பின்பற்றுபவர்கள்

புதன், 10 மார்ச், 2021

வணக்கம் !

நலமறிய ஆவல்!!.

 நண்பர்களே,

அனைவரும் சுகமுடனும் பாதுகாப்புடனும் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

பதிவுகள் பக்கம் தலை  வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டன, காரணம் , எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல  இந்த வலைதளத்தின் புதிய  வடிவமும் செயல்பாடும் எனக்கு பிடிபடாமல் இருந்ததுதான்.

அதே சமயத்தில்  வேறு சில சில்லறை(?)காரணங்களும் இதனூடே இழைந்துகொண்டதினால் பதிவின் பக்கத்திலிருந்து என்னை நானும் இழந்துகொண்டிருந்தேன்.

"சில்லறைகாரணங்களை" பிறிதொரு சமயம் தங்கள் எண்ணிக்கைக்கு  தருகிறேன்.

தற்போது ஓரளவிற்கு இந்த புதிய படிவம் கொஞ்சம் புரிய ஆரம்பித்ததினால் வெள்ளோட்டமாக மட்டுமின்றி உங்கள் எல்லோருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் சொல்லி நலன் விசாரிக்கவும் மேலும்  நமது உறவின் தற்கால விரிசலை தமிழ் ஊசி கொண்டும் வலைதள நூலும் கொண்டு தைத்து  புதுப்பித்துக்கொள்ளும்  நல்லோட்டமாகவும் இந்த பதிவினூடாய்  என் வருகையை பதிவு செய்கிறேன்.

வாய்ப்புக்கள் வாய்க்கும்போதெல்லாம் வருகிறேன்.

அதுவரை, மீண்டும் வணக்கங்களையும் நன்றிகளையம்  நலம் படைத்து  விடைபெறுகிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

 

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நலம் தான் திரு ஸ்ரீராம் அவர்களே, நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன், வருகைக்கு மிக்க நன்றியும் மகிழ்சியும்.

   நீக்கு
 2. மீண்டும் உங்கள் தளத்தில் ஒரு பதிவு. வாழ்த்துகள்!

  தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 3. மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் மகிழ்ச்சி அரவிந்த். வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு