பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 மார்ச், 2021

ஆறுகப்புறம் யாரு?

மிச்சமில்லா அச்சம்!

நண்பர்களே,

தலைப்பை பார்த்ததும், ஏப்ரல்  ஆறாம் தேதி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகம் மட்டுமின்றி ஏனைய பிற மாநிலங்களில் யார் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகின்றதோ என்பதை குறித்த ஆரூட /கருத்துக்கணிப்பு  பதிவாக இருக்குமோ  என நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால் இது "அது" சம்பந்தமான பதிவு அல்ல எனவும்  "அதில்" நமக்கு அனுபவமும்   இல்லை என்பதையும்  முன்னமே அறிய தருகிறேன்.

இங்கே சொல்லவந்த செய்தி, பல மாதங்களாக அமுலில் உள்ள கொரோனா ஊரடங்கு இன்று முதல் சற்று தளர்வை சந்திக்கின்றது இங்கிலாந்தில்.

வீட்டிலுள்ளவர்களை தவிர வேறு யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க தடை  நீடிக்கும் அதே சமயத்தில் ,நண்பர்கள் உறவினர்கள் அக்கம் பக்கத்துகாரர்கள் என  அதிகபட்சமாக ஆறு பேர்கள் வரை, சமூக இடைவெளி பின்பற்றி  தங்கள் தோட்டங்களிலோ அல்லது வெளி வளாகங்களிலோ  கூடி தங்கள் அன்பை , நட்பை உறவை போற்றும் வண்ணம்  அரசு அனுமதித்திருக்கின்றது.

மேலும் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட வெளி அரங்கு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுமளவிற்கு வளாகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறவைக்கபடுகிறது.

இதே போல கடந்த டிசம்பர் மதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அறிவித்த ஊரடங்கு  தளர்வினை பயன்படுத்தி மக்கள் ஆங்காங்கே உல்லாசமாக பயணம் செய்தும் தங்கள் உறவினர்களை நண்பர்களை சந்தித்தும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டார்கள்.

அதன் விளைவாக தொற்று அதிவேகமெடுத்து கூடுதலாக பலர் பாதிக்கப்பட்டும் பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது.

இந்த தளர்வினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ எனும் அச்சமும் பீதியும் ஒருபுறமிருந்தாலும் , கட்டுப்பாடுகளால் தங்கள் மனநிலை பாதிக்கப்படும் சூழலுக்கும் ஆளாகி இருக்கும் மக்களுக்கு இது ஒரு ஆறுதலாக மனமகிழ்வை தர கூடியதாக அமையும் என்ற அடிப்படையில் இத்தகு தளர்வு அறிவிக்க பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான வெளி அரங்கு நிகழ்வுகளும் உரிய பாதுகாப்புடனும்  மேற்பார்வையுடனும்  அனுமதிக்கப்படுகிறது. 

குழந்தைகள் பெற்றோர்கள் குழுக்கள்  15 பேர்வரையில் சேர்ந்து சந்தித்துக்கொள்ளலாம்.

எனினும் முக கவசம் 2 மீட்டர் இடைவெளி, என்பன இன்னும் கட்டாயமே.

வீட்டியல் உள்ள குடும்பத்தாரை தவிர வேறு யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க தடை நீடிக்கிறது.

குழந்தைகள், முதியவர்கள் போன்றோருக்கு சேவை செய்யும் பணியாளர்கள், வீட்டை சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள்,மெயின்டனன்ஸ் வேலை செய்பவர்கள் தவிர வேறு யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க தடை நீடிக்கின்றது.

வீட்டிலிருந்து வேலை செய்ய  முடிந்தவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே வேலை செய்யவேண்டும். அவசியமின்றி பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கின்றன.

சிறிய தளர்வு என்றாலும் அதனை முறையாய் அல்லாமல் முழுமையாய் அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் வரம்பு மீறும் செயல்களும் நிகழாமல் இல்லை. 

கட்டுப்பாடற்ற சுதந்தரம் ஆபத்தானது என்பதை உணர்ந்து மக்கள் தங்களுக்குத்தானே சில கட்டுப்பட்டு விதிகளை வகுத்து பின்பற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

எனவே இந்த ஆறுபேர் விதி தளர்விற்குப்பிறகு யாரெல்லாம் அபராதத்திற்கும் அவஸ்த்தைக்கும் பாதிப்புக்கும் ஆளாக போகின்றனரோ என நினைக்கும்போது அச்சம் மிச்சமின்றி அடி மனதை முழுமையாய் ஆட்கொள்கிறது.

நல்லதே நடக்கட்டும்., இறையருள் காக்கட்டும்.

ஆமாம், ஆறுக்கப்புறம் (??!!)யாரு?.... ஏதேனும் யூகங்கள்? டார்ச் அடித்துபார்த்த்தாலும்  விவசாயிகளின் உழைப்பு நம் கண்களுக்கு தெரிவதில்லை எனினும் முடிவுகளைக்குறித்த யூகங்கள்   இலை மறைவு காய்மறைவாக பேசப்பட்டாலும்   சூரியனுக்கு கீழே எதுவும் சாத்தியம் அதாவது ANYTHING IS POSSIBLE  UNDER THE SUN. 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.


6 கருத்துகள்:

  1. தளர்வுகள் - சரியாகக் கடைபிடிக்கப்பட்டால் அனைவருக்கும் நல்லதே. கொஞ்சம் தளர்வு கிடைத்தபிறகு மக்கள் அதனை அளவுக்கு மீறி பயன்படுத்தி மீண்டும் தொற்றை தொடரவிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆவலும். பார்க்கலாம் - ஆறுக்குப் பிறகு என்ன ஆகிறது என! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் தளர்வு அனுமதித்தவுடன் அந்த சலுகையை துஷ்பிரயோகிக்கும் மனப்போக்கு இங்கேயும் இருக்கின்றதே. ஆமாம் ஆறுக்கப்புறம்.....?
      வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. முடிந்தவரை கவனத்துடன்தான் இருக்கின்றோம். வருகைக்கும் தங்கள் கரிசனைக்கும் மிக்க நன்றி தனபால்.

      நீக்கு
  3. இந்தியாவில் இப்போதுதான் மறுபடியும் இரண்டாம் கட்ட கொரோனா சூடு பிடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. இந்தியாவில் வேகமெடுப்பது வருத்தமளிக்கிறது.
    வருகைக்கு நன்றி திரு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு