பின்பற்றுபவர்கள்

புதன், 27 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 4

நிகழ்ச்சி தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க .

விழா இப்படியாக நிறைவடையும் தருவாயில் விழா அரங்கம் முழுவதும் ஒரு பரபரப்பு ஆட்கொண்டது.

புதிதாக பலரும் அரங்கத்திற்குள் நுழைந்தனர். விழா முடியும் நேரத்தில் யாராக இருக்கும் ஒருவேளை உணவு கொண்டுவருபவர்களோ?

ஒரே சலசலப்பு, என்ன நடக்கின்றது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன  ஏது என்று விசாரிக்கையில் திடீர் என்று மேடையில் தோன்றினார், தமிழ் கூறும் நல் உலகம் அறிந்த பேராசிரியர், முனைவர். மதிப்பிற்குரிய தா. கு. சுப்பிரமணியம் அவர்கள்.

பட்டி மன்றங்களில் தீபாவளி, தமிழ் புத்தாண்டு,பொங்கல்,சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தொலை காட்சி பெட்டிகளின் ஊடாய்   பார்த்து ரசித்த மக்களுக்கு இப்போது இவரை இப்படி பார்த்ததும்  அவையோரின் கண்களில் ஒரு மகிழ்ச்சி,, சந்தோஷம் . வந்தவர் நட்க்ஷத்ரா தமிழ் பள்ளி மாணவ மாணவியரை, அதன் ஆசிரியைகளை வாழ்த்தி ஆசி கூறி விடைபெறும் சமயத்தில் மேலும் ஒரு பிரபலம் மேடையில் தோன்ற, என்ன நடக்கின்றது இங்கே இவர்கள் வருவதாக நிகழ்ச்சி நிரலில் கூட போட வில்லையே, என அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் பலர் பேசிக்கொண்டனர்.

சரி அப்படி முன்னறிவிப்பின்றி திடீர் என மேடையில் தோன்றிய அந்த பிரபலம் யார்?

அவர்தான் பட்டிமன்ற இளவரசர் -  இலக்கிய பேச்சாளர் திரு ராஜா அவர்கள்.

Image result for pattimandram raja speech

அவையோரின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க கொஞ்சம் நேரமானது, அவரோ, அனைருக்கும் வழக்கமான தமது இயல்பான முறையில் வணக்கம் கூறிவிட்டு, பள்ளி குழந்தைகளுக்கும் ஆசிரியைகளின் தொண்டுள்ளத்திற்க்கும்  தமிழ் ஆர்வத்திற்கும் பாராட்டை தெரிவித்து அனைவரையும் வாழ்த்தி வணங்கிவிட்டு மேடை விட்டு இறங்க அவையோருக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி.

எத்தனை இன்ப அதிர்ச்சியைத்தான் தாங்க முடியும்.

இப்போது நிகழ்ந்த இந்த இன்ப அதிர்ச்சி முந்தின  இரண்டை காட்டிலும்  கொஞ்சம் வீரியம் நிறைந்ததாக இருந்தது.

 பின்னே இருக்காதா?

மேடையில் தோன்றியவர் எல்லோரையும் அன்பொழுக "வாங்க பழகலாம்" என்று வாயார அழைத்து மகிழும்  பட்டிமன்ற பிதா மகன், பேராசிரியர் , முனைவர் . சாலமன் பாப்பையா ஆயிற்றே.

Image result for PICTURE OF SOLOMON PAPPAIYA

சிறப்புரை ஆற்றியவர்களும் , திரை தோன்றி வாழ்த்தியவர்களும் இந்த பள்ளியின் தூண்களாக விளங்கும் அந்த நான்கு ஆசிரியைகளின் பெயர்களை தனித்தனியாக தங்களின் திரு வாய் மலர்ந்து உச்சரித்து பேசிய வாழ்த்துக்களை கேட்ட அந்த நால்வரோடு அன்னை தமிழும் உச்சி குளிர்ந்ததை அரங்கிற்குள் தவழ்ந்து வந்து மனதுக்கு இதம் சேர்த்த குளிர்காற்று உறுதி செய்தது.

(மேடையில் தோன்றி வாழ்த்துரைத்த அத்தனைபேரும் இந்தியாவிலிருந்தவண்ணம்   தொலைதொடர்பு மற்றும் கணினி தொழில் நுட்பத்தின் உதவியுடன் திரையில் தோன்றினர் என்பதை நான் சொல்ல மாட்டேன் .......)

இப்படியாக விழா ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளுமே பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிகளாக இனிய நிகழ்வுகளாக, உள்ளமெல்லாம் தமிழ் நிறைந்த  ஒரு தருணமாக , வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை யாகாது.

இத்தனை நிகழ்ச்சிகளையும் தனி ஒரு ஆளாக இருந்து தொகுத்து வழங்கி, ஏற்ற வர்ணனைகளோடு நடத்தி சென்ற அந்த சகோதரியின் வளமான தமிழ் மொழியின் ஆளுமை அனைவரையும் பூரிப்படைய செய்தது. அவருக்கு என் சிறப்பு பாராட்டுக்கள்.

இந்த நிகழ்ச்சியும் இந்த பள்ளியின் வருகையும் வளர்ச்சியும் ,இனி "தமிழ் பேச்சு - அதன் தடை போச்சு" என்று  சொல்லுமளவிற்கு இங்கிலாந்தில் வாழும் நம் தமிழ் பிள்ளைகளால்  இங்கே தமிழ் வேர்பிடிப்பது மட்டுமல்லாது விழுதுகளும் ஊன்றும் எனும் நம்பிக்கை நிறைந்த மனதுடன் விழாவில் பாடப்பட்ட தேசிய கீதத்தின் நாதம் நிரம்பிய செவிக்குணவோடு, வயிற்றுக்கும் இடப்பட்ட உணவிற்கான வரிசையில் நின்றபோதும் தமிழ் மொழி  உணர்வு  மனதை நிறைத்தது.

இந்த பள்ளியில் பின் பற்றப்படும் பாட திட்டங்கள், தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவனத்தால் வெளியிடப்படும் பாடநூல்களின் பாடங்களே என்பது ஒரு கூடுதல் சிறப்பு செய்தி.

இந்த தமிழ் பள்ளி மாணவ மாணவியர் தமது பள்ளியின் பெயருக்கு ஏற்றார்போல எண்ணிக்கையில் பெருகி, நல் திசைகாட்டும் துருவ நட்சத்திரங்களாக சிறந்து விளங்க மின்னி துலங்க வாழ்த்துக்களோடு.....இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்க பாரதம்! வெல்க தமிழ்!!,

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.



13 கருத்துகள்:

  1. கூடுதல் சிறப்பு செய்தியே - மிகவும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால்,

      அத்தனை பதிவுகளையும் ஆழாமாக படித்து நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல உற்சாகத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

      வருகைக்கு மிக்க அநன்றி.

      கோ

      நீக்கு
  2. முதலில் தங்களுக்கு எம் நன்றிகள் பல, அனைத்து நிகழ்வுகளைம் அருமையாக எங்களுக்குச் சொன்னீர்கள். நான் கூட உண்மையாகத்தான் வந்தனர் போலும் என நினைத்ததேன். சும்மாவா? பரவாயில்லை.நாங்களும் வாழ்த்தினோம் அம் மழலைகளை. ஆசிரியர்களுக்கும் நன்றிகள். தொடருங்கள் உங்கள் சேவையை.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி.

      ஆமாம் "சும்மாவா" என்று கேட்டிருக்கின்றீர்களே, நாங்க பொய் சொல்ல மாட்டோம், தெரிஞ்சிக்கோங்க.

      வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      எப்படி சஸ்பென்ஸ்? விடியும் வரை காத்திருந்ததற்கு பலன் கிடைத்ததா?.

      கோ

      நீக்கு
    2. வணக்கம் அரசே,

      காத்திருந்தால் பலன் கிடைக்கும் என்பது உண்மையே, காத்திருக்கிறேன்.

      நன்றிகள்.

      நீக்கு
    3. பேராசிரியரே,
      காத்திருப்பிற்கு பலன் கிடைக்கும் என்ற உங்கள் நம்பிக்கை வீண் போகாதிருக்க வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  3. பு௧ழ் அனைத்தும் இறைவனுக்கே!!

    எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு வந்து சிறப்பித்ததோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும், எவ்வாறு ரசித்தீர்கள் என்பது உங்கள் பதிவின் மூலம் நன்கு அறியமுடிகிறது. சிறு துளியையும் தவறவிடாமல் இந்நிகழ்வினை பதிவு செய்த உங்களுக்கும், எங்களை வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ஊக்க மழை பொழிந்திருக்கிறது....எங்கள் பணியினை தொடர்வோம் அதீத உற்சாகத்துடன்.

    --தஸ்னீம்,
    நட்சத்ரா தமிழ்ப் பள்ளி.

    பதிலளிநீக்கு
  4. இந்த நிகழ்ச்சியை குறித்து பதிவெழுத தூண்டிய பல விஷயங்களுள் உங்களின் தமிழ் உச்சரிப்பும், வார்த்தை கோர்வைகளும் தொய்வின்றி இலக்கணம் பிறழாமல் ஒலித்த உங்கள் குரல்வழிந்த நிகழ்ச்சி தொகுப்புமே என்றால் அது மிகை அல்ல.

    தொடருங்கள் உங்கள் சேவைகளை.

    மீண்டும் ஒரு சந்தர்பத்தில் சந்திப்போம், சகோதரருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

    நூறு சதவீதம் உங்களோடு நான் ஒத்துபோகும் ஒரு உன்னத கருத்து,"எல்லா புகழும் இறைவனுக்கே"

    அன்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  5. எங்கள் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்தது மட்டுமல்லாது, அதனை இத்தனை அழகாக எங்கள் கண் முன்னால் மீண்டும் காண்பித்ததற்கும்,உங்களின் அன்பான வார்த்தைகளால் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி
    இது போன்ற வார்த்தைகளும்,ஆசிகளும் தான், எங்கள் பள்ளியையும்,எங்கள் குழந்தைகள் அனைவரையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
    மீண்டும் நன்றி
    ரம்யா
    நட்சத்ரா தமிழ் பள்ளி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ரம்யமான தமிழ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தங்களின் அன்பான அழைப்பிற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு.

      தொடரட்டும் உங்கள் தமிழ் பயணம், தொட்டு ஈர்க்கட்டும் அது உலகோர் கவனம்.

      வாழ்த்துக்கள், நன்றி.

      கோ

      நீக்கு
  6. ஐய"கோ"..!
    இந்த சிறப்பு விருந்தினர் மூவர் மேடை வந்தார்கள் என்றதை பார்த்தவுடன் என் மனம் மிகவும் திகிலடைந்தது.
    ஒரு சில குடும்பங்கள் சேர்ந்து நடத்தும் ஒரு பள்ளிக்கூடம். இந்த மூவரும் இங்கிலாந்து வருவது என்றால் இவர்களுக்கு முதல் வகுப்பு பிரயாணத்திற்கு தலைக்கு 3000 டாலர், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர்களுக்கு கிட்ட தட்ட 15000-20000 டாலர் (மூவரையும் சேர்த்து), அது மட்டும் இல்லாமல் இவர்களின் இருப்பிடம் மற்றும் உணவு மற்றும் சுற்றுலா போன்றவகைகளுக்காக மற்றும் ஒர் 2000 டாலர்.
    இவ்வளவு பெரிய செலவை இவர்கள் எப்படி செய்தார்கள் என்று யோசித்தேன்.
    மற்றும், சரி, எப்படியோ சமாளித்தார்கள், இருந்தாலும் இந்த தொகையை இப்படி செலவு செய்வதற்கு பதில் இந்த பள்ளிகூட மேம்பாட்டில் செலவு செய்து இருக்கலாமே என்று ஒரு நிமிடம் ஆதாங்க பட்டேன்.
    கடைசியில் இவர்கள் மூவரும் தொலைகாட்சியில் தான் மேடைக்கு வந்தார்கள் என்றதும் ... ஒரு பெரிய நிம்மதி..பெருமூச்சு விட்டேன்.

    என்னை பொறுத்தவரை .. தமிழை பரப்புகிறேன் என்று வெளிநாடு வரும் தமிழ் உள்ளங்களை பாராட்டுகிறேன், இருந்தாலும் பல ஆயிரக்கணக்கில் இவர்களுக்கு செலவு செய்வதை எதிர்கின்றேன். நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  7. ஐய"கோ".. இந்த சிறப்பு விருந்தினர் மூவர் மேடை வந்தார்கள் என்றதை பார்த்தவுடன் என் மனம் மிகவும் திகிலடைந்தது.
    ஒரு சில குடும்பங்கள் சேர்ந்து நடத்தும் ஒரு பள்ளிக்கூடம். இந்த மூவரும் இங்கிலாந்து வருவது என்றால் இவர்களுக்கு முதல் வகுப்பு பிரயாணத்திற்கு தலைக்கு 3000 டாலர், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர்களுக்கு கிட்ட தட்ட 15000-20000 டாலர் (மூவரையும் சேர்த்து), அது மட்டும் இல்லாமல் இவர்களின் இருப்பிடம் மற்றும் உணவு மற்றும் சுற்றுலா போன்றவகைகளுக்காக மற்றும் ஒர் 2000 டாலர்.
    இவ்வளவு பெரிய செலவை இவர்கள் எப்படி செய்தார்கள் என்று யோசித்தேன். மற்றும், சரி, எப்படியோ சமாளித்தார்கள், இருந்தாலும் இந்த தொகையை இப்படி செலவு செய்வதற்கு பதில் இந்த பள்ளிகூட மேம்பாட்டில் செலவு செய்து இருக்கலாமே என்று ஒரு நிமிடம் ஆதாங்க பட்டேன்.
    கடைசியில் இவர்கள் மூவரும் தொலைகாட்சியில் தான் மேடைக்கு வந்தார்கள் என்றதும் ... ஒரு பெரிய நிம்மச்தி பெருமூச்சு விட்டேன்.

    என்னை பொறுத்தவரை .. தமிழை பரப்புகிறேன் என்று வெளிநாடு வரும் தமிழ் உள்ளங்களை பாராட்டுகிறேன், இருந்தாலும் பல ஆயிரக்கணக்கில் இவர்களுக்கு செலவு செய்வதை எதிர்கின்றேன். நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      தங்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
      தமிழ் கணக்கு கண்டு மிரட்ச்சியாக இருக்கின்றது.

      நல்ல வேளை தொழில் நுட்பம் கையை கடிக்காமல் கைகொடுத்திருக்கின்றது.
      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு