பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 ஏப்ரல், 2015

வாசல் கதவை தட்டினாள் ராச லட்சுமி!!

காசு ... பணம்...துட்டு... மணி ....மணி....

நண்பர்களே,

தமிழ் நாடு, ஆந்திர, கேரளா, கர்நாடகா, நாகாலந்து, மணிபூர் , திரிபுரா,சிக்கிம் என மாநிலங்களின் பெயர்களை வரிசையாக கேட்க்க நேர்ந்தால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பல விஷயங்களுள் முக்கியமான ஒரு விஷயம், லாட்டரி.

இந்த லாட்டரிகளை  அரசாங்கமே ஊக்குவித்து  ஏற்று நடுத்துவது பல மாநிலங்களில் நாம் பார்க்கும் ஒன்றுதான்.

இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மாநிலங்களின் வருவாய் பெருக்கத்திற்கு இந்த லாட்டரி ஒரு கணிசமான பங்கு வகிக்கின்றது என்றால் அது மிகை அல்ல.

லாட்டரி சீட்டுக்கள் விற்றே  கோடி கோடியாக சம்பாதித்து கோடீசுவரன் ஆனவர்களும் உண்டு, லாட்டரி வாங்கி வாங்கியே பல கோடீசுவரர்கள் தெரு கோடிக்கு வந்தவர்களும் உண்டு.

இந்த லாட்டரி பழக்கம் என்பது ஏறக்குறைய ஒரு அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டமே என்பதும் பலரது கருத்து.

இந்த லாட்டரியில் பல வகைகள் உள்ளன, சுரண்டல் லாட்டரி,வார லாட்டரி , மாத லாட்டரி என்று.

குறிப்பாக இந்த சுரண்டல் லாட்டரி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி கடைசியில் அவர்களை தற்கொலை வரை இட்டு சென்ற விஷயங்களையும் நாம் ஆங்காங்கே கேள்வி பட்டிருக்கின்றோம்.

நம்ம  ஊரில் கஷ்டபடுவதை சொல்லும் விதமாக  "சாப்பாட்டுக்கு  லாட்டரி அடிக்குது நம்ம பொழப்பு" என்று சொல்ல கேட்டிருப்போம்.

இந்த லாட்டரி விவகாரத்தில் எந்த புத்திசாலி தனமும் வேலை செய்வதில்லை, மாறாக பெரும்பாலான பரிசுகள் வெறும் அதிர்ஷ்டங்களின் அடிப்படையிலேயே கிடைக்கின்றது என்பதும் பெரும்பாலானவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நமக்கு அதிர்ஷ்டம்  எப்போது வரும் என்பதையும் யாராலும் அறுதி இட்டு உறுதியாக சொல்லமுடியாது.  எத்தனை பெரிய மந்திர தந்திர மாந்த்ரிகரும் கணக்கிட்டு, கணித்து சொல்லமுடியாத ஒன்றுதான் அதிர்ஷ்டம்.

இந்த அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை, ஆண்டவனின் கிருபை  அல்லது ஆசிர்வாதம், அல்லது அனுகிரகம் என்று எடுத்துகொள்வதுதான் சரியானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இப்படி லாட்டரியின் ஒவ்வொரு குலுக்கலிலும் பரிசுபெறுபவர்கள் அதிகபட்சம்  இரண்டு சதவீதத்தினரே. அப்படியானால் சீட்டு வாங்கிய 98 சதவீதத்தினர் தங்களது பணத்தை இழந்துபோகின்றனர்.

பரிசுபெறுபவரின் பணம் இழந்தவர்களின் பணமே அன்றி லாட்டரி விற்கும் அரசாங்கத்தின் பணமல்ல.

ஒரு சிலர் " ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாய்களோ கொடுத்து வாங்குகின்றோம்  வந்தால் மலை போனால் இரண்டு ரூபாய் தானே  என நினைத்து அன்றாடம் லாட்டரி வாங்கி தங்களின் உழைப்பின், வியர்வையின் பலனை கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கே தெரியாமல் இழந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.

இந்தியா மட்டுமல்லாது உலகின் , ஏறக்குறைய, அத்தனை நாடுகளுமே இந்த லாட்டரி முறையை  தங்களது நாட்டில் அனுமதித்து ஊக்கபடுத்துகின்றன.  , இதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானத்தில்  மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களையும் மக்களுக்கான வசதிகளையும் செய்துகொடுக்கவும் இந்த லாட்டரி திட்டங்களை பல மேல் நாடுகள் இன்றளவும் செயல்படுத்தி வருகின்றன.

அப்படி மேல் நாடுகளில் நடத்தப்படும் பலவிதமான லாட்டரிகளுள் ஒன்று அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைந்து நடத்தும் "ஈரோ மில்லியன்" லாட்டரி திட்டம். இதில் ஐரோப்பாவில் உள்ள யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம். இந்த லாட்டரி வாரத்தில் இரண்டு நாட்கள் குலுக்கப்படும்.

ஒரு லாட்டரியின் விலை, இங்கிலாந்தில் இரண்டு பவுண்டுகள் (1 பவுண்ட் =ரூ.98.00 - 100.00), ஒருவர் எத்தனை சீட்டுக்கள் வேண்டுமானாலும் வாங்கலாம்.

லாட்டரிகளை, குலுக்கல் நாள் மாலை ஏழு மணிக்குள்ளாக  வாங்கிவிடவேண்டும்,ஏனென்றால் குலுக்கல் முடிவுகள் மாலை ஒன்பது மணிக்கு நேரடியாக தொலைகாட்ச்சியில் ஒலிபரப்புவார்கள் , அதற்க்கு முன் நாட்டின் / ஐரோப்பா கண்டம் முழுவதிலும் விற்ற மொத்த பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று கணக்கிட்டு அதன் அடிப்படையில் பரிசு தொகை நிர்ணயிக்கப்படும்.

இப்படி வாங்கப்பட்ட லாட்டரியில் தங்களுக்கு பரிசு  விழுந்திருக்கின்றதா என பார்பதற்கு குலுக்கல் அன்று மாலை ஒன்பதுமணிக்கு தொலைகாட்சி பெட்டிமுன் கூடி தங்களது அதிர்ஷ்டங்களின் அழைப்பிற்காக காத்திருப்பார்கள்.

இப்படிதான் கடந்த 20 மாதங்களுக்கு முன்  இங்கிலாந்திலுள்ள ஒரு தம்பதியினர், தாங்கள் வாங்கிய லாட்டரியின் குலுக்கல் அன்று தங்களது எண்ணை சரியாக சரிபார்க்காமல் , இந்த லாட்டரியில் நமக்கு  இரண்டு பவுண்டுகள் மட்டுமே கிடைத்திருப்பதாக தவறுதலாக நினைத்துகொண்டு அந்த சீட்டை குப்பைதொட்டியில் போட்டுவிட்டனர், நமக்கெல்லாம் ஏது  அதிர்ஷ்ட என்று நினைத்து,

அடுத்தநாள் பத்திரிகையில் வந்த வெற்றிபெற்ற  எண்களை  பார்த்தபின்னர் குப்பையை கிளறி அவர்களது சீட்டை எடுத்து எண்களை  ஒப்பிட்டு பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனராம்,  ஏன் அதிர்ச்சி? பின்ன இருக்காதா?  அவர்கள் வாங்கியிருந்த லாட்டரி சீட்டில் "ஜாக்பாட்" பரிசு ஒரு மில்லியன் பவுண்ட் பரிசு விழுந்திருந்தது.

இன்ப அதிர்ச்சியில் உறைந்த  கணவனும் மனைவியும் சந்தோஷமாக தங்களது மகிழ்ச்சியை நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்துகொண்டதொடல்லாமல், பல தர்ம காரியங்களுக்காகவும் அந்த பணத்தின் பெரும் பகுதியை செலவு செய்தனராம்.

எல்லோரும் சொல்லுவார்கள் அதிர்ஷ்ட்டம் எல்லோருக்கும் வராது, அப்படியே வந்தாலும் வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும் என்று,  சரிதானே?

ஆனால் இந்த கூற்று முற்றிலும் உண்மையல்ல என்று சொல்லுமளவிற்கு நடந்தது ஒரு நிகழ்ச்சி.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மற்றுமொரு " ஈரோ மில்லியன் " லாட்டரி குலுக்கலில் ஏற்க்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு (இருபது மாதங்களுக்கு) முன் ஜாக்பாட் பரிசுபெற்ற அதே தம்பதியினருக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் பரிசாக ஒரு மில்லியன் , அதாவது பத்து லட்சம் பவுண்டுகள் பரிசாக கிடைத்திருக்கின்றது.

Image result for picture of couple who won euro million for second time

இப்படி ஒருமுறை ஜாக்பாட் பரிசு பெறவேண்டுமானால் அதற்க்கு 283 பில்லியனில் ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கின்றதாம்.

அதிர்ஷ்ட்ட லட்சுமி இப்படி அடிக்கடி தமது வீட்டு கதவை தட்டிவிட்டு கூரையை பிரித்து கொட்டுவதை குறித்து அந்த கணவர்  சொல்லும்போது, " என் மனதில் பட்டது இந்த வாரம் மீண்டும் எனது முறை என்று எனவே தான் ஏற்கனவே ஜாக்பாட் பெற்றிருந்த போதிலும் மீண்டும் லாட்டரி வாங்கவேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்லிகொண்டிருந்தது" என்று.

முன்பு கிடைத்த பணத்தில் தமது வயதான பெற்றோருக்கு நல்ல வீடுகளை வாங்கியும் பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையும் வழங்கிய இவர்கள் இந்த முறையும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதோடு இதுவரை தாங்கள் வாழ்ந்துவந்த " நிலை கேரவான்"(TEMPORARY HOUSE) வீட்டிலிருந்து ஒரு 7 அறைகள் கொண்ட பெரிய வீட்டுக்கு குடிபெயரபோவதாக சொல்லி இருக்கின்றனர்,

அப்படி தாங்கள் "குடி"யேற நினைக்கும் பெரிய வீட்டில்  இருக்க வேண்டிய வசதிகளுள் "நீச்சல் குளமும்", "பாரும்"  கண்டிப்பாக இருக்க வேண்டுமாம்.

கடந்த பல வருடங்களாக இன்ப சுற்றுலா எங்கேயும் செல்லாத இந்த அதிர்ஷ்ட்ட கார தம்பதியினர் இந்த முறை கப்பல் பயணம் செல்ல இருப்பதாக சொல்லுகின்றார் இந்த முன்னாள் "லாரி  டிரைவர் ராஜா கண்ணு."  

யாருக்கும் இவர்கள் கடமைப்பட்டவர்கள் இல்லை என்றபோதும் சமூக நலனில் அக்கறைகொண்டு சேவை நிறுவனங்களுக்கு தங்களது பெரும் பணத்தை அன்பளிப்பாக கொடுக்க முன் வந்திருக்கும் இந்த அருமை தம்பதியினருக்கு நமது வாழ்த்துக்கள்.

அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்பி வாழ்ந்தாலே நமக்கு உரிய உயர்வு கிடைக்கும் என்று நம்பும் மக்களே சுபிட்ச்காமாக வாழ்பவர்களாவர்;  எனினும் கடவுளின் அருளும் அனுகிரகமும் இருந்தால் நம் உழைப்பிற்கு ஏற்ற உயர்வை - சுபிச்சத்தை ஏற்ற நேரத்தில் நாமும் அடைவோம். 

எந்த நிலையிலேயும் நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்யும் குணமும் போதுமென்ற மனமும்  ஒருங்கே அமைய பெற்றால் நம்மைவிட மகிழ்வானவர்  யார் இருக்கமுடியும்?     

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்!

கோ                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   


8 கருத்துகள்:

 1. எந்த நிலையிலேயும் நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்யும் குணமும் போதுமென்ற மனமும் ஒருங்கே அமைய பெற்றால் நம்மைவிட மகிழ்வானவர் யார் இருக்கமுடியும்?

  உண்மை நண்பரே
  நாம் மகிழ்வானவர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. கரந்தியார் அவர்களின் வருகையும் பின்னூட்டமும் கூட மகிழ்வை தருகின்றது.

   நன்றி

   கோ

   நீக்கு
 2. லாட்டரியில் அத்தனை நம்பிக்கையும், நல்ல எண்ணமும் இல்லை என்றாலும், இந்தத் தம்பதியினர் அந்தப் பணத்தில் சில தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்தும், வயதான பெற்றோருக்கு வீடும் வாங்கிக் கொடுத்தது மகிழ்வைத் தருகின்றது. தங்களுக்கு மட்டும் என்றில்லாமல் பிறருக்கும் கொடுத்து இருப்ப்பது அவர்களது நல்ல மனதைக் காட்டுகின்றது. தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்தால் இன்னும் வேண்டும் என்றாலும் லாட்டரி அடிக்கட்டும் அவர்களுக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாய் சொன்னீர்கள், தாம் பெற்ற இன்பத்தை மற்றவரோடும் பகிர்ந்தளிக்க பெரிய மனது வேண்டும்.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 3. தனப்பால்,

  தங்களின் பின்னூட்டம் சிறப்புக்கு மேலும் சிறப்பூட்டுகின்றது.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அரசே,
  தாங்கள் சொன்னது உண்மையே,
  எந்த நிலையிலும் நாம் பிறருக்கு உதவனும் என்ற மனம் இருந்தால் பின்னது தானே வரும்.
  வாழ்த்துக்கள்
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி.

   உங்களுக்கும் ராச லட்ச்சுமி வாசல் கதவை தட்ட வாழ்த்துக்கள்

   கோ

   நீக்கு