பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 அக்டோபர், 2015

"(அ)பேஸ் புக் ஆசாமிகள் "


வீடு காலி (ஒன்றும்) இல்லை !

நண்பர்களே,

நாகரீகத்தின் முகவரி கிடைக்கும் முன் மனிதன் , விலங்குகளை வேட்டையாடி அவற்றின் பச்சை மாமிசங்களை உண்டான் என்றும்,காடுகளிலும்
, மலைகளிலும், மரங்களிலும், குகைகளிலும் வாழ்ந்தான் என்றும், ஆடை என்பதை பலகாலம் அறியாமல், பின்னர் மர பட்டைகளையும், இலைகளையும் அதன் பின்னர் வேட்டையாடி உண்ணப்பட்ட விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்தான் என்றும் நாம் வரலாற்று குறிப்புகளிலும், சமூகவியல் பாடங்களிலும் படித்து தெரிந்துகொண்டிருக்கின்றோம்.

பின்னர் மனித நாகரீக வளர்ச்சியின் பரிணாம முழுமையாக கருதப்படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றுள்  அடிப்படையான மூன்று முக்கிய விஷயங்கள் இன்றியமையாதவைகளாக கருதபடுகின்றன.

அவை நாம் அறிந்த வண்ணம், நன்றாக வேகவைத்து சமைக்கப்படும் உணவு,சீதோஷன தட்ப வெப்ப கால மாற்றங்களுக்கேற்ப மாற்றி மாற்றி அணிந்து கொள்ளகூடிய பாதுகாப்பான ஆடைகள், அதற்கடுத்து,  மழை , வெயில், புயல், குளிர் , வெள்ளம் போன்ற இயற்க்கை மாற்றங்களின் பாதிப்புகளில் இருந்தும், கொடிய விலங்குகள், விஷ  ஜந்துக்களின் தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துகொள்ளவும் ஒரு பாதுகாப்பான உறைவிடம்.

இந்த மூன்று விஷயங்களும் முக்கியம் என்றாலும் அவற்றுள் மிக மிக மிக அத்தியாவசியமாக கருதப்படும் உணவிற்கு அடுத்து மனிதன் முக்கியமானதாக கருதப்படுவது உறைவிடமாகிய வீடு என்று சொன்னால் அது மிகையல்ல. இன்னும் சொல்லப்போனால் உணவை பற்றிகூட அவ்வளவாக கவலைபடாதவன் வீட்டையே தனது பிதானமான தேவையாக கருதுவதால்தான் பயிர் விளைய வேண்டிய பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் இன்று வீடுகள் முளைக்கும் பூமியாக மாறிகொண்டிருக்கின்றன. இதிலிருந்தே தெரிகிறது மனிதன் உணவை விட வீட்டையே முக்கியமாக கருதுகின்றான் என்று.

சரி, அப்படி  ஒரு நல்ல வீடு கிடைத்துவிட்டால்  அங்கே அவன் நிம்மதியாக தலை சாய்த்து   இளைபாருவான். 

இதில் சொந்தமாக வீடுகட்டி வாழ்பவர்களைவிட வாடகைக்கு வீடெடுத்து குடியிருப்பவர்கள் அடையும் மன நிம்மதி கொஞ்சம் குறைவுதான், எனினும் , வாடகை வீட்டில்குடியிருப்பவர்களுக்கான அனுகூலம், விரும்பும்போது வீட்டை காலிசெய்துவிட்டு,வேறு வீட்டிற்கு குடியேறலாம்.

சொந்த வீடு கட்டி குடியிருப்பவர்களின் சுற்றுப்புற சூழல், வசதி வாய்ப்புகள் ஓரளவிற்கு ஒரு வறை முறைக்கு உட்பட்டதாகவே இருக்கும், ஆனால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், உத்தியோகம், பிள்ளைகளின் பள்ளிக்கூடம்,போக்குவரத்து வசதி,குடிதண்ணீர் வசதி,கடை தெருக்கள் ,(மின்சார வசதி), மருத்துவமனை வசதிகள் எங்கு நல்லபடியாக - ஏற்றதாக சாதகமாக இருக்கின்றதோ அந்த பகுதிக்கு தங்கள் குடியிருப்பை  மாற்றி கொள்ளல்லாம்.

அதே சமயத்தில் அப்படி அடிக்கடி வீடு மாறிகொண்டிருப்பதிலும் ஒரு சிரமம் இருக்கத்தான் செய்கின்றது.  முதலில் வீட்டு வாடகையில் ஏற்றம்,புதிய அண்டை வீட்டுக்காரர்கள், புதிய வீட்டுக்காரர்,(நான் ஹவுஸ் ஓனரை சொல்கிறேன்)

இவை எலாவற்றையும் காட்டிலும் பிரத்தியேகமாக இருக்கும் சிரமம்,பழைய வீட்டில் இருந்து நமது அனைத்து, சாமான்களையும் புதிதாக குடியேறும் வீட்டிற்கு கொண்டு சென்று அவற்றை எந்த இடத்தில் எதை வைப்பது என்று யோசித்து , மாற்றி மாற்றி வைத்து செட்டில் ஆவது என்பதுதான் சிரமங்களின் சிகரமாக பெரும்பாலோருக்கு தோன்றும்.

அப்படி கொண்டு செல்லப்படும் பொருட்களை சேதமின்றி கொண்டு செல்வதும் ஒரு பெரும்பாடுதான்.முக்கியமாக , பீரோ, கட்டில் மெத்தை நாற்காலிகள், சோபாக்கள்,துணிமணி,சமையல் பாத்திரங்கள்,மின் விசிறிகள் போன்றவற்றை கூட ஓரளவிற்கு சேதமின்றி கொண்டு சென்று விடலாம், அனால், இந்த டிவி , ப்ரிட்ஜ் , வாஷிங் மிஷின்,மைக்ரோ ஓவன்,மீன்தொட்டி,கண்ணாடி பொறுத்தபட்டிருக்கும் டிரெஸ்ஸிங் டேபிள் மேசை கணினி ,மடி கணினி,சுவர் கடிக்காரம் போன்ற கவனம் அதிகம் செலுத்தி சிரத்தையோடு கையாளப்பட வேண்டிய பொருட்களை , ஆடாமல், அசையாமல், பந்தோ பஸ்த்தாக பேக் செய்து கொண்டு செல்வது என்பது மிக மிக சவாலான ஒன்றுதான்.

இப்போதெல்லாம் அப்படி வீடு மாற்றும்போது, நமக்கு தேவையான வேலைகளை செய்யவும் நமது பொருட்களை பக்குவமா உரிய இடத்தில் சேர்ப்பதோடு எந்த பொருட்களை வீட்டின் எந்த அறையில் வைக்கவேண்டும் என்று நாம் முன்னரே சொல்லி அதற்க்கான குறிப்புகளை அந்தந்த பொருட்களின் மீது எழுதி ஒட்டிவிட்டால், அதற்க்கு ஏற்றார் போல அந்தந்த  இடங்களில் சேதமின்றி கொண்டு சேர்க்க டெலிவரி வண்டிகளோடு கூடிய ஆட்களும்  ,ஏஜென்சி களும்   இருக்கின்றனர்.

இங்கே,இங்கிலாந்தில் அத்தகைய வேலை செய்பவர்கள்  , "மூவர்ஸ்" என்றும்,"மேன் வித் வேன்", "ரிமூவல்  சர்விஸ்" என்றும் தங்களை விளம்பர படுத்திகொள்கின்றார்கள்.

Image result for pictures of removal vans
courtesy - Google image  

அப்படித்தான் இங்கே இரண்டு நாட்களுக்கு முன் ஒரு இளந்தம்பதியினர் தமது கைக்குழந்தையுடன் தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு, புதிதாக ஒரு பிளாட்டுக்கு குடிபுகவேண்டி தமது எல்லா உடமைகளையும் மூட்டைகட்டி, அவற்றை புதிய வீட்டுக்கு கொண்டு செல்ல , சமூக வலைதளமாகிய  பேஸ் புக் தளத்தின் வாயிலாக ஒரு நிறுவனத்தை தொடர்புகொண்டு தங்கள் உடமைகளை புதிய இடத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருந்தனராம்.

குறித்த நாளில் அந்த நிறுவனத்தின் இரண்டு ஆட்கள் வந்து மிக மிக சுறு சுறுப்பாக அதே சமயத்தில் வேகமாக வீட்டில் இருந்த பொருட்கள்(வீட்டுக்காரர்கள் அணிந்திருந்த ஆடைகள்தவிர) எல்லாவற்றையும் பக்குவமாக வேனில் ஏற்றிவிட்டு குறிப்பிட்ட  புதிய விலாசத்தை பெற்றுக்கொண்டு சென்றிருக்கின்றனர்.

சிறிது நேரம் கழித்து, (ராகு, காலம், எம கண்டம், நல்ல நேரம், எல்லாம் பார்த்துவிட்டு????)  தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் காரில் சென்று இருக்கின்றனர்.

இவர்கள் வீட்டை அடைந்து வெகு நேரமாகியும் இவர்களுக்கு பலமணி நேரத்திற்கு முன்பே புறப்பட்டு சென்ற அந்த வேன் இன்னும் வந்து சேரவில்லை.

நேரம் அதிகமாக அதிகமாக பொறுமை இழந்த அவர்கள்,அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொள்ள, அந்த அழைப்பு போகவில்லை.  சரி, அவர்களை பேஸ் புக் முகவரியில் தொடர்புகொள்ள தனது மொபைல் போனில், அந்த நிறுவனத்தின் தளத்தை தேடினால் அதுபோன்ற ஒரு நிறுவனம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் அந்த சமூக வலை தளத்தில் இல்லையாம்.

பெருத்த அதிர்ச்சியும் மன உளைச்சலும் கொண்ட அவர்கள் இருதயம் சுக்கு நூறாக உடைந்தவர்களாக , வாழ்க்கையில் அன்றுவரை  எதற்கும் அழாதவர்கள், தாங்கள் இத்தனை காலம், சிறுக சிறுக சேர்த்துவைத்த அனைத்து உடமைகளையும் இழந்தவர்களாக கதறி அழுத காட்சி பார்ப்போரின் நெஞ்சங்களையும் பதைபதைத்திருக்கின்றது.

இப்படி முன் பின் தெரியாத ஒரு போலி நிறுவனத்தால் களவாடபட்ட அனைத்து பொருட்களையும் நாங்கள் எந்த பாடு பட்டாவது மீண்டும் வாங்கிவிடமுடியும், ஆனால், களவாடப்பட்ட பொருட்களுள் சில எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவையும் அடங்கி இருக்கின்றன. அவை மதிப்பிட முடியாதவை.

அவற்றுள்  தனது காதல் கணவன் ,எனக்கு அன்போடு அணிவித்த நிச்சயதார்த்த மோதிரம் ஒன்று, பின்னர் என் குழந்தைக்கு சமீபத்தில் காலமான என் அன்னையார் பரிசளித்த முதல் பொம்மை.

கேட்கவே பரிதாபமாகவும் மிகவும் மனவருத்தமாகவும் இருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து, எங்களை போல வேறு யாரும் ஏமாறாமல் தீர விசாரித்து தெரிந்தவர்கள் மூலம் ஆட்களை ஒப்பந்தம் செய்வது நல்லது என்னும் அறிவுரையையும் வழஙகி இருக்கும் அந்த தம்பதியினர் இந்த இரண்டு விலை மதிப்பற்ற பொருட்கள் தவிர்  தாங்கள் இழந்த பொருட்களின் மதிப்பு இந்திய நாணயத்தில் சுமார் பத்து லட்சம் ரூபாய் .

புதிய ஊரில் தமது பிழைப்பை துவங்க வந்த அந்த இளந்தம்பதியருக்கு இப்படி ஆரம்பவே அதிர்ச்சியாக அமைந்ததை எண்ணி உள்ளம் வருந்துகின்றேன்.

அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

  1. இளந்தம்பதியினர் பாவம்தான்.
    உஷாரா இருக்க எச்சரிக்கும்
    நல்ல பதிவு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      பாவம்தான் அவர்கள்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. அடப்பாவி! இங்கிலாந்திலுமா பகல் கொள்ளை..!!! ஆச்சரியமாக இருக்கின்றது...இங்கு இந்தியாவில்தான் இதெல்லாம் சகஜம் என்று நினைத்திருக்கும் வேளையில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      இங்கிலாந்திலும் பகல்கள் உண்டல்லவா, அப்படியானால் பகல் கொள்ளையும் இருக்கத்தானே செய்யம்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரசே,
    எல்லா இடத்திலும் இப்படி தானா???,,
    நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் ஏமாற்றும் உலகில்,
    நல்ல பகிர்வு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க,

      ரொம்ப உஷாரா இருக்கணும்னுதான் நினைக்கின்றேன்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ


      நீக்கு
  4. இங்கிலந்திலுமா இப்படி என்றால் ....இங்குள்ளவர்களும் சராசரி மனிதர்களே நிறத்தை தவிர ....திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அது இங்கிலாந்தாக இருந்தாலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவியர்,

      சரியாய் சொன்னீர்கள்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு