பின்பற்றுபவர்கள்

சனி, 9 மே, 2015

"கோபால் பல்பொடி".



வேரடி மண்.


நண்பர்களே,

பல வருடங்களுக்கு முன் வானொலியில் கேட்ட ஒரு விளம்பரம்:

இந்தியா இலங்கை, மலேசியா சிங்கபூர் ஆகிய நாடுகளில்  மக்களின் பேராதரவு பெற்ற  பல்பொடி, "கோபால் பல்பொடி".

Image result for pictures of gopal tooth powder

இந்த விளம்பர வாசகம் சமீபத்தில் என் மன கிடங்கில் இருந்து என் காதுகளில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.


அன்று ஆறாம் தளத்தில் இருந்த ஆண்களுக்கான ரெஸ்ட் ரூம் வராண்டாவில் இருந்து கைத்தொலை பேசியில் ஊரிலிருக்கும் என் அம்மாவிடம் பேசிகொண்டிருந்தேன். அப்போது ரெஸ்ட் ரூமில் இருந்து வெளிவந்த ஒரு நபர் என் அருகில் வந்து நிற்பதை உணர்ந்தேன் பேச்சு சுவாரிசியத்தில் ஆளை பார்க்கவில்லை.

பேச்சு தொடர்ந்துகொண்டிருந்தது அதே சமயத்தில் என்அருகில் நின்றிருந்த ஆளும் அங்கேயே நிற்பதை அறிந்து அவரை பார்த்தேன் அவர் எனக்காக காத்திருப்பதை புரிந்து கொண்டு சைகைகாட்டி கொஞ்சம் பொறுங்கள் என கூறிவிட்டு, அம்மாவிடம் பேசி முடித்துவிட்டு அவரிடம் பேச முற்பட்டேன்.

அவரும் என்னை பார்த்து புன்னகித்தார். அன்று வரை அந்த நபரை நான் பார்த்ததில்லை.

அவர்  என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "நீங்கள்  தமிழா?"

"ஆமாம், நீங்கள், ....?"

"என் பெயர் "ஷார்வ்" நானும் தமிழ்தான்."

"அப்படியா ரொம்ப சந்தோஷம், ஊரில் எந்த  இடம்?"

"நான் மலேசிய, நீங்கள் தமிழில் பேசி கொண்டிருந்ததை  கேட்க்கும்போது மனதில் எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி உண்டானது, அதனால் தான் உங்களோடு பேசுவதற்காக காத்திருந்தேன்"

அவர் சொல்ல சொல்ல எனக்கும் மனதினில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இந்த நாள் வரை ஒரே ஒருவர் தவிர  தமிழ் பேசும் வேறு நபரை சந்தித்ததே இல்லை.

இருவரும் பரஸ்பரம் கை குளுக்கிகொண்டோம், அவரும் ஆறாவது தளத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சமீபத்தில் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் தான் ஆனதாகவும் சொன்னார்.

சரி நான் என் இருக்கையை விட்டு வந்து வெகு நேரமாகிவிட்டது பிறகு சந்திக்கலாம் என கூறிவிட்டு என் இருக்கைக்கு திரும்புகையில் ," உங்களுடைய தொலைபேசி எண் என்ன என்று கேட்ட்க நானும் கொடுத்து விட்டு என் இருக்கைக்கு திரும்பினேன்.

இருக்கைக்கு திரும்பிய கொஞ்ச நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, இணைப்பின் இருந்தவர் கொஞ்ச நேரத்திற்கு முன் அறிமுகமான அந்த "ஷார்வ்"  தான்.

ஹலோ கோ, நாளைக்கு மத்தியானம் லஞ்சுக்கு வெளியில் போகலாமா?

பார்த்த பத்தாவது நிமிடத்திலேயே இத்தனை நெருங்கி விட்டாரே என எனக்கும் கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தது.

"சரி  போகலாம், மத்தியம் ஒரு மணிக்கு கீழே செக்க்யூரிட்டி டெஸ்க்  அருகில் சந்திப்போம்" என கூறி தொலை பேசி அழைப்பை துண்டித்தோம்.

மறு நாள் சரியாக ஒரு மணிக்கு தொலைபேசி சிணுங்கியது, எதிர் முனையில் ஷார்வ் , தாம் கீழே இருப்பதாக சொல்லி  எனக்கு நினைவூட்டினார்.

நானும் துரிதமாக கீழே சென்று அவரை சந்தித்தேன்.

அவர் மீண்டும் என்னிடம், உங்களை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கின்றது, கடந்த பத்தாண்டுகளாக நான் இந்த இங்கிலாந்து தேசத்தில் இருக்கின்றேன், எனினும் என்னோடு தமிழில் பேசுவதற்கு யாருமே இல்லாமல் இருந்தேன் என் மனைவியும் ஐரோப்பிய பெண், இப்போது உங்களை அதுவும் ஒரே இடத்தில் வேலை செய்யும் நபரை காணும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது என கூறினார்.

அப்போது நான்சொன்னேன், இந்த நிறுவனத்தில் இன்னும் ஒரு தமிழர் இருகின்றார் , அவர் இலங்கையை சார்ந்தவர், இன்று மத்தியம் உணவிற்கு வர முடியுமா என காலையில் அவரிடம் கேட்டேன், அவர் தமக்கு இன்று 12. மணியிலிருந்து ஒரு  முக்கிய மீட்டிங் இருப்பதாகவும் மீட்டிங் சீக்கிரம் முடிந்துவிட்டால் நம்மோடு கலந்துகொள்வதாகவும் சொல்லி இருக்கின்றார் என்றும் கூறியதை சொன்னதும் ஷார்வ் அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

நானும் என் மகிழ்ச்சியை தெரியபடுத்திவிட்டு உணவகம் நோக்கி பயணிக்கையில், ஆமாம், உங்கள் பெயர், தமிழ் பெயர் போல் தெரியவில்லையே, என அவரது ஐ டி கார்டில் இருந்த பெயரை காட்டி கேட்டேன்.

அதற்க்கு அவர், தன் பெயர் "சரவணன்" என்றும் இங்கே இந்த ஆங்கிலேயர்கள் தங்களின் உச்சரிப்பிற்கேற்ப என் பெயரை "ஷார்வ்" என மாற்றிவிட்டனர் என கூற நல்ல வேலை என் பெயரை "கோ" என்றே அழைக்கின்றனர் என கூறி சிரித்துக்கொண்டே, உணவகம் வந்து சேர்ந்தோம். 

உணவகத்தில் எங்கள் இருவருக்கும் இருக்கைகள் ஒதுக்கபட்டது , அது ஒரு இந்திய, சைன, மெக்சிகன், கரீபிய பப்பே (buffet) உணவகம் , எங்கள் இருக்கைகில் எங்களின் கோட்டுகளை கழற்றி மாட்டிவிட்டு உணவு இருக்கும் இடத்திற்கு சென்று தட்டுகளை ஏந்திக்கொண்டு வரிசையாக சென்று கொண்டிருந்தோம், எங்கள் இருவரையும் பார்த்த எதிர் வரிசையில் இருந்த ஒரு ஆசிய முகம் கொண்ட ஒரு நபர் ஆசையாக பார்ப்பதை உணர்ந்தோம்.

நாங்கள் இருவரும் எங்களுக்கு தேவையான முதல் சுற்று உணவுகளை எடுத்துகொண்டு எங்கள் இருக்கைக்கு திரும்பினோம், உணவருந்த ஆரம்பிக்கும் போது, தனது கையில் உள்ள உணவு தட்டோடு எங்களுக்கு எதிர்வரிசையில் இருந்து புன்னகித்த அந்த நபரும் எங்களோடு வந்தமர்ந்து,

"நீங்கள் இருவரும் தமிழில் பேசுவதை  கேட்டேன், மிக்க மகிழ்ச்சி என் பெயர்   கீர்த்தி வாசன், நான் சிங்கபூரிலேயே பிறந்து வளர்ந்தவன் இங்கே உள்ள ஒரு ஐ டி நிறுவனத்தில் பயிற்சி பொறியாளனாக பணி புறிகின்றேன் , பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது என கூறி அறிமுகம் செய்து கொண்டார்.

எங்கள் இருவருக்கும்  அவரை சந்தித்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட ஆச்சரியமே அதிகமானது.

நாங்கள் இருவரும் எப்போது எப்படி அறிமுகமானோம் என்பதை கீர்த்தி அவர்களிடம் சொன்னபோது அவரும் ஆச்சரியத்தில்  வாய் பிளந்தார்.

இப்படி நாங்கள் பேசிகொண்டிருக்கையில் என் கைபேசி சிணுங்களில் இலங்கை நண்பர் தொடர்பில் வந்தார், அவரிடம் எந்த உணவகம் என்று சொல்லிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவரும் எங்களோடு மத்திய உணவில் பங்குகொண்டதோடு  எங்கள் நட்பிலும் பங்காளியானார் அவர் பெயர் பத்மா நாபன்.

சாப்பிட்டுக்கொண்டே பல விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம்.

இறுதியாக நாங்கள் நால்வரும் உணவின் இறுதி சுற்றுக்கு இனிப்புகள் இருந்த பக்கம் சென்றோம், அங்கே இருந்த பல இனிப்புகளில் நம் இந்திய இனிப்பு குலாப் ஜாமுன் எங்களின் கண்களில் பட ,  இன்று நம்முடைய நட்பின் மகிழ்ச்சியை கொண்டாட குலாப் ஜாமுனை சுவைப்பதென முடிவுசெய்து தேவையான அளவு எடுத்துகொண்டு இருக்கை திரும்பிய எனக்கு  இந்த பதிவின் துவக்கத்தில் சொன்ன வானொலி விளம்பரத்தில் வந்த "கோபால் பல்பொடி"தான் நினைவுக்கு வந்தது.

"இந்தியா இலங்கை, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்ற ஒரே பல்பொடி கோபால் பல்பொடி."

 இதை மற்றவர்களிடம் சொல்ல அனைவரின் "வாயெல்லாம் பளீச் பற்கள்".

Image result for pictures of gopal tooth powder


மரத்தின் கிளைகள் வேறு வேறு  திசைகளில் படர்ந்திருந்தாலும் வேரடி மண் ஒன்றுதானே அதுபோலதான் நம் நால்வரும் வேறு வேறு திசைகளில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நம் வேரடி மண் பாரதம் தானே!  என்பதை உணர்ந்தவர்களாய் அவ்விடம் விட்டு பிரிந்து  சென்றோம்.


பின் குறிப்பு:

"கோ"பால் பல்பொடி இன்னமும் இந்த நாடுகளில்  இருக்கின்றதா? கடந்த முறை சிங்கபூர்  சென்றபோது அங்கே கேட்க்க மறந்துவிட்டேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ




13 கருத்துகள்:

  1. இங்கு கிடைக்கிறது... அனுப்பட்டுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புக்கு நான் அடிமை தனப்பால். இப்போ வேண்டாம் பிறகு சொல்கிறேன்

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. சூப்பர்... அருமையான பதிவு... ரசித்து படித்தேன்.. கோபால் பல்பொடியை மறக்க முடியுமா? அடுத்த பதிவு "லைப்பாய்" சோப்பை பற்றி போடுமாறு என் தாழ்ந்த விண்ணப்பத்தை இங்கே வைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பா, வாய்ப்பு வ்ராமலாபோகும் "லைப் பாய்" பற்றி எழுத

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. பெயரில்லா10 மே, 2015 அன்று AM 4:52

    தமிழ் பேசினால் பலர் திருப்பி வேறு மொழியில் பேசி வரும் சூழல் மாறி வருவது சிறப்பு. ஆனாலும் சிறிது நண்பர்கள் ஆன பின்னர் சாதி என்ற சனியன் உள்ளே நுழைந்து நெஞ்சம் கலந்து பேசுவதை தடுக்கும். அதை உள்ளே வர விடாமல் இருந்தால் நட்பு நன்கு விளங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள். வருகைக்கு மிக்க நன்றி,

      கோ

      நீக்கு
  4. ஷார்வ் எப்போது சீவ் ஆனார் ? விளக்கம் தருக :)
    கோபால் என்றவுடன் விவேக் impersonation of சரோஜா தேவி தான் எனக்கு ஞியாபகம் வந்தது https://www.youtube.com/watch?v=2R81lUrGF5w


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டத்திற்கு நன்றி காணொளி அருமை.

      என்ன சொல்கின்றீர்கள், புரியவில்லை, மீண்டும் பதிவை படித்துவிட்டு வாருங்கள்.

      கோ

      நீக்கு
  5. "கோ" பால் பல்பொடி இங்கு கிடைக்காமலா போகும்? இங்கிருந்துதானே வெளிநாடு சென்றுள்ளது....அங்கு கிடைப்பதாகக் கேள்வி....

    ஆம் அப்போதெலாம் ரேடியோவை ஆன் செய்தாலே இந்த விளம்பரம்தான்வ் அரும்.....பழைய நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேடியோ விளம்பரம் கேட்டீங்கன்றது புரியுது, ஆனால் "கோ" பால் பல்பொடி கொண்டு பல்லை "துளசி"நீர்களா? மன்னிக்கவும் துலக்கிநீர்களா?
      எங்கே ஈ .... காட்டுங்க.
      பறக்குற ஈ இல்ல இளிக்கிற ஈ

      நட்புடன்

      கோ

      நீக்கு
  6. பல்பொடி வேண்டமானால் அனுப்பலாம், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லு துலக்கிய பின் பூவாவும் கொஞ்சம் அனுப்பினா நல்லா இருக்கும்.
      கோ

      நீக்கு
  7. வணக்கம்......

    நான் பல வருடங்களாக கோபால்பல்பொடியை தான்
    பயன்படுத்தி வருகிறேன்....அனால் (2017)இப்போது வருகிற
    கோபால்பல்பொடி அதிக மண்ணாக(சிறிய கற்கள்) இருகிறது.
    பல் துலக்கினால் அந்த சிறிய கற்கள் பல்லில் பட்டு வாய் கூசுகிறது...பல்லின் இடையில் சிறிய கற்கள் மாட்டிக்கொள்கிறது..... எதற்கு காரணம் என்ன...?

    பதிலளிநீக்கு