மக(ள்)ப்பேறு
நண்பர்களே,
மாறிவரும் விஞ்ஞான உலகில், மனிதனின் மூளை வளர்ச்சியும் அதன் காரணமாக விளையும் எத்தனையோ, சாதக பாதக விளைவுகளும் அவற்றால் மனித குலத்திற்கும்
கால்நடைகளுக்கும் , வேளாண்மைக்கும் தொழிற்துறைக்கும் எண்ணற்ற ,நன்மைகளும் சில தீமைகளும் விளைந்துகொண்டிருப்பதை நாம் அன்றாடம் கேள்விபட்டுக்கொண்டும் அனுபவித்தும் தான் வருகின்றோம்.
கால்நடைகளுக்கும் , வேளாண்மைக்கும் தொழிற்துறைக்கும் எண்ணற்ற ,நன்மைகளும் சில தீமைகளும் விளைந்துகொண்டிருப்பதை நாம் அன்றாடம் கேள்விபட்டுக்கொண்டும் அனுபவித்தும் தான் வருகின்றோம்.
அவ்வரிசையில் மனிதனுக்கு பெரிதும் நன்மை பயக்கும் எண்ணற்ற மருத்துவ பரிசோதனைகளும் அவற்றின் வெற்றிகளும் நேற்றுவரை விண்ணை முட்டும் அசூர வளர்ச்சி பெற்று இருந்ததையே இன்னும் வியப்பு மாறாமல் பர்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்று காலையில் தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு செய்தி நம்மை இன்னமும் வியப்பில் ஆழ்த்துகிறது.
மனிதனில் ஏறக்குறைய மூளை தவிர அனைத்து உறுப்புகளையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றவர்களுக்கு பொருத்தி அவர்களின் நல வாழ்விற்கும் ஆரோக்கியத்திற்கும் வழி வகை செய்யும் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி, அடுத்த கட்டமாக,தாயின் கருப்பையையே வேறொருவருக்கு மாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளதை நினைக்கும்போது அந்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்ட அத்தனை விஞ்ஞானிகளுக்கும் நமது பாராட்டை தெரிவிக்காமல் இருக்க முடியாது.
குழந்தை பேறு இல்லாத தாய்மார்களின் வேதனைக்கு அளவே இல்லை. அதிலும் இப்போது இருக்கும் நவீன விஞ்ஞானத்தில், சோதனைக்குழாய் மூலம் கருவை தரிக்க செய்து பின்னர் அதை அந்த தாயின் கருப்பையில் வைத்து வளர்க்கும் முறை ஆங்கங்கே வெற்றி நடை போட்டுகொண்டிருக்கின்றது.
அவ்வாறு சோதனை குழாயில் தரிக்கப்பட்ட கருவை கொண்டு வைப்பதற்கு கண்டிப்பாக கருப்பை என்று ஒன்று இருக்கவேண்டும் அந்த தாய்க்கு.
இன்றைய கணக்குப்படி உலகில் 5000 பெண்களுள் ஒருவர் கருப்பை இல்லாமலே பிறக்கின்றார் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது, அப்படி பட்ட பெண்கள் ஒருவேளை திருமணம் செய்துகொண்டாலும் அவர்களுக்கு 100க்கு 100 சதவீதம் குழந்தை உண்டாகும் சாத்தியம் இல்லாமல் இருந்தது.
அப்படி கருப்பையே இல்லாத பெண்களுக்கும் , கருப்பை பலவீனமாகவும் கருவை சுமக்கும் தகுதி இழந்த கருப்பை இருக்கும் பெண்களுக்கும், ஒரு வர பிரசாதமாக , கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானமாக பெற்று வேண்டியவர்களுக்கு பொருத்துவதைபோல இப்போது கருப்பை தானம் பெற்று அவற்றை தேவைப்படும் பெண்களுக்கு மாற்று அறுவை சிகிச்ச்சை மூலம் பொருத்தி அதில் அவர்களது குழந்தையை அவர்களே சுமந்து பெற்றெடுத்து மகிழ்வுறும் வண்ணம் அவர்களுக்கு இல்லாமல் இருந்த அல்லது பழுதடைந்திருந்த கருப்பைக்கு பதிலாக வேறொரு ஆரோக்கியமான கருப்பையை பொருத்தி தாய்மையின் முழுமையை அவர்கள் பெற்று கொள்ளும்படியாக செய்கிறது இந்த அற்புதமான மருத்துவ வளர்ச்சி.
இனி, உலகில் குழந்தை பாக்கியம் இல்லாத கோடிக்கணக்கான தாய்மார்கள் கவலை இன்றி குழந்தை பெற்றுக்கொண்டு மகிழ்ந்திருக்கும் காலம் விரைவில் உலகின் எல்லா நாடுகளிலும் எளிதாக மலிவாக கிடைக்கவேண்டுமாயின், அதே அளவிற்கு கருப்பைகளை தானம் செய்ய முன் வரும் தொண்டுள்ளம் கொண்டோரும் முன் வரவேண்டும் , வருவார்கள்.
உலகின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சி மூலம் ஸ்வீடனில் பிறந்திருக்கும் அந்த ஆன் குழந்தை தன் தாய் கருவாகி உருவாகி வளர்ந்த அதே கருப்பையில் உருவாகி வளர்ந்து பிறந்திருக்கின்றான். அது எப்படி தாயும் அவளது குழந்தையும் ஒரே கருப்பையில் உருவாகக்கூடும்?
ஏன் முடியாது அதுதான் விஞ்ஞான வளர்ச்சி.
ஆம் இந்த குழந்தை உருவான அந்த கர்ப்பப்பை இவனது பாட்டியான தனது அம்மாவின் அம்மாவினுடையது, அதாவது தனது பாட்டியால் தானமாக வழங்கப்பட்டு, புற்று நோய் காரணமாக அகற்றப்பட்டு தனது கருப்பையை இழந்திருந்த, தனது அம்மாவிற்கு பொருத்தப்பட்ட கர்ப்பப்பை.
கருப்பையை சுமந்தது அம்மா, கருவை சுமந்தது பாட்டி.
இதுபோன்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் வளர்ந்துவர வேகத்தை பார்க்கும்போது, இன்னும் கொஞ்சம் நாட்களில் முதல் குழந்தை இனிமேல் கணவன் சுமக்கும்படி அவனுக்கும் கர்பப்பையை பொருத்துவார்களோ என்னமோ.
ஆண்களே!! தயாராகுங்கள் மா மரம் பூ விட்டிருக்குது..
இதுபோன்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் வளர்ந்துவர வேகத்தை பார்க்கும்போது, இன்னும் கொஞ்சம் நாட்களில் முதல் குழந்தை இனிமேல் கணவன் சுமக்கும்படி அவனுக்கும் கர்பப்பையை பொருத்துவார்களோ என்னமோ.
ஆண்களே!! தயாராகுங்கள் மா மரம் பூ விட்டிருக்குது..
நன்றி!
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு, விஞ்ஞானம் இன்னும் என்ன வெல்லாம் செய்யுமோ,
மக்கள் நலமுடன் இருக்க பயன்படட்டும்,,,,
மனதில் அன்பையும் சுமந்து,
வாழ்த்துக்கள், தங்கள் தளம் பற்றிய குறிப்புகளை வலைப்பதிவர் குழுக்கு அனுப்புங்கள்.
நன்றி.
வருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.
நீக்குநமக்கு இந்த விளம்பரம் , புகழ் எல்லாம் பிடிக்காது என்பதால் தங்களின் ஆணையை நிராகரிக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.
கோ
வரவேற்க வேண்டிய வளர்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.
நீக்குஅட! என்ன ஆச்சரியமான ஒரு தகவல்?!!!! கடைசியில் சொல்லியிருப்பது ?? ம்ம்ம்ம் சமீபத்தில் ஒரு குறும்படத்தில் அப்படித்தான் ஒரு ஆண் கருவுருவதாகவும் அவன் படும் கஷ்டங்கள் ஆனால் அது இறுதியில் நகைச்சுவையாக முடியும்...அதன் முடிவு இப்போது மறந்து போய்விட்டது...
பதிலளிநீக்குவருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.
நீக்குஇதுபோன்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் வளர்ந்துவர வேகத்தை பார்க்கும்போது, இன்னும் கொஞ்சம் நாட்களில் முதல் குழந்தை இனிமேல் கணவன் சுமக்கும்படி அவனுக்கும் கர்பப்பையை
பதிலளிநீக்குபொருத்துவார்களோ என்னமோ.///!!!
முற்றிலும் எனக்கு புதிய தகவல் சார்.
வருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.
பதிலளிநீக்கு