பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 3



நிகழ்ச்சி தொடர்கிறது......

முதலில் இருந்து படிக்க .

பூம்புகார் நகரை விட்டு,கோவலனின் முந்தைய கேவலமான வாழ்வின் சுவடுகளை சிதைத்து விட்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தை வேறு பிராந்தியத்தில் துவக்கலாம் , இனி வாழ்வின் எல்லா சுகங்களையும் இம்மியளவும் மிச்சமின்றி வாழ்ந்து சுகிக்கலாம் என இன்ப கனவுகளும் இனிய நினைவுகளுமாக,
பாண்டியன் நெடுஞ்செழியனின் பட்டொளி வீசி பறக்கும்  மீன் கொடி அசைந்தாடும் மதுரைக்கு சென்று மரிக்கொழுந்து வாசம் வீசும் சுகந்த வாழ்வை தொடங்க துள்ளும் இன்பத்துடன் மதுரை நகர முகப்பு மண்டபம் நெருங்கியவர்களை அந்த ஒளிமுக வாசல் கல்தூணில் சுற்றி படர்ந்திருக்கும் பூங்கொடி, தவழ்ந்து வரும் தென்றலில் மனம் லயித்து ஆடுவதை இளங்கோ அடிகள் இப்படியாக சொல்கின்றார்," என் அருமை கண்ணகியே, கண்ணகியின் காவலனாகிய கோவலனே,  இந்த மதுரைக்கு நீங்கள் வர வேண்டாம், மங்கள மறு வாழ்வு தேடி வரும் உங்களுக்கு அமங்கல வாழ்வை பரிசளிக்க காத்திருக்கும் இந்த மதுரை திரு மண்டலத்திற்குள் அடி எடுத்து வைக்க வேண்டாம், வேறு எங்கேனும் போய் இனிய வாழ்வின் பயணத்தை தொடங்குங்கள்" என்று.  அந்த மலர்க்கொடி இந்த மரகத கொடியிடம் சொல்வதை அறியாதவர்களாய் மதுரைக்கு வருகிறார்கள்.

வெளி ஊரில் பிழைக்க ஏதேனும் வழி பிறக்குமுன் தங்களின் வாழ்வாதாரத்தை திடபடுத்திகொள்ள, தான் அணிந்திருந்த கால் சிலம்புகளுள் ஒன்றை கழற்றி  கோவலனிடம் கொடுத்து அதை விற்று பணம் கொண்டுவரும்படி அனுப்ப, அரண்மனை காவலர்களால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட, தகவல் அறிந்த மன்னன், அவனை  "கொண்டு" வாருங்கள் என்னிடம் என்பதன் தகவல்  பறி  மற்றம் உருமாற்றம் பெற்றதினால் கோவலனை "கொன்று" விட்டனர் காவலர்கள்.

Image result for picture of kannagi silambu

சிலம்போடு சென்ற கணவனை பாண்டிய மன்னனின் பாதக காவலர் கொன்று விட்ட செய்தி அறிந்த கார் குழல் காரிகை,மாதர்குல மாணிக்கம், தனது மடியில் விழுந்த இடியை மனதினில் சுமந்தவளாய், தன்னிடமிருந்த அந்த ஒற்றை சிலம்போடு, மதி இழந்து, மறை மறந்து, நீதி தவறி , நெறி பிறழ்ந்து அரண்மனை தர்பார் மண்டபத்தில் அரியாசனத்தில் அமர்ந்திருந்த மன்னனிடம்,

"என் கணவனை எதன்  அடிப்படையில் கொன்றீர்கள், அவன்  கள்வன் அல்லவே, நீரே கள்வன் அவன் களவாடியதாக கூறப்படும் உங்கள் மகா ராணியாரின் கால் சிலம்பில் என்ன பறல்கள் இருந்தன?"

"முத்து"

"என் கணவனிடம் நான் கொடுத்தனுப்பிய எனது கால் சிலம்பு மாணிக்க பறல்களால் நிறப்பபட்டவை, தீர்க்க மாக விசாரிக்காமல், நீதி தவறி , உன் நாட்டுக்கு பிழைக்க வந்த எங்களின் வாழ்வை சிதைத்து, மனம் திரும்பி மீண்டும் மண வாழ்வை தொடங்க இருந்த என் ஆருயிர்  கணவனை கொன்று விட்டாயே, இதோ பார் என் கால் சிலம்பின் மாணிக்க பறல்களை "

என்று அந்த ராஜ சபையில் தனது சிலம்பினை போட்டுடைத்து ஆவேசமாக தனது ஆதங்கத்தை வெளிபடுத்த , உடைந்த  சிலம்பிலிருந்து வெளிப்பட்ட மாணிக்க பறல்கள் அந்த அரண்மனை தர்பார் மண்டபத்தின் எட்டு திசைகளையும் எட்டிபரவ, தீப்பிழம்பாய் மாறிய தன் கண்களை ஏறெடுத்து பார்க்க திராணி அற்றவனாய், குற்ற உணர்வில் கூனி குருகியவனாய் மண்ணில் விழுந்து உயிர் நீத்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

எனினும் தனது கோபமும் ஆவேசமும் அடங்காமல் யாராலும் சரிசெய்ய முடியாத பறிபோன தன் வாழ்வு நிலைகுலைந்து , தமது மங்கள குங்குமம் அழிந்துபோன அந்த பாண்டிய மன்னன் ஆட்சி செய்த மதுரை மண்டலத்தையே தமது கற்பின் மகிமையினால் தமது சுட்டும் விழி பார்வையாலேயே சுட்டெரித்த அந்த சிலபதிகார காட்சியை ஒற்றை சிலம்புடன் ஒற்றை ஆளாக  தத்ரூபமாக தனது நாட்டிய திறமையால் மேடையில் நடத்தி காட்டி எல்லோரின் பாராட்டையும் பெற்றார் ஒரு சகோதரி.

Image result for picture of kannagi dance


இந்த ஓரங்க நாட்டியம்  நடந்துகொண்டிருந்த  அந்த சில நிமிடங்கள் விழா அரங்கம்  முழவதும் தீ பரவியதோ என நினைக்கும் வண்ணம் ஒரு உஷ்ணம் உணரப்பட்டது.

ஆக்ரோஷத்துடன்  கண்ணகியை  நம் கண் முன் கொண்டுவந்து  தத்ரூபமாக நடனமாடிய அந்த நங்கைக்கு என் வாழ்த்துக்கள்.

(அந்த நாட்டிய நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்தபோது , கணவனை கொன்றான் மன்னன், தவறை உணர்ந்து மன்னனும் மாண்டான். பிறகு ஏன், யாதுமறியாத மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த ஒட்டுமொத்த மதுரையையே கண்ணகி எரிக்க வேண்டும், தனக்கு கிட்டாத வாழ்வு  எவருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணம் எப்படி சரியாகும் என்று ஒன்பதாம்  வகுப்பு ஆசிரியரிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது,  சரி அதை பிறகு பார்ப்போம், இப்போது நிகழ்ச்சியை பார்ப்போம்.)

அதனை தொடர்ந்து, மாணவ  மாணவியருக்கு பரிசு பொருட்களும், வெற்றி கோப்பைகளும் , நற் சான்றிதழ்கள் வழங்கி, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள்,அனைவரையும் பாராட்டி சிறப்புரை ஆற்றினார்கள்.

Image result for pictures of award to children

இன்னும் சிறிது நேரத்தில் விழா நிறைவுகானபோகின்றது அதை தொடர்ந்து சாப்பாடு தயாராக இருக்கின்றது, இன்னும் சிறிது நேரத்தில் பந்தி பரிமாறப்படும் எல்லோரும் இருந்து உணவு அருந்தி செல்லவும் என்று அறிவிப்பு செய்யும் நேரத்தில்  - அதாவது விழா  நிறைவடையும் தருவாயில் விழா அரங்கம் முழுவதும் ஒரு பரபரப்பு ஆட்கொண்டது.

வாகனங்கள் நிறுத்தபட்டிருந்த இடத்தில் ஒரே சலசலப்பு...., பலரும் தங்கள் வாகனங்களை எடுப்பதும் அவற்றை வேறு இடங்களில் நிறுத்துவதுமாக இருந்தனர், நானும் நினைத்தேன், சிலருடைய வாகனங்கள்  மற்றவர் வாகனங்களை மறித்து நிருத்தபட்டிருக்கும் அவற்றை எடுக்க சிரமபட்டிருப்பார்கள் எனவே உரியவர்களிடம் சொல்லி அவற்றை   அப்புறபடுத்துவதால் ஏற்பட்ட சலசலப்பு என்று. ஆனால்..........

நடந்தது என்ன?

விடியும்வரை காத்திருங்கள் ....... அதை பற்றி நாளை சொல்கிறேன்


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

5 கருத்துகள்:

  1. அந்த 1 படமே நிகழ்ச்சியின் சிறப்பை விளக்குகிறது...

    அடுத்து என்னாச்சி... ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தனப்பால்

      கோ

      நீக்கு
  2. தனக்கு கிடைக்காத வாழ்க்கை மற்றவர்களுக்கு கிடைக்க கூடாது என்று இல்லை நண்பா.. அரசன் எவ்வழியோ ... மக்களும் அவ்வழியே... அந்த தண்டனையை கோவலனுக்கு அளிக்கையில் அங்கே இருந்த ஒரு தனி நபரும் அவனுக்காக பரிந்து பேசவில்லை அல்லவா... ?அதனால் தான்...

    பதிலளிநீக்கு
  3. தனக்கு கிடைக்காத வாழ்க்கை மற்றவர்களுக்கு கிடைக்க கூடாது என்று இல்லை நண்பா.. அரசன் எவ்வழியோ ... மக்களும் அவ்வழியே... அந்த தண்டனையை கோவலனுக்கு அளிக்கையில் அங்கே இருந்த ஒரு தனி நபரும் அவனுக்காக பரிந்து பேசவில்லை அல்லவா... ?அதனால் தான்...

    பதிலளிநீக்கு
  4. அப்பா உங்கள் சஸ்பென்ஸ்க்கு ஒரு அளவே இல்லையா? சரி துடிக்கும் எங்கள் இதயத்துடன் விடியும் வரைக் காத்திருக்கிறோம்.
    தங்களின் பார்வையில் சிலம்பின் ஓரங்க நாட்டியத்தை விவரித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு