ஆங்கிலத்திலும் ...
நண்பர்களே,
இறை நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் நம்பிக்கைக்குரிய தமக்கு மிஞ்சிய ஒரு சக்தியை இறைவன், கடவுள்,பரம்பொருள்,தெய்வம்,ஆண்டவன் என்று பல வார்த்தைகள் மூலம் விளித்து வழிபடுகின்றனர்.
இந்த வரிசையில் "சாமி" என்றதொரு வார்த்தையும் பொதுவாக சொல்லப்படுவதுண்டு.
சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்த ஒரு தனிக்குழு பாடல், வலை தளங்களில் வைரலாக பரவிவருவதும் உலக தமிழர்கள் மட்டுமின்றி வேற்று மொழி பேசும் மக்களையும் அதன் இசைக்காகவும் ராகத்திற்காகவும், படமாக்கப்பட்டிருந்த பின்னணி காட்சிகளுக்காகவும் கவர்ந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் எனது அலுவலக நண்பரும் ஆங்கிலேயரும் இசை கலைஞருமான ஒருவர் ," ஹிந்தியில்" வெளியான மறைந்த நடிகர் Irfan நடித்த " The Lunch Box " எனும் படத்தை ஆங்கில sub tittle துணையுடன் பார்த்ததாகவும் அதன் சிறப்பையும் என்னிடம் காணொளி மூலம் பகிர்ந்துகொண்டு சிலாகித்தார்.
அதே போல சில நாட்களுக்கு முன் மேற்சொன்ன அந்த வைரல் பாடலை "Enjoy Enjaami" குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி மகிழ்ந்தார்.
பேச்சின் இடையில் சாமி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார்.
என்ன இப்படி ஒரு கேள்வி, சாமி என்றால் இறைவன், கடவுள், பரம்பொருள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்படி சொல்லாமல் , எந்த பெயரும் ஒரு காரண காரியத்தோடுதான் நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள் என்பதை அவருக்கு தெளிவுபடுத்தும் வகையில் அவர் மொழிவாயிலாகவே இப்படி பொருள்பட சொன்னேன்.
"என்னை படைத்து இந்த உலகுக்கு அனுப்பும் முன்னே என்னை தமது உள்ளங்கையில் வரைந்து பார்த்தவர் தான் சாமி" என்றேன்.
What ?//??
I mean the one who saw me even before I was born is called சாமி.
பின்னர் சிரித்துக்கொண்டே இப்படியும் சொல்லாம்போலிருக்கின்றதே, அர்த்தம் பொருந்துகின்றதே என இருவரும் பேசி அந்த உரையாடலை நிறைவு செய்தோம்.
பி.கு: இதை படிக்கும் உங்களில் பலர். ஸ்ஸ்ஸப்பா... .. போதும்டா சாமி என்று சொல்வது கேட்கிறது.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
உங்கள் தயவில் "Enjoy Enjaami" கேட்டு ரசித்தேன் .... நன்றாகவே உள்ளது. நன்றி !!
பதிலளிநீக்குவணக்கம் சிவா,
நீக்குEnjoy Enjaami ரொம்ப என்ஜாய் பண்ணீங்க போல தெரியுது. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
சாமியை பொருத்தமாக இணைத்து ஆசாமியிடம் நல்ல பெயர் பெற்று விட்டீர்கள் வாழ்த்துகள் ஸ்வாமி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
நீக்குபாடல் கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குசாதாரண மனிதர்களை நடுவில் காண்பித்து இருப்பதும் நன்று.
வெங்கட், பாடல் கேட்டு மகிழ்ந்தது மகிழ்சி.
நீக்குஆமாம் அதன் சிறப்பே எளிய மனிதர்களையும் உட்புகுத்தியதுதான்.
சாமி விளக்கம் எப்படி?
முருகா...!
பதிலளிநீக்குமுருகனும் saw me தனபால், வருகைக்கு மிக்க நன்றிகள்.
நீக்குசாமிக்கு விளக்கம் நல்லாயிருக்கே...
பதிலளிநீக்குசாமி விளக்கம் சரியாதானே பொருந்துகிறது. ரசித்தமைக்கு நன்றிகள் திரு ஸ்ரீராம்.
நீக்குசாமி விளக்கம் அருமை
பதிலளிநீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு. கரந்தையாரே.
பதிலளிநீக்குஎங்கள் (அப்பாவின் அம்மா) ஆத்தா முறையுள்ள ஒரு பெண்மணி என்னையும் என்னைப் போன்றோரையும் பள்ளிப்பருவத்தில் சாமி என்றழைக்கக் கேட்டுள்ளேன். கூப்பிடும்போதே வா சாமி, போ சாமி என்பார்.
பதிலளிநீக்குஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா(சாமி)