குருப் போட்டோ!!
நண்பர்களே,
நம்மில் எத்தனைபேர் நமது பள்ளி இறுதியாண்டு அல்லது கல்லூரி இறுதி ஆண்டில் நம்முடன் படித்த மாணவ மாணவியரும், பள்ளி கல்லூரி முதல்வர்கள் நமது ஆசிரியர்கள் , அலுவலர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பத்திரபடுத்தி வைத்திருக்கின்றோம்?
நம்மில் சிலருக்கு புகைப்படம் எடுத்துகொள்ளும் வாய்ப்பு கூட கிடைத்திருக்காது, எனினும் வாய்ப்பு கிடைத்தவர்களில் பலருக்கு அந்த புகைப்பட பிரதிகள் கிடைத்திருக்காது, இன்னும் சிலருக்கு புகைப்பட பிரதிகள் கிடைத்திருந்தாலும் அந்த கால சூழ்நிலையில், அல்லது மன நிலையில் அந்த புகைப்படங்களை பத்திரபடுத்தி வைக்கும் எண்ணமும் சிந்தனையும் ஏற்பட்டிருக்காது.
அப்படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது நம்மிடம் இல்லையே என வருத்தபடுபவர்களும் உண்டு.
இவை நமது மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்று என்றால் அது மிகை அல்ல என்பதை பலரும் ஒப்புகொள்வார்கள்.
பொக்கிஷம் என்பது என்ன? அடிக்கடி கிடைக்கக்கூடாத, வேண்டும்போதெல்லாம் எளிதில் பெற்று கொள்ள முடியாத விலை எதுவும் நிர்ணயிக்க முடியாத அரிதான படைப்புகள், கலைபொருட்கள், சேகரிப்புகளையே பொக்கிஷம் என்போம், அப்படி மீண்டும் நாம் நினைத்தாலும், எத்தனை காசு கொடுத்தாலும் கிடைக்க கூடாத ஓர் அறிய விஷயம் தான் நம் பள்ளி கல்லூரி காலத்து குரூப் போட்டோ என்பது.
பலகோடி கொடுத்தாலும் அந்த புகைப்படம் நமக்கு கிடைக்குமா?
சாதாரணமாகவே இப்போது நம் வீடுகளில் இருக்கும் பழைய புகைப்பட ஆல்பங்களை சில வேளைகளில் திருப்பி பார்க்கும்போது நமக்கு ஏற்படும் ஆனந்ததிற்கு அளவே இருக்காது, அதுவும் நம்மோடு படித்த நண்பர்களின் புகைப்படங்களை,நமக்கு கற்றுகொடுத்த ஆசிரியர்களின் புகைபடங்களை பார்க்கும்போது , அவர்களின் குண நலன்கள், நட்புகள், உதவிகள், அவர்களோடான விளையாட்டுக்கள், சண்டைகள், கோபங்கள் போன்றவையும் நம் மன கண் முன் வந்து செல்லும் பலவேளைகளில் நம் கண்ணீரையும் உகுக்க வைக்கும்.
பல காலங்களுக்கு பின்னர் நாம் அந்த புகைப்படங்களை பார்க்கும்போது நம்மோடு படித்த சக மாணவர்களை குறித்தும் நம் பள்ளி கல்லூரி நாட்களின் பசுமையான நினைவுகளையும் மனதில் அசைபோடும்போது நமக்கு ஏற்படுகின்ற அந்த ஆனந்த சுகத்திற்கு ஈடாக என்ன அமைய முடியும்.
பல ஆண்டுகள் கழித்து அந்த புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு சிலரின் பெயர்கள் கூட மறந்துபோய் இருப்போம்.
இப்படி பெயர்கள் மறக்ககூடாது என்பதற்காகவே சில புகைப்படங்களில் அந்தந்த மாணவர்களின் பெயர்கள் அந்தந்த புகைப்படங்களில் அச்சடித்து கொடுக்கப்படும், ஒரு சிலர், புகைப்பட பிரதி வந்தவுடனே தனியாக ஒரு தாளில் எல்லோர் பெயர்களையும் புகைப்பட வரிசையிலேயே எழுதி அந்த புகைப்பட அட்டைக்கு கீழே ஒட்டி வைத்துவிடுவர்.
இப்படி தான் எங்களின் பள்ளி இறுதி ஆண்டு குரூப் போட்டோ எடுக்கும் நாள் அன்று யார் யார் எந்த இடங்களில் நிற்க வேண்டும் என்று முன்னதாகவே ஒத்திகைபார்க்கபட்டு அந்தந்த மாணவர்களின் பெயர்கள் இனிஷியலோடு சரிபார்த்து ஆசிரியர்கள் குறித்துக்கொண்டு அதை புகைப்படம் எடுக்கும் அந்த நிறுவனத்தினரிடம் கொடுத்து விட்டனர்.
இதில் அவரவர் விருப்பம் போல யார் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் நின்றுகொள்ளலாம் என்று சொல்லிய பிறகே பெயர்களை எழுதி கொடுத்தனர்.
ஒத்திகைக்கு பின்னர் சூரிய வெளிச்சம் வரும்வரை போடப்பட்ட பெஞ்சுகளில் பொறுமையோடு அமர்ந்திருந்தோம், வெகு நேரமாகியும் தேவையான வெளிச்சம் வராததால் பொறுமை இழந்தோம்.
இந்த குழுவில் இடமிருந்து வலதுபக்கம் மூன்றாம் வரிசையில் பதினோராவது ஆளாக சையத் பாபுவும் (!நினைவில் நிற்கும் நிக்கா" ) பனிரெண்டாவது ஆளாக சாம்ராஜும்-12 பதிமூன்றாவது ஆளாக ராஜ கோபாலும்-13 இருக்கும்படி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது, இதில் ராஜகோபாலும் சையத் பாபுவும்,சாம்ராஜும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்ததினால் புகைப்படத்தில் அருகருகே நின்றுகொள்வதென விரும்பி அதன்படி இடங்களை தேர்வு செய்திருந்தனர்.
இன்னும் போதிய வெளிச்சம் வராததால் மாணவர்களாகிய எங்களிடம் , சரி எல்லோரும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள் , மீண்டும் அழைக்கும்போது வந்து அவரவர் இடங்களில் நின்றுகொள்ளுங்கள் என கூறி எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்தனர்.
நாங்களும் வரிசையிலிருந்து பிரிந்து கொஞ்சம் நேரம் மற்ற மாணவர்களுடன் அளவலாவிகொண்டிருந்தோம், சிலர், பாத்ரூம் சென்றனர், சிலர் அருகிலிருந்த கேண்டீன் சென்றனர்.
மீண்டும் ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து இப்போது போதிய சூரிய வெளிச்சம் வந்துவிட்டது சீக்கிரம் வரும்படி துரிதமாக அழைக்கப்பட்டோம். அவரவர் தங்களுக்கான இடங்களில் நின்றுகொண்டோம்.
வந்து நின்ற கொஞ்ச நேரத்தில் "ஸ்மைல் ப்ளீஸ்" கிளிக்....கிளிக்....கிளிக்....
ஒரு நான்கு நாட்கள் கழித்து ஸ்டடி ஹாலிடேஸ் துவங்கி விட்டது.
பரீட்ச்சைக்கு (+2) ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னாள் பள்ளிக்கு வந்து ஹால் டிக்கட் பெற்று கொள்ளும்படி அறிவுருத்தபட்டிருந்தோம்.
அதன்படி குறித்த நாளில் பள்ளிக்கு வந்த எங்களுக்கு ஹால் டிக்கட்டுடன் கடந்த பத்து நாட்களுக்கு முன் எடுக்க பட்ட குரூப் போட்டோக்களின் பிரதிகளும் கொடுக்கப்பட்டன.
ஹால் டிக்கட்டையும் போட்டோ பிரதிகளையும் பெற்றுக்கொண்ட நாங்கள், வர இருக்கும் தேர்வுகளுக்கான தயாரிப்புகளை குறித்து விவாதித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டோம்.
பரீட்ச்சையும் முடிந்தது, தேர்வு முடிவுகளும் வந்தன,
எங்கள் பள்ளி மாணவர்கள் எல்லோரும் அமோக வெற்றி பெற்று ஆனந்தமாக எங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற வேண்டி மீண்டும் பள்ளிக்கு வந்தோம்,
ஆசிரியர்களின் பாராட்டும் வாழ்த்துகளையும் பெற்று கொண்ட நாங்கள் பள்ளியின் உட்புற சுவறுகளில் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்களின் குரூப் போட்டோக்கள் மாட்டி வைக்கபட்டிருக்கும் இடத்திற்கு சென்று 1950,,,1980...வருட குரூப் போட்டோக்களை கடந்து புதிதாக பிரேம் போட்டு மாட்டிவைக்க பட்டிருந்த எங்கள் போட்டோவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்,
அதை சற்று உற்று பார்த்த பாபு, சாம், ராஜ கோபால் மூவரும் தாங்கள் ஒன்றாக இருப்பதை கண்டு தங்களுக்கும் மகிழ்ச்சியை தெரியபடுத்திக்கொண்டனர்.
அப்போதுதான் புகைபடத்தின் கீழே இருந்த பெயர்களை பார்த்தனர்.
பார்த்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி.
அதாவது அவர்களின் பெயர்கள் இடம் மாறி இருந்தன,
பாபுவின் பெயருக்கு பதில் சாம்ராஜின் பெயரும் சாம்ராஜின் பெயருக்கு பதில் ராஜகோபாலின் பெயரும், ராஜகோபாலின் பெயருக்கு பதில் பாபுவின் பெயர்களும் எழுதி இருந்ததை கண்டு , இது தவறுதலாக எழுதப்பட்டுள்ளது என நினைத்து அலுவலக மேலாளரிடம் முறை இட்டனர்.
அவரும் தாங்கள் அந்த புகைப்பட நிறுவனத்தினரிடம் கொடுத்த பெயர் பட்டியலின் நகலை எடுத்து சரி பார்த்து இடமிருந்து வலதுபக்கம் மூன்றாம் வரிசையில் பதினோராவது ஆளாக சையத் பாபுவும்-11 பனிரெண்டாவது ஆளாக சாம்ராஜும் -12 பதிமூன்றாவது ஆளாக ராஜ கோபாலும்-13 இருக்கும்படி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தததையும் சுட்டிக்காட்டி , நீங்கள் தான் வரிசை மாறி நின்றிருக்கின்றீர்கள் எனவும் நீங்கள் உங்கள் பிரதிகளில் பெயர்களை திருத்தி எழுதிகொள்ளுங்கள் பள்ளியில் உள்ள பிரதியில் கூடிய விரைவில் மாற்றி விடுகின்றோம் என்றும் சொன்னார்.
பெயர் எப்படி மாறிப்போனது என்பதில் குழப்பமடைந்த அவர்கள் நினைவுக்கு வந்தது அந்த நாள்.... சூரிய வெளிச்சம் சரி வர இல்லாததால் கொடுக்க பட்ட இடைவேளை முடிந்து துரிதமாக அழைக்கப்பட்டபோது அவசர அவசரமாக வந்து நின்றதில் வரிசைகரம் மாறிப்போனதை உணர்ந்தனர்.
சிறிது நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்த இந்த பள்ளி நாட்களில் இணை பிரியாத அந்த மூன்று நண்பர்களும் இணைந்து ஒரு முடிவு எடுத்து அலுவலக மேலாளரிடம் சொன்னார்கள், " சார் எங்களை மன்னியுங்கள் இது எங்கள் தவறுதான் , எனினும் தயவாக இந்த பெயர்களின் வரிசையை மாற்றவேண்டாம் அப்படியே இருக்கட்டும், இது எங்கள் நட்பின் அடையாளமாக இந்த பள்ளியின் சுவற்றில் பல காலம் இப்படியே இருக்கட்டும், அதே போல எங்கள் பிரதியிலும் நாங்கள் அப்படியே வைத்துகொள்ள போகின்றோம்"
அதற்க்கு அந்த மேலாளர், தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று இதை அப்படியே வைக்க முடியும் என்றாராம்.
இதில் மாணவர்களின் பெயர்கள் மட்டுமா மாறி இருந்தது அவர்களின் சம்மதத்துடன் அவர்கள் சார்ந்த அம்மதமும் அல்லவா மாறி இருந்தது?
சுமார் இருபது ஆண்டுகள் கழித்து வெளி நாட்டிலிருந்து விடுமுறையில் தாயகம் வந்திருந்த சாம்ராஜ் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தான் படித்த அந்த பள்ளியை தன் குடும்பத்திற்கு காட்ட வேண்டி பள்ளிக்கு அழைத்து சென்று அங்கே பல கோணங்களில் தமது பள்ளியை புகைபடமெடுத்துகொண்டு, அப்படியே தமது பள்ளி இறுதி ஆண்டு குரூப் போட்டோ இருந்த இடத்திற்கு வந்து தமது நண்பர்களோடு நின்றிந்த அந்த புகைப்படத்தை பார்த்து ஆனந்தமடைந்தார்,
தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் தமது புகைப்படம் எது என்று கண்டுபிடிக்க முடியுமா ?என கேட்க்க அவர்களும் முயன்று முடியாமல்போய் ( அதானே எப்படிங்க முடியும் அப்போ இருந்தது பால் வடியும் முகமாயிற்றே?) கீழே இருந்த பெயரை வாசித்து ,,,இதோ இதுதானே நீங்கள் என மனைவி சொல்ல.... இல்லை இது என் நண்பன் பாபு என சொல்லி நடந்த அந்த நாளின் நிகழ்வை தனது மனிவிக்கும் பிள்ளைகளுக்கும் விளக்கி கூறிக்கொண்டே தமது இரண்டு நண்பர்களையும் இன்னும் கொஞ்ச நேரம் உற்று பார்த்து உணர்ச்சி மேலிட கண்களில் நீர் எட்டிபார்த்ததை பிள்ளைகள் எட்டிபார்க்கும் முன் துடைத்துக்கொண்டு , வீட்டிற்கு வந்து தமது பழைய பெட்டியில் பத்திர படுத்தி வைக்கபட்டிருந்த அந்த பள்ளி நாட்களின் குரூப் போட்டோவை வெளியில் எடுத்து ஊருக்கு திரும்பி போகும்வரை தமது வீட்டின் வரவேற்பறையில் வைத்து அழகு பார்த்துவிட்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஊருக்கு செல்லும் முன் மீண்டும் அந்த விலைமதிபற்ற பொக்கிஷத்தை துடைத்து பத்திர படுத்திவிட்டு ஊருக்கு சென்றானாம்.
நண்பர்களே,
இது போன்ற பள்ளி கல்லூரி நாட்களின் குரூப் போட்டோ இருந்தால் பத்திரபடுத்துங்கள் உடன் படித்த நண்பர்களை, பாடம் புகட்டிய ஆசிரியர்களை அவ்வப்போது பார்த்து மகிழுங்கள்,பார்க்கும் போதெல்லாம் மனசெல்லாம் மலர் சோலை மனம் வீசுவதை உணருங்கள்.
நன்றி!
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
இரண்டு வருடம் முன்பு இராஜபாளையத்தில் இதே போல... இனிய நினைவுகள் ஞாபகம் வந்து கண்களில் நீர் முடியாது இப்போது...
பதிலளிநீக்குநம் நண்பர்களை நினைக்கின்ற "பலா" காலம் நம் இதயமெல்லாம் "விழாக்கோலம்."
நீக்குநட்புடன்
கோ
அருமையான பதிவு நண்பா ! நம் முதுகலை வகுப்பின் புகை படம் தங்களிடம் உண்டோ? அப்படி இருந்தால் அதை எமக்கு அனுப்பி வைக்க இயலுமா ?
பதிலளிநீக்குஅது கிடைத்தால் ஒரு 1000 பதிவிற்கான ஐடியா கிடைக்குமே ..
முதுகலை புகைப்படம் கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தின் வெளிபாடே இந்த பதிவு.
நீக்குநட்புடன்
கோ
தனப்பால்,
பதிலளிநீக்குதங்களின் நட்பு மதிபிலடங்காது என்பதை தங்களின் கண்கள் வழித்த கண்ணீர் பதிவு செய்ததை எண்ணி உள்ளம் நெகிழ்கின்றது.
நட்புடன்
கோ
பள்ளி, கல்லூரி குரூப் படங்கள் பொக்கிஷங்கள் தான்!
பதிலளிநீக்குஎங்கள் நினைவுகளையும் மீட்டெடுக்கின்றது. அதில் பல சோகங்களும் உண்டு! நல்லவையும் உண்டு!
ம்ம்ம் நினைத்தோம்....காண்டீன், பாத்ரூம் என்று இடைவெளி விட்டு மீண்டும் வரும் போது "ஸ்லிப் ஆன்" ஆகிர்யிருக்கும் என்று.....ம்ம்ம் இடமாற்றம்..."பால் வடியும் முகம்"???!!!!!!!!
அது சரி! இதில் இந்தப் பதிவில் பெயரில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளதை யாரும் அறிய மாட்டார்கள் அது இந்த 007 க்குத் தெரியும்! சில விவரங்களும் கிட்டியது! அந்தப் பால் வடியும் முகம் பற்றி!
ஜோக்ஸ் அபார்ட்...உங்கள் நட்பின் இலக்கணத்திற்கு ராயல் சல்யூட்! "கோ" ஆயிற்றே! ராயல் சல்யூட்!
அருமை,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்,
நன்றி.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி .
பதிலளிநீக்குகோ