பின்பற்றுபவர்கள்

சனி, 24 அக்டோபர், 2015

பரோட்டா கணக்கும் பிரிட்டன் கணக்கும்

காலம் கைகூடும்!

நண்பர்களே,

சத்தியவான் சாவித்திரிகள் மட்டுமே காலங்களை கட்டுபடுத்தி சூரிய உதயத்தை தாமதபடுத்தினர்  என்று காவியங்களில் அறிந்திருக்கின்றோம்.


மனிதன் எதை வேண்டுமானாலும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம், ஆனால் இயற்கையை அப்படி அவனால் கட்டுபடுத்த முடியாது என்பது நம் எல்லோரும் அறிந்ததே.

அதே சமயத்தில் காலம் கண்போன்றது,பொன்னானது, அதை ஒருமுறை நாம் இழந்துவிட்டால் மீண்டும் பெறுவது கண்டிப்பாக இயலாதொன்று என்றும் அறிந்திருக்கின்றோம்.

வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நம்மை கடந்து சென்றால் மீண்டும் அந்த வினாடியை  கைபற்றுதல் என்பது திரைப்படங்களில் மட்டுமே - ரீ வயிண்ட் மூலம் சாத்தியம். நடைமுறையில் சாத்தியமல்ல என்றுதான் நினைத்திருந்தோம்.

ஆனால் அதையும்கூட நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்றும் நம்மை கடந்து சென்ற  ஒரு வினாடியைமட்டுமல்ல 3600 வினாடிகளைகூட மீண்டும் பெறமுடியும் என்று இயற்கைக்கே சவால் விடும் வண்ணம் ஐரோப்பிய நாடுகளில் நாளைமுதல் ஒரு மணிநேரத்திற்கு கடிகாரம் பின்னோக்கி நகர்த்தப்படுகிறது, அதன் மூலம் இன்று சனிக்கிழமை நள்ளிரவு  12 மணி ஆனாலும் இன்னும் 11 மணியாகத்தான் இருக்கபோகிறது.

கோடைகாலத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை விடியற்காலை 2.00 மணிக்கு ஐரோப்பாவில் உள்ள அனைத்து கடிகாரங்களும் மீண்டும் 1.00 மணியே காட்டும்  வண்ணம் திருத்தி அமைக்கப்படும், எனவே சாதாரணமாக நாளை காலை 7.00 மணிக்கு எழுந்தாலும் அது ஆறு மணியாகவே  கருதப்படும்.

இது குறித்த எமது முந்தய பதிவை காண போனா வராது... ஆனா வரும் படிக்கவும்   


Image result for strange clocks


இதில் வீட்டிலுள்ளவர்களுக்கு நாளை காலையில் இன்னும் ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கிக்கொள்ளலாம், அதே சமயத்தில் இன்று இரவு நேர வேலையில் இருப்பவர்கள் இரவு பன்னிரண்டு மணிவரை வேலை செய்திருந்தாலும் , சூரியின் பரோட்டா கணக்கு சரிவரவில்லை முதலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பதுபோல் கடிகாரம் மீண்டும் 11 மணியே காட்டும் , அதனால் அவர்கள் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

இப்படியே ஒரு ஆறு மாத காலத்திற்கு காலம்(குளிர்காலம் முடியும்வரை) சுழலும், பிறகு விட்டதை பிடிக்க மீண்டும்  கடிகார முட்கள்(கோடையில்) திருத்தி அமைக்கப்படும்.

சரி சரி உங்ககிட்ட பேசிக்கொண்டே கடிகாரத்தை திருத்த மறந்துடபோறேன், நாளைக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக உறங்கவேண்டும்.

இப்போது இங்கே சனிக்கிழமை இரவு 11.00

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

 1. ஓ அது இந்த நால்தானா?
  சென்ற வருடம் தங்கள் பதிவில் படித்த ஞாபகம் இருக்கு.

  மீண்டும் ஞாபகபடுத்தியமைக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா அருமை அரசே
  வாழ்த்துக்கள்
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்மா .

  கோ

  பதிலளிநீக்கு
 4. ஓ ஆமாம் குளிர்கால நேரம் ஆரம்பித்துவிட்டதா? ஆனால் இன்னும் குளிர் ஆரம்பிக்கவில்லை போல? தினமும் லண்டனில் இருந்து எனக்குச் சுடச் சுட செய்தி வந்துவிடும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   உங்களுக்கு கிடைக்கும் சூடான செய்திகள் அத்தனையும் உண்மைதான் இன்னும் "ஆப்பு" தயாரகவில்லைதான்.
   வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

   நட்புடன்.

   கோ

   நீக்கு