பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2015

வாய்க்கு சர்க்கரை போடுங்கள்!!

இனிக்கட்டும் இதயங்கள்  

நண்பர்களே,

"இனிப்பு" என்பது நல்ல, மங்களகரமான, மகிழ்ச்சியான, சந்தோஷங்களை நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிபவர், குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் பரிமாறப்படும் ஒன்று என்பது நம் எல்லோரும் அறிந்ததே.

யாரேனும் நல்ல வாக்குகள், அல்லது வாழ்த்துக்கள் சொல்லும்போது "உங்க வாய்க்கு சர்க்கரை போடணும்" என்று சொல்வதும் ஒருவேளை வீட்டில் இருந்தால் உடனே சர்க்கரையை அள்ளி அவர்களின் வாயில் போட்டு தம் மகிழ்ச்சியை தெரிவிப்பதும் வழக்கம் தான்.

அதே போல தமக்கு வேண்டப்பட்ட அரசியல் பிரமுகர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அந்த அரசியல் கட்சியை சார்ந்த தொண்டர்கள், தங்களுக்குள் மட்டுமல்லாது சாலையில் வருவோர் போவோருக்கெல்லாம் இனிப்பு கொடுத்து மகிழ்வது வழக்கம்.

அதே போல கிரிக்கெட்டில், கால்பந்தாட்டத்தில் மற்றும் பல விளையாட்டுகளில் தாம் ஆதரிக்கும் டீம்கள் வெற்றி பெற்றால் உடனே இனிப்பு கொடுத்து அந்த மகிழ்ச்சியை கொண்டாடுகின்றோம்.

பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண கொண்டாட்டங்களின் போது கேட்கவே வேண்டாம் இனிப்பு கட்டாய மாக இடம் பெறும். திருமண விருந்துகளில் இலையில் முதலில் வைக்கபடுவதே இனிப்புதானே?

புத்தக வெளியீட்டு  விழாக்களிலும் கூட இப்போதெல்லாம் இனிப்பு பரிமாரபடுவதாக கேள்விபட்டேன், புத்தகமே ஒரு இனிப்புதானே அதுவும் அங்கே வந்திருக்கும் விருந்தினரை காண்பதும் இனிமைதானே?

இன்னும் அடுத்த மாதங்களில் வெளியாகபோகும் பரீட்சை முடிவுகளின்போது இந்த இனிப்புகள் அல்லோலகல்லோலபடபோது தெரிந்ததே.

சரி இந்த வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்தது?

மேற்கு மத்திய அமெரிக்காவில்  அக்டோபர் மாதம் 8 ஆம்  நாள் 1921 ஆம் ஆண்டு "இனிப்பான நாள்" என்று முதன் முதலில் அறிவித்து அதை அமெரிக்கர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  இது முழுக்க முழுக்க வியாபார நோக்கில் கொண்டு வரப்பட்டது.

Image result for PICTURES OF SWEETS

ஆனால் நம் இந்திய அதுவும் தமிழ் பண்பாட்டு நாகரீக பரிணாம வரலாற்றை ஆராய்ச்சி செய்யும்போது  தெய்வ  வழி பாட்டில் மா விளக்கு,சூரணம், கொழுகொட்டை  மற்றும் பல  இனிப்பு வகைகளை படைத்ததாக அறிகின்றோம்.

அதே போல அக நானூறு போன்ற இலக்கிய படைப்புகளில் காதலியை பார்க்க வரும் காதலன் மலையிருக்கும் பாறை இடுக்குகளில் கட்டபட்டிருக்கும் தேன் கூட்டிலிருந்து தானே கொண்டுவந்த அந்த மலைதேனோடு அவனது சிலை தேனை காண காத்திருந்ததாக  அறிகின்றோம்.

ஆனால் இப்போதெல்லாம் காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் "அல்வா" அல்லவா கொடுக்கின்றனராம்.  அதுவும் இனிப்பு தானே?

சரி பதிவின் பாதை மாறுகிறதோ?

இப்படி நம் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள இனிப்பு கொடுத்து பழகிவிட்ட நாம் இந்த காலத்தில் கொஞ்சம் யோசித்துதான் செய்ய வேண்டி இருக்கின்றது.

கடந்த முறை ஊருக்கு சென்றபோது தெரிந்த ஒரு குடும்பத்தை பார்த்துவரலாம் என்று அவர்களது வீட்டுக்கு சென்றேன், கடந்த காலத்தில் அவர்கள் எங்கள் வளர்ச்சிக்கு பல விதங்களில் தடையாய் இருந்தவர்கள் வரப்பு சண்டையில் உறவு  விரிசலாய்  இருந்தது.

பார்த்து வெகு காலமாகி விட்டதினால் அவர்களை பார்க்க சென்றிருந்தேன் அப்படி செல்லும்போது வெறும் கையேடு செல்வது நன்றாக இருக்காது என்றெண்ணி (கையில் வாட்ச் கட்டிக்கொண்டு சென்றேன் என்று நினைக்காதீர்கள்),  கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் பழம் வாங்கிகொண்டு சென்றேன்.

கொஞ்சம் வயது முதிர்ந்திருந்த அவர்களை வணங்கிவிட்டு வாங்கிகொண்டுவந்திருந்த இனிப்பையும் பழத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.

எதுக்குப்பா இதெல்லாம் உங்க அன்பு இருந்தா அதுவே போதும் என்று சொல்லி தயக்கத்துடன் அந்த பையை வாங்கி பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்ததை அவர்கள் முகம் காட்டி கொடுத்து விட்டது.

நானும் கொஞ்சநேரம் அவர்களோடு பேசிவிட்டு அவர்கள் கொடுத்த தேநீரை , சர்க்கரை இல்லாததால்  சர்க்கரைக்கு மாற்று மாத்திரைபோன்று போட்டு கொடுக்க பருகிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

பிறகு வீட்டில் உள்ளவர்கள் சொல்லித்தான்  எனக்கு தெரிய வந்தது அவர்கள் இனிப்போ நான் வாங்கி சென்ற வாழை பழங்களையோ சாப்பிட கூடாது என்று ஏனென்றால் அவர்களுக்கு சர்க்கரை நோயாம்.

அப்போது எனக்கு சுரீர் என்று மனதில் பட்டது, ஒருவேளை அவர்கள் இனிப்பு சாப்பிடகூடாது என்று தெரிந்தே நான் அப்படி செய்ததாக நினைத்துகொள்வார்களோ?, இன்னும் அந்த பழைய பகையின் புகை என் மனதில் இருப்பதாக நினைத்து கொள்வார்களோ? என நினைத்து வருத்தப்பட்டேன்.

மீண்டும் விடுப்பு முடிந்து இருப்பிடம் திரும்பிய நான் இதை என் நண்பர்களிடம் சொல்லும்போது அவர்கள் சொன்னார்கள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் படியான சாக்லட் இப்போது மார்கெட்டில் உள்ளது , அடுத்த முறை ஊருக்கு செல்லும்போது அதை வாங்கி சென்று அவர்களுக்கு கொடுத்துவிடு, இதற்காக ஏன் வருந்துகின்றாய் என்றார்கள்.

நான் அடுத்த விடுப்பு வரை காத்திராமல். அடுத்த மாதமே சென்னைக்கு சென்ற என் நண்பர் மூலம் அந்த சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் விசேஷித்த சாக்லட் பார்களை வாங்கி கொடுத்தனுப்பி அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

நண்பரும் அதை கொடுத்த செய்தி அறிந்து மனம் ஆறினேன்.

மேலை நாடுகளில் யார் தேநீர்  அல்லது காபி கொடுத்தாலும் சர்க்கரை வேண்டுமா? வேண்டுமானால் எத்தனை கரண்டி போடவேண்டும் என கேட்டு தான் இனிப்பு கலந்து கொடுப்பது வழக்கம்.

Image result for PICTURES OF DIABETIS CHOCOLATES

நண்பர்களே,  நம் சந்தோஷத்திற்க்காக அடுத்தவர் உடல் ஆரோக்கியத்தில் நாம் நமது விருப்பங்களை நுழைக்கலாமா?

இனி யார் எந்த நல்ல செய்தி , வாழ்த்து சொன்னாலும் அவர்கள் வாயில் சர்க்கரை  போடுவதற்கு முன் அவர்கள்  சர்க்கரை சாப்பிடலாமா என அவர்கள் வாயால் கேட்டு அறிந்தபின் சர்க்கரை அள்ளி கொட்டுங்கள் உங்கள் மகிழ்ச்சியின் தாளத்தை தட்டுங்கள்.

அதே சமயத்தில் உங்கள் சார்பாக வேறொருவரிடம் சொல்லி மற்றவர்களுக்கு அவர்கள் வாய்க்கு சர்க்கரை போடும்படி சொல்லாமல் நீங்களே நேரில் சென்று/வந்து  அதை அவர்களின் அனுமதியுடன் செய்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே,  சுவையும் கூடுமே.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

 1. இன்றைக்கு ஒவ்வொருவரிடமும் கண்டிப்பாக கேட்க வேண்டும்...

  நல்லவேளை பாதை மாறவில்லை...

  பதிலளிநீக்கு
 2. தனப்பால்,

  வருகைக்கு மிக்க நன்றி.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 3. நாங்கள் இனிமையானவங் "கோ". அத்னாலா இனிமைக்கே இனிப்பா?!

  ம்ம்ம் இங்கல்லாம் இப்ப 5 ரூபாய்க்கு கூட மிட்டாய் தராங்க சில்லறை இல்லைனு சொல்லி என்னத்தச் சொல்ல...ம்ம் இது பற்றி நம் நண்பர் விசு கூட ஒரு அருமையான காமெடி பதிவு எழுதியிருப்பாரு....நீங்க கூட படிச்சிருப்பீங்க...

  இந்தியா இனிமையான நாடுனு ஏன் சொல்றாங்க தெரியுமா!!! இனிமையான மனிதர்கள் நிறைந்த நாடு!

  ந்ல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   அனேக வணக்கங்கள்.

   தங்களின் இனிமையான நட்பு என் இதயத்தை ஈ மொய்க்க செய்கிறது. ரொம்ப நாளா ஆள காணோம்? புத்தக திருவிழாவிற்கான ஏற்பாட்டில் இருப்பீர்கள் என தெரியும்

   உங்களின் உதவிக்கு மிக்க நன்றி.

   நாங்க இந்தியாவில இல்லன்க்ராதாலதானே அப்படி சொல்றீங்க... புரியுது, நீங்க மட்டும் தான் இனிமையானவங்கனு.
   .
   நட்புடன்

   கோ

   நீக்கு
 4. வாருங்கள் அரசே,
  உங்கள் வாய்க்கும் சர்க்கரைப் போடலாமா?
  இப்படி ஒரு பதிவிற்காக,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் விருப்பம்

  வருகைக்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு