற்றின் வெளிப்பாடாக அமைந்திருந்தன.

அவற்றில் சிலவற்றை அவர்களின் பெயரிலேயே உங்களின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டுவருவது எனது மானசீக கடமையாகவும் தார்மீக பொறுப்பெனவும் கருதி இதோ இங்கே ஒரு பதிவாக நன்றி பெருக்கோடு வெளியிடுவதில் உள்ளம் மகிழ்கின்றேன்.

சகோதரர்  திண்டுக்கல் தனபாலன்.

"இரண்டு முறையை விட இந்த மூன்றாவது முறை ஏறிய மேடையை, எங்களால் மறக்கவே இயலாது... நம்பிக்கை பேச்சு... வாழ்த்துகள்... பாராட்டுகள்..."

அருமைத்தம்பி திருப்பதி மகேஷ்:

கோயில்பிள்ளையின் செதுக்கல்கள் எனும் தலைப்பில் www.koilpillaiyin.blogspot.com எனும் வலை தளத்தில் அவ்வப்போது நான் எழுதும் சில பதிவுகள் உள்ளன, நேரம் இருந்து விருப்பமும் இருந்தால் தளம் சென்று பார்த்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.////

ஹா.ஹா.ஹா ப்லாக் விசிடர்ஸ் கூட்ட ஓசி விலம்பரமோ:))) அவ்வ்

நான் தமிழை மறக்ககூடாது என்பதைவிட "தமிழ் என்னை மறந்துவிட கூடாது"//

சார், உங்கள் மொழிப்பற்று... ஸ்ஸ்ஸப்ப்பாஆ முடியல:)

என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.///

அம்பிட்டுதான் பேச்சா? சும்மா ஒரு டவுட்டு:)
***

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருந்திச்சு.

முனைவர் திருமதி. மகேஸ்வரி பாலச்சந்திரன்:

வணக்கம் அரசே,

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,

அஹா எவ்வளவு அருமையான உரை, மாணவர்களுக்கு பயன்படும் என்று என்னால் சாதாரணமாக சொல்லிவிட முடியல,

தங்கள் அனுமதி வேண்டும் முதலில். என் பின்னூட்டம் ஒரு வேளை நீண்டு போனால் அதை வெட்டிவிடாதீர்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு கட்டாயம் இது போன்ற நாட்டுப் பற்று மிக்க வீர உரைகள் அவசியம் தேவை என்பது என் துணிவு. காரணம் நாம் எல்லாவற்றையும் ஒரு மேம் போக்காகத்தான் பார்க்கிறோம். தலைவர்கள் பட்ங்களைக் காட்டி பெயர் கேட்டால் இன்றைய கல்லூரி மாணவர்கள் பெரும்பாலோர் பதில் தெரியல என்பது தான்.

மொழிப் பற்றும் அப்படித் தான்,, தாய்மொழி என்பது ஒப்புநோக்க கூடியது அல்ல, எவன் ஒருவன் தன் தாய்மொழி வாயிலாக முறையான கல்வி கற்கிறானோ அவனே அனைத்து துறையிலும் சாதிப்பான் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் நாம் வேலைக்காக ஒரு மொழியைப் படிப்பதற்கு என்ன என்ன காரணங்கள் சொல்கிறோம். வேலை வேண்டும் என்பதற்காக நம் தாயை நாம் விலக்கி விடுவோமா? ( முதியோர் இல்லம் பற்றி பேச வேண்டாம், அதுவும் பொருளாதாரம் சார்ந்ததே), மொழியும் அப்படி தான், நமக்கு மொழிபற்று அவசியம் வேண்டும். வேறு என்னவெல்லாமும் நான் படித்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், தவறில்லை.

பசிக்கும் போது சாப்பிட வேண்டும் எனத் தோன்றும் உணர்வு போல் தான் மற்ற மொழிகள் பயன்பாடு,,,,,

மேலும் நம் பண்பாடு, பழக்கங்கள் இவைகளும் இன்று மாறி வருகின்றன. இவைகளையும் நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.

என்னைப் பொறுத்தவரை கல்லூரிகளில் சிறப்பு உரையாற்ற வெளியில் இருந்து பெரும் தலைவர்களை அழைக்காமல், பழய மாணவர்களை அழைத்தாலே இன்றைய மாணவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என்பது உண்மை.

ஆம் படித்தவர்களுக்கும் பெருமை, மாணவர்களும் நாம் அவரைப் போல் நன்றாக வர வேண்டும் என்பது உறுதி,

உண்மையிலே பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சியையும் நம் குடும்பத்தில் மிகுந்த மரியாதையையும் ஏற்படுத்தும் என்பது தங்கள் மன உணர்வுகளில் இருந்து புரிந்துக்கொள்ள முடிகிறது,

எனக்கும் மிகப் பெரிய ஆசை உண்டு,,,,

தங்கள் கல்லூரி முதல்வருக்கு ஒரு சிறப்பு வணக்கத்துடன் கூடிய நன்றிகள் எம் சார்பாக சொல்லிவிடுங்கள், நல்ல மனிதரை பெருமைப்படுத்திய உயர்உள்ளம்.

இன்னும் நிறைய இருக்கு,, ஆனால் தாங்கள் படிக்க கஷ்டப்படக் கூடாதே என்று இத்துடன் என் உரையை அய்யோ என் எழுத்தை நிறைவு செய்கிறேன்.

திருமிகு. துளசிதரன் தில்லையகத்து:

ஆஹா அருமை கோ! உங்கள் பேச்சுரை. இப்படிப் பழைய மாணாக்கர்களையும் அழைத்துப் பேசவைப்பது இப்போது பயிலும் மாணவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். தங்களது பேச்சும் அவர்களைச் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மொழிப்பற்று மிக மிக அவசியம். ஏனென்றால் பிற மொழிகளைக் கற்க தாய்மொழி அவசியம் என்பதும் அப்படிக் கற்கும் போது உணர்வுபூர்வமாகவும் உள்வாங்க முடியும் என்பதும் எங்கள் கருத்து.

பிற மொழிகளை எளிதாகக் கற்க தாய்மொழி மிக மிக அவசியம். ஆனால் தமிழ் பிள்ளைகள் வட இந்தியா செல்லும் போது அவர்களுக்கு இந்தி மொழி தாய்மொழியாக மாறிவிடுகின்றது வட இந்தியா என்பதை விட பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது அந்த மாநிலத்தின் மொழி இரண்டாம் பாடமாக இருப்பதால் அம்மொழி தாய்மொழியாகி பிற மொழிகளைக் கற்க அந்தமொழியின் வழிதான் கற்கின்றார்கள்.

தாய்மொழி தவிர யதார்த்தத்தில் பார்க்கும் போது ஆங்கிலம் மிக மிக அவசியமாகின்றது ஆங்கிலம் சரிவரக் கற்க வேண்டும் என்றால் தாய்மொழி அவசியம். இக்காலக்கட்டத்தில் ஆங்கிலம் இன்றியமையாத மொழியே தாங்கள் சொல்லியிருப்பது போல.

தாய்மொழி, ஆங்கிலம் தவிர வேறு பல மொழிகள் தெரிந்து கொள்வதில் தவறே இல்லை எனலாம்.

தாய்மொழிப் பற்று தவறு இல்லை அது வெறியாக மாறாது இருக்கும்வரை....

நீங்கள் நல்ல மேடைப் பேச்சாளர் என்பது தங்கள் பரிசுகள் சொல்லுகின்றன...அது சரி நல்ல பாடகரும் கூடவா? ஆஹா அதற்கும் பரிசு எல்லாம் பெற்றிருக்கின்றீர்கள் போல...

பன்முகத் திறமையாளராக இருப்பதற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்...

அன்பு சகோ. அனிதா சிவா:

அருமை.இன்னும் பல மேடைகள் காண வாழ்த்துக்கள் சகோதரரே. 


நண்பர்களே,



இவையாவும் எனது சுய தம்பட்டத்திற்காக அல்ல, நம் தாய் மொழியின் சிறப்பு கருதியும் பதிவு வாசகர்களின் மனதில் இதமுடன் வருடி பதித்த வடுக்களையும் பின்னூட்டமாக அளித்த  , பதிவினை வாசித்த அனைவருக்கும் எமது  நன்றியை வெளிப்படுத்தவே.


வாய்ப்புள்ளவர்கள் மீண்டும் வசித்துப்பார்க்கலாம் "முதல்வர் முன்னிலையில்  கோவின் மேடைபேச்சு" அனைத்து பாகங்களையும், அனுமதி இலவசம்!!

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


8 கருத்துகள்:

  1. பின்னோக்கி ஓடிய பின்னூட்டங்களின் நினைவோட்டம் அருமை நண்பரே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளை படித்து முன்னோட்டம் அளிப்பதோடு முன்னோட்ட பகிர்வையும் படித்து முன்னோடிவந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பா.

      கோ

      நீக்கு
  2. படிக்காமல் விட்டுப்போனது
    என நினைக்கிறேன்
    பின்னூட்டங்கள் வெகு சிறப்பு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. பின்னூட்டங்கள் மூலமாக பல புதிய கருத்துகளைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ஐயா.

      கோ

      நீக்கு
  4. அட! நாங்களும் இங்கே!!!! பின்னூட்டம் இட்டவர்களையும் நினைவு கூர்ந்து இப்படிக் குறிப்பிடுவதும் கூட நல்லதொரு சிந்தனை...மிக்க நன்றி கோ அவர்களே

    பதிலளிநீக்கு
  5. அன்பிற்கினிய நண்பர்களே,

    தங்களை போன்றோரின் பின்னூட்டம் தானே என்போன்றோருக்கு உந்துசக்தியாக அமைகிறது உள்ளத்தில் உதிப்பவற்றை எழுத்தில் பிரதிபலிக்க.

    தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு