பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 மே, 2015

"கண்ணும் GUNம் NOKIA"

கொள்ளை கொள்ளும் மாபியா


நண்பர்களே,

இந்த நாட்டுக்கு  (இங்கிலாந்து) வந்த புதிதில் சில விஷயங்களால், ஓரளவிற்கு மனதளவில் வருத்தமாகவே இருந்தேன், இந்த வருத்தத்தை போக்க முடியாது என்பதால் அந்த வருத்தத்தை வாடிக்கையாக்கி பழகிக்கொள்ள சில காலங்கள் ஆனது.

எத்தனையோ விஷயங்களில் எனக்கு மன வருத்தம் இருந்தாலும் அவற்றில் குறிப்பிடும்படியான சிலவற்றில் பிரத்தியேகமானது, சீதோஷன நிலைமை. 

வருடத்தின் பெரும்பான்மையான காலங்கள் சொல்லொன்னா குளிர், ஏறக்குறைய வருடத்தின் 350 நாட்கள் மழை, அதுவும் நம்மூர் மழைபோல இதமான பதத்தில் பெய்யும் மழை அல்ல, ஐஸ் கட்டிகளை உருக்கி ஊற்றினாற்போல நரம்புகளை கடந்து எலும்புகளை உறைய வைக்குமளவிற்கு குளிரான மழை பெய்வதால்  எங்கும் வெளியில் செல்ல முடியாத படி உடலை தாக்கிய குளிரினால் உள்ளமும் புத்துணர்வினை புத்தூர் கட்டுபோட்டதுபோல இயக்கமின்றி இயங்கிகொண்டிருந்தது.

அதுவும் இங்கே குளிர்காலத்தில் மாலை மூன்று மணிக்கெல்லாம் இரவு எட்டுமணி எபெக்க்டுடன் இருட்டி விடும் 

எந்த நேரமும் குறைந்த பட்சம் நான்கடுக்கு ஆடைகளை அணிந்துகொண்டு, தலையில் ஒரு குல்லாவையும் கழுத்துக்கு ஒரு மFலரையும் கைகளுக்கு கையுறைகளையும் அணிந்துகொண்டு இரண்டு SOCKS களையும் அணிந்து கொண்டு கையில் குடையையும் எடுத்துகொண்டு   சந்திரமண்டலம் செல்பவர் அணிந்ததற்க்கும் அதிகமான உடை  அணிந்துகொண்டு செல்வது சுத்தமாக பிடிக்காமல் போனது. 

இப்போது மனதை கொஞ்சம் தேற்றி கொண்டேன்,அதாவது வாழ்க்கை பட்டாயிற்று - வேஷம் போட்டாயிற்று- குறைக்காமல் இருக்க முடியுமா? அதாவது ஆடைகளை குறைக்காமல்  இருக்கத்தான் வேண்டும். 

அடுத்த விஷயம், பெரும்பாலான கடைகள் அலுவலகங்கள் போல மாலை சரியாக ஐந்து மணிக்கு மூடி விடுவார்கள், சில கடைகள் 4 மணிக்கெல்லாம் மூடி விடுவார்கள்.  வாங்குகின்றோமோ இல்லையோ கடைகள் திறந்திருந்தால் அவற்றை பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சி அளிக்குமல்லவா?

இதற்க்கு முன் சில காலம் வாழ்ந்து வந்த நாட்டில் பல கடைகள் இரவு 11 மணி வரை திறக்கபட்டிருக்கும். நம்ம ஊரிலும் பல கடைகள் இரவு பத்து மணியையும் தாண்டி திறக்கபட்டிருப்பதை பார்த்து பழகிய எனக்கு இங்கே கடைகள் மாலை  நான்கு அல்லது ஐந்து மணிக்கெல்லாம் மூடபடுவதை பார்க்கும்போது ஒவ்வொரு மாலையும் ஏதோ ஊரெல்லாம் கடை அடைப்பு போராட்டம் -   "அர்த்தால்"  நடைபெறுவது போன்றதொரு எண்ணம் சிந்தையில் நிழலாடும்.

பெரும்பான்மையான கடைகளுக்கான நியதி இதுவாகவே இருந்தாலும் சமீப காலமாக சில கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் , பெட்ரோல் நிலையங்கள் , சில மருந்து கடைகள் 24 மணி நேர சேவைக்காக திறந்து வைக்கபடுகின்றன.

அப்படி இரவு பதினோரு மணிவரை திறந்திருக்க அனுமதி பெற்ற கடைகளுள் ஒன்று , "நியூஸ் ஏஜென்சி" என்று சொல்லப்படும் மூலை கடைகள்  (கார்னர் ஷாப்ஸ்), இது போன்ற கடைகள் நகரின் பல இடங்களில்  திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றன.

இந்த கடைகளுக்கு " CONVENIENCE  STORES"   என்றும் பெயர்.  இவைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிக்கு மிகவும் அருகாமையிலேயே இருக்கும். இங்கே அத்தியாவசிய பொருட்களான , பால், முட்டை, சீஸ், ரொட்டி, செய்தி தாட்கள், சிறிய அளவிலான மளிகை சாமான்கள், பழங்கள்,சர்க்கரை , உப்பு , சோப்பு, பேஸ்ட்டு போன்றவற்றோடு ""அதி முக்கிய பொருட்களான சிகரெட்டுகளும் , "அதி  அதி முக்கிய" பொருட்களான மது பானங்களும் விற்கப்படும்.

அப்படி மது பானங்களையும் சேர்த்து விற்க உரிமம் பெற்ற கடைகளை "ஆப் லைசென்ஸ்"- OFF LICENSED  கடைகள் என்று அழைப்பார்கள்.

அவசரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வீட்டருகிலேயே கிடைப்பதால் மற்ற பெரிய கடைகளை விட விலை கூடுதலாக இருந்தாலும் மக்கள், நேரம் வசதி, பயண செலவு  கருதி இது போன்ற கடைகளில் "பொருட்களை" வாங்குவதால், இந்த மாதிரியான கடைகளின் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.

இப்படித்தான் அன்றும் நகரின் மையத்தில் அமைத்திருந்த ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்த இது போன்றதொரு கடையில் வியாபாரம் அபாரமாக நடந்து கொண்டிருந்தது.

காலை முதல் இரவு வரை ஓய்வில்லாமல் நடைபெற்ற வியாபாரத்தின் வசூலை எண்ணி காகித பணத்தை சிறு சிறு கட்டுகளாக கட்டியும் சில்லறை காசுகளை  சிறிய பிளாஸ்டிக் பைகளிலும் போட்டு அடுத்த நாள் வங்கிக்கு கொண்டு செல்ல ஏதுவாக தயாற்படுத்திகொண்டிருந்தபோது மணி இரவு 10.50 , பெரும்பாலான உட்புற விளக்குகள் ஏற்கனவே அணைக்கப்பட்டு விட்டிருந்தன.

இன்னும் சிறிது நேரத்தில் கடையின்   கதவுகளை அடைத்து விட்டு மறு நாள் தேவைப்படும் சரக்குகளின் பெயர்களை , அளவுகளை எழுதி வைத்துவிட்டு, மற்ற விளக்குகளையும்  அணைத்துவிட்டு, செக்யூரிட்டி அலார்ம்களை முடக்கிவிட்டு  வீட்டுக்கு செல்ல  திட்டமிட்டிருந்த போது  மூன்று இளைஞர்கள் கடைக்குள்  வந்தனர்.  இப்படி கடை அடைக்கும்போதும் வாடிக்கையாளர்கள் வருவது வாடிக்கைதான், எனினும் இரவு பதினோரு மணிக்கு மேல் கதவுகள் அடைக்கப்பட வேண்டுமென்பது சட்டத்தின் கட்டாயம்.

உள்ளே வந்த இளைஞர்களே கதவை அடைத்தனர், இதை உள்ளே இருந்த கடைகாரர் பார்த்து பரவாயில்லையே சட்டம் தெரிந்தவர்கள் போல் இருக்கின்றதே  என நினைத்து என்னவேண்டும் என்று கேட்க்க அவர்களின் முகங்களை ஏறெடுத்து பார்த்தபோதுதான் கடைகாரர் கவனித்தார் இவர்கள் மூவரும் குளிருக்கான ஆடைகளோடு முகங்களை மூடும் குரங்கு குல்லாக்கள்  அணிந்திருந்ததை, அதுவும் அவை சாதாரணமாக குளிருக்கு அணியும் குல்லாக்கள் அல்ல அவை தமது முகங்களை முற்றிலுமாக மறைத்து  கண்களுக்கு மட்டும் சிறிய ஓட்டைகள் கொண்ட "முகமூடி" குல்லாக்கள் என்று.

Image result for ROBBERS WITH MASKS


இரவு பதினோரு மணி, கதவடைக்க பட்ட கடையில் தனியாக இருக்கும் தம்மிடம் முகமூடி அணிந்த மூன்று இளைஞர்கள் என்ன செய்யபோகின்றார்களோ என பயத்தில் நடுங்கிய கடைகாரருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ..... வந்தவருள் ஒருவன் தனது  மேலாடை கோட்டுக்குள் இருந்து எடுத்த கைத்துப்பாக்கியை தனது நெற்றிபொட்டில்  வைத்து ஒரே அழுத்து அழுத்தி (ட்ரிகரை அல்ல) அவரை பின்னுக்கு தள்ளி கல்லாவில் இருக்கும் எல்லா பணத்தையும் தாம் கொண்டு வந்திருந்த தோல் பையில் வைக்கும்படி தமது "கண்களாலேயே" கட்டளை இட்டிருக்கின்றான்.

கடைக்காரரும் தமது உயிருக்கு பயந்து அவனது கண்களின் கட்டளைக்கு அடிபணிந்து காலை முதல் சம்பாதித்த எல்லா பணத்தையும் அவன் காட்டிய பைக்குள் போட்டிருக்கின்றார். இதற்கிடையில் மற்ற இருவரும் கடைக்குள்ளிருந்த விலை மதிப்பு மிக்க சிகரட் பாக்கெட்டுகளையும் மது பான பாட்டில்களையும் மூட்டையாக கட்டிகொண்டு , மெதுவாக கதவை திறந்து நோட்டம் பார்த்து  பின்னர் கதவை வெளிப்புறம் சாத்திவிட்டு , தாங்கள் வந்திருந்த காரில் ஏறி பறந்து விட்டனராம்.

Image result for ROBBERS WITH MASKS

அதிர்ச்சியில் உறைந்திருந்த கடைகாரர் சுய நினைவுக்கு வந்தவுடன் தமது வியாபார கூட்டாளிகளுக்கு தொலைபேசியில் அழைத்து நடந்தவற்றை சொல்ல அவர்கள் காவல் துறைக்கு தகவல் சொல்ல காவல் துறையினர் அந்த கடைக்கு வந்த சமயம் மற்ற பாட்னர்களும் கடைக்கு வந்து விட்டனர்.

நடந்தவற்றை தெளிவாக கேட்டறிந்து கடைக்காரருக்கு ஆறுதலையும் தைரியத்தையும் சொன்னார்கள்.

காவலர்களின் விசாரணையின்   போது கொள்ளையரின் முக   அடையாளம் ஏதேனும் சொல்ல முடியுமா என கேட்டதற்கு , தாம் அவர்களின் முகத்தை பார்க்க முடியாதபடி முகமூடி அணிந்திருந்தனர் என்றும் அவர்களின் கண்களை மட்டும்  பார்த்ததாக கடைகாரர் சொன்னதால்  அன்றைக்கான CCTV பதிவுகள் அடங்கிய கேசட்டுக்களை எடுத்துகொண்டு விசாரிப்பதாக கூறி விட்டு காவல் துறையினர் சென்று விட்டனர்.

கடைக்காரரை, அவரது வியாபார கூட்டாளிகள் ஆசுவாசபடுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அன்று இரவெல்லாம் கொள்ளையரின் கண்களும் தமது நெற்றி பொட்டில் குறிவைக்கப்பட்ட அந்த ரிவால்வர் GUN மட்டுமே  தமது எண்ணமெல்லாம் ரிவால்வ் ஆகிகொண்டிருந்தது அந்த கடை காரருக்கு. 

மறு நாள் காலை வழக்கம் போல கடை திறக்கப்பட்டது மற்ற கூட்டாளிகள் இருவரால்.

ஒருவர் கல்லா பெட்டி இருந்த இடத்தில் இருந்த வரவு செலவு கணக்குகள் புத்தகத்தை பார்த்துகொண்டிருக்க வேறொருவர், வேறென்னவெல்லாம் களவாடபட்டிருக்கின்றது என்பதை கண்டறிய கடையின் உள்ளே எல்லா பகுதிகளையும் நோட்டமிடுகையில் தரையில் இருந்த ஒருபொருள் அவரது கண்களையும் கவனத்தையும் கவர்ந்தது.

அப்படி அவரது கண்களையும் கவனத்தையும் கவர்ந்த அந்த பொருள் ஒரு பழைய மாடல் "NOKIA"-8210 கைபேசி.

Image result for PICTURE OF NOKIA 8210

உடனே தூசு துடைக்க தாம் வைத்திருந்த துணியால் சுற்றி  கீழே இருந்த அந்த கைபேசியை எடுத்து வந்து மேசைமீது வைத்துவிட்டு காவல் துறைக்கு தகவல் சொன்னார்.

அடுத்த 30 நிமிடங்களில் அங்கு வந்த காவல் துறையினர் அந்த கைபேசியை பெற்றுகொண்டு மேற்கொண்டு விசாரிப்பதாக சொல்லி சென்ற மூன்றாவது நாளில் அந்த கொள்ளையர் மூன்று போரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த எஞ்சிய பணத்தையும் பொருட்களையும் மீட்டு அவர்களை  சிறையில் அடைத்தனர்.

Image result for PICTURES OF ARRESTED ACCUSED

இத்தனை துரிதமாக கொள்ளையரை பிடிக்க உதவியது அந்த கொள்ளையரால் தவறுதலாக கடையில் விட்டு செல்லப்பட்ட அந்த " NOKIA" 8210.

சமீபத்தில்  வாசித்த செய்தியில் இந்த பழைய மாடல் NOKIA 8210 வகை கைபேசிகளையே  சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் பெரிதும்   பயன்படுத்துகின்றனராம் , ஏனென்றால் மற்ற நவீன ஸ்மார்ட் போன்களை போலல்லாமல் இந்த கைபேசிகளில் ஜி பி எஸ் வசதி இல்லாததால் தம்மை யாராலும் நோட்டம் பார்க்கவோ தமது நடமாட்டத்தை கண்டறியவோ முடியாது என்பதாலாம் .

ஆனால் துப்பறியும் 007 களுக்கு ஒரு முடியோ அல்லது ஒரு துரும்போ கிடைத்தால் கூட துல்லியமாக துப்பறிந்து விடுவார்கள் என்பது அந்த துப்பு கெட்டவர்களுக்கு தெரியாது போல இருக்கின்றது.

இப்படி கண்ணும் GUN-ம் NOKIAவுடன் கொள்ளைகொண்ட MAFIA-க்கள் பிடிபட்டாலும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பெருகாமல், தொடராமல் இருக்க கடைகாரர்கள் தங்களது  பாதுகாப்பை அதிகரிக்கும்பொருட்டு கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயுதம் ஏந்திய காவலர்களை நியமிப்பது  வாடிக்கையாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் நல்லது.

காவல் துறை எத்தனைதான் கவனிக்க முடியும்?

பின் குறிப்பு:  அந்த கடைகாரர் எனது நண்பர் -  நமது அண்டை மாநிலத்து சேட்டன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

9 கருத்துகள்:

 1. Moral of the Story...
  எங்கே போனாலும் அங்கே நம்ம சேட்டன் ஒரு பொட்டிகடை போட்டு இருப்பார் ... தன வினை தன்னை சுடும்.. எந்த நோக்கியாவால் மாட்ட மாட்டோம் என்று நினைத்தார்களோ .. அதே நோக்கியாவால் மாடி கொண்டார்கள் .
  அது சரி... இந்த மாடல் நோக்கியா எங்கே கிட்டைக்கும் என்று விசார்டிது சொன்னால் கொஞ்சம் நலமாய் இருக்கும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி,

   சேட்டனை குறித்த உங்கள் "சேட்டை" ...... சாயா குடித்ததைபோல சுவைத்தது.

   அந்த மாடல் நோக்கியா எவ்வடஎனும் உண்டானு நோக்கி பின்னே பறையும்.

   நன்றி.

   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. தனப்பால்,

   வருகைக்கு மிக்க நன்றி.

   ஆம் அந்த துப்பாக்கியும் வெடிக்காமல் போனதால் உயிரும் காப்பாற்றபட்டது.

   நன்றி.

   கோ

   நீக்கு
 3. இந்த நாட்டின் தட்ப வெப்ப நிலை பற்றி அப்படியே என் மன ஓட்டங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள் ....இந்த மழையிலும் குளிரிலும் ....என்ன ஒரு கஷ்டம் ....நம்ம ஊராக இருந்தால் ஒரு சட்டையை போட்டுகொண்டு , செருப்பை மாட்டி கொண்டு எந்த நேரத்திலும் கடைக்கு செல்லலாம் ....பரவாயில்லை ...ஏற்கனவே இதற்க்கு இரண்டு பின்னூட்டங்கள் இட்டிருந்தேன் ...ஆனால் , அவைகளை காணவில்லை .....என்ன காரணமோ ? தொடர்ந்து எழுதுங்கள்; நாங்கள் படிக்கிறோம்

  பதிலளிநீக்கு
 4. இந்த நாட்டின் தட்ப வெப்ப நிலை பற்றி அப்படியே என் மன ஓட்டங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள் ....இந்த மழையிலும் குளிரிலும் ....என்ன ஒரு கஷ்டம் ....நம்ம ஊராக இருந்தால் ஒரு சட்டையை போட்டுகொண்டு , செருப்பை மாட்டி கொண்டு எந்த நேரத்திலும் கடைக்கு செல்லலாம் ....பரவாயில்லை ...ஏற்கனவே இதற்க்கு இரண்டு பின்னூட்டங்கள் இட்டிருந்தேன் ...ஆனால் , அவைகளை காணவில்லை .....என்ன காரணமோ ? தொடர்ந்து எழுதுங்கள்; நாங்கள் படிக்கிறோம்

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா10 மே, 2015 அன்று AM 4:59

  பெரும்பாலும் வட இந்தியர் அல்லது பாகிஸ்தானியர் கடைகளை பார்த்திருக்கிறேன். இப்படி உடலுக்கு பிடிக்காத தேசத்தில் எவ்வளவு நாட்கள் இருப்பது? மலேசியா சிங்கப்பூர் நாடுகள் தமிழ்நாடு போன்ற வெப்ப நிலை கொண்டவை.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா அருமையாக விளக்கியுள்ளீர். நான் கூட தாங்கள் அங்கு தான் இருந்து இருப்பீர்களோ என்று நினைத்தேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நல்லவேளை அந்த கொள்ளை கூட்டத்தில் நானும் ஒருவனோ என்று கேட்காமல் விட்டு விட்டீர்கள்.
  கோ

  பதிலளிநீக்கு