பின்பற்றுபவர்கள்

சனி, 30 மே, 2015

"வயது பத்தாது".

வயது கண்டு எள்ளாமை ....


நண்பர்களே,

எந்த ஒரு செயல் செய்வதற்கும் அதை செய்பவர்களின் வயதுக்கும் சம்பந்தபடுத்தி பேசுவதும் கொண்டாடுவதும் திட்டி தீர்ப்பதும் உலகில் சாதாரணம்.

உதாரணத்துக்கு,

மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம்,சுதந்திர போராட்ட வீரர்கள் - பகத்சிங், சுகதேவ், வாஞ்சி நாதன் இப்படி எண்ணெற்ற வரலாற்று புருஷர்களை நினைக்கும்போது அவர்களின் வயதிற்கும்  அவர்களின் சாதனைகளுக்கும்   செயல்களுக்கும்  என்ன சம்பந்தம்.  சிறிய வயதிலேயே வானளாவிய செயல்கள் புரிந்து வானத்தையும் கடந்த புகழின் உச்சிக்கு சென்றவர்கள்.

அதேபோல எத்தனையோ வயது முதிர்ந்தவர்கள் அவர்கள் செய்த செய்கின்ற ஆக்கபூர்வமான அபூர்வமான  செயல்களையும் சாதனைகளையும் நினைக்கும்போது உலகம் அவர்களை பார்த்து வியப்பில் ஆழ்வதும் நாம் அறிந்ததே.

மாறாக, பல சமூக விரோத  செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை பார்க்கும்போது, "முளைத்து மூன்று இலைகள் கூட  விட வில்லை அதற்க்குள் இப்படியா", "பிஞ்சிலேயே பழுத்தவர்கள்" என்று சொல்லவும் கேட்டிருப்போம்.

அவ்வாறே, பல வயதான பெரியவர்கள் செய்யும் சின்னத்தனமான இழிவான செயல்களை பார்த்து "இந்த வயசில் எப்படி இருக்கின்றார் பாருங்கள்", "இந்த வயதில் இது தேவையா?", "வயசாகியும் புத்தி எப்படி போகிறது பாருங்கள்" என சொல்லவும் கேட்டிருக்கின்றோம்.

முக்கியமாக அருவருப்பான செயல்களில் ஈடுபடும் இளம் மற்றும் வயதான போலிசாமியார்களை(!!) பற்றி கேள்விப்படும்போது உலகம் முகம் சுழித்து தூற்றுவதையும் அறிந்திருக்கின்றோம்.

பள்ளிக்கூடம் சேருவதற்கு, ஒரு வயதிருக்கின்றது, கல்லூரிக்கு செல்ல ஒரு வயதிருக்கின்றது, திருமண செய்து கொள்ள, தேர்தலில் வாக்களிக்க, தேர்தலில் போட்டியிட,அரசு வேலையில் சேர, இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வயதிருக்கின்றது. (கற்றலுக்கு வயதில்லை என்பது விதி விலக்கு)

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட திரள் காண் போட்டியில் பங்கேற்று, நடுவர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் உறைய வைத்த ஆறு முதியவர்களின் சாதனையை பாராட்டி பேசிய நடுவர், "உங்களை பொறுத்தவரை வயது என்பது ஒரு எண் மட்டுமே, சாதனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை" என்று கூறினார்.

இருந்தாலும் ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு மாதிரியாக நடந்துகொண்டாலும் குறிப்பாக வயதானவர்கள் , பக்குவமாக, பதமாக , பெருந்தன்மையுடன், பொறுமையாக, தன்னிறைவுடன் வாழ்வார்கள் என்றே பெரும்பாலும் இந்த உலகம் நம்பிகொண்டிருக்கின்றது.

அதே போல மூப்பின் காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் நடவடிக்கை மிக மிக பக்குவபட்டதாக, அனுபவம்  நிறைந்ததாக, எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாதவர்களாக, எல்லாவறிற்கும் மேலாக சமூக பொறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள் என்று அடுத்த தலைமுறையினர் நினைப்பார்கள்.

நல்லபடியாக செயல்படும் பெரியவர்களை பார்த்து " என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்" என்று சொல்லி அவர்களை பாராட்டவும் செய்கிறது இந்த சமூகம்.

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்:

கடந்த வாரம் பட்ட பகலில் ஊரே பரபரப்பாக செயல் பட்டுகொண்டிருந்த நேரம், திடீரென்று, போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் எல்லாம் ஒரம் கட்டப்பட்டு பிரதான சாலைகள் எல்லாம் வெறிச்சோட செய்யப்பட்டது  இங்கே லண்டனில்.

என்ன ஏது என்று விசாரிப்பதற்குள்,  பெரிய  - பாதுகாப்பு கவசம் போடப்பட்ட காவல் துறையின் வாகனம் ஒன்று அதன் முன்னும் பின்னும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் நிரம்பிய இரண்டு கார்கள் புடை சூழ வேகமாக சாலையில் பறக்க, அந்த வாகனங்கள் எந்த சாலைகளில் பயணிக்கின்றதோ அந்த சாலைகளுக்கு மேலே வானத்தில் பறந்தன இரண்டு கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள்.

என்ன நடக்கின்றது வானிலும் பூவிலும்?

"விஷயம் அறிந்தவர்கள்" சிலர் சொன்னார்கள் வரவிருக்கும் ஹாலிவுட்  007  திரைபடத்திற்கான இறுதி கட்ட படபிடிப்பு லண்டனில் நடத்தபடுகின்றது , அதனால் தான் இத்தனை பரபரப்பு என்று.

ஆனாலும்  , இது நம்ம ஊரு அரசியல் தலைவர்களின் சாலை பயணத்தைவிட கொஞ்சம் குறைவான பரபரப்புதான். 

சரி அந்த சாலையில் போகும் வாகனங்களுள் நடு நாயகமாக பயணப்படும் வாகனத்தில் யார் இருக்கின்றார்கள்?

வேற யாரு, 007 படம்னாலும் சரி நம்ம நாட்டுபுற படம்னாலும் சரி  போலீஸ் வண்டியில் போறது வில்லனாகத்தான் இருக்கும், மேலே பறக்கும் ஹெலிகாப்டர்ல நம்ம ஹீரோவாகதான் இருக்கும் அதிலும் இப்போ இருக்கின்ற ஜேம்ஸ் பாண்ட் 007 நம்ம டேனியல் க்ரைக்ஹ் தானே பின்ன அவரில்லாமல் வேறு யார் இருக்கபோறாங்க அந்த ஹெலி காப்டர்ல?

அவருக்கும் இப்போ வயசு 47 இந்த வயசிலேயே என்னம்மா சாதனை படைத்து இருக்காரு மனுஷன்? கண்டிப்பாக அவரை அவரது வயதையும் வேகத்தையும் நடிப்பாற்றலையும்   பாராட்டத்தான் வேண்டும்.

சரி இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும் அதை அப்புறம் பார்ப்போம்.

இப்போது வேறு ஒரு செய்தியை பார்ப்போம்:  

சமீபத்தில், அதாவது, ஒரு மாதத்திற்கு முன்பு லண்டன் பெரு நகரத்தின் மையபகுதில் அமைந்துள்ள "லண்டனின் வைர மாவட்டம்" என்று சொல்லப்படும் ஒரு பிரதான - கண்காணிப்பு கேமராக்களின் ஆதிக்கம் அதிகம் கொண்ட -பாது காப்பு நிறைந்த பகுதியில்  - ஆறு  அடி(1.82 மீட்டர் )  அகலம் கொண்ட சுவர்களால கட்டப்பட்ட  பிரதானமான - பிரமாண்டமான கட்டிடத்தின் உள்ளே அமைந்திருந்த  பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த விலை மதிக்கமுடியாத வைர , மாணிக்க ,  மரகத ,  கோமேதக  கற்களும்  ,தங்க நகைகளும்   கன்னமிட்டு துணிகரமாக களவாடபட்டது.

Jewellery heist infographic
இத்தனை பாதுகாப்பு நிறைந்த அந்த பாதுகாப்பு பெட்டகத்தை நெருங்க அல்ல அந்த கட்டிடத்தைகூட நெருங்கமுடியாத அளவிற்கு, கண்காணிப்பு கேமராக்களும் அனுமதி இன்றி நுழைய முயல்பவர்களை காட்டிகொடுக்கும் அபாய மணி முழங்கும் வசதியும் கொண்ட அந்த கட்டிடத்திலிருந்து கணக்கு காட்டப்பட்ட வகையில்  மொத்தம் 72 பாதுகாப்பு பெட்டிகள்  உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு இன்னும் துல்லிய மாக கண்டறிய படவில்லையாம், குத்து மதிப்பாக சுமார் 200 மில்லியன் பிரிட்டிஷ் பௌண்ட்களாம். (ஒரு சின்ன கணக்கு: 1மில்லியன்  என்பது 10 லட்சம், ஒரு பிரிட்டிஷ் பௌண்ட் என்பது ஏறக்குறைய 100 ரூபாய் - கால்குலேட்டர் ப்ளீஸ்!!!)

இப்படி ஒரு வாரஇறுதியில், இந்த பாதுகாப்பான கட்டிடத்தில் அனைத்து நவீன தொழில் நுட்ப்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தபட்டிருந்த அந்த பிரமாண்டமான கட்டிடத்திலிருந்து எப்படி கொள்ளையர்கள் திருட முடியும், காவல் துறையும் பாதுகாப்பு செக்யூரிட்டி நிறுவனமும் என்ன செய்து கொண்டிருந்தனர், இன்னும் ஏன் திருடர்களை கண்டுபிடிக்க முடியவில்லை, என பொதுமக்களும் , பெட்டகத்தில் சேமித்து வைத்த பலரும் "துப்போ துப்பு" என்று "துப்பி"கொண்டிருக்க, கைகளை பிசைந்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல்   காவல் துறை விழி பிதுங்க இரவு பகல் பாராமல், கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு (விளக்கெண்ணை எங்கிருந்து கிடைத்திருக்கும்?) மூளையை கசக்கி பிழிந்து ஒரு வழியாக "துப்பு துலக்கி"விட்டனர்.

Image result for images of scotland yard police


இப்படியாக துப்பு துலக்கியதன் அடிப்படையில், திருடர்கள் அரிதாக விட்டு சென்ற சில அடையாளங்களை ஆதாரமாக கொண்டு திருடர்களை நெருங்கியபோது, காவல் துறைக்கே அவர்களின் "துப்பு" மீது ஒரு சந்தேகம் வந்துவிட்டது, நாம் சரியாகத்தான் "துப்பு "துலக்கினோமா? அல்லது "துப்பு கெட்ட"  தனத்தில் "துப்பை" தப்பாய் துலக்கி விட்டோமா என்று.

உலகிலேயே முன்னணி காவல் துறையினர் என்று பாராட்டு பெற்றிருக்கும் இந்த "ஸ்காட்லாந்து காவல் துறை"க்கு  இந்த சந்தேகம் வர காரணம், அவர்களிடம் கிடைத்த ஆதாரங்கள் அவர்களை வழி நடத்திசென்று சுட்டிகாட்டிய  8 ஆட்கள் பெரும்பாலோர் முதுமையின் காரணாமாக  பணி ஓய்வு பெற்றவர்கள்-முதியவர்கள்.

Image result for images of london vault robbery

"தாதாக்கள் அல்ல தாத்தாக்கள்"

இந்த தாத்தாக்கள் குழுவில் ஒரு குழந்தையும்(!!) இருந்ததாம் அந்த குழந்தையின் வயது 48.  

செய்தி அறிந்து நாடே வியந்தது.

கொள்ளை அடிக்கபட்ட வைரங்களும் நகைகளும் இவர்களை கைது செய்வதற்கு முன்னமே நாடு கடத்தப்பட்டதாகவும் செய்திகள் சொல்லு கின்றன.

ப(ல்)லே!! (இல்லாத) கில்லாடி தாத்தாக்கள்.

யாரைத்தான் நம்புவதோ.....??

அடடே!! அப்படியானால் நீங்க முன்னே சொன்ன அந்த ஜேம்ஸ் பாண்டு படபிடிப்பு அது இதுன்னு சொன்னதெல்லாம் அந்த தாதா-தாத்தாக்களை காவல்துறை கைது செய்து சிறைக்கு கொண்டு சென்ற காட்ச்சியா? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது , எனக்கு காது நல்லா கேட்க்கும்.

என்னதான் வயது அனுபவம்,தெளிவு , அணுகுமுறை, திட்டம் தீட்டுதல், செயல் படுத்துவதில் கில்லாடிகளாக இருந்தாலும் காவலர்களிடமும் சட்டத்தின் பிடியிலிருந்தும் தங்களை காப்பாற்றிகொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு வயது பத்தாது  போலும்.

நரை! நிறை!! சிறை!!!.


நன்றி,

 மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ
10 கருத்துகள்:

 1. தாத்தாக்களுக்கா இத்தனை பில்டப்?

  கொஞ்சம் ஓவரா நீண்டமாதிரி தெரியலே...

  தலைப்பு, 'வயது கண்டு எள்ளாமை வேண்டும் என இருக்க வேண்டுமோ?'

  God Bless YOu

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், நீண்டுதான் போனது கொஞ்சம் நீளத்தை "வெட்டி - பேசி"யிருக்கலாமோ?

   என் "வயது கண்டு எள்ளி" இருக்கும் உங்களுக்கும் கடவுள் ஆசி வழங்கட்டும்.

   முந்தின பதிவுகளை வாசித்தீர்களா?

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. சம்பந்தப்படுத்தியது நன்றாகவே புரிந்தது...!

  பதிலளிநீக்கு
 3. தங்களின் மசாலா சூப்பர்.அய்யோ சாரி எனக்கு வயது பத்தாது அதான் உளறிவிட்டேன், பதிவு சூப்பர். அவர்களுக்கு அனுபவம் பத்தாது என்று,,,
  இவர்களைப் பார்த்துதான் இளையத்தலைமுறை கற்க வேண்டும் என்கிறீர்கள் போலும்.
  தங்கள் பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் வருகைக்கும் , மசாலாவை !!! பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
  2. வணக்கம் அரசே,

   இளையத்தலைமுறை கற்க வேண்டும் என்கிறீர்கள் போலும்.

   அப்படித்தானே அரசே, நன்றி.

   நீக்கு
  3. பேராசிரியரே,

   எதை செய்யகூடாது என்பதை கூட கற்கவேண்டும் என்று சொல்வதாக எடுத்துகொள்ளுங்களேன்.

   கோ

   நீக்கு
 4. பல் இல்லாத தாத்தாக்கள்?!! அட அப்ப நீங்க தாத்தா இல்லையா....

  சே! கேஸ் 007 எங்களிடம் வந்திருக்கும் என்று நினைத்தோம்...எதற்கும் சொல்லி வையுங்கள் அடுத்த முறை இந்த 007 ஐ அழைக்க.....

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் இருக்கும் பிசியில் இதற்க்கெல்லாம் நேரமிருக்காது என்றெண்ணி தங்களை அழைக்கவில்லை போலும்.

  நான் எப்போதும் தா... தா என்று உங்களின் ஆதரவை யாசிக்கும் தாத்தா தான்.

  வருகைக்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு