பின்பற்றுபவர்கள்

சனி, 26 செப்டம்பர், 2015

"ராணி மண்ணில் ராஜா"

சதி திட்டம் !!


நண்பர்களே,

"சதி" என்ற சொல்லுக்கு திட்டமிட்டு தீங்கு இழைத்தல் என்ற ஒரு பொருள் உண்டு. உலகில் ஆங்காங்கே
நடைபெறும் வன்முறை , கலவரங்கள்,வெடி குண்டு வீச்சு,கெமிக்கல், பையோலாகிகல் துணைகொண்டு தயாரிக்கப்படும் கொடிய கொலை கருவிகளால் மனிதருள் ஒரு சாரார் மற்றவர்களை அழிக்கவும், அரசுகளை பயமுறுத்தி தங்கள் கோரிக்கைக்கு அடி பணிய பயன்படுத்துவதும் ஆங்காங்கே நடை பெற்றுகொண்டு வருகின்றது.

அவ்வகையில் சமீப காலமாக நாம் உண்ணும் உணவு பொருட்களிலும், அதிக உற்பத்தியும் அதன் மூலம் அதிக லாபமும் பெறவேண்டும் என்ற  அதீத பேராசையாலும் சுய நலத்தாலும் பலதரப்பட்ட ரசாயன பொருட்களை  உணவு பொருட்களிலும்  கலந்து மனித குலத்திற்கு பேராபத்தை விளைவிக்க எத்தனிக்கும் பல பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றிற்கு துணைபோகும் சில தொழில் முதலாளிகளும் இந்த சதி என்னும் "திட்டமிட்டு தீங்கிழைக்கும்" செயலில் கூச்சமின்றி ஈடுபடுவது வேதனைக்குரியது.

சமீபத்தில் சுகவீனத்துடன் மருத்துவமனை அழைத்து வரப்பட்ட ஒரு பெண்ணிடம் , அவரை அனுமதித்த மருத்துவமனை ஊழியர்,அந்த பெண்ணை குறித்த தகவல்களை உடன் வந்த மனிதரிடம் கேட்டு பதிவு செய்து கொண்டிருந்த அந்த ஊழியர் கேட்ட அடுத்த கேள்வி," அந்த பெண்மணியின்  நெருங்கிய உறவினர் பெயர் என்ற இடத்தில் கணவராகிய உங்கள் பெயரை எழுதவேண்டும், உங்கள் பெயர் என்ன?".

உடனே சுகவீனமாக இருக்கும் அந்த பெண்மணி சொன்ன செய்தி அந்த ஊழியரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.

அதாவது இவர் என்னுடைய பாய் ப்ரெண்ட் , இங்கே நான் வந்திருப்பது என் கணவருக்கு தெரியாது, அவர் வந்தால் இவரை பற்றி சொல்ல வேண்டாம்,என கூறிக்கொண்டே, தமது கணவர் பெயரை அந்த பதிவு விண்ணப்பத்தில் எழுதும்படி சொன்னாராம்.

கேட்ட அந்த மருத்துவ ஊழியர், "ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா" என்று  தனக்குள் சொல்லிக்கொண்டார்களாம்.  இதுவும் ஒருவகையில் அந்த பெண்ணும் அவரது பாய் ப்ரெண்டும்  அவரது கணவனுக்கு திட்டமிட்டு  செய்யும் "சதி" தானே. 

அந்த காலத்தில் கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறும் வழக்கத்தை சதி என்று அழைத்தனர், ஆனால் இன்றைய கால நிலைமையில்,கணவணனின் மரணத்தை முன்னின்று நிறைவேற்றிவிட்டு தமது விருப்பபடி நடந்துகொள்ளும் மனைவிகளும் , அதேபோல கணவர்களும் ஆங்காங்கே இருப்பதாக செய்திகள் கேட்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது.

இப்படி "சதி" என்ற வார்த்தையை கேட்க்கும்போது நமக்கு நினைவில் வருபவர்,காலம் சென்ற சமூக சீர்த்திருத்த வாதியும், கல்வியாளரும், சிந்தனையாளரும்,தத்துவ அறிஞருமான "ராஜா ராம் மோகன் ராய்" அவர்கள்தான்.

முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் கணவனை இழந்த மனைவி கணவனின் உடல் எரியும் அதே தீயில் தன்னையும் எரித்து மாய்த்து கொள்வார்களாம்  அப்படி உயிரோடு இருந்தால் அந்த முகலாய ஆட்ச்சியாளர்களின்  கொடுமைக்கு ஆளாவார்களாம்.  இப்படி பழகிவிட்ட இந்திய கலாச்சாரம் முகலாயர் ஆட்சி முடிந்தபின்னரும் தொடர்ந்ததால் அந்த கொடிய வழக்கத்தை ஆங்கில ஆட்சியாளர்களில் துணையுடன் எதிர்த்து குரல் கொடுத்து சமூதாய மறு மலர்ச்சிக்கு அரும்பாடுபட்டு அந்த கொடிய கலாச்சாரத்திற்கும் முற்றுபுள்ளி வைத்தவர் இவர்.

 1774 ஆம் ஆண்டு பெங்காலில் பிறந்த இவர் "சதி"க்கு எதிரான தமது குரலை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஓங்கி உரைக்கவும்  இன்னும் தமது அறிவார்நத  சீர்த்திருத்த கொள்கைகளை இந்திய மக்களின் நலனுக்காக முழங்கும்பொருட்டும் இங்கிலாந்து வந்திருக்கின்றார்.

அவரின் கூர்மையான அறிவு முதிர்ச்சியையும் தத்துவங்களும் சீர்திருத்த கொள்கைகளும் அவற்றின் அணுகுமுறையும் ஆங்கிலேயர்கள் மனதில் நமது ராஜா ராம் அவர்களை ஒரு உன்னத இடத்தில் உயர்த்தி அமர செய்திருக்கின்றது.

இப்படி இங்கிலாந்தில் தங்கி இருந்து தமது கொள்கைகளை ஆட்சியாளர் களுக்கும் ஏனைய சமூக சீர்திருத்த கொள்கைகளில் பிடிப்பும் ஆர்வமும் உள்ள மக்களிடமும் எடுத்துரைத்துகொண்டிருந்த அவர் இங்கிலாந்தின் முன்னணி நகரமான "பிரிஸ்டல்" எனும் நகரில் 1833 ஆம் ஆண்டு காலமாகி இருக்கின்றார். 

அவரின் வருகையையும் அவர்தம் தத்துவ ஞான அறிவாற்றலையும் போற்றும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் இறந்த அந்த நகரில் ஒரு நினைவு மண்டபம் எழுப்பி அதை இன்றுவரை பராமரித்து வருவதும் அவருக்கு ஆளுயர வெண்கல சிலையை , பிரிட்ஷ் பேரரசி விக்டோரியா மகாராணிக்கு அமைக்கபட்டிருக்கும் அதே வளாகத்தில் அமைத்து போற்றி பாதுகாத்து வருவது இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமையான விஷயம்.

Image result for raja ram mohan roy

மேலும் அவரது சிலை அமைந்திருக்கும் வளாகம் நாட்டிலேயே சிறந்த - பன்னாட்டு மாணவர்கள் படிக்கும் பல்கலை கழகம், மற்றும் 11 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டு இன்றும் தினமும் வழிபாட்டு தளமாக அமைந்திருக்கும் நகரின் பிரதானமான தேவாலயம் அமைந்திருக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஓர் முக்கியமான வளாகம்,

Image result for raja ram mohan roy

அந்த சிலை அங்கே கூடாது என்றும் உடனே அங்கே இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் ஒரு இந்தியருக்கு ஏன் இத்தனை மரியாதையும் கவுரவமும் கொடுக்க வேண்டும் , அதுவும் இது முந்தைய ஆட்சியாளர்களால் அமைக்க பட்ட சிலை எனவே இதை முதலில் அப்புறபடுத்தவேண்டும் என்று இங்கே யாரும் "சதி" செய்யும் மட்டமான மனநிலை இல்லாதததால் நம் இந்தியரின் - இந்தியாவின் புகழ் இந்த நாட்டில் இன்றளவும் நிலைபெற்றிருக்க காரணமான அந்த மா மனிதரின் நினைவு நாள் நாளை , அதாவது செப்டம்பர் 27 ஆம் நாள்.

வாழ்க ராஜாராம் மோகன்ராயின் புகழ்!! 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


10 கருத்துகள்:

  1. நல்ல பதிவு சார்.
    அவரைப் போன்ற பல சமூக சீர்திருத்த கொள்கைகளில் ஆர்வம் உள்ள மக்கள் தர்ப்போது நாட்டிர்க்கு மிகவும் அவசியம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அரசே,
    நல்ல மனிதரைப் பற்றிய பகிர்வு, அவரின் நினைவினைப் போற்றுவோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நம் நாட்டின் நிலையோ வேதனை தருவதாக உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் என்ன செய்வது நண்பரே,

      வருகைக்கு மிக்க நன்றி .

      கோ

      நீக்கு
  4. அருமையான பதிவு னண்பர் கோ! வெகுநாட்களாகிவிட்டது தங்கள் பதிவுகளைக் கண்டு...

    சதி என்பது நமது நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகமாக இருந்தது..பண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் செய்திக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. எத்தனை சதி?!
    ராஜாராம் மோகன்ராய் நினைவுகூர்ந்தவிதம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

      தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு