பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 அக்டோபர், 2015

நெறியா... வெறியா...சரியா?

ஹிந்தி (ஏன்) ஒழிக!!  

தொடர்கிறது....

அப்படி என்ன சொன்னார் என் நண்பர்?.........

முதலில் இருந்து வாசிக்க தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

இவரும் சம்பளத்திற்கு வேலைபார்த்த ஒரு சராசரி தமிழ் ஆசிரியர்தான் போலிருக்கிறது.

நண்பரின் கூற்று என் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தது.

ஏன் அப்படி சொல்கின்றீர்கள் என கேட்டதற்கு, பின்னே என்ன, ஊருக்கு உபதேசம் போல தமிழாசிரியராக இருந்து தமிழ் கற்றுகொடுத்தவர், தமது பேரக்குழந்தைகளை ஆங்கில பள்ளியில்படிக்க வைத்துகொண்டிருப்பதோடு , ஹிந்தி தனிபாடத்திற்கும் அழைத்து செல்வதாக கூறுகிறாரே?  இது ஊருக்கு உபதேசம் இல்லையா?

அப்போதுதான் நன் சொன்னேன், நண்பரே, இவர் மூலமாகத்தான் நான் மகாகவி என்று எல்லோரும் போற்றுகின்ற பாரதியை தெரிந்து கொண்டேன். 

 வகுப்பில் பாரதியை எங்களுக்கு அறிமுகம் செய்யும்போதே , பாரதி ஒரு பன் மொழியில் பாண்டித்தியம் பெற்ற புலவன் என்று அறிமுகம் செய்ததோடு, எவன் ஒருவன் முதலில் தம்மை இந்தியன் என்றும் அதன் பிறகே அவரவர் சார்ந்த மொழியிணன் என்று சொல்லிகொள்கிரானோ அவனே உண்மையான தேச பக்தன் என்றும்,

மகாகவி பாரதி, தனது சுதந்திர போராட்ட கருத்துக்களை தமிழில் எழுதி இருந்தாலும், அவை நமது ஒட்டுமொத்த பாரத்தத்தின் விடுதலைக்காகவே எழுதினான் என்றும், அது மட்டுமல்லாது, தமது தாய்மொழியே சிறந்தது என்று சொல்லும் தகுதி தமது தாய் மொழியோடு மற்ற மொழிகளை கற்று உணர்ந்தவர்களுக்கே உண்டெனவும் எங்களுக்கு சொல்லி கொடுத்து,உலக மொழி அத்தனையையும் கற்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழ் ஆங்கிலம் தவிர இரண்டு அல்லது மூன்று இந்திய மொழிகளையாவது ஒரு இந்தியன் கற்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் இந்த ஆசிரியர்.

அப்படி சொன்னது மட்டுமின்றி, ஹிந்தி, மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் சரளமாக பேசவும் படிக்கவும் எழுதவும் கற்றுத்தேர்ந்தவர் எனவும், எனக்குகூட என் அம்மாவிடம் சொல்லி தனி பாடமாக வெளியே அப்போது சிலரால் நடத்தப்பட்ட ஹிந்தி வகுப்பில் சேர்க்க சொல்லி சிபாரிசு செய்தவர் (நான் படித்தேனா என்பது வேறு விஷயம்)  என்றும் சொல்ல நண்பர் ஆச்சரியத்துடன் கேட்டு என் தமிழாசிரியர் குறித்த தவறான அபிப்பிராயத்திற்காக வருத்தப்பட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

நண்பர்களே, தமிழ் தமிழ் என்று மேடைதோறும் முழங்கிகொண்டிருக்கும் எத்தனை  தலைவர்கள், பிரமுகர்களின் பிள்ளைகள், பேர பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியையும், பிரஞ்சு, ஸ்பேனிஷ் , இத்தாலியன் ஜெர்மன் போன்ற மொழிகளையும் படிக்கின்றார்கள் என்பது எல்லோரும்  அறிந்ததே.

இப்படி வெளி நாட்டு மொழிகளை தனியார் பள்ளிகளில்  கற்று கொடுப்பதையும் தமது பிள்ளைகள் கற்று கொள்வதை ஆதரிக்கும் நம் தமிழ் நாட்டு மூத்தகுடி பிரமுகர்கள், நமது தேசிய மொழியான ஹிந்தியை மட்டும் அரசு மற்றும் அரசு மானியம் பெரும் பள்ளிகளில்  கற்று கொடுப்பதை எதிர்பதுபோல் போக்குகாட்டி அதை தமிழக மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டு தமது பிள்ளைகளுக்கு மட்டும் கிடைக்க செய்து படிக்க வைப்பது எந்த விதத்தில் ஞாயமாகும்.

தமிழாசிரியர் என்றால் தமது பிள்ளைகளுக்கு ஹிந்தி சொல்லிகொடுக்ககூடாது என்றால் அவர்கள் தமிழை பாரதியிநூடாய் படித்ததற்கு எந்த அர்த்தமும் இல்லை.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று மற்ற மொழிகளறியாதிருந்தால் எப்படி பாரதியால் இப்படி மார்தட்டி சொல்லியிருக்க  முடியும்.

பெங்காலி,சமஸ்கிருதம்,ஹிந்தி,ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளை கற்றவன், பிற மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவன் பாரதி.

எல்லா மொழிகளையும் அவற்றுக்கு உண்டான நெறி பிடித்து  கற்போம் ஹிந்தி உட்பட எந்த மொழியையும் வெறி பிடித்து பழிக்காமல் பழக கற்போம்.

அயல் நாட்டு மொழிகளை கற்றுகொண்டு அவற்றால் அடையும் பயன்களையும் பயனாளிகளையும் விட நம் நாட்டு - தேசிய மொழியை கற்றுக்கொண்டு அதனால் பலனடைவோரின் எண்ணிக்கை அதிகம் என்னும் உண்மை நிலை அறிந்து நமது தேசிய மொழியினை கற்று கொள்வதில் என்ன தவறு?

இந்தியாவிற்குள்ளேயே தமிழக எல்லையை தாண்டினால், தமிழ் மட்டும் அறிந்திருப்பவர்களின் நிலைமையை சற்று எண்ணி பார்ப்போம்.

வளைகுடா நாட்டில், ஹிந்தி பேசிய அந்த நாட்டு அரேபியர்கள் முன்னிலையில் வெட்கத்துடன் - அவமானத்துடன் எனக்கு ஹிந்தி தெரியாது என்று  சொல்ல அவர்கள் அடுத்து கேட்ட கேள்விகளின் எலக்கரத்தையும் பரிகாசத்தையும் கேட்டு வெட்கி தலைகுனிந்த அந்த வரலாற்று சம்பவத்தை இன்று நினைத்தாலும் எனக்கு வேதனையாக இருக்கின்றது.

நண்பர்களே, இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து மட்டுமே.

நன்றி.மீண்டும் ச(சி)ந்திப்போம்

வாழ்க பாரதம்.

வெல்க தமிழ்.

கோ

8 கருத்துகள்:

 1. நாங்கள் கூடவே முந்தைய பின்னூட்டத்தில் சொல்ல நினைத்து பதிவாகி விடுமோ என்று நினைத்து விட்ட கருத்தை தமிழாசிரியர் சொல்லி இருப்பது மிக மிக மகிழ்வாக இருந்தது. தாய் மொழி மிக மிக அவசியம் ஆனால் பிற மொழி வெறுப்பு, வெறி கூடாது. தாய் மொழியுடன் பிற மொழிகள் கற்பதால் நம் மொழி வளருமே அல்லாமல் அழியாது. ஏனென்றால் பிற மொழி இலக்கியங்கள் நம் மொழியில் வரவும், நம் மொழி இலக்கியங்கள் பிற மொழி செல்லவும், உலகம் அறியவும் வளரவும் உதவும். நம் மொழியின் பெருமை மேலோங்கும். எம்மொழிக்கும், எக்காலத்திற்கும், எந்த நாட்டிற்கும் பொருந்தும் திருக்குறள் உலகப் பொதுமறையானது அப்படித்தானே.

  நல்ல பதிவு. தங்கள் தமிழாசிரியர் வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே.

   கோ

   நீக்கு
 2. வணக்கம் அரசே,

  ..யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று மற்ற மொழிகளறியாதிருந்தால் எப்படி பாரதியால் இப்படி மார்தட்டி சொல்லியிருக்க முடியும்...

  உண்மைதான் அரசே, நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 3. //நண்பர்களே, தமிழ் தமிழ் என்று மேடைதோறும் முழங்கிகொண்டிருக்கும் எத்தனை தலைவர்கள், பிரமுகர்களின் பிள்ளைகள், பேர பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியையும், பிரஞ்சு, ஸ்பேனிஷ் , இத்தாலியன் ஜெர்மன் போன்ற மொழிகளையும் படிக்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.//

  ஹிந்தியை எதிர்பவர்கள் ஒன்றும் தமிழ் பற்றினால் எதிர்க்கவில்லை. அவர்களில் பலர் தமிழ் சொந்த பாஷை பேசுவதை இழிவாகவும் ஆங்கிலம் பேசுவதை தங்களது பெருமையாக நம்புபவர்கள் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு சார்.

  ஒருதடவை சம்மர் ஹாலிடேஸ்ல ஒரு கோர்ஸ்காக பெங்கலூர் சென்றபோது தெலுங்கு/தமிழ் வைத்து ஒரு மாதம் சமாலித்து வீட்டை அடைந்தேன். அதே மும்பையில் சுத்தம்.
  அன்று முதல் ஹிந்தி கற்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ், எனக்கும் மும்பையில் ஏற்பட்ட அனுபவ ரணங்களின் தழும்புகளைத்தான் தொட்டுபார்த்து இந்த பதிவினை எழுதினேன்.
   வருகைக்கும், மிக்க நன்றி.

   கோ

   நீக்கு